Untitled Document
November 5, 2026 [GMT]
 
ஓஸ்ரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா 2020” பற்றிய செய்தியறிக்கை! Top News
[Friday 2020-01-17 13:00]

வங்கக்கடலில் 16-01-1993 இல் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-வினால் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் ஓஸ்ரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 12_01_2020 ஞாயிற்றுக்கிழமையன்று பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserve) மைதானத்தில் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் கோலாகாலமாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் ஓஸ்ரேலியத் தேசியக்கொடியினை விளையாட்டுவிழா செயற்பாட்டாளர் திரு அருணகிரிநாதன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை மற்றுமொரு நீண்டகால செயற்பாட்டாளர் திரு அன்ரன் வேதநாயகம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்-களின் திருவுருவப்படத்திற்கு தமிழ் தேசியச் செயற்பாட்டாளர் திரு பரணி அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மைதான விளையாட்டுக்கள் ஆரம்பமாகின. சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் ஓட்டப்போட்டிகள், சமநிலை ஓட்டம், தவளைப்பாய்ச்சல், தேசிக்காய் கரண்டியில் வைத்து ஓடுதல் அத்தோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான சங்கீதக்கதிரை என்பனவும் இடம்பெற்றது.


மத்திய மாகாண தமிழ் மாணவர்கள் தரம் 01 உள்வாங்கும் நிகழ்வு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் மிக சிறப்பாக நடைபெற்றது! Top News
[Friday 2020-01-17 09:00]

தரம் 01 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நாடுகெங்லும் இன்று (16) திகதி முன்னெடுக்கப்பட்டன. தேசிய நிகழ்வு மாத்தளையில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதற்கு இணையக பல நிகழ்வுகள் பாடசாலைகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மத்திய மாகாண தமிழ் மாணவர்களை தரம் ஒன்றுக்கு உள்வாங்கும் நிகழ்வு இன்று (16) ஹைலன்ஸ் கல்லூரியில் ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் கல்லூரியின் அதிபர் ஆர்,ஸ்ரீதரன் அவர்களின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகள் மற்றும் தரம் 01 மாணவர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஹட்டன் பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டன. அதனை தொடர்ந்து மாணவர்கள் மகிழ்ச்சி படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.


தைப் பொங்கல் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என அறைகூவல்! Top News Top News
[Friday 2020-01-17 09:00]

பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையின்(BTF) ஏற்பாட்டில் வருடா வருடம் இடம் பெறும் தைப் பொங்கல்நிகழ்வு தை மாதத்தினை "தமிழ் மரபுத் திங்கள்" (Tamil Heritage Month) என பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கருப் பொருளைமுன்வைத்து ஜனவரி 14ஆம் தேதி அன்று இடம் பெற்றது. அங்குகலந்து கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்பாரம்பரிய தமிழ் உடைகள் அணிந்து விழாக்களில் கலந்துகொண்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைகௌரவப்படுத்தியதுடன் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் எனஉறுதியளித்தனர். தைப்பொங்கல் என்பது இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா உட்பட்ட தமிழ் புலம்பெயர்ந்தமக்களாலும் தமிழ் சமூகத்தால் கொண்டாடப்படும் விழா. “தைப்பொங்கல்’ திருநாள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழையடிவாழையாக தொடர்கின்றது.


லண்டன் லூசியம் சிவன் நற்பணி மன்றத்தினால் பொங்கல் பானைகளை வழங்கி வைப்பு! Top News
[Thursday 2020-01-16 09:00]

வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கந்தசாமி நகரில் வசிக்கும் 45 குடும்பங்களுக்கு லண்டன் லூசியம் சிவன் நற்பணி மன்றத்தினால் பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்கு உரிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்ன. வருடந்தோறும் லண்டனில் இயங்கி வரும் லூசியம் சிவன் நற்பணிமன்றத்தினர் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஊடாக பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்கு உரிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.இவ்வருடமும் பின்தங்கிய நிலையில் வாழும் கந்தசாமி நகரை சேர்ந்த 45 குடும்பத்தினருக்கு இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது.


வல்வையில் கண்கவர் பட்டங்களின் அணிவகுப்பு! Top News
[Thursday 2020-01-16 08:00]

தைப்பொங்கலை முன்னிட்டு, வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று மாலை பிரமாண்டமான பட்டத் திருவிழா இடம்பெற்றது. வண்ண வண்ண உருவங்களிலான ஏராளமான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இதனை காண்பதற்கு குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் வல்வெட்டித்துறையில் குழுமினர்.


ஈரான் விமான விபத்து: மரணிக்கும் முன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கனடிய இளம்தாய் மற்றும் 8 வயது மகள்! - உருக்கமான பதிவு. Top News
[Saturday 2020-01-11 08:00]

விமான விபத்தில் உ யிரிழந்த கனடாவை சேர்ந்த தாய் மற்றும் மகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதோடு அவர்களின் பின்னணி மனதை உருக்கியுள்ளது. ஈரானில் நடந்த விமான விபத்தில் விமானத்தில் இருந்த 176 பயணிகளும் உயிரிழந்தனர். இதில் 63 கனடியர்களும் அடக்கும். இந்நிலையில் ரொரன்ரோவை சேர்ந்த இளம் தாயும், அவரின் 8 வயது மகளும் இந்த விமான விபத்தில் ப ரிதாபமாக இ றந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை பெண் பத்திரிக்கையாளரான Caryn Lieberman தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் Sahar Haghjoo என்ற பெண்ணும் அவர் மகளான Elsa Jadidi ஆகிய இருவரும் குறித்த விமானத்தில் ஏறியுள்ளனர். விமான கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இருவரும் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார்.


கனடாவைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்! Top News
[Friday 2020-01-10 09:00]

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் அறிஞர்களாலும் ஆர்வலர்களாலும் ஆரம்பித்து வைக்கப்பெற்ற எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமானது தற்போது கனடாவில் தலைமையகத்தை முழுப் பலத்தோடும் வளங்களோடும் கொண்டு வெற்றிகரமாக இயங்கிவருகின்றது. இயக்கத்தின் தற்போதைய தலைவராக வினாசித்தம்பி துரைராஜா அவர்களும், செயலாளர் நாயகமாக ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களும் வடஅமெரிக்க கிளைகளின் தலைவராக கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களும் கனடாக் கிளையின் தலைவராக ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களும் சர்வதேச ஊடகப் பொறுப்பாளராக பத்திரிகையாளர் செந்தில்வேலவர் அவர்களும் இலங்கைக் கிளையின் காப்பாளராக முன்னாள் அமைச்சர் இராதாகிருஸ்ணன் அவர்களும் மேலும் பல நாடுகளில் வாழும் அறிஞர் பெருமக்களும் ஆர்வலர்களும் பலமான தூண்களாக இயங்கிய வண்ணம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தைப் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் பாதுகாத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இந்த இயக்கம் பல காத்திரமான சேவைகளை எமது தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் அவற்றின் நலன்களுக்காக ஆற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இயக்கத்தின் 13வது மாநாட்டை கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் சிறப்பாக நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


கசீம் சுலைமானி யார்? அவருக்கும் எப்படி பெரும் ஆதரவு?.. Top News
[Thursday 2020-01-09 10:00]

62 சமர்க்களங்களை பாத்திருக்கார் மனிசன்.இஸ்ரேல் எப்டி தனிச்சிருக்கோ,அதேபோல மற்ற அரபு நாடுகளுக்கு நடுவில தனிச்சிருக்கிற தேசம் ஈரான்.41 வருசம் தாய் நாட்டுக்காகவே இயங்கி இருக்கார்.இஸ்ரேல்,சன்னி முஸ்லிம்கள்,குர்திஷ் பிரச்சினை,அமெரிக்கா என பலமுனைகளில் குறிவைக்கப்படும் ஈரானை தனது இராணுவ நுட்பத்தால் காப்பாற்றிய மனிசன்.மூன்று நாள் துக்கம் அனுட்டிப்பில் ஈரானே கண்ணீர் விட்டு அழுகிறது.

Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா