Untitled Document
September 28, 2024 [GMT]
 
தொலைக்காட்சி விருது விழாவை கிண்டல் செய்த நகைச்சுவை நடிகர் RJ பாலாஜி!
[Monday 2016-02-29 07:00]

ரேடியோவில் RJவாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருப்பவர் பாலாஜி. இவரின் கிண்டல், நக்கல் பேச்சுக்கு பல ரசிகர்கள் அடிமை.அதிலும் இவர் விருது விழாக்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள் என அனைத்தையும் கலாய்த்து எடுத்து விடுவார்.அந்த வகையில் இன்று லியனார்டோ ஆஸ்கர் வென்றதை கண்டு அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கலாட்டா டுவிட் செய்துள்ளார்.

லட்டு விவகாரத்திற்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த ரஜினி!
[Saturday 2024-09-28 18:00]

ரபரப்பாக பேசப்படும் திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது மங்களகிரியில் நடைபெற்றது.


சாதனை படைத்த சிறகடிக்க ஆசை சீரியல்!
[Saturday 2024-09-28 18:00]

சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் TRP-யில் எப்போதுமே டாப்பில் இருந்து வருகிறது. மக்கள் மனதை கவர்ந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த ஆண்டு பல விருதுகளை விஜய் தொலைக்காட்சி விருது விழாவில் அள்ளி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜை லட்டர் கொடுத்து மிரட்டும் அந்த மர்ம நபர் யார் என்பதை பற்றிய விஷயம் தான் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.


ஹாரி பாட்டர் திரைப்பட நடிகை உயிரிழப்பு!
[Saturday 2024-09-28 18:00]

ஹாரி பாட்டர் திரைப்படத்தில் சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித் (89 )இவர் வயது மூப்பு காரணமாக ( 27)அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.


அனிருத் இசையமைக்கும் புது ஆல்பம் பாடல்!
[Saturday 2024-09-28 07:00]

இன்று இவர் இசை இல்லாமல் எந்த மாதமும் படங்கள் வராமல் இல்லை. அந்த அளவிற்கு ஒரு முன்னணி இசையமைப்பாளராக பல நட்சத்திரங்களின் படங்களில் இசையமைத்து புகழின் உச்சத்தில் வலம் வருபவர் அனிருத். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளுக்கு படு பிஸியாக இசையமைத்து வரும் இவருடைய இசையமைப்பில் வரும் அக்டோபர் 10 - ம் தேதி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வெளிவர உள்ளது.


மீண்டும் ரேஸ்: தீவிர பயிற்சியில் நடிகர் அஜித்!
[Saturday 2024-09-28 07:00]

நடிகர் அஜித் தற்போது இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித் கார் ரேஸில் மீண்டும் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அதற்கான பயிற்சியையும் தொடங்கி உள்ளார்.


"அனிமல் படத்தில் நடித்ததால் பல சர்ச்சைகளுக்கு உள்ளானேன்" - நடிகை திரிப்தி டிம்ரி!
[Friday 2024-09-27 18:00]

மாம் என்ற திரில்லர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் திரிப்தி டிம்ரி. பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வரும் திரிப்தி கடந்த ஆண்டு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் சோயா என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்.


ஜெயம் ரவிக்கு மனைவி ஆர்த்தி செய்த கொடுமைகள்!
[Friday 2024-09-27 18:00]

நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி ஆகியோர் இடையே இருக்கும் பிரச்சனை பெரிய அளவில் பரபரப்பாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதற்கு காரணம் அவர் கெனிஷா என்ற பாடகி உடன் நெருக்கமாக இருப்பது தான் என ஒரு கிசுகிசு பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என ஜெயம் ரவி விளக்கம் கொடுத்தார்.


கில்லி படத்தை பின்தள்ளி வசூலில் சாதனை படைத்த இந்திய படம் எது தெரியுமா?
[Friday 2024-09-27 18:00]

தரணி இயக்கத்தில் விஜய் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கில்லி. இன்று சினிமாவில் விஜய் நடிப்பில் பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது ஆனால், இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து மாஸாக வலம் வரும் படமாக கில்லி உள்ளது. அதற்கு முக்கிய காரணம், விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்த திரிஷாவின் நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.


விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்!
[Friday 2024-09-27 06:00]

உலக அழகி என்ற பட்டத்தை வென்ற பிறகு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் கதாநாயகியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கத்தில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" என்ற திரைப்படத்தில் அஜித், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.


விஜய் பட தயாரிப்பாளருடன் சிம்புவின் அடுத்த படம்!
[Friday 2024-09-27 06:00]

நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவரது 48வது படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் அதை தயாரித்து வருகிறது. மேலும் கமல் உடன் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சிம்பு.


"சிவகார்த்திகேயனின் அந்த விஷயத்தை தெரிந்துகொள்ள மிகவும் ஆசை" - கீர்த்தி சுரேஷ்!
[Thursday 2024-09-26 18:00]

தமிழ் சினிமாவில் எந்தஒரு பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் முன்னேறி இப்போது பலருக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் அயலான் படம் வெளியானது, மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார், கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


பிக் பாஸில் வரப்போகும் புது விஷயம்!
[Thursday 2024-09-26 18:00]

பிக் பாஸ் 8வது சீசன் விஜய் டிவியில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. அதற்கான பணிகளை தற்போது பிக் பாஸ் குழுவினர் தற்போது செய்து வருகின்றனர். மேலும் போட்டியாளர்களாக வரும் பிரபலங்களும் இறுதி செய்யப்பட்டு இருக்கின்றனர். அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் 8 பிரம்மாண்ட தொடக்க விழா உடன் ஆரம்பிக்க இருக்கிறது.


மறுபடியும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்!
[Thursday 2024-09-26 18:00]

நடிகைகள் இணையத்தில் படவாய்ப்பிற்காக அரைகுறை ஆடையுடன் புகைப்படங்கள் பகிர்வது நல்லதல்ல என்பதை பற்றி பயில்வான் ரங்கநாதன் சமூக வலைத்தளத்தில் பேசி சர்ச்சையை கிளப்பியுள்யார். பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா பிரபலங்களை பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவருபவர். இதனால் இவர் இணையத்தில் ஏதாவது ஒரு விடயம் பேசி வீடியோ வெளியிட்டால் அத கட்டாயம் ஏதாவது பிரபலங்களின் சர்ச்சையான விடயங்களை பெசியிருப்பார் என்பது இப்போது அனைவர் இடத்திலும் பழக்கமாகி விட்டது.


இயக்குநர் அவதாரம் எடுக்கிறாரா அதர்வா?
[Thursday 2024-09-26 06:00]

பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. இவர் 80ஸ்- 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் ஆவார். பாணா காத்தாடி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அப்படத்தை தொடர்ந்து பல படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.


பிக் பாஸ் 8 தொடங்கும் முன்பே நடந்த சோகம்!
[Thursday 2024-09-26 06:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ இன்னும் ஒரே வாரத்தில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. அடுத்த வார இறுதியில் செப்டம்பர் 6ம் தேதி பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.


"சினிமாவை காப்பாற்ற ஒரே வழி இதுதான்" - வெற்றிமாறன் சொன்ன விஷயம்!
[Wednesday 2024-09-25 18:00]

தியேட்டருக்கு வரும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என பல பிரபலங்கள் பேசி கேட்டிருப்போம். ஓடிடி வளர்ச்சியால் தியேட்டர் தொழில் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறி, ஓடிடி-யில் 8 வாரங்களுக்கு பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களும் கேட்டு வருகிறார்கள்.


த்ரிஷா பக்கத்து வீட்டுகாரருடன் பிரச்சனை: நீதிமன்றம் சென்று எடுக்கப்பட்ட முடிவு!
[Wednesday 2024-09-25 18:00]

நடிகை த்ரிஷா மீண்டும் முன்னணி ஹீரோயினாக தற்போது கோலிவுட்டில் வலம் வர தொடங்கி இருக்கிறார். விஜய், அஜித் என தொடர்ந்து பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன GOAT படத்தின் மட்ட பாடலில் அவரது நடனம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.


சின்னத்திரைக்கு வந்த விஜய் ஆண்டனி!
[Wednesday 2024-09-25 18:00]

வெள்ளித்திரையை விட இப்போதெல்லாம் சின்னத்திரை தான் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. இதனாலேயே பிரபலங்கள் பலர் சின்னத்திரையில் களமிறங்கி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு பெற்று கலக்க தொடங்குகின்றனர். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, விஷால், ஸ்ருதிஹாசன், கரு.பழனியப்பன், ஆரி போன்றோர் சமீபகாலமாக சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக கலக்கிய பிரபலங்கள்.


பிக் பாஸ் 8 உத்தேச போட்டியாளர்கள் இறுதி பட்டியல்!
[Wednesday 2024-09-25 06:00]

வரும் அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் அடுத்த சீசன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. 7 சீசன்கள் கமல் தொகுத்து வழங்கிய நிலையில் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது.


மனைவி பற்றி போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி!
[Wednesday 2024-09-25 06:00]

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் அதை பற்றி வந்து கொண்டிருக்கிறது. விவாகரத்துக்கு காரணம் ஒரு பாடகி என ஒரு தகவல் பரவிய நிலையில், அது உண்மை இல்லை என ஜெயம் ரவி தெரிவித்து இருந்தார்.


பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் பிக் பாஸ்!
[Tuesday 2024-09-24 18:00]

பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க தேதியை ப்ரொமோவாக வெளியாகியுள்ளது. பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி தற்போதும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது. இந்நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் கடந்த ஆண்டு நிறைவடைந்த 7வது சீசன் வரை கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார்.


பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட சூர்யா மற்றும் கார்த்தி!
[Tuesday 2024-09-24 18:00]

மக்கள் அனைவருமே பெரிய நம்பிக்கை வைத்திருக்கும் கோவில் ஆந்திராவில் உள்ள திருப்பதி தான். அந்த திருப்பதியில் பெயர் போன ஒரு விஷயம் லட்டு, தற்போது அதனால் இப்போது ஒரு பிரச்சனை எழுந்திருப்பது நாம் அனவைருக்குமே தெரிந்த விஷயம் தான். அண்மையில் நடிகர் கார்த்தி தான் நடித்துள்ள மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரொமோஷனுக்காக ஆந்திரா சென்றிருந்தார். அங்கு அவரிடம் சிறுத்தை பட லட்டு வசனத்தை காட்டி தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார்.


ஜெயம் ரவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பிறகு தான் என்னிடம் வந்தார்: பாடகி கெனிஷா!
[Tuesday 2024-09-24 18:00]

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவி விவாகரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் அவருடன் பேச பலமுறை முயற்சித்தேன், பேச முடியவில்லை, விவாகரத்து முடிவு அவராக எடுத்தது என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


பிக் பாஸ் வரும் பிரபல தொகுப்பாளர்!
[Tuesday 2024-09-24 06:00]

பிக் பாஸ் 8ம் சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் 6ம் தேதி ஷோ தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வராமல் இருக்கிறது. போட்டியாளர்கள் தேர்வில் குழுவினர் ஈடுபட்டு வந்த நிலையில், போட்டியாளர்கள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டதாக தெரிகிறது.


சூர்யா 45 படம் உறுதியானது: யாரும் எதிபார்க்கத்த ஒரு இயக்குனர்!
[Tuesday 2024-09-24 06:00]

நடிகர் சூர்யா ஏற்கனவே கங்குவாவை முடித்துவிட்டு தனது அடுத்த படமான சூர்யா 44ல் நடித்து வருகிறார். அந்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார். கங்குவா ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கும் நிலையில், தனது 44வது படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய சூர்யா திட்டமிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.


ராகவா லாரன்ஸ் ஜோடியாக இணைந்த முன்னணி பிரபல நடிகை!
[Monday 2024-09-23 17:00]

தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், இயக்கம் என பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதை தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் 'ரெமோ', 'சுல்தான்' போன்ற வெற்றி பெற்ற படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' என்ற படத்தில் நடிக்கிறார்.


ஷகிலாவுக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை!
[Monday 2024-09-23 17:00]

மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோரின் மோதல் பற்றி தொடர்ந்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரியங்காவுக்கு ஆதரவாக நடிகை ஷகிலா பேசி இருந்தார். ஷகிலாவும் குக் வித் கோமாளியில் இதற்கு முன் போட்டியாளராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவரை எல்லோரும் 'ஷகிலா அம்மா' என்று தான் அலைபார்கள்.


ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் 3 நாள் வசூல் வேட்டை விவரம்!
[Monday 2024-09-23 17:00]

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களும் நாயகர்களாக கலக்கி நிறைய ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர் தான் ஹிட்ஹாப் தமிழா ஆதி. நிறைய வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இவரது நடிப்பில் அண்மையில் கடைசி உலகப்போர் திரைப்படம் வெளியாகி இருந்தது.


நடிகர் சிரஞ்சீவி செய்த கின்னஸ் சாதனை!
[Monday 2024-09-23 06:00]

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் மூத்த ஹீரோக்களில் ஒருவர். தற்போது 69 வயதாகும் அவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் அவரது மகன் ராம் சரண் தயாரிக்கும் படங்களில் அவ்வப்போது சிரஞ்சீவியை கெஸ்ட் ரோலில் பார்க்கலாம். தற்போது சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது.


வேள்பாரி கதையின் காட்சிகள் திருட்டு: இயக்குனர் ஷங்கர் கோபமான அறிக்கை!
[Monday 2024-09-23 06:00]

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது ஷங்கர் ட்விட்டரில் கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். தான் வாங்கி வைத்திருக்கும் வேள்பாரி நாவல் கதையில் இருந்து சிலர் காட்சிகளை திருடி படமாக்கி இருப்பதை சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரெய்லரில் பார்த்ததாக குறிப்பிட்டு எச்சரித்து இருக்கிறார்.

Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா