Untitled Document
November 23, 2024 [GMT]
 
கொகோ என்ற நாய்க்காக ஐபோன் 7 கையடக்கத்தொலைபேசிகளை வாங்கிய நபர்!
[Wednesday 2016-09-21 17:00]

சீனாவின் மிகப் பெரிய செல்வந்தரான வாங் நியன்லின்னின் மகனான வாங் சிகொங் (28 வயது) தனது செல்லப் பிராணியான நாய்க்காக ஐபோன் 7 கையடக்கத் தொலைபேசிகள் எட்டை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொகோ என்ற அந்த நாய்க்காக வாங் சிகொங்கால் வாங்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை 800 அமெரிக்க டொலராகும். வாங் நியன்லின்னின் சொத்தின் பெறுமதி 23 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ஆணாக தன்னை மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சைக்கு அராபியப் பெண் விண்ணப்பம்!
[Tuesday 2016-09-20 18:00]

குரோமசோம்களின் குளறுபடியால் ஆண் உடலில் இருக்கும் சில ஆன்மாக்கள் தங்களை பெண்பிறவிகளாகவும், பெண்ணின் உடலமைப்பில் இருக்கும் சில ஆன்மாக்கள் தங்களை ஆண்பிறவிகளாகவும் கருதிக் கொள்வதுண்டு. இத்தகைய பாலினத்தவர் தாங்கள் விரும்பும் வகையில் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ளன.அவ்வகையில், ஐக்கிய அரபு அமீரக நாடுகளும் இத்தகைய பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை இந்தமாதம் சட்டபூர்வமாக்கி அறிவித்துள்ளன. இதற்கென ஒரு மருத்துவ ஆலோசனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஐக்கிய அராபிய அமீரக வரலாற்றில் முதன்முறையாக இங்குள்ள 29 வயதுப்பெண், தன்னை ஆணாக மாற்றிக் கொள்ளும் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


டொரோண்டோவில் முத்தத்தால் வரையப்பட்ட முத்தான ஓவியம்! Top News
[Sunday 2016-09-18 08:00]

இன்றைய காலத்தில் பெண்கள் அனைவரும் தான் அழகாக இருப்பதற்காக அதிக செலவினை செய்து வருகின்றனர். ஆனால் இந்த பென் அழகாக இருப்பதற்காக பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கினைப் போட்டுக் கொண்டு அதின் மூலம் ஓவியங்களைத் தீட்டி வருகிறார். டொரோண்டோவைச் சேர்ந்த ஓவியர் ஒருவரே இவ்வாறு ஓவியங்களைத் தீட்டி வருகிறார். கேன்வாஸ் துணி மீது லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகளைப் பதித்து, முழு ஓவியத்தையும் உருவாக்குகிறார். ஒவ்வொரு முறையும் சலிக்காமல் லிப்ஸ்டிக் போட்டு, முத்திரை பதிக்கிறார்.


கொள்ளையர்களுடன் போராடிய ஆறு வயது சிறுமி!
[Thursday 2016-09-08 17:00]

நியூசிலாந்தில் கொள்ளையர்களை துணிச்சலுடன் எதிர்த்த 6 வயதான சிறுமியின் செயல்பாடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நியூசிலாந்து நாட்டின் தலைநகரான ஆக்லாந்தை சேர்ந்தவர் சுகையில் படேல்.இந்திய வம்சாவளியான இவர் தன் வீட்டின் அருகிலேயே மின்பொருளகம் கடையை நடத்தி வந்தார். சம்பவதினத்தன்று, 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கையில் ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்தது.கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வந்த அவர்களை பார்த்த கடை ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர்.பின்னர் சுதாரித்து கொண்ட அவர்கள் கொள்ளையர்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கவே, கோபமடைந்த கொள்ளையர்கள் அவர்களை தாக்கத் தொடங்கினார்.அந்த சமயத்தில் கடைக்குள் நுழைந்த கடை உரிமையாளரின் மகள் சாரா படேல் (6) தைரியத்தை வரவழைத்து கொண்டு தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஒரு கொள்ளையனின் காலை பிடித்து இழுக்க அவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.


இறந்த மனைவியின் உடலை குப்பைகளால் தகனம் செய்த கணவன்!
[Tuesday 2016-09-06 07:00]

இறந்த மனைவியின் உடலை முறையாக தகனம் செய்வதற்கு பணம் இல்லாத கணவர் குப்பைகளை கொண்டு எரியூட்டிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஜகதீஷ் பில்(65). நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கிடந்த இவருடைய மனைவி நஜோ பாய் திடீரென காலமானார்.மனைவியின் உடலை தகனம் செய்வதற்கு சுடுகாட்டில் உள்ள ஊழியர்கள் 2,500 ரூபாய் பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜகதீசிடம் வெறும் 250 ரூபாய் மட்டுமே இருந்தது.இதனால், தகனம் செய்ய மறுத்த ஊழியர்கள் மனைவியின் உடலை ஆற்றில் எறிந்து விடுவாறு அறிவுரை கூறியுள்ளனர். அப்பகுதியில் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாத ஏழைகள் இறந்தவர்களின் உடலை ஆற்றில் எறிந்து விடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.


வேலைத்
[Friday 2016-09-02 18:00]

செக் குடி


இலங்கை ஜனாதிபதியின் இணையத்தை முடக்கியவருக்கு வேலைவாய்ப்பு:
[Thursday 2016-09-01 19:00]

குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் சைபர் குற்றங்களுக்கு தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டு வரவுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தில் பாதுகாப்பு குறைவுள்ளதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் ஹரின் இதன்போது கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள 17 வயது சிறுவன் கல்வியில் சிறந்து விளங்கும் ஒருவர் என்பதால் அவருக்கு புலமைப் பரிசில் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


சீனாவில் கொலை செய்து உடலை திருமணம் செய்யும் கொடுமை!
[Wednesday 2016-08-31 07:00]

சீனாவில் திருமணமாகாமல் இறந்து விடுவோர் தங்களின் உலக வாழ்க்கைக்குப் பின்னர் தனியாக இருக்க கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஆவி திருமணம் நடத்தி வைக்கும் வழக்கம் 3ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பாரம்பரியை நம்பிக்கையாகவும் அங்கு நடந்து வருகிறது. தொடக்கத்தில் திருமணம் ஆகாமல் இறந்துபோனோருக்காக மட்டுமே இத்தகைய ஆவி திருமணங்கள் நடைபெற்றன. பூமியில் வாழ்கின்ற ஒருவர், திருமணமாகாமல் இறந்துபோன தனித்தனி நபர்கள் இருவருக்கு செய்து வைக்கிற சடங்காக இந்த ஆவி திருமணம் முதலில் இருந்தது.ஆனால் இந்த சடங்கு பின்னர் இறந்து போனவர்களுக்கு பூமியல் உயிருடன் இருப்பவர்களை திருமணம் செய்து வழக்கமாக மாறியது.


நோய் மூலம் இறந்தபின் எதிர்காலத்தில் நம்மை உயிர்பிக்க முடியுமா? - மருந்து கண்டுபிடிக்கபடாதா?
[Wednesday 2016-08-31 06:00]

மருந்து கண்டுபிடிக்கபடாதா நோய் மூலம் இறந்தபின் எதிர்காலத்தில் நம்மை உயிர்பிக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.அதாவது அந்த நோய்க்கான சிகிச்சை முறையை கண்டுபிடித்தபின் இறந்த உடலை மீண்டும் உயிர்பிக்க முடியுமா? என் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். மேற்கூறியது போல், எவ்வித சிகிச்சைகளும் அற்ற நோய்களுக்கு இலக்காகி மரணிப்பவர்களை உறையவைத்து மருத்துவ வளர்ச்சியின் பின், அந்நோய்க்கான தீர்வு கிடைக்கப்பெறும் போது அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டால் மரணித்தவர்களை மீண்டும் உயிர்பிக்க முடியுமாம். இதற்கான சோதனைகளும் தற்போதுள்ள ஆராய்ச்சியாளர்களினால் அமெரிக்காவில் மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதனை கிர்யொனிக்ஸ் (Cryonics) என்று அழைப்பர்.


தங்க பிஸ்கட்டுகளை வயிற்றில் மறைத்த கடத்திச் செல்ல முற்பட்ட இந்திய பெண்கள் கைது!
[Monday 2016-08-29 07:00]

சட்டவிரோமான முறையில் இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட இந்திய பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாராநாயக்க விமான நிலையத்தில், விமானத்தின் உள்ளே இருந்த நிலையில் இந்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 28 மற்றும் 47 வயதுடைய பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வயிற்றில் வைத்து இந்த தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டுச் சென்றதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


பேஸ்புக் Live - நான் குதிக்கப் போகிறேன் என்று கூறி குதித்தார்: - இறந்தேவிடடார்
[Monday 2016-08-29 07:00]

இத்தாலியை சேர்ந்தவர் பைலட் அர்மின் ஸ்மீடர்(28). இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையிருந்து விங்சூட் அணிந்து குதிப்பது போன்ற வீடியோவை சமூக வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்தார். கடைசியாக இன்முகத்துடன் நான் குதிக்கப் போகிறேன் என்று கூறி அவர் குதித்தார். எதிர்பாரத விதமாக அவர் குதித்த வேகத்தில் இறந்து விட்டார். இச்சம்பவம் சமூக வலை தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.


பெண்சிசு கொலை - சட்டசபையில் உரையாற்றிய ஜெயின் நிர்வாண துறவி!
[Saturday 2016-08-27 20:00]

அரியானா சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது இதை தொடர்ந்து சட்டசபையில் ஜெயின் மத தலைவரும் துறவியுமான தருண் சாகர் கலந்து கொண்டு உரையாற்றினார்.. இந்த உரை 40 நிமிடங்கள் நடைபெற்றது . கவர்னர் ,முதல் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடைச்பாகுபாடு இன்றி அமர்ந்து உரையை கேட்டனர். நிர்வாண நிலையில் கலந்து கொண்ட துறவி சாகர் தனது உரையின் போது பாகிஸ்தானின் செயல்பாடுகள், பெண் சிசு கொலையை ஒழிக்கும் வழிமுறைகள் குறித்து பரிந்துரைத்தார்.


மழைக்காடுகளுடன் ஹோட்டல்..! - துபாயில் புதிய முயற்சி
[Saturday 2016-08-27 19:00]

மழைக்காடுகள் எனப்படும் அடர்ந்த காடுகளுடன் ஹோட்டல் ஒன்றைத் திறக்க துபாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலக சுற்றுலாத் தளங்களில் முக்கிய இடம் பிடித்துள்ள துபாய், கட்டடக் கலையில் பல்வேறு நவீன உத்திகளைக் கையாண்டு வருகிறது.அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தைத் தரும் வகையில் மழைக்காடுகள் எனப்படும் அடர்ந்த காடுகளுடன் கூடிய ஹோட்டல் ஒன்றினை இசட்.ஏ.எஸ். ஆர்கிடெக்சர் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.


பாரிய முதலைகளுடன் மல்யுத்தம் நடத்தும் அமெ
[Friday 2016-08-26 17:00]

அமெ


அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ள சிறுமி! Top News
[Thursday 2016-08-25 08:00]

காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியின் அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ளார். காலி


யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்த பிரேஸில் யுவதி: - 'அவமானத்தினால் சாகிறேன்' என்கிறார்!
[Wednesday 2016-08-24 17:00]

உலகின் அதிவேக மனிதரான ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்த யுவதி, 'நான் அவமானத்தில் சாகிறேன்' எனக் கூறியுள்ளார். 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சம்பியனாகவும் உலக சம்பியனாகவும் திகழும் யூசெய்ன் போல்ட் கடந்த ஞாயிறன்று தனது 30 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் கடைசி நாளாகவும் அது அமை ந்தது. அன்றைய இரவில் பிரேஸிலைச் சேர்ந்த ஜேடி துவார்ட்டே என் பவருடன் இரவைக் கழித்தார் யூசெய்ன் போல்ட்.


சொகுசு ஹோட்டலில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்த கடார் இளவரசி: - லண்டனில் சிக்கினார்...!
[Wednesday 2016-08-24 17:00]

லண்டனில் உள்ள சொகுசு ஹோட்டலில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தபோது கடார் இளவரசி ஷெய்கா சால்வா கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த பைனான்ஷியல் டைம்ஸ் 'Financial Times' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸ்செல்சியர் ஹோட்டலில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஹோட்டல் அறை ஒன்றில் கடார் இளவரசி ஷெய்கா சால்வா 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்து பாதுகாப்பு படையான எம்ஐ6 மற்றும் ஸ்காட்லாந்து யார்டு பொலிசாருடன் சேர்ந்து ஒரு குற்றவாளியை தேடி நடத்திய சுற்றிவளைப்பில் தான் இளவரசி சிக்கியுள்ளார்.


பதினெட்டு ஆண்டுகளாக உணவு உண்ணாமல் வாழ்ந்து வரும் பெண்!
[Wednesday 2016-08-24 10:00]

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 48 வயதான பெண் ஒருவர், கடந்த 18 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் பிளாக் டீ மட்டும் குடித்து நலமாக வாழ்ந்து வரும் சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரியா மாவட்டத்தை சேர்ந்த பீலி பாய் என்ற பெண் சிறுவயதில் பாட்னாவிற்கு படிக்க சென்ற போது உணவு அருந்துவதையே தவிர்த்திருக்கிறார், அதிலிருந்து சாப்பிடுவதே இல்லை. 1995ம் ஆண்டு பீலி பாய்க்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பீலி பாய்க்கு எந்த குறையும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


போதைப் பொருள் கடத்திய புறாவை 40 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு!
[Tuesday 2016-08-23 07:00]

கோஸ்டா ரிகாவின் சன் ஜோசே லா ரிபார்மாபெனிடெண்டியாவில் உள்ள சிறைச்சாலைக்கு மேலே சிறமத்துடன் ஒரு புறா பறந்துச் சென்றதை போலீசார் கவனித்தனர். புறா எதோ ஒரு பையை தூக்கிச் செல்வது போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த புறாவை கஷ்டப்பட்டு பிடித்தனர். புறாவை பிடித்து அந்த பையை சோதித்த போது அந்த பையில் 14 கிராம் கொக்கையன் மற்றும் 14 கிராம் கஞ்சா ஆகியவை ஒரு சிறிய பேக்கில் வைத்து கட்டப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.


கொலம்பியாவில் 17 கைதிகளுக்கு திருமணம்: செய்து வைத்தது சிறைச்சாலை!
[Monday 2016-08-22 07:00]

கொலம்பியாவில் உள்ள சிறைச்சாலையில், கைதிகளின் காதலை சேர்த்து வைக்கும் விதத்தில் அவரவர் காதலியுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கொலம்பியாவில் உள்ள காலீல் பகுதியில் இருக்கும் கார்செல் வில்லா ஹெர்மோசா என்ற சிறைச்சாலை உள்ளது. அங்கு ஏராளமான தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அதில் 17 கைதிகளுக்கு, அவர்கள் நீண்ட காலமாக நேசித்து வந்த பெண்களுடன் திருமணம் நடைப்பெற்றது. சிறையில் சமூக பணியாக கருதி இந்த திருமணத்தை சிறை அதிகாரிகள் நடத்தி வைத்தனர். திருமணம் மூலம் தண்டனை அனுபதித்த ஆண்கள் சமூகத்தில் மீண்டும் தவறு செய்யாமல் ஒன்றிணைந்து வாழ முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


பசிபிக் முதல் அட்லாண்டிக் கடற்கரை ஓடி சாதனை படைத்த 93 வயது வீரர்!
[Monday 2016-08-22 07:00]

பசிபிக் முதல் அட்லாண்டிக் கடற்கரை வரை 4 ஆயிரம் கி.மீட்டர் தூரம் ஓடி 93 வயது அமெரிக்க ராணுவ வீரர் சாதனை படைத்தார். அமெரிக்காவின் சான்டியாகோ நகரை சேர்ந்தவர் எர்னி ஆண்ட்ரஸ். 93 வயதான இவர் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் அமெரிக்காவில் பசிபிக் கடற்கரையில் தொடங்கி அட்லாண்டிக் கடற்கரை வரை ஓடி சாதனை படைக்க விரும்பினார். அதாவது 4 ஆயிரம் கி.மீட்டர் தூரம் ஓடி கடந்து சாதனை படைக்க முடிவு செய்தார். அதற்கான முயற்சியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜியாவில் உள்ள சைமன் தீவில் இருந்து தொடங்கினார்.


ஸ்பெயின் நாட்டில் - சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள ஜேசுவின் சுவரோவியம்!
[Monday 2016-08-22 06:00]

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரம் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நகரத்தை சேர்ந்த ஒரு வயதான நபர் இயேசுவின் சுவரோவியத்தை மோசமாக மறுசீரமைப்பு செய்த நிகழ்வை பற்றி ஒரு இசை நாடகம் தயாரிக்கபட்டுள்ளது. போஹா நகரத்தில், சிசிலியா கிமென்ஸின் முயற்சிகள், 2012-ல் இயேசுவின் ஓவியத்தை மிக மோசமாக சிதைத்துவிட்டது. இயேசுவை பார்ப்பதற்கு ஒரு குரங்கு போல அவர் மாற்றிவிட்டார் என்று பலர் புகார் கூறியுள்ளனர். 85 வயதான சிசிலியா கிமென்ஸ் பேசுகையில், அவர் வரையும் போது ஒரு நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வார்தைகள் இசை நாடகத்தில் இடம் பிடித்திருக்கிறது.


ஒலிம்பிக் போட்டிகளில்ப தக்கங்களை கடிப்பது ஏன் தெரியுமா?
[Saturday 2016-08-20 12:00]

ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை நம்மில் பலரும் அவதானித்துள்ளோம். தற்போது இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கின்றது. பதக்கங்களை கடிப்பதற்கான பதிலை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இதற்கான பதில் தற்போது வெளிவந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில், சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக இருந்த டேவிட் வெலனஷ்கி கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் இவ்வாறு பதக்கங்களை கடிப்பது வழக்கமாக மேற்கொள்ளபடுகின்றது.


அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் டிரம்ப்பின் நிர்வாண சிலைகள்!
[Saturday 2016-08-20 11:00]

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நியூயார்க் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பெருநகரங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாண சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.


நடைப்பயிற்சி சென்ற சிறுமியை கடித்து காட்டிற்குள் இழுத்துச் சென்ற கரடி!
[Tuesday 2016-08-16 18:00]

கனடா நாட்டில் தந்தையுடன் நடைப்பயிற்சி சென்ற 10 வயது மகளை கரடி ஒன்று கடித்து காட்டிற்குள் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Port Coquitlam என்ற பகுதியில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே பகுதியில் வசித்து வரும் தந்தை ஒருவர் தனது 10 வயது மகளுடன் நேற்று முன் தினம் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது, திடீரென அடர்ந்த புதரில் இருந்து வெளியான கருப்பு கரடி ஒன்று இருவர் மீது பாய்ந்துள்ளது. இந்த தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த சிறுமியை கரடி கடித்து காட்டிற்குள் இழுத்துச் சென்றது.


மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து இளம்பெண் உயிரோடு எரிப்பு!
[Tuesday 2016-08-16 11:00]

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் சுவாமிவேல். இவரது மகள் சுபலெட்சுமி (35). இவரது கணவர் ஹரிதாஸ் (40). இவர் ஒரு தனியார் கல்லூரியில் கிளர்க்காக வேலைபார்த்து வருகிறார். தம்பதிக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. திருமணம் ஆனதில் இருந்து இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுபலெட்சுமி இன்று அதிகாலை தீயில் கருகிய நிலையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இத்தாலியில் பசி கொடுமையால் அழுத வயதான குடும்பம்: - உணவு சமைத்த போலீஸ்!
[Friday 2016-08-12 18:00]

இத்தாலியில் தனிமையில் வாடிய முதிய தம்பதியருக்கு போலீசார் சமையல் செய்து உணவு பரிமாறிய புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன. ரோம் நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில், 94 வயதான மைக்கேல் தனது 89 வயது மனைவி ஜோலேவுடன் வசித்து வருகிறார். கடந்த 70 வருடங்களாக இந்த தம்பதியினர் இணை பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தற்போது யாரும் இல்லை. இரு நாட்களுக்கு முன், இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். போலீசார் வீட்டின் அழைப்பு மணியை அடித்தும் பயனில்லை. கதவு திறக்கப்படவில்லை. வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து முதியவர்களை அச்சுறுத்துகிறார்களோ என எண்ணிய போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.


சீனாவில் அந்தரத்தில் தொங்கியபடி திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி!
[Thursday 2016-08-11 07:00]

சீனாவில் இளம் ஜோடி ஒன்று அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் அந்தரத்தில் தொங்கியபடி திருமணம் செய்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உலகில் வேறுபட்ட சூழலில் திருமணம் செய்து கொள்வது மாறுதலை விரும்பும் இளம் தலைமுறையினருக்கு பிடித்தமான ஒன்றாக அமைந்து வருகிறது. அந்த வகையில் சீனாவின் இளம் ஜோடி ஒன்று தங்களது திருமணத்தை அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில், அந்தரத்தில் தொங்கியபடியே நடத்திக்கொள்ள முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.அதன் ஒருபகுதியாக தனியார் நிறுவனம் ஒன்றை அணுகிய அந்த மணமகன், அவர்களின் ஏற்பாடின்படி, சீனாவின் Shiniuzhai தேசிய பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


எட்டு வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைய உள்ள உலகின் உயரம் குறுகிய ஜோடி!
[Wednesday 2016-08-10 13:00]

பிரேசில் நாட்டில் குடியிருந்து வரும் உலகின் உயரம் குறுகிய ஜோடி தங்களின் நீண்ட 8 வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.Katyucia Hoshino மற்றும் Paulo Gabriel da Silva Barros ஆகிய இருவரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள்.சமூகவலைதளம் ஒன்றில் எதிர்பாராத வகையில் சந்தித்துக்கொண்ட இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.முதலில் நட்பு பாராட்டவே மறுத்து ஒதுங்கி சென்றதாக கூறும் Katyucia பின்னர் Paaulo வின் குணம் தம்மை ஈர்த்ததாகவும், அதனையடுத்து 18 மாதங்களுக்கு பின்னர் தொடர்ந்து சமூகவலைதளம் வாயிலாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளனர்.


வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்த வாலிபரை கொலை செய்த கணவர்!
[Wednesday 2016-08-10 07:00]

ரஷ்யாவில் தண்ணீரில் மூழ்கிய பெண் ஒருவரை காப்பாற்றிய இளைஞர் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்ததை பார்த்த அந்த பெண்ணின் கணவர் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ரஷ்யாவின் சைபீரியாவின் பைக்கால் ஏரியில் கணவன், மனைவி இருவர் மது அருந்தி விட்டு தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது மனைவி ஆழமான பகுதிக்கு சென்று காப்பாற்றுமாறு சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள் அந்த கணவன் மனைவி இருவரையும் காப்பாற்றினார்கள்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா