Untitled Document
November 23, 2024 [GMT]
 
யேர்மனியில் தமிழ் , 27 ஆண்டுகள்..! Top News
[Wednesday 2017-05-03 20:00]

யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின் உயர்வு மீண்டும் உறுதியாகியது... கடந்த 27 ஆண்டுகள் யேர்மனி முழுவதிலும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியையும் பண்பாடுகளையும் கற்றுக்கொடுத்த பெருமையோடு 27 வது அகவை நிறைவு விழாவைத் தமிழ்க் கல்விக் கழகம் கடந்த இருவாரங்களாக நடாத்தி வருகின்றது.


தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் :- தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி Top News
[Wednesday 2017-05-03 20:00]

தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் "கலைமாருதம்" எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10 வது ஆண்டாக கலைமாருதம் மாபெரும் ஈழத்து நட்சத்திர விழாவாக அரங்கம் நிறைந்த மக்களுடன் மெய்சிலிர்க்க வைத்த அரங்க வடிவத்துடன் எண்ணிக்கையில் அடங்கா நிறுவனங்களின், மக்களின் முழு ஆதரவுடன் நிறைவேறியது. மாபெரும் இவ் நிகழ்வை சிறப்பித்த அனைத்து ஈழத்து கலைஞர்களுக்கும் இவ் நிகழ்வுக்கு தமது முழு ஆதரவை தந்துதவிய அனைவருக்கும் தமிழ் பெண்கள் அமைப்பு -. யேர்மனி தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.


வடமாகாணத்தில் இலங்கை மக்கள் அரங்க நாடகச்செயல் திட்டம்! Top News
[Wednesday 2017-05-03 18:00]

இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திவரும் இலங்கை மக்கள் அரங்க நாடக செயற்திட்டத்தின் நான்காவது கட்டம், மே மாதம் தொடக்கம் வடமாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. இளம் தலைமுறையினரிடத்தில் பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, வித்தியாசங்களை மதித்தல் மற்றும் அகிம்சையை ஊக்குவித்தல் என்பன இம்முறை மக்கள் அரங்கச் செயற்திட்டத்தின் நோக்கங்களாகும்.


வற்றாப்பளையில் சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்த கேப்பாப்பிலவு மக்கள்! Top News
[Monday 2017-04-24 17:00]

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில், இன்று 108 சிதறு தேங்காய்களை உடைத்து வழிபாடு நடத்தினர். மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த இவர்களின் போராட்டம் இன்று 55 நாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.


டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடம் நடாத்திய மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டிகள் 2017 Top News
[Monday 2017-04-24 07:00]

டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் தமிழ்மொழித் திறனை வெளிக்கொணரும் நோக்குடனும் அவர்களின் மொழியாளுமையை வளப்படுத்தும் வகையாகவும் ஆண்டுதோறும் மாவீரர் நினைவாக தமிழ்த்திறன் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், இவ்வாண்டு இப்போட்டிகள் 22.04.2017 ஆம் நாளன்று வைல எனும் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றன. லெப். மாலதி, தியாகி அன்னைபூபதி அவர்களுக்கு விளக்கேற்றல், அகவணக்கம் ஆகிய நிகழ்வுகளுடன் போட்டிகள் தொடங்கின. இப்போட்டிகளில் கிட்டத்தட்ட 150 மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றினர். நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகைதந்து, இவர்களின் திறமைகளைக் கண்டுகளித்தனர்.


வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலை இலக்கிய கண்காட்சி மற்றும் விளையாட்டு விழா: Top News
[Monday 2017-04-24 07:00]

வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் திறண்களை உலகறிய செய்ய கலை இலக்கிய கண்காட்சி மற்றும் விளையாட்டு விழாவை 21.04.2017 தொடக்கம் 22.04.2017 வரை VAROD நிறுவனமானது வவுனியாவில் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. இதில் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தமது திறமைகளை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர்.


சிட்னி தமிழ் அறிவகத்தின் 'வசந்த மாலை' Top News
[Friday 2017-04-21 12:00]

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வான 'வசந்த மாலை' மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Bowman Hall மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு ஹோம்புஷ் மற்றும் வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்தோடு ஆரம்பித்த நிகழ்வு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளினால் களை கட்டி இருந்தது.


அவுஸ்திரேலியாவில் 'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்' நூல் வெளியீட்டுவிழா! Top News
[Thursday 2017-04-20 20:00]

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்த்தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான திருமதி நளினி முருகன் அவர்களின் முழுமையான அனுபவங்களை உள்ளடக்கியதான எழுத்தாளர் திரு பா. ஏகலைவன் எழுத்துருவாக்கம் செய்த "ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்" என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா கடந்த 17-04-2017 திங்கட்கிழமையன்று மாலை 4.00மணியளவில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில், டன்டினோங் நகரத்தில் சிறப்புற நடைபெற்றது.


வட மாகாண ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு விழா! - விக்கி, சுமந்திரன் பங்கேற்பு Top News
[Tuesday 2017-04-18 18:00]

தேசிய இன நல்லிணக்கத்திற்கான வகிபாகம் என்னும் தொனிப்பொருளிலான புத்தாண்டு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.


யாழ்ப்பாணம் வரணி கரம்பைக்குறிச்சி முன்பள்ளியின் விளையாட்டு விழா: Top News
[Sunday 2017-04-09 20:00]

யாழ்ப்பாணம் வரணி கரம்பைக்குறிச்சி முன்பள்ளியின் விளையாட்டு விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 2மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் திருமதி பவுந்திகா அல்பிரட் (முன்பள்ளி முகாமைத்துவக் குழு) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. ந.திருவாசகன் (உதவிக்கல்விப் பணிப்பாளர், தென்மராட்சி), திரு. ரி.ஜெயந்தன் (தாதிய உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு..


தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா: Top News
[Sunday 2017-04-09 17:00]

யாழ். சுழிபுரம், தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணிளவில் சிவபூமி முதியோர் இல்ல பாலச்சந்திரன் மண்டபத்தில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை) அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக திரு. திருமதி கந்தையா நீலகண்டன் (அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர்) தம்பதிகளும், சிறப்பு விருந்தினர்களாக திரு. நா.வேதநாயகன் தம்பதிகள் (அரச அதிபர், யாழ் மாவட்டம்), திரு. வை.ஈழலிங்கம் தம்பதிகள் (இளைப்பாறிய கணக்காளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு,


வயாவிளான் மத்திய கல்லூரிக்கான தொழில்நுட்ப பீடம் திறப்பும் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும்! Top News
[Friday 2017-03-31 18:00]

பலாலி வயாவிளான் மத்திய கல்லூரிக்கான தொழில்நுட்ப பீடம் திறப்பும் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிகள் நாட்டும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். இவருடன் யாழ் மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை எஸ்.சேனாதிராஜா


வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் ஆக்க திறன் கண்காட்சியும், மாணவர்கள் கௌரவிப்பும்! Top News
[Friday 2017-03-31 17:00]

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற உயர்தர மாணவர்களின் ஆக்க திறன் கண்காட்சி ஆரம்ப நிகழ்விலும், சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளையும் இணை பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்ற மாணவர்களை கௌவிக்கும் நிகழ்விலும், பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். இவருடன் யாழ் மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ் வேலாயுதம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த இரண்டு யாழ் இசைக்கருவிகள்! Top News
[Friday 2017-03-31 07:00]

யாழ்ப்பாணத்தின் குறியீட்டை பிரதிபலிக்கும் இரண்டு யாழ் இசைக்கருவிகள் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கும், யாழ். பல்கலைக்கழகத்திற்கும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும், அடையாளமாகவும் கருதப்படும் சின்னமான யாழ் இசைக்கருவி தற்போதுவரை யாழ்ப்பாணத்தின் எந்த பகுதியிலும் இல்லாத நிலையில், குறித்த இசைக்கருவியை புலம்பெயர் தமிழர் ஒருவர் வடிவமைத்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்துள்ளார்.


ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினரின் வாழ்வாதார உதவி Top News
[Friday 2017-03-24 20:00]

விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தின் தோமாஸ் புரி, வங்காலையைச் சேர்ந்த திருமதி அன்னம்மா ஜோன் குலாஸ் அவர்களுக்கு 25,000/- ரூபா நிதியொதுக்கீட்டில் அரவை இயந்திரம் (கிறைண்டர்) ஒன்றையும், மருந்துப் பொருட்களையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர்.


இந்து சமய பாடத்திட்ட குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு அமைப்பு ; கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு Top News
[Wednesday 2017-03-22 20:00]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் தொடர்பாகவும் உரிய முறையில் கவனம் செலுத்தாமை காரணமாக பாடத்திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளது.இதன் காரணமாக இந்து சமயத்தை கஙற்பதில் மாணவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்கும் முகமாக அதற்கென ஒரு புதிய குழு ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பேரூர் ஆதினத்தால் கௌரவிக்கப்பட்ட ஈழத்தமிழர் Top News
[Tuesday 2017-03-21 12:00]

தமிழ்நாட்டிலுள்ள பேரூராதீனத்தால் சமய, இலக்கிய தமிழ்ப்பணிகளை ஆற்றி வரும் ஈழத்தமிழரான சிவபாதம் கணேஷ்குமார் அவர்களை பாராட்டி (11-03-2017) இந்து இளம்பருதி என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்படடார் . தமிழ்நாட்டிலுள்ள திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் "அருள்திரு சாந்தலிங்க அடிகளார்" குருபூசை விழாவில் இந்து இளம்பரிதி என்னும் விருதினை சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் வழங்க அவர்களுடன், முனைவர் தவத்திரு மருதாசல அடிகளார், பழனி ஆதினம், கெளமார ஆதினமும் இணைந்து வாழ்த்தினார்கள். அன்றைய குரு பூசை விழாவில் குருவருளும் திருவருளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


காலஅட்டவணையுடன் சிறிலங்காவுக்கு காலநீடிப்பு வழங்கப்பட வேண்டும் : அமெரிக்காவின் முன்னாள் தூதுவர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சந்திப்பு ! Top News
[Tuesday 2017-03-21 08:00]

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகால மேலதிக அவகாசத்தினை வெறுமன கொடுத்துவிட முடியாது என போர் குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Steven J Rapp அவர்கள் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தான் ஒத்துக் கொண்ட எந்தவொரு விடயங்களை முறையாக சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள Steven J Rapp அவர்கள், காலஅவகாசம் என்பது ஒத்துக் கொண்ட ஒவ்வொன்றையும் செய்து முடிப்பதற்கான காலஅட்டவணையுடன் வழங்கப்பட வேண்டும் எனவும் வலிறுத்தியுள்ளார்.


கலைத்திறன் இறுதிப் போட்டி 2017 யேர்மனி : 'அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்' Top News
[Monday 2017-03-20 20:00]

அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்


தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவு உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி - 2017 Top News
[Monday 2017-03-20 20:00]

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 43ஆம் நினைவு ஆண்டில் நடாத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி. தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 43ஆம் ஆண்டின் நினைவுகளை சுமந்து சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் 19.03.2017 அன்று Sportanlage Hochweid Kilchberg என்னும் இடத்தில் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது. காலை 8.30 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் ஒளி ஏற்றப்பட்டு மற்றும் மண்மீட்பு போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்காகவும், இலங்கை, இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் அக வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.


திறப்பு விழாவிற்கு தயாராகிறது உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோருக்கான அலுவலகத்தினுடனான தொழிற்பயிற்சி கட்டடம்: Top News
[Monday 2017-03-20 19:00]

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பெரும் சவால்களின் மத்தியில் வாழ்வினை கொண்டு செல்லும் உறுப்பினர்களின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிபுற்றோர் அமைப்பு தன்பணிகளை விரிவாக்கி செயற்பட அமையவிருக்கும் அலுவலகத்தினுடனான தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாணவேலைகள் வெறும் 2 மாதங்களிலேயே முடிவடைந்து 30.03.2017 பிரமாண்டமாக திறந்து வைப்பதற்கான வேலைகள்நடைபெற்று வருகின்றன.


டொறன்ரோ மேயர் ஜோன் டோரி இலங்கை, இந்தியா பயணம் Top News
[Saturday 2017-03-18 18:00]

2014 நகரசபைத் தேர்தலில் கொடுக்கப்பட்ட இரட்டை நகர ஒப்பந்த வாக்கு நிறைவேற்றப்படவுள்ளது. டொறன்ரோ மேயர் ஜோன் டோரி அவர்கள் இந்தியாவில் திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தை டொறன்ரோப் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக பொலிவூட் திரைப்பட தயாரிப்பளர்களை சந்தித்து டொறன்ரோ நகரின் படப்ப்பிடிப்பு சம்பந்த்தப்பட்ட வாய்ப்புக்களை விளம்பரம் செய்ய இந்தியா பயணித்துள்ளார். கடந்த வருடம் படப்பிடிப்பு துறையால் டொறன்ரோ நகரின் பொருளாதாரம் $2 பில்லியணிற்கு மேல் பயன் கண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.


சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா தோற்றுவிட்டதா ? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி ! Top News
[Thursday 2017-03-16 21:00]

இலங்கைத்தீவில் நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரநீதியினை வென்றைடைவதில் ஐ.நா தோற்றுவிட்டா என்ற கேள்வியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்திடம் முன்வைத்துள்ளது. ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையளர் அலுவலகத்தின் ஆசிய பிராந்திய பொறுப்பதிகாரி Thomas HUNEKE அவர்களுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர், ஐ.நா மனித உரிமைச்சபைச் செயலர் முருகையா சுகிந்தன் அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.


ஜெனீவா வரும் இனப்படுகொலையாளி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர : வழக்குத் தொடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரம் !! Top News
[Thursday 2017-03-16 20:00]

அனைத்துலக அரங்கில் போர்குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா படையினரை நிரபராதிகள் என கூறுவதற்கு ஜெனீவா வருவிருக்கின்ற சிறிலங்காவின் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரக்கு எதிராக வழக்கொன்றினைத் தொடுக்கும் முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பயங்காரவாதத்துக்கு எதிரான மனிதாபிமானப் போரே சிறிலங்கா அரச படையினர் நடத்தினர் எனும் தொனிப் பொருளில் 'விருவங்கே வித்தி வாசக்கய' என்ற பெயரிலான அறிக்கை ஒன்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


யாழ் - நோர்வே பல்கலைக்கழக புரிந்துணர்வு உடன்படிக்கை Top News
[Tuesday 2017-03-14 22:00]

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கும் நோர்வேயின் பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகத்துக்கும் (எச்.எல்.வி) இடையிலான இணை ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மண்டபத்தில் இடம்பெற்றது.


ஓவியர் புகழேந்தியின்
[Tuesday 2017-03-14 21:00]

தமிழீழ ஆதரவு - தமிழர் உரிமை ஆதரவு - மதவெறி எதிர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் தமது ஓவியங்களின் மூலம் அழுத்தமான தடம் பதித்துள்ள ஓவியர் கு. புகழேந்தி அவர்கள் எழுதியுள்ள


கனடா இடைத் தேர்தல் வேட்பாளர் 'ராகவன் பரம்சோதி'யின் அலுவலக திறப்பு விழா Top News
[Monday 2017-03-13 20:00]

கனடாவில் மார்க்கம் - தோர்ண்ஹில் பகுதியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட மத்திய அரசுக்கான இடைத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிடும் தமிழரான ராகவன் பரம்சோதி அவர்களது தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை (மார்ச் 11) கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. தமிழர்கள் செறிந்து வாழும் மார்க்கம் நகரில் மார்க்கம் / டெனிசன் வீதிகளின் சந்திப்பில் (7200 Markham Road, Markham) இருக்கும் இந்த அலுவலகத்தில் மாலை 2:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் சுமார் 200 க்கும் மேலான தமிழ் மக்களும், இதர சமூக மக்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.


மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர், உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு Top News
[Monday 2017-03-13 10:00]

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு - 250 க்கும் மேலதிகமான தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்.


பணிநிறைவுப் பெருவிழா.. Top News
[Monday 2017-03-13 09:00]

பணிநிறைவைப் பெருவிழாவாக்கிப் பணியாரங்கள் சுமந்துவந்து பாராட்டி வழியனுப்பிய தமிழ் உறவுகள்.. தமிழ் மொழிக்கும் தமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் தன்னலமற்று உழைத்த ஒரு பணியாளரை எப்படி மதிப்பளித்து அவரின் பணிநிறைவைக் கொண்டாட வேண்டுமென்பதை வூப்பெற்றால் நகரத்துத் தமிழ் உறவுகள் கடந்த 11.03.2017 சனிக்கிழமை செய்து காட்டிள்ளார்கள்.


வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்!!.. Top News
[Sunday 2017-03-12 07:00]

வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்றைய தினம் (11/03/2017) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இன்று புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இவ் பொதுகூட்டத்திற்கு வவுனியா பிரதேச செயலாளர் திரு. உதயராஜா, நிர்வாக உத்தியோகத்தர்,பிரதேச கலாசார உத்தியோகத்தர், வவுனியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திரு.அபேயசிங்க, திரு.சுகானி,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கேசவன், இளைஞர் சேவை அதிகாரிகளான ரதித்திரா, திரு.சசிக்குமார், மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் திரு.கிரிதரன், மற்றும் இளைஞர் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா