|
|
காற்றழுத்த தாழ்வு பகுதியால் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!
[Wednesday 2024-11-20 18:00]
|
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
|
|
|
அரசு பாடசாலைக்குள் புகுந்து இளம் ஆசிரியை குத்திக்கொலை!
[Wednesday 2024-11-20 18:00]
|
தமிழக மாவட்டம் தஞ்சாவூரில் அரசு பாடசாலை ஆசிரியை, கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பாடசாலையில் ஆசிரியையாக ரமணி (26) என்ற இளம்பெண் 4 மாதங்களுக்கு முன் பணிக்கு சேர்ந்துள்ளார். பாடசாலை தொடங்கிய வேளையில் ஆசிரியை ரமணி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த மதன் (28) என்ற நபர் ரமணியை வெளியே அழைத்து பேசியுள்ளார்.
|
|
|
"கஸ்தூரியின் சிறப்பு குழந்தை நிலையை வைத்து ஜாமீன் முடிவை எடுங்க" - நீதிபதியின் மனைவி வேண்டுகோள்!
[Wednesday 2024-11-20 18:00]
|
நடிகை கஸ்தூரி ஜாமீன் விவகாரத்தில் அவரது சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதியின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதியாக இருப்பவர் ஜி.ஆர்.சுவாமிநாதன். இவரது மனைவி காமாட்சி சுவாமிநாதன், சக்ஷம் (மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு) என்ற அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவராக உள்ளார்.
|
|
|
விசா நடைமுறை மற்றும் நேரடி விமான சேவை: இந்தியாவிடம் வலியுறுத்திய சீனா!
[Wednesday 2024-11-20 18:00]
|
இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் துவங்குமாறு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜி 20 மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.
|
|
|
லண்டனில் ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தானின் வீர வாள்!
[Wednesday 2024-11-20 18:00]
|
இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வீர வாள் ஏலத்தில் ரூ.3.4 கோடிக்கு விற்கப்பட்டது. 799-ம் ஆண்டு, மைசூர் மன்னர் திப்பு சுல்தானும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியும் மோதிக்கொண்ட ஸ்ரீரங்கப்பட்டினம் போர், இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் போரில் மன்னர் திப்பு சுல்தான் வீர மரணம் அடைந்தார்.
|
|
|
ரூ.500 கோடி: ஜார்க்கண்ட்டில் பாஜக திட்டம் இதுதான் - ஹேமந்த் சோரன் தாக்கு!
[Tuesday 2024-11-19 18:00]
|
ஜார்கண்ட் முதல்வரும் ஜேஎம்எம் கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார். தனது அரசு குறித்துத் திட்டமிட்டு பாஜக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக விமர்சித்த ஹேமந்த் சோரன், இதற்காக பாஜக பல நூறு கோடி செலவழித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அங்கு எதிர்க்கட்சி வரிசையில் பாஜக இருக்கிறது.
|
|
|
சிவன் கோயில் கருவறையில் அமர்ந்து மது அருந்தும் பூசாரி!
[Tuesday 2024-11-19 18:00]
|
ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் வேணுகோண்டா பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் கருவறைக்குள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு கூல்ட்ரிங்ஸ் பாட்டிலில் பூசாரி ஒருவர் மது அருந்திக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அந்த பூசாரி மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்துள்ளனர். கோவில் கருவறைக்குள் அமந்து பூசாரி ஒருவர் மதுபானம் குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், பூசாரி ஒருவர் சிவன் கோவில் கருவறைக்குள் அமர்ந்திருக்கிறார்.
|
|
|
இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் வழங்கிய இந்தியா!
[Tuesday 2024-11-19 18:00]
|
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். திஸாநாயக்க செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகரான வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
|
|
|
நீண்டநேர உடற்பயிற்சி: குளிக்கும்போது மூக்கில் ரத்தம் வழிந்து இறந்த நபர்!
[Tuesday 2024-11-19 18:00]
|
தமிழக மாவட்டம் சேலத்தில் உடற்பயிற்சிகூட உரிமையாளர், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் உடற்பயிற்சிகூடம் வைத்து நடத்தி வந்தவர் மகாதீர் முகமது. 35 வயதான இவர் தினமும் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த மகாதீர், பின்னர் நீராவி குளியல் எடுத்துள்ளார்.
|
|
|
ஐயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து: தென்காசி அருகே பரபரப்பு!
[Tuesday 2024-11-19 06:00]
|
கார்த்திகை மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் சபரிமலை சீசன் தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
|
|
|
ஏடிஎம் மையத்தில் தீ விபத்து!
[Tuesday 2024-11-19 06:00]
|
திருவள்ளூரில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏடிஎம் மையம் முழுவதும் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ளது கனகம்மாசத்திரம் பகுதி. அங்கு தனியார் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. வங்கி சார்பாக 5 லட்சம் ரூபாய் அந்த ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
|
|
|
லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரெய்டு: 12 கோடி பறிமுதல்!
[Tuesday 2024-11-19 06:00]
|
லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு கோவை மற்றும் சென்னையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது.
|
|
|
ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற காருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம்!
[Monday 2024-11-18 18:00]
|
கேரள மாநிலத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற கார் உரிமையாளருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலமான கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு செல்லுகின்ற வழியில் அவசரமாக ஆம்புலன்ஸ் ஒன்று பயணித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
|
|
|
திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு: பழம் கொடுக்க வந்தபோது யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!
[Monday 2024-11-18 18:00]
|
திருச்செந்தூர் கோயிலில் உள்ள தெய்வானை யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடுகளில் ஒன்றாக இந்த கோயில் விளங்குகிறது. இந்த கோயிலில் 25 வயது மதிக்கத்தக்க வகையில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது.
|
|
|
அதிமுக கூட்டணி குறித்து தெளிவுபடுத்திய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்!
[Monday 2024-11-18 18:00]
|
தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்று பல்வேறு கருத்துக்கள் பரவிய நிலையில் அக்கட்சியின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக உடன் கூட்டணி இல்லை என்று கூறியிருந்தார்.
|
|
|
7.44 காரட் வைரத்தை கண்டுபிடித்து பணக்காரரான விவசாயி!
[Monday 2024-11-18 18:00]
|
வைர சுரங்கத்தில் இருந்து விவசாயி ஒருவர் 7.44 காரட் வைரத்தைக் கண்டுபிடித்து பணக்காரர் ஆகியுள்ளார். இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள வைர சுரங்கத்தில் இருந்து திலீப் மிஸ்ட்ரி என்ற விவசாயி ஒருவர் 7.44 காரட் வைரத்தைக் கண்டுபிடித்து கொடுத்து ஒரே நாளில் பணக்காரர் ஆகியுள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னாவில் பிரபலமான வைர சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு, எந்தவொரு இந்திய குடிமகனும் அரசு வைர அலுவலகத்தில் நிலத்தை ரூ.200க்கு குத்தகைக்கு எடுத்து வைர சுரங்கம் அமைக்கலாம்.
|
|
|
பேருந்து நிலைய மேல்தள சிமெண்ட் காரை விழுந்து விபத்து: பெண்ணுக்கு தலையில் 7 தையல்!
[Monday 2024-11-18 06:00]
|
சிதம்பரம் பேருந்து நிலைய கட்டிடம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் கட்டிடத்தில் ஏற்படும் பழுதுகளை அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் சரி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தலையில் பல தடவை அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
|
|
|
பெண் எடுத்த அபாய முடிவு: மாமனார் மாமியார் கைது!
[Monday 2024-11-18 06:00]
|
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் செங்குட்டுவன் (65) ஓய்வுப் பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர். இவரது மனைவி பானுமதி (60) மகன் கயல்வேந்தன் (35) இவர் அந்தமானில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். மகன் கயல்வேந்தனுக்கும் புவனகிரியை அடுத்த வீரமுடையாநத்தம் அருள்பிரகாசம் என்பவரின் மகள் கயல்விழி (29)க்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
|
|
|
தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை: உயிரை மீட்ட மருத்துவர்கள்!
[Monday 2024-11-18 06:00]
|
காஞ்சிபுரம் அருகே 7 மாத குழந்தை தைல டப்பாவை விழுங்கிய நிலையில் அரசு மருத்துவர்கள் போராடிய குழந்தையை காப்பாற்றி உள்ள சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ளது ஆளவந்தார் மேடு கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த அஜித்-டயானா என்ற தம்பதிக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீழே கிடந்த நாணய அளவிலான தைல டப்பாவை வாயில் போட்டு விழுங்கியுள்ளது. பின்னர் டப்பாவை வெளியே துப்ப முடியாமல் சிரமப்பட்டுள்ளது. இதற்கிடையில் தொண்டை பகுதியில் தைல டப்பா சிக்கிக்கொண்டது.
|
|
|
'கடைவீதியில் ரகளை'- போலீசாரிடமே எகிறிய போதை இளைஞர்கள்!
[Monday 2024-11-18 06:00]
|
போதை ஆசாமிகளால் கடைவீதியில் மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே பிரதான சாலையில் இன்று மாலை 4 போதை இளைஞர்கள் மழையில் நனைந்து கொண்டே ரகளையில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் அடித்துக் கொண்டு அருகில் உள்ள கடைகளில் இருந்த பொருட்களை தூக்கி வீசியுள்ளனர். இதில் அந்த வழியாகச் சென்ற ஒரு மூதாட்டி காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
|
|
|
மணிப்பூரில் மீண்டும் வன்முறை!
[Sunday 2024-11-17 05:00]
|
மணிப்பூரில் மீண்டும் வன்முறை அரங்கேறி வரும் நிலையில் அம்மாநில முதல்வர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் ஜெரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் மீண்டும் வன்முறைகள் வெடித்திருக்கிறது. இதனால் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
|
|
|
27 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!
[Sunday 2024-11-17 05:00]
|
வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
|
|
|
கஸ்தூரி ஐதராபாத்தில் கைது!
[Sunday 2024-11-17 05:00]
|
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவான நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது.
|
|
|
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 7 மாவட்டங்களில் கனமழை!
[Friday 2024-11-15 17:00]
|
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
|
|
|
நேர்மையாளர் சர்வாதிகாரியாக தான் இருக்கணும்: சீமான் ஆவேசமான பேச்சு!
[Friday 2024-11-15 17:00]
|
ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாக தான் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "ஒரு நேர்மையாளர் என்பவர் சர்வாதிகாரியாக தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நேர்மையாக இருக்க முடியும்.
|
|
|
ஆதார் அட்டையை எத்தனை முறை புதுப்பிக்க முடியும்?
[Friday 2024-11-15 17:00]
|
ஆதார் அட்டையை புதுப்பிக்க சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. பயனர்கள் தங்கள் வாழ்நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறையில் ஆதாரை புதுப்பிக்க முடியும், எனவே நீங்கள் அடிக்கடி ஆதாரை புதுப்பித்தால் எத்தனை முறை செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். இது பல வகையான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
|
|
|
தமிழகம் - இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்!
[Friday 2024-11-15 17:00]
|
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்து குறிப்பிட்ட நாட்களுக்கு நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம் இடையே செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. பின்னர், வடகிழக்கு பருவமழை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், இரு நாடுகளை சேர்ந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
|
|
|
அர்ஷ் டல்லாவை ஒப்படைக்க கனடாவிடம் இந்தியா கோரிக்கை!
[Friday 2024-11-15 06:00]
|
காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் கில் என்கிற அர்ஷ் டல்லாவை கனடாவில் இருந்து திரும்ப அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கனடாவிலிருந்து டல்லாவை ஒப்படைக்க இந்திய ஏஜென்சிகள் கோரும் என்று கூறியது. கனடா அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. டல்லா தற்போது கனேடிய பொலிசாரின் காவலில் உள்ளார். அக்டோபர் 28 அன்று கனடாவின் மில்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
|
|
|
|