Untitled Document
July 5, 2024 [GMT]


நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் இல்லை: - நடிகர் தனுஷ் தெரிவிப்பு
[Saturday 2016-01-16 09:00]

இன்று மாட்டுப் பொங்கல் தினத்தையெட்டி வாழ்த்துத் தெரிவித்துவிட்டடு, நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் இல்லை என்றும், நான் பீட்டாவின் விளம்பர தூதர் இல்லை, பீட்டா அமைப்பிடம் இருந்து விருதுதான் வாங்கியுள்ளேன் என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்: அதிமுக போராட்டம் அறிவிப்பு!
[Friday 2024-07-05 06:00]

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் இந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹத்ராஸ் விரையும் ராகுல் காந்தி எம்.பி.!
[Friday 2024-07-05 06:00]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர்.


எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
[Friday 2024-07-05 06:00]

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11-07-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியிலும், 15-07-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவற்றைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதேபோன்று அன்றையதினம் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளனர். இந்நிலையில் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.


விஜய் கட்சிக்கு விரைவில் மூடு விழா: விளாசும் அர்ஜுன் சம்பத்!
[Thursday 2024-07-04 18:00]

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விரைவில் மூடு விழா நடத்தப்படும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விருது விழாவில் பேசிய விஜய், "நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு குளறுபடியால் அதன் மீது இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. அதற்கு நிரந்தர விலக்கு வேண்டும்" என்றார்.


தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய மரணம்!
[Thursday 2024-07-04 18:00]

தமிழக மாவட்டமான விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழக மாவட்டமான விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை குடித்த உள்ளூரைச் சேர்ந்த ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


விஜய் விழாவில் மணமணக்கும் சைவ விருந்து!
[Thursday 2024-07-04 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கிய விழாவில் சமைப்பதற்காக புதுச்சேரி கேட்டரிங் சர்வீஸை விஜய் புக் செய்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.


121 பேர் உயிரிழப்புக்கு சமூக விரோதிகளின் சதி தான் காரணம்: போலே பாபா சாமியார் சர்ச்சை பேச்சு!
[Thursday 2024-07-04 18:00]

உத்தரப் பிரதேச மாநிலம் ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு சமூக விரோதிகளின் சதி தான் காரணம் என்று போலே பாபா சாமியார் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்கிற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.


அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
[Thursday 2024-07-04 06:00]

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் சிறுநீரக பாதிப்புகளால் அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.


தமிழ்நாடு நாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு!
[Thursday 2024-07-04 06:00]

தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Thursday 2024-07-04 06:00]

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். இதற்கு நீதிகேட்டு பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. அது பள்ளிக்குள் கலவரமாக மாறியது. மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு ஸ்ரீமதி வழக்கு எனத் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்டமான திருமணம்: 3 நாட்கள் விழாவில் என்ன நடக்கப்போகிறது?
[Wednesday 2024-07-03 18:00]

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண அட்டவணையை பார்க்கலாம். Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.


ஆன்மீக நிகழ்ச்சியில் இறந்தவர்களின் உடல்களை பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு!
[Wednesday 2024-07-03 18:00]

உத்தர பிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சியில் பலியானவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில், இளம் காவலர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸில் ''போலே பாபா'' என்ற சாமியாரின் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தாமல் இவரை தேர்வு செய்யுங்கள்" - சீமான் அறிவுரை!
[Wednesday 2024-07-03 18:00]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக இதனை செய்யுங்கள் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகள் மோதுகின்றன. இந்தத் தேர்தலில் அதிமுக தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும், நமது பொது எதிரி திமுகவை அழிக்க இது தான் வழி என்றும் சீமான் வெளிப்படையாக பேசியிருந்தார்.


"நம் ஊரில் நாய் கூட பட்டம் பெறும் நிலை வந்துவிட்டது" - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு!
[Wednesday 2024-07-03 18:00]

இப்போது நம்ம ஊரில் நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மலேசிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் புதிய திட்டம்!
[Wednesday 2024-07-03 06:00]

மலேசிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்திய அரசு புதிய விசா திட்டத்தை தொடங்கியுள்ளது. மலேசிய சுற்றுலா பயணிகளுக்காக இந்திய அரசு இரட்டை நுழைவுக்கான இலவச மின்னணு சுற்றுலா விசா (e-Tourist visa) திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி இரு நாடுகளுக்கிடையே சுற்றுலாத் துறையை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.


மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 87 பேர் பலி: மேலும் உயரலாம் என அச்சம்!
[Wednesday 2024-07-03 06:00]

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், 87 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமம் ஒன்றில் மத சத்சங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


6 பெண்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த பேருந்து: ஒருவர் பலி!
[Wednesday 2024-07-03 06:00]

உத்தரகாண்டில் நடந்த பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரகண்டில் இன்று மாலை வேகமாக வந்த பஸ் 6 பெண்களை மோதி விபத்து ஏற்படுத்தியது. CCTV காட்சிகளில், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ ரிக்க்ஷாக்காக காத்திருந்த பெண்களை மோதி விபத்துக்குள்ளானது தெளிவாக தெரிந்தது.


இமய மலையின் 16,500 அடி உயரத்தில் ஏரியில் 800 எலும்புக்கூடுகள்: பல ஆண்டுகளாக நிலவும் மர்மம்!
[Tuesday 2024-07-02 18:00]

இமய மலையின் 16,500 அடி உயரத்தில் காணப்படும் ஒரு ஏரி, எலும்புக்கூடுகளின் ஏரி என்றே அழைக்கப்படுகிறது. காரணம், அந்த ஏரிக்கரையில் ஏராளமான எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. அவ்வளவு உயரத்தில் அத்தனை எலும்புக்கூடுகள் எப்படி வந்தன என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.


பிரித்தானியா நாடாளுமன்ற தேர்தல்: தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை வைத்த சீமான்!
[Tuesday 2024-07-02 18:00]

பிரித்தானியாவில் வரும் ஜூலை 4 -ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது பிரதமராக ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அங்கு வரும் ஜூலை 4 -ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.


"மோடி உலகில் உண்மையை அழிக்கலாம், ஆனால்!" - அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட கருத்துக்கு ராகுல் காந்தி பதில்!
[Tuesday 2024-07-02 18:00]

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அவர் பேசுகையில், "மோடியின் உலகில் உண்மையை அழிக்கலாம். ஆனால் எதார்த்தமான உலகில் அப்படி அல்ல, உண்மையை ஒருபோதும் அழிக்க முடியாது.


பல துறைகளில் கால் பதித்தவர் - தற்போது தமிழக மருத்துவத்துறை செயலாளர்: யார் அவர்?!
[Tuesday 2024-07-02 18:00]

தமிழகத்தில் புதிய மருத்துவத்துறை செயலாளராக சுப்ரியா சாஹு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக பதவி வகித்த நிலையில், தமிழகத்தின் புதிய மருத்துவத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கீழடியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!
[Tuesday 2024-07-02 06:00]

கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கீழடி 10ஆம் கட்ட அகழாய்வில் அகழாய்வுக்குழி எண் YW11/3 இல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் முறையே 58 செ.மீ மற்றும் 96 செ.மீ ஆழத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.


‘மத மோதல்களைத் தூண்டினால் குண்டர் சட்டம்’ - உயர்நீதிமன்றம்!
[Tuesday 2024-07-02 06:00]

மத மோதல்களைத் தூண்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
[Tuesday 2024-07-02 06:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காகச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.


பள்ளிகளுக்கிடையே மோதல்: முட்டிக்கொள்ளும் மாணவர்கள் - கதிகலங்கும் கோட்டைமேடு!
[Monday 2024-07-01 18:00]

கோவை மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள வின்சென்ட் சாலைப் பகுதியில்.. சிட்டி பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, கோட்டைமேடு பள்ளி என மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கோவை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, இந்த மூன்று பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குள் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சொல்லப்படுகிறது.


நாடாளுமன்றத்தை அதிர வைத்த இந்து மத விவகாரம்!
[Monday 2024-07-01 18:00]

நாடாளுமன்றத்தில் இந்து மதம் குறித்து ராகுல் காந்தி பேசியதும், அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்ததும் மக்களவையே அதிர வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நீட் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், அதனை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை.


497 மதிப்பெண்கள் எடுத்தும் விழாவுக்கு அழைக்காத விஜய்: காரணம் தெரியாமல் தவிக்கும் மாணவி!
[Monday 2024-07-01 18:00]

10 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3 வது இடம் பிடித்த மாணவியை விஜய் கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா கடந்த 28 -ம் திகதி நடைபெற்றது.


5 மாத குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற தந்தை!
[Monday 2024-07-01 18:00]

5 மாத குழந்தையின் அழுகையை ஏற்க முடியாமல் ஆத்திரத்தில் தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான நீலகிரி, ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம் (31) மற்றும் ரம்யா (21). இவர்களுக்கு ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது.

Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா