Untitled Document
July 1, 2024 [GMT]
ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் 16 பேர் கைது!
[Sunday 2016-01-17 09:00]

சுப்ரீம் கோர்ட்டின் தடையை மீறியவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.நேற்று, மாட்டுப் பொங்கலையொட்டி, தக்கலை அருகேயுள்ள பத்மனாபபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முயன்றனர். அதற்கு அப்பகுதியில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் 16 பேரை கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.


திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிய தமிழக அரசு!
[Sunday 2016-01-17 09:00]

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கோகுல இந்திரா, பழனியப்பன், பா.வளர்மதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 9 தமிழ் அறிஞர்களுக்கு விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். திருவள்ளுவர் விருது-தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், தந்தை பெரியார் விருது-வி.ஆர்.வேங்கன், திரு.வி.க. விருது-தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், பாரதியார் விருது-கவிஞர் பொன்னடியான், பாவேந்தர் பாரதிதாசன் விருது-வீ.ரேணுகாதேவி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது-ரா.கோ.ராஜாராம், பேரறிஞர் அண்ணா விருது- பர்வத ரெஜினா பாப்பா, பெருந்தலைவர் காமராஜர் விருது-வேங்கடசாமி, அம்பேத்கர் விருது-பொன்னுசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.விருது பெற்றவர்களுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கினார். இதைத்தொடர்ந்து அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான சான்றிதழை வழங்கி, ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


எழுச்சி இந்தியா திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு! - மோடி அறிவிப்பு
[Sunday 2016-01-17 09:00]

"எழுச்சி இந்தியா' திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் புதிய தொழில்முனைவோருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும், இந்தத் திட்டத்துக்கான முதல்கட்ட தொகுப்பு நிதியாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் "எழுச்சி இந்தியா; வளர்ச்சி இந்தியா' (ஸ்டார்ட் அப் இந்தியா; ஸ்டேண்ட் அப் இந்தியா) என்ற திட்டத்தை கடந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் இத்திட்டத்துக்கான செயல்முறைகள், கொள்கைகள் ஆகியவற்றை வரையறுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.இந்தப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், "எழுச்சி இந்தியா' திட்டமானது ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் தனது வானொலி உரையின்போது மோடி தெரிவித்தார்.


மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுகின்றதா....?
[Sunday 2016-01-17 08:00]

கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் 80 ஆயிரம் காளைகள் விற்கப்பட்டதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.இந்தத் தடையால் நாட்டு மாடுகள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.ஏர் பூட்டி நடத்தப்படும் விவசாயம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு, டிராக்டர் மூலம் உழுகிற விவசாயத்துக்குக் காளை மாடுகள் பயன்படுத்தப்படுவது இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல காளை மாட்டு வண்டிகளும் அடியோடு மறைந்துவிட்டன.இந்த நிலையில், இன விருத்திக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அழிக்கப்பட்டால், இன விருத்திக்கான காளைகளுக்கு நாம் ஐரோப்பிய நாடுகளை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


பெங்களூரு லால்பாக்கில் மலர் கண்காட்சி தொடங்குகிறது: - 50 ரகசிய கேமராக்கள் அவதானிப்பு!
[Saturday 2016-01-16 09:00]

கர்நாடக அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குனரும், லால்பாக்கில் உள்ள மைசூரு தோட்டக்கலை சங்க தலைவருமான எஸ்.பி.பொம்மனஹள்ளி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது - ஜெர்மனியை சேர்ந்த குஸ்டவ் ஹெர்மன் குரும்பிகல்லுக்கு இந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் பிருந்தாவனம், லால்பாக் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க பூங்காக்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு உண்டு. அவர் 1928-ம் ஆண்டில் இருந்து 1932-ம் ஆண்டு வரை லால்பாக் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். லால்பாக் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு முக்கியமானது ஆகும். மைசூரு அரண்மனையின் நுழைவு வாயில் வளைவை இவர் தான் உருவாக்கினார்.


நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் இல்லை: - நடிகர் தனுஷ் தெரிவிப்பு
[Saturday 2016-01-16 09:00]

இன்று மாட்டுப் பொங்கல் தினத்தையெட்டி வாழ்த்துத் தெரிவித்துவிட்டடு, நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் இல்லை என்றும், நான் பீட்டாவின் விளம்பர தூதர் இல்லை, பீட்டா அமைப்பிடம் இருந்து விருதுதான் வாங்கியுள்ளேன் என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் பழுதடைந்த பேருந்துகளைப் போல முடங்கிக்கிடக்கின்றன: - ராமதாஸ் சந்தேகம்
[Saturday 2016-01-16 08:00]

கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகளில் உடனடியாக புதிய வேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும், புதுமைகள் படைப்பதற்கும் அடிப்படைத் தேவை ஆரோக்கியமான, கல்வி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் ஆகும். ஆனால், தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் பழுதடைந்த பேருந்துகளைப் போல முடங்கிக்கிடக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உட்பட 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாகக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் இத்தனை பல்கலைக்கழகங்கள் தலைமை இல்லாமல் தடுமாறும் அவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தீக்குளித்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி பலி:
[Saturday 2016-01-16 08:00]

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் நீடித்து வரும் நிலையில் ஜல்லிகட்டு தடையை நீக்க கோரி மெக்கானிக் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டி ஜவகர் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் ரமேஷ் (வயது 37). இவர் தேனி பழைய பஸ்நிலையத்தில் வாட்ச் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று காலை ரமேஷ் திடீரென பெட்ரோல் கேனுடன் தேனி


மத்திய அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம் குறித்த விதிமுறைகளில் திருத்தம்: - அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு
[Friday 2016-01-15 20:00]

மத்திய அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம் குறித்த விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு அதிகாரிகள், ஆண்டுக்கு அதிகபட்சமாக 4 தடவைதான் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மேல் செல்ல விரும்பும் துறை செயலாளர்கள், பிரதமரின் ஒப்புதலை பெற வேண்டும். வேறு யாரையும் அனுப்ப முடியாத பட்சத்தில் தான், செயலாளர்கள் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளலாம். ஒரு துறையின் அமைச்சரும், செயலாளரும் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் இருக்கக்கூடாது.


சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கு தடை: -பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது - உச்ச நீதிமன்றம்
[Friday 2016-01-15 20:00]

சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக தொடரப்பட்டுள்ள பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.பருவம் அடையாத சிறுமிகளும், மாதவிலக்கு பருவத்தைத் தாண்டிய பெண்களும் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய முடியும் என்பது மரபு ரீதியாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம்.இந்நிலையில், அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழிபாட்டு அனுமதியை வழங்க உத்தரவிடக் கோரி இளம் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற முஸ்லிம் தம்பதியினர் மீது தாக்குதல்!
[Friday 2016-01-15 12:00]

மத்திய பிரதேசத்தில் ரயிலில் பயணித்த முஸ்லிம் தம்பதியினர் மாட்டிறைச்சியை கொண்டு சென்றதாக தெரிவித்து கவுரக்ஷக் சமிதி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய பிரதேசத்தின் ஹார்தா மாவட்டத்தில் கடந்த புதனன்று குஷிநகர் விரைவு ரயிலில் நசீமா பானு- முஹமது ஹீசைன் என்ற தம்பதியினர் பயணம் செய்துள்ளனர். அப்போது கவுரக்ஷக் சமிதி என்ற அமைப்பை சேர்ந்த ஏழு பேர் ரயிலில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதாவது மாட்டிறைச்சியுடன் ரயிலில் பயணம் செய்கின்றனர் என்ற தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அதனால் சோதனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


குடும்ப ஆட்சி மீண்டும் வந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: - துக்ளக் சோ
[Friday 2016-01-15 12:00]

வரும் பேரவைத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் 46-ஆவது ஆண்டு விழா, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் நேற்று இரவு நடைபெற்றது.விழாவில் சோ.ராமசாமி பேசியது:அதிமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம் சில நிறைகள் இருக்கின்றன. வெள்ளத்துக்கே ஜெயலலிதாதான் காரணம் என்று சொல்ல முடியாததால், நிவாரண உதவிகள் வழங்குவதில் குறைகள் கூறுகின்றனர்.


மசூத் அசாரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்த பின்னரே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு: - சிவசேனை வலியுறுத்தல்
[Friday 2016-01-15 10:00]

பதான்கோட்டில் நிகழ்ந்தப்பட்டதைப் போன்று, பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நிகழும்போதெல்லாம், அதற்கு காரணமான பயங்கரவாதிகளை கைது செய்வது போல் நாடகமாடுவதும், பின்னர் அவர்களை விடுதலை செய்வதும் பாகிஸ்தானுக்கு கைவந்த கலையாகும்.எனவே, பதான்கோட் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி மசூத் அசாரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்வரை, பாகிஸ்தானுடன் இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று சஞ்சய் ரெளத் வலியுறுத்தினார்.தீர்க்கமாக செயல்பட வேண்டும்-காங்கிரஸ்: இதனிடையே, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் கூறியபோது, "பாகிஸ்தான் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தீர்க்கமான முடிவுடனும், அந்த நாட்டுடனான பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்ட காலவரையறுக்குள் பேசி தீர்வுகாணும் நோக்கத்துடனும் செயல்பட வேண்டும்' என்றார்.


இந்தியர்களை ஹிந்துக்கள் என்றே வெளிநாட்டினர் அழைக்கின்றனர்:- ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்
[Friday 2016-01-15 00:00]

இந்தியாவின் குணம் பன்முகத்தன்மை என்றும், அதேநேரத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை ஹிந்துக்கள் என்றே அந்நாட்டினர் அழைக்கின்றனர் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம், நந்துர்பார் மாவட்டத்தில் மகர சங்கராந்தியையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாம் அனைவரும் ஹிந்துக்கள்தான். நாட்டிற்குள் பன்முகத்தன்மை நிலவினாலும், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.இந்தியாவைத் தவிர, உலகில் வேறெந்த நாட்டிலும் உலக மக்கள் அனைவரையும் தங்கள் சொந்தம்போல் கருதுவோர் இல்லை.


முதல்முறையாக பதினெட்டு நாடுகள் உள்ளடங்கிய மிகப்பெரிய கூட்டு ராணுவ பயிற்சி! - இந்திய ராணுவம் ஏற்பாடு!
[Thursday 2016-01-14 23:00]

பதினெட்டு நாடுகள் உள்ளடங்கிய ஆசியான் பிளஸ் நாடுகளின் ராணுவப்படை பங்குபெறும் வகையில் முதல்முறையாக, உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கூட்டு ராணுவ பயிற்சியை வரும் மார்ச் மாதம் புனேயில் நடத்துகிறது இந்திய ராணுவம். 'எக்ஸ்சர்சைஸ் போர்ஸ் 18' என்ற பெயரில் இந்த பயிற்சி உலகில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்படுகிறது. நட்பு நாடுகளின் ராணுவத்திடம் இருந்து பல நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் 10 தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனேய், வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா மற்றும் சீனா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.


மதுரையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்து மக்கள் நலக்கூட்டணி உண்ணாவிரதம்: - வைகோ
[Thursday 2016-01-14 17:00]

மதுரையை அடுத்துள்ள ஒத்தக்கடையில் வருகிற 26


தைத் திருநாள் - தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்திட உறுதியேற்போம் ! - விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை
[Thursday 2016-01-14 16:00]

உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ்ப்பெருங்குடி மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் திருநாளில் விடுதலைச்சிறுத்தைகளின் மனமுவந்த நல்வாழ்த்துக்கள். தமிழ் மக்கள் ஆண்டு முழுதும் அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடினாலும் தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ஒரே பண்டிகை, "தமிழர் திருநாள்" என்று அழைப்பதற்குரிய சிறப்பைப் பெற்றுள்ள ஒரே பெருநாள், உழைக்கும் மக்கள் ஒன்றுகூடி உவந்து மகிழும் உன்னத நாள், ஒளியளிக்கும் கதிரோனுக்கும் உடனுழைக்கும் காளைகளுக்கும் பச்சரிசியில் பொங்கலிட்டு படைத்து வணங்கி நன்றி செலுத்தி உள்ளம் நெகிழும் உயரிய நாள், தைத் திருநாளாம் பொங்கல் திருநாள்!


தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் எழுச்சிப் பொங்கல்: - சீமான்
[Thursday 2016-01-14 16:00]

காரிருள் நீக்கி, கொடும்பகை அழித்து, புத்தொளி வீசி, புவி அருள் செய்யப் புறப்பட்டு வருகிறது தமிழரின் புத்தாண்டு. காலங்காலமாக அடிமைப் பட்டு கிடக்கும் அன்னைத் தமிழினம் விழிகளின் ஓரம் நம்பிக்கைச் சிவப்பேற்றி வரும் நாட்கள் வாழ்வினைத்தரும், வசந்தத்தினை வரவேற்கும் எனக் காத்துக் கிடக்கிறது. இத்தனை ஆண்டுகளாக உரிமை மறுக்கப்பட்டு, நிலம்,நீர்,காடு என அனைத்தையும் இழந்து விட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள் தங்கள் அடிமை இருள் நீங்க தங்களைத் தாங்களே மீள் எழுப்பி ஒரு புதிய புரட்சிப் பூபாளம் இசைக்க அணியமாகி இருக்கிறார்கள்.


தமிழக மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்: - ஜெயலலிதா
[Thursday 2016-01-14 15:00]

அன்பிற்குரிய தமிழக மக்களுக்கு எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள


ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கழுத்தறுத்து இளைஞர் கொலை: வன்முறை வெடித்தது
[Thursday 2016-01-14 13:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கழுத்தறுபட்ட நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.ஸ்ரீநகரில் ரயில்வே மேம்பாலம் அருகே ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது பாஷிர் மாலிக் என்பவரின் மகன் ஓவைஸ் பாஷிர் மாலிக் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த தகவல் பரவியதும், காவல்நிலையம் முன்பு கூடிய ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்நிலையம் மீது கற்களை வீசி தாக்குதலிலும் ஈடுபட்டனர்.


தமிழில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி!
[Thursday 2016-01-14 13:00]

தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி, தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,தமிழக மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று ட்விட்டரில் தமிழில் வாழ்த்து கூறி உள்ளார்.வேறுமையில் ஒற்றுமையாக இந்த நாள் திகழ்கிறது கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும் வளமும் கிடைக்க பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


பேஸ்புக் பதிவால் வந்த வினை: - மாயாவதியின் காலில் விழுந்த பெண் வேட்பாளரின் வாய்ப்பு பறிப்பு
[Thursday 2016-01-14 13:00]

மாயாவதியின் காலில் விழுந்த புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டதால், உத்தரப்பிரதேச மாநிலம், அத்ரெளலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இருந்த பகுஜன் சமாஜ் கட்சி பெண் வேட்பாளரின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், அடுத்த ஆண்டு (2017) சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டனர். அதன்படி, அத்ரெளலி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தர்மேந்திர செளதரி. அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.


வேலையற்ற பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன்: - முதல்வர் அறிவிப்பு
[Thursday 2016-01-14 07:00]

வேலையற்ற பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வெள்ளம் பாதித்த மாவட்ட இளைஞர்களுக்கு கடன் வழங்கப்படும். கடனை பெற பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.வேலையற்ற பட்டதாரிகள் சுய தொழில் துவங்க, 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


குஜராத் மாநில பா.ஜ.க. தலைவராக தேர்வாகிறார் அமித்ஷா!
[Thursday 2016-01-14 07:00]

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றது. இது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் பா.ஜ.க.வுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. அதன் முதல்கட்ட பணியாக குஜராத் பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்க அமிஷ்தா முடிவு செய்துள்ளார்.


தைப்பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்: - சீமான் வலியுறுத்தல்
[Wednesday 2016-01-13 22:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,


ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இரட்டை வேடம் போடவில்லை: - திமுக தலைவர் மு.கருணாநிதி
[Wednesday 2016-01-13 22:00]

ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இரட்டை வேடம் போடுவதாக தான் நினைக்கவில்லை என திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜல்லிக்கட்டு பிரச்னையில் மாநில அரசே அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, இது ஒரு சட்டப் பிரச்னை. அதுகுறித்து ஆராய்ந்து தான் சொல்ல வேண்டும். அவசரப்பட்டு எதையும் சொல்லக் கூடாது என்றார்.ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாஜக அரசு இரட்டை வேடம் போடுவதாகச் சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு தான் அப்படி நினைக்கவில்லை என்றார் கருணாநிதி.


ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளிக்க முடியாது: - மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
[Wednesday 2016-01-13 20:00]

ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 5 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வலியுறுத்தி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் அமைப்பினர் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுக்களை தாக்கல் செய்தனர்.அதில், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதிக்குமாறுக் கோரியிருந்தனர்.இந்த மனு இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று தீர்ப்பளித்து, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும்! - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
[Wednesday 2016-01-13 19:00]

ஈழத் தமிழர்களான ஆதிக்குடிகளை அன்னியப்படுத்தாமல் அவர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் - இலங்கையில் தமிழர்களின், இஸ்லாமியர்களின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன தலைமையில், அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அதன் தலையாய கடமை. பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை முதலிய அடிப்படை உரிமைகள்தான் ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று! அதற்கு எவ்வித குந்தகமோ, தடையோ இல்லாத ஆட்சியாக தனது ஆட்சியை நடத்தவேண்டியது அதன் முக்கிய தேவையாகும்!

Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா