Untitled Document
November 21, 2024 [GMT]
 
கனடாவின் கடன்தொகை 2016 ஆம் ஆண்டில் 1.3 ட்ரில்லியன் டொலர்களாக அதிகரிக்குமாம்!
[Tuesday 2016-01-05 09:00]

இந்த கடன்தொகைக்காக செலுத்தப்படும் அதிக வட்டி குறுகிய கால பாதிப்பாக அமையவுள்ளது. இந்த கடனுக்கான வட்டியாக வருடாந்தம் 60 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் நிலையில், இந்த நிதியானது வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்தின் இந்த கடன்தொகை காரணமாக எதிர்காலத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் அச்சசம் தெரிவிக்கின்றனர். கனடாவின் கடன்தொகை 2016 ஆம் ஆண்டில் 1.3 ட்ரில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என இன்று வெளியாகியுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.கனேடிய அரசாங்கத்தின் இந்த கடனின் காரணமாக குறுகிய கால மற்றும் நீண்ட கால பாதிப்புக்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கனடாவில் அகதிகளாக தஞ்சம் புகும் மக்களை குறிவைத்து மோசடி!
[Monday 2016-01-04 23:00]

கனடாவில் அகதிகளாக தஞ்சம் புகும் மக்களை குறிவைத்து மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவிற்கு வருகை தரும் அகதிகளுக்கு அண்மைக்காலமாக பொய்யான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கின்றன.கனேடிய குடிவரவுத் துறையில் இருந்து அழைப்பினை ஏற்படுத்துவதாக குறிப்பிடும் நபர்கள் அவர்களின் அனைத்து விபரங்களையும் சேகரிக்கின்றனர்.


கனடாவின் அல்பேர்ட்டா நகரில் நத்தார் தாத்தா வேடத்தில் சென்று நகைக்கடையில் கொள்ளைய!
[Monday 2016-01-04 19:00]

நத்தார் தாத்தா போன்று வேடமணிந்த நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் நகைக்கடையொன்றில் கொள்ளையடித்த சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. கடந்த நத்தார் தினத்துக்கு முதல்நாள் கனடாவின் அல்பேர்ட்டா நகரிலுள்ள நகைக்கடையொன்றுக்கு முழுமையான நத்தார் தாத்தா வேடமணிந்த நிலையில் நபர் ஒருவர் வந்தார். ஆனால், அவர் பரிசுப் பொருட்கள் எதையும் கொடுக்கவில்லை. மாறாக, துப்பாக்கியொன்றைக் காட்டி ஊழியர்களை அச்சுறுத்திய அவர், அங்கிருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் ஹம்மர் ரக வாகனமொன்றின் மூலம் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


பாம்பு விஷத்தை முறிக்கும் அதிசய புற்றுமண்! - ஐய்யன் கோயிலில் கிடைக்கிறது!
[Monday 2016-01-04 07:00]

நம் முன்னோர்கள் கோயில்களை வெறும் வழிபாட்டு தலமாக மட்டும் அமைக்காமல் நம்முடைய வாழ்கையின் பல நிலைகளிலும் உதவக்கூடிய ஒரு முழுமையான அமைப்பாக இயங்கும்படி நிறுவியிருக்கின்றனர். பஞ்ச காலத்தில் காத்துக்கொள்ள கோபுர கலசங்களில் நவதானிய விதைகளை வைத்தனர், பெருவெள்ளத்தில் இருந்து பாதுகாக்க தடிமனான கற்களால் ஆன மிகப்பெரிய மதில்களை அமைத்தனர், ஆன்றோர்கள் வாழ்ந்து கல்வி போதிக்கும் இடமாகவும், தீராத நோய்களையும் குணமாக்கும் மருத்துவ கூடமாகவும் கூட கோயில்கள் இருந்திருக்கின்றன.


அமெரிக்காவில் அபூர்வம்! இரு வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்!
[Monday 2016-01-04 07:00]

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் புத்தாண்டிற்கு ஒரு நிமிடம் முன்னர் ஒரு குழந்தையும், புத்தாண்டின் ஒரு நிமிடம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்த அபூர்வம் நிகழ்ந்துள்ளது. நம்ம ஊர்ல புது டிரஸ் போட்டுட்டு,


பிரித்தானியாவில் 35 மில்லியன் பவுண்ட் ஜாக்பாட் பரிசை இழந்த தம்பதியர்:
[Saturday 2016-01-02 08:00]

பிரித்தானியாவின் லீசெஸ்டர் பகுதியில் லட்சாதிபதியாகும் அரிய வாய்ப்பை தங்களது கவனக்குறைவால் தம்பதியர் ஒருவர் தவறவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லீசெஸ்டர் பகுதியில் வசித்து வரும் டேவிட் மற்றும் எட்வினா நைலான் தம்பதியர் லொட்டோ எனப்படும் எண்கள் தெரிவு செய்யும் போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்தும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 பவுண்டுக்கான லொட்டோ டிக்கெட் ஒன்றை வாங்க முயன்றுள்ளார். அப்போது தமது கணக்கில் போதிய பணம் இல்லை என அந்த கைப்பேசி லொட்டோ செயலி தெரிவிக்கவும், அதை நிவர்த்தி செய்த பின்னர் டிக்கெட்டை வாங்கி 6 அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்து சமர்ப்பித்துள்ளார்.


புற்றுநோய் ஏற்பட்டதாக பொய் கூறி நிதி சேகரித்த அமெரிக்க அழகுராணி: - அமெரிக்காவில் கைது
[Thursday 2015-12-31 19:00]

தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக பொய் கூறி, நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க அழகுராணி ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பிராண்டி லீ வீவர் கேட்ஸ் எனும் யுவதி இவ்வருடம் பென்சில்வேனியா மாநில அழகுராணியாக முடிசூட்டப்பட்டிருந்தார். தற்போது 23 வயதான வீவர் கேட்ஸ் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி தனது சிகிச்சைகளுக்காக நிதி சேகரிக்க ஆரம்பித்தார். கடந்த இரு வருடகாலமாக இவர் தொடர்ச்சியாக நிதி திரட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கிடைத்த இரகசியத் தகவல்களையடுத்து, பென்சில்வேனியா மாநில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதன்பின் கடந்த ஓகஸ்ட் மாதம் வீரர் கேட்ஸ் கைது செய்யப்பட்டார்.


விவா
[Thursday 2015-12-31 08:00]

நெதர்


தெலுங்
[Wednesday 2015-12-30 15:00]

தெலுங்


காந்தம் மூலம் இயங்கும் பைக் ! மாணவன் கண்டுபிடிப்பு: இந்த இளம் விஞ்ஞானியை வாழ்த்துவோம்!
[Wednesday 2015-12-30 14:00]

பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு - பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ். ''தற்போது உள்ள சவாலான விஷயம் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன் உதாரணம்தான், காந்த விசையின் மூலம் இயங்கும் இந்த இன்ஜின். இது அதிக வெப்பத்தை வெளிவிடாது, குறைந்த எடையுடையது, அதிக இடத்தையும் ஆக்கிரமிக்காது. மின்வெட்டுக்கும தீர்வாகிறது. இதனை ஜெனரேட்டராகவும் பயன்படுத்தலாம். இந்த இன்ஜினுக்குள் ஏற்படும் காந்த விசையின் அளவுக்கு ஏற்ப மின்சாரத்தையும் தயாரிக்கலாம்'' என்கிறார் வெங்கடேஷ் மேலும் 'தான் ஒரு இயற்கை விஞ்ஞானி


சிகிரிய சுவர் ஓவியங்களை புகைப்படம் எடுப்பதற்க்கு இன்று முதல் தடை !
[Wednesday 2015-12-30 08:00]

சிகிரிய சுவர் ஓவியங்களை புகைப்படம் எடுப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் குறித்த குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்திற்கு வந்ததாக மத்திய கலாசார நிதியத்தின் சிரேஷ்ட அத்தியட்சகர் பிரஷாந்த குணவர்தன தெரிவித்தார். புராதான சுவர் பகுதி ஒன்று உடைந்ததன் காரணமாக, அதனை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இந்தியாவில் ரயிலில் வைத்து 14 வயது சிறுமி இராணுவ வீரர்களால் கூட்டு பாலியல் வல்லுறவு!
[Tuesday 2015-12-29 18:00]

இந்தியாவில் ரயிலில் வைத்து 14 வயது சிறுமி இராணுவ வீரர்களால் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டகொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹவுரா-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனக்கு மதுபானம் கொடுத்து, இரண்டு இராணுவ வீரர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரயில்வே பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்பத்தில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ரயில் முழுவதும் செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


எட்டாயிரம் கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்த ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது!
[Monday 2015-12-28 21:00]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட இனிப்பு சுவை உணவை தயாரித்ததற்காக அந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கின்னஸ் விருது பெற்றுள்ளது. ஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு லட்டை தயாரித்தது.

 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா