Untitled Document
November 23, 2024 [GMT]
 
ஐ.நா மனித உரிமை உயர்ஆணையருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் இந்தியப் பொதுவாழ்வுப் பிரமுகர்கள் வேண்டுகோள் Top News
[Saturday 2017-03-11 19:00]

தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை மன்றத்தின் 34ஆம் அமர்வில் சிறிலங்கா அரசுக்கு அதன் உறுதி மொழி களை நிறைவேற்ற மேற் கொண்டு அவகாசம் தரக் கூடாதென்றும், இந்தச் சிக்கலை ஐநா.பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்றும், அனைத்துலகக் குற்ற வியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென்றும் ஒரு வேண்டுகோள் விண்ணப்ப மடலில் தமிழகத் திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும், கல்வியி யலாளர்களும் வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர் இயக்கங்களின் தலைவர்களும் ஓரணியில் திரண்டு கையொப்பம் போட்டுள்ளார்கள்.


டென்மார்க்கில் " எமது நிலம் எமக்கு வேண்டும்" கவனயீர்ப்பு ஒன்று கூடல் Top News
[Saturday 2017-03-11 19:00]

கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக டென்மார்க்கில் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் K


மார்க்கம் - தோர்ண்ஹில் இடைத் தேர்தலுக்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளாராக ராகவன் பரம்சோதி தெரிவானார் : Top News
[Friday 2017-03-10 18:00]

மார்க்கம் - தோர்ண்ஹில் இடைத் தேர்தலுக்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளாராக ராகவன் பரம்சோதி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமை இரவு வேட்பாளர்களுக்கான நியமனத் தேர்தல் மார்க்கம் - தோர்ண்ஹில் தொகுதியிலுள்ள மிலிக்கன் மில்ஸ் சனசமூக நிலையத்தில் இரவு 7:30 மணிக்கு ஆரம்பமானது. மார்க்கம் - தோர்ண்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கலம் சமீபத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து இத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 3 ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. கால அவகாசம் போதாமலிருந்தும் வேட்பாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு தம்மை இத் தேர்தலுக்குத் தயார்ப்படுத்தியிருந்தனர்.


வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்த சிறிலங்கா: - அடுத்து என்னவென்று ஐ.நாவில் கேள்வி எழுப்பிய நிபுணர்கள் !! Top News Top News
[Thursday 2017-03-09 22:00]

வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், அனைத்துலக சமூகத்தின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வினை பன்னாட்டு நிபுணர்கள் ஜெனீவாவில் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று வியாழக்கிழமை , ஐ.நா மனித உரிமைச்சபையில் மதியம் 11 மணிக்கு, எனும் தொனிப்பொருளில் பக்க நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த, சிறிலங்காவின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுப்பிரதிநிதிகள் இதில் பங்கெடுத்திருந்தனர்.


கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல்தமிழ் மொழியெங்கள் உயிராகும்.. Top News
[Wednesday 2017-03-08 19:00]

கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது வளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்றபோட்டியை அறிமுகம் செய்துள்ளது.


வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலி போராட்டம்! Top News
[Wednesday 2017-03-08 18:00]

நியமனம் வழங்கக் கோரி பத்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பட்டதாரிகள் தமது முகங்களைக் கறுப்புத் துணியால் கட்டியவாறு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலி போராட்டம்! Top News
[Wednesday 2017-03-08 07:00]

வேலைவாய்ப்பை வழங்கக்கோரி முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு அரசாங்கமோ அதிகாரிகளோ இதுவரை எந்த உறுதியான பதிலும் வழங்காத நிலையில், இன்று தமது போராட்டத்தை வேறு வழியில் முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று மனிதச் சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள் இதற்கு யாழ்ப்பாண கல்விச் சமூகம் ஒத்துழைப்ப வழங்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.


மனிதம் சாகவில்லை ஆனால் நாங்கள்தான்!!
[Tuesday 2017-03-07 16:00]

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள கற்சிலைமடு என்னும் கிராமத்தில் உள்ள பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றுபவர்தான் தர்சன் என்னும் 27 வயதுடைய இளைஞர். இவருக்கு பாடசாலையில் மாதாந்தப் படியாக ரூபா 5000.00ல் இருந்து ரூபா 10,000.00 வரை வழங்குகின்றார்கள். இவர் ஏறக்குறைய 7 ஆண்டுகள் இப்பகுதியிலே தொண்டர் ஆசிரியராகக் கடமைபுரிகின்றார்.


நீங்களும் உதவி செய்ய முன்வரலாம்.. Top News
[Friday 2017-03-03 19:00]

கனடா வன்னிச் சங்கத்தினது தொடர்ச்சியான முயற்சியினால் மாற்றுத்திறனாளியான மேரிபாலன் கிரிசாந்தன் அவர்களுக்கு சுயதொழில் முயற்சிக்குரிய முச்சக்கர வாகனம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாகனத்தினை வாங்கி வழங்குவதற்குரிய முதற்கட்ட நிதிஉதவியினை வழங்கிய சுதாகர் பரஞ்சோதி னுநடவயரசயஇ ஆளைளளைளயரபய நிறுவன உரிமையாளர் அவர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தினர் தங்கள் இதைய பூர்வமாக நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள். அத்தோடு மேற்படி நிதி உதவியினைப் பெறுவதற்கு எல்லாவகையிலும் உழைத்த அமையத்தின் தலைவர் திரு பொ. சிவசுதன் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.


ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது . Top News
[Friday 2017-03-03 19:00]

தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருருளிப்பயணம் 7 வது நாளாக இன்று மாலை 19 மணிக்கு சுவிஸ் நாட்டு பாசல் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து பாசல் நகர மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் நகரசபை உறுப்பினர் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற கொடுமைகளை கேட்டறிந்ததோடு மிகுந்த கரிசனையோடு கலந்துகொண்ட மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கினார்.


பிரித்தானியாவில் நடைபெற்ற மாசி மாத மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு! Top News
[Thursday 2017-03-02 23:00]

லெப் கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், லெப் கேணல் கௌசல்யன், கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் விநாயகம், மகளிர் படையணி லெப் கேணல் புவிதா, வான் க௫ம்புலி கேணல் ரூபன், வான் க௫ம்புலி லெப் கேணல் சிரித்திரன், ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும், பேரன்னை பார்வதியம்மா, மாமனிதர் சந்திரரேரு மற்றும் அன்னிய சிறீலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குமான நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.


பிரான்சு குடியரசுச் சிலைக்கு முன்பாக இடம்பெற்ற கேப்பாப்புலவு கவனயீர்ப்புப் போராட்டம் Top News
[Thursday 2017-03-02 19:00]

சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இன்று (01.03.2017) புதன்கிழமை பிரான்சு குடியரசுச் சிலை முன்பாக (Republique) பிற்பகல் 15.00 மணிமுதல் 18.00 மணிவரை கொட்டும் மழைக்கு மத்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.


6 வது நாளாக ஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம் Top News
[Thursday 2017-03-02 09:00]

இன்று மதியம் saverne நகரபிதாவை சந்தித்து உரையாடியதோடு மனுவும் கையளித்தனர். குளிரான கால நிலையை கடந்து வந்ததை அறிந்த நகரபிதா சிறந்த முறையில் அனைவரையும் உபசரித்ததோடு கரிசனையோடு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடக்கும் கொடுமைகளை கேட்டறிந்தார். சந்திப்பை தொடர்ந்து ஈருருளிப்பயணம் strasbourg நகரை நோக்கி செல்கின்றது.


பலாலி வசவிளான் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கிய த.சித்தார்த்தன் Top News
[Thursday 2017-03-02 08:00]

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ். பலாலி வசவிளான் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி தெற்கு, பலாலி, வசாவிளான், தோலகட்டி ஆகிய கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். சொந்த நிலத்திலிருந்து வெளியேறி 30 வருடங்களாக தனியார் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தாம் வாழ்ந்து வருவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.


மக்களின் ஒரு மாதகாலப் போராட்டம் வெற்றி - பிலக்குடியிருப்பு காணிகள் விடுவிப்பு! Top News
[Wednesday 2017-03-01 19:00]

கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பலனாக அவர்களின் காணிகள், விமானப்படையினரால் இன்று விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். விமானப்படையினர் வசமிருந்த பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் இன்று முற்பகல் திறந்துவிடப்பட்டதை அடுத்து, சொந்த காணிகளுக்குள் மக்கள் கால்பதித்தனர்.


2017 ஆம் ஆண்டுக்கான மலையக மக்கள் முன்னணி தேசிய பேராளர் மாநாடு Top News
[Wednesday 2017-03-01 14:00]

2017 ஆம் ஆண்டுக்கான மலையக மக்கள் முன்னணி தேசிய பேராhளர் மாநாடு 26.02.2017 அன்று ஹட்டன் கிருஸ்ணபவான் கலாசார மண்டபத்தில் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள நடைபெற்றுது. இதன் போது புதிய பதவி தாங்குணர்கள் நியமிக்கபட்டார்கள்.


4 வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகருக்கு வந்தடைந்தது Top News
[Wednesday 2017-03-01 13:00]

தமிழின அழிப்புக்கு ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் , ஐநா மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று காலை யேர்மன் நாட்டுக்குள் வருகைதந்து மாலை நேரம் சார்புருக்கன் நகர மத்திக்கு வந்தடைந்ததுடன் அங்குள்ள தமிழ் உறவுகளையும் சந்தித்து உரையாடினர். இச் சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தனது சிம்மக் குரலால் உரம் சேர்த்த மாமனிதர் எஸ் ஜி சாந்தன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி சுடர் ஏற்றினர்.


தமிழ் மக்கள் பேரவை சமூக அமைப்புக்கள் கலந்துரையாடல் Top News
[Wednesday 2017-03-01 13:00]

தமிழ் மக்கள் பேரவையும் சமூக அமைப்புக்களும் இன்று யாழ். கோணடாவிலில் சந்தித்து கலந்துரையாடியுள்ளன. கேப்பாபிலவு மற்றும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பாக நடைபெற்று வருகின்ற போராட்டங்கள் தொடர்பாகவும், இந்தப் போராட்டங்களை மேலும் வலுவாக்குவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்வதற்காக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம், சார்புருக்கன் நகரபிதாவை சந்தித்தது Top News
[Wednesday 2017-03-01 13:00]

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 5 வது நாளான இன்று மதியம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களால் வரவேற்கப்பட்டத்தோடு , பயணத்தை மேற்கொண்டவர்களின் பயண நோக்கத்தை கரிசனையுடன் கேட்டறிந்து , ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் பொருட்டு தனது முயற்சியை முன்னெடுக்கவுள்ளதாக உறுதியளித்தார். இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருக்கும் வரிச்சலுகை தொடர்பாக உரையாடல் மேற்கொண்ட தருணத்தில் , இவ்விடையத்தை தனது கட்சியை சார்ந்த சக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.


புரட்சி பாடகர் எஸ் ஜீ சாந்தன் அவர்களுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது: Top News
[Monday 2017-02-27 18:00]

எமது தமிழீழ விடுதலைக்காக தனது வாழ்வின் பெரும் பங்கை கொடுத்து இன்று உடல் நிலை சீரின்மை காரணமாக தனது வாழ்வை முடித்து விழி மூடி போன எமது தேசத்தின் இன்னிசைக் குரல் எஸ் ஜீ சாந்தன் அண்ணா உறங்கும் இன் நேரத்திலே ஜேர்மனின் ஸ்ருட்கார்ட் மண்ணில் சின்னம் சிறு குழந்தைகளின் இன்னிசை அரங்கேற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லயம் நுன்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழீழத்தின் தலைசிறந்த இசையமைப்பாளரும் லயம் நுன்கலைக்கழக பிரதம ஆசானுமாகிய இசைப்பிரியனின் மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் அரங்கேற்றம் கண்டனர்.


கிளிநொச்சி வர்த்தகர்கள் ஆதரவுப் பேரணி! Top News
[Thursday 2017-02-23 18:00]

கிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இரவு பகலாக இடம்பெற்று வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கும், பரவிப்பாஞ்சான் மக்களின் நிலம் மீட்பு போராட்டத்திற்கும் கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்து பேரணியை நடத்தினர்.


பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்! Top News
[Thursday 2017-02-23 07:00]

படையினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தின் முன்பாக இரவு பகலாக போராடி வரும் பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பு ரயில்நிலையத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


யேர்மனியில் வெளிவிவகார அமைச்சுக்கு முன், நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவான அடையாள கவனயீர்ப்பு நிகழ்வு.. Top News
[Tuesday 2017-02-21 08:00]

தாயகத்தில் நடைபெறும் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் யேர்மனியில் பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் அடையாள ஆதரவு கவனயீர்ப்பும் மனு கையளிப்பும் நடைபெற்றது.தமிழர் நிலத்தை அபகரித்து , தமிழர் வாழ்வுரிமையை மறுதலித்து ,தமிழீழ தேசத்தை அழிக்கும் வகையில் சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் கடடமைப்புசார் இனவழிப்பை எடுத்துரைக்கும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பதாதைகளை தங்கியவண்ணம் மழை குளிரை பாராது நீதி வேண்டி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்வின் இறுதியில் வெளிவிவகார அமைச்சிடம் மனு கையளிக்கப்பட்டது. கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சில் இலங்கைக்கான உயரதிகாரியுடன் நேரடி சந்திப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


கேப்பாப்பிலவு சிறுவர்களின் ஓவியங்கள்! - ஆற்றுப்படுத்தல் செயற்பாடு Top News
[Sunday 2017-02-19 18:00]

முல்லைத்தீவு- பிலக்குடியிருப்பு மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்றக் கோரி 20 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புலம்பெயர் தமிழர் ஒருவருடைய பங்களிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களுக்கு சித்திரம் வரைவதற்கான அப்பியாச புத்தகங்கள் பென்சில்கள் மற்றும் வர்ணப் பெட்டிகள் என்பன இன்றைய தினம் வழங்கப்பட்டன.


கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

Top News
[Sunday 2017-02-19 11:00]

யாழ். கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலயத்தின் அதிபர் கி.தர்மசீலன் அவர்களின் தலைமையில் 16.02.2017 வியாழக்கிழமை நடைபெற்றது. மேற்படி நிகழ்வின் பிரதம விருந்திரனராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கோ.பாரதராஜமூர்த்தி (பிரதிக் கல்விப் பணிப்பாளர், யாழ் வலயம்) அவர்களும், கௌரவ விருந்திரனாக முருகையா சுரேந்திரராஜா (பழைய மாணவர்) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின.


யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் தேசிய மட்டத்தில் சாதித்த வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு Top News
[Sunday 2017-02-19 11:00]

கடந்த வருடம் நடைபெற்ற இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான தேசிய மட்டப் பேட்டிகளில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும நிகழ்வு யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி லக்ஸ்மி திருமண மண்டபத்தில் நேற்று 17.02.2017 மாலை நடைபெற்றது.


புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றக்கோரி வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயம் முன்பாக போராட்டம்
[Saturday 2017-02-18 19:00]

யாழ். வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட வலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் புதிய அதிபரை மாற்றக்கோரி பாடசாலை சமூகத்தினர் இன்றுகாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்றுகாலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக புதிய அதிபரை மாற்றி பழைய அதிபரை மீண்டும் பாடசாலையில் நியமிக்குமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


வவுனியா கனகராயன்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி Top News
[Saturday 2017-02-18 08:00]

வவுனியா மாவட்டம் கனகராயன்குளத்திலுள்ள குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி அவர்களது தலைமையில் நேற்று (17 மாசி 2017) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொருளாளர் கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் மேலும் நெடுங்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.


புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்து சித்தார்த்தன் ஆதரவு Top News
[Thursday 2017-02-16 22:00]

தமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்று முன்தினம் முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்படி சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.


யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2017 Top News
[Thursday 2017-02-16 08:00]

யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 2017-நிகழ்வு நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை காலை கல்லூரியின் அதிபர் திரு. மோகநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக லோ.விஸ்வநாதன் (நிர்வாக உத்தியோகத்தர் கல்வியமைச்சு, வடமாகாணம்), சுபாஸ் மஞ்சுளா கந்தவல (கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர்களான சி.தினேசன் (வைத்தியர், யாழ் போனதா வைத்தியசாலை), திரு. க.தர்சன், திருமதி த.லீலாராணி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா