Untitled Document
September 18, 2024 [GMT]
நீதிபதிகள் நியமனம் தொடர்பான புதிய நடைமுறையை விரைவாக இறுதி செய்யவும்: - பிரதமர் அலுவலகம் கடிதம்
[Monday 2016-02-22 07:00]

உயர் கோர்ட்டுகளில் நீதிபதிகளை நியமனம் செய்யும் புதிய நடைமுறையை மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகளை கலந்து ஆலோசித்து எடுக்கும்படி மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு கேட்டுக் கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் கொலீஜியம் உறுப்பினர்கள் இந்த நடைமுறையை தயாரிப்பதற்கான கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர்.இந்நிலையில் பிரதமர் அலுவலகம் நீதிபதிகள் நியமனம் தொடர்பான புதிய நடைமுறையை அட்டார்னி ஜெனரலுடன் கலந்தாலோசித்து விரைவாக இறுதி செய்யும்படி சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. விரைவில் தயார் செய்தால் தான் அதனை இறுதி முடிவுக்காக இந்திய தலைமை நீதிபதிக்கு அனுப்ப முடியும் என்றும் கடிதத்தில் கூறியுள்ளது.


கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 10 இந்திய மாலுமிகள் நைஜீரிய கடற்படையினரால் மீட்பு!
[Monday 2016-02-22 07:00]

ஆப்பிரிக்க நாடான ஐவோரி கோஸ்ட் கடலில் சென்ற


டீ விற்றவர் எப்படி பிரதமர் ஆனார் என்பதை சிலரால் ஜீரணிக்க இயலவில்லை: - பிரதமர் மோடி
[Monday 2016-02-22 07:00]

மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசை சீர் குலைக்க சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திரமோடி, ஒடிசா மாநிலம், பர்காரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சமீப காலமாக என் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதை நீங்கள் காணலாம். சிலர் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். டீ விற்றவர் எப்படி பிரதமர் ஆனார் என்பதை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை. நான் எடுத்த சில நடவடிக்கைகளால் இவர்கள் எல்லோரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறார்கள்.


பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தை திணிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
[Monday 2016-02-22 07:00]

மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் பாடத்திட்டங்களை பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் மூன்றாம் மொழிப் பாடமாக சமஸ்கிருதம் கற்றுத்தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்றாம் மொழிப் பாடத்தைக் கூட கட்டாயப்பாடமாக திணிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.


அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவிப்பு!
[Sunday 2016-02-21 18:00]

அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து இதுவரை அதிமுக கூட்டணியில் நீடித்து வந்தோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்காசி சட்டப் பேரவை உறுப்பினருமான ஆர்.சரத்குமார் அறிவித்துள்ளார்.


ஓட்ட பந்தயத்தில் பங்குபற்றிய மாணவன் திடீர் மரணம்! - புதுவையில் சம்பவம்
[Sunday 2016-02-21 14:00]

புதுவை அமெச்சூர் தடகள விளையாட்டு சங்கம் சார்பில் 29


விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் கரம் கோர்ப்பார்: -வைகோ நம்பிக்கை
[Sunday 2016-02-21 14:00]

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் மக்கள் நல கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில துணை தலைவர் சுப்பராயன் மற்றும் தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.முன்னதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:


ஜாட் இனத்தவர்களின் போராட்டம் காரணமாக டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: - பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
[Sunday 2016-02-21 09:00]

ஜாட் இனத்தவர்களின் போராட்டம் காரணமாக டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.டெல்லிக்கு அரியானா மாநிலம் முனக்கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. போராட்டம் காரணமாக அந்த கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து முதல்


பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: - டாக்டர் ராமதாஸ்
[Sunday 2016-02-21 09:00]

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:


தி.மு.க
[Sunday 2016-02-21 09:00]

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


தமிழக முதல்வராக விஜயகாந்த் வரவேண்டும்: - தொண்டர்கள் விருப்பம்-தே.மு.தி.க. தனித்து போட்டியா?
[Sunday 2016-02-21 09:00]

தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் உள்ளது. சிறிய கட்சிகள் மட்டுமே அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது உள்ளன. அ.தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தி.மு.க.


போக்குவரத்து போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்க எலுமிச்சை பழச்சாறு அல்லது மோர்: முதல்வர் உத்தரவு
[Sunday 2016-02-21 09:00]

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:


தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றி விட்டது ஜெயா அரசு: - தே.மு.தி.க. மாநாட்டில் பிரேமலதா ஆவேச பேச்சு
[Saturday 2016-02-20 22:00]

காஞ்சிபுரம் வேடல் பகுதியில் நடைபெற்ற தே.மு.தி.க.வின் அரசியல் திருப்பு முனை மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-இந்த மாநாடு தமிழகத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைத்து கட்சிகளின் தேடல் இந்த மாநாட்டில் தான் உள்ளது. சுயமாக உருவான இந்த கட்சிக்கு இணை வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்த கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வில்லை. டாஸ்மாக்கை திறந்து வைத்து குடும்பங்களை அழித்தது மட்டும் தான் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரடியாக சென்று துயரங்களை மக்களுடன் பகிர்ந்தார் என்று சொல்லமுடியுமா? அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்த ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த் தான்.


ஜாட் சமூகத்தினரின் போராட்டத்தினால் திணறும் ஹரியானா! - ஆறு மாவட்டங்களில் ஊரடங்கு
[Saturday 2016-02-20 21:00]

இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வியிலும் தொழில்களிலும் இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் பல நாட்களாக நடத்திவரும் போராட்டங்களில் கடந்த வெள்ளி முதல் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ் வாகனங்களும் அரச கட்டடங்களும் வணிக வளாகங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. வன்முறைகளைத் தடுப்பதற்காக இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.


காஷ்மீரில் இராணுவ வாகனத் தொடரணி மீது தாக்குதல்! - 2 இந்தியப் படையினர் பலி், 11 பேர் படுகாயம்
[Saturday 2016-02-20 21:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகேயுள்ள பாம்போர் என்ற இடமருகே, சி.ஆர்.பி.எப்., வாகனத் தொடரணி மீது பயங்கரவாதிகள் தாக்கியதில், 2 வீரர்கள் பலியானார்கள். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் பொது மக்கள் என அதிகாரி ஒருவர் கூறினார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகள், அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டடத்திற்குள் பதுங்கியுள்ளனர்.


அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் ரமணா! - ஜெயலலிதா அதிரடி
[Saturday 2016-02-20 21:00]

தமிழ்நாட்டின் பால்வளத் துறை அமைச்சராக இருந்த பி.வி. ரமணா அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் சில சர்ச்சைகளில் சிக்கியதாலேயே பி.வி. ரமணாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக ஆளுனர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பி.வி.ரமணாவுக்குப் பதிலாக பால்வளத் துறையை கிராமப்புற தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப. மோகன் கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நேபாள பிரதமர்: - இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை
[Saturday 2016-02-20 19:00]

இந்தியாவுக்கு 6 நாள் பயணமாக வந்துள்ள நேபாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இரு தலைவர்களும் பேசிக் கொண்டனர்.இரு நாடுகளுக்கும் இடையேயான எதிர்காலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, நேபாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை ஹைதராபாத் இல்லத்தில் வரவேற்றார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேபாள பிரதமர் கே.பி. ஒலி 6 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வந்தார்.தில்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார். கே.பி. ஒலியுடன் நேபாள அமைச்சர்கள், அதிகாரிகள் என 77 பேர் அடங்கிய குழுவும் வந்துள்ளது.


ஊழல் சக்திகளை எதிர்த்து உருவாகியிருப்பது தான் மக்கள் நலக் கூட்டணி: -திருமாவளவன்
[Saturday 2016-02-20 19:00]

கோவையில் இன்று நடந்த மக்கள் நலக்கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:


ஈவ் டீசிங் மற்றும் பாலியல் துன்புறத்தலில் பெண்களை தொட்டால் ஷாக் அடிக்கும்! - சில்மிஷ ஆண்களுக்கு ஆப்பு ரெடி!
[Friday 2016-02-19 20:00]

ஈவ் டீசிங் மற்றும் பாலியல் துன்புறத்தலில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு புதிய கையுறையை ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மாணவர் கண்டுபிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் அகோர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் நிரஞ்சன் சுதார் என்பவர்தான் இந்த கையுறையை கண்டுபிடித்துள்ளார். நிரஞ்சனுக்கு மின்னனு கருவிகள் உருவாக்குவதில் அதிக ஆர்வம் உண்டு. பெரும்பாலான இடங்களில் பெண்கள் ஈவ்டீசிங் மற்றும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதால், அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு மின்னனு கருவி தயாரிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். இரண்டு வருட கடுமையான உழைப்பிற்கு பிறகு ஒரு மின்னனு கையுறையை அவர் உருவாக்கியுள்ளார். 150 கிரம் எடையுள்ள அந்த கையுறையில் சிம்கார்டு, ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 3.4 வோல்ட் மின்சக்தி கொண்ட பேட்டரி ஒன்றும் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் தயாரிப்பு செலவு வெறும் 500 ரூபாய் மட்டும்தான்.


ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதம் எதிரொலி:- குஜராத்தில் வன்முறை-இரு பஸ்களுக்கு தீ வைப்பு!
[Friday 2016-02-19 20:00]

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்த்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு தீவிர போராட்டம் நடைபெற்றது. இளம் போராட்டக்குழு தலைவர் ஹர்திக் பட்டேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலவரத்தை ஒடுக்க துணை ராணுவப்படையை வரவழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. ஹர்திக் பட்டேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


அதிமுக அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் 20 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை: - ராமதாஸ்
[Friday 2016-02-19 19:00]

தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஏமாற்றுவேலை என்று பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்த அரசு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது.அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை திமுக, அதிமுக அரசுகள் நிறைவேற்றவில்லை. தற்போது இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை. பாமக ஆட்சி அமையும்போது இத்திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும். எனவே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.


திருமண நிகழ்வு ஒன்றில் மணமகனின் உயிரைப் பறித்த துப்பாக்கி குண்டுகள்: உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்
[Friday 2016-02-19 12:00]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண விழாவில் பட்டாசு வெடித்தும், துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டும் கொண்டாட்டங்கள் களை கட்டிய போது, தவறுதலாக, துப்பாக்கி குண்டு மணமகனின் தலையில் பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.சிதாபுர் மாவட்டத்தில், அமித் ரஸ்தோகி (28) என்ற இளைஞரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கொண்டாட்டங்கள் நடந்து போது, எதிர்பாராத விதமாக, குதிரை மீது ஊர்வலமாக வந்து கொண்டிருந்த மணமகனின் தலையில் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


பிகாரில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ் அனுப்பிய நடுவர் நீதிமன்றம்: - வினோத சம்பவம்
[Friday 2016-02-19 08:00]

பிகாரில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஆஞ்சநேயருக்கு நடுவர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரப்புகள் தொடர்பாக நீர்ப் பாசனத்துறை சார்பில் நடுவர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆஞ்சநேயர், சாய்பாபா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இடத்தைக் காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதன்படி, ஆஞ்சநேயருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.ஆஞ்சநேயரின் பெயருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது அடுத்த சில நாள்களில் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


ஜேஎன்யு பல்கலைக்கழகம் அடிப்படைவாதிகளின் புகலிடமாக மாறி வருகின்றது: - ஆர்.எஸ்.எஸ் குற்றசாட்டு
[Friday 2016-02-19 08:00]

அடிப்படைவாதிகள், இடதுசாரித் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஜாதிய சக்திகளின் புகலிடமாக தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகம் மாறி வருகிறது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய பிரசாரகர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமாரை விடுவிக்க வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் நந்தகுமார் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கேரள மாநிலம், கொச்சியில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தேசத்தின் குடிமகனுக்குரிய பொறுப்புகளில் சமரசம் செய்து கொள்வது (பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷம்) என்பது அர்த்தமற்ற நடவடிக்கையாகும்.


சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கிய ஹர்திக் பட்டேல்!
[Friday 2016-02-19 07:00]

படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் சிறைக்குள்ளேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். இடஒதுக்கீடு போராட்டத்தில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி, ஹர்திக் தங்கள் சமூக தொண்டர் ஒருவரிடம்,


புதிய பயிர்க் காப்பீட்டு திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் மோடி!
[Friday 2016-02-19 07:00]

புதிய பயிர்க் காப்பீட்டு திட்டம் தொடர்பாக, வேளாண் மேம்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.மத்திய பிரதேசம் மாநிலம், ஷெரோர் மாவட்டத்தில் உள்ள ஷெர்பூர் கிராமத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், பயிர்காப்பீட்டு தொகை, மண் பரிசோதனை குறித்த அட்டைகளையும் வழங்கினார்.விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்திய விவசாயிகளில், குறைந்தபட்சம், 50 சதவீதம் பேரையாவது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.


கௌரவ டாக்டர் பட்டத்தினை பெற பிரதமர் மோடி மறுப்பு!
[Friday 2016-02-19 07:00]

உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வருகிற 22-ந் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதுபற்றி மோடிக்கு தகவல் தெரிவித்து, அவரது ஒப்புதலையும் கேட்டது. ஆனால் கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ள பிரதமர் மோடி மறுத்துவிட்டார். கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது இல்லை என்பதை தான் ஒரு கொள்கையாக வைத்து இருப்பதாக கூறி அவர் மறுத்துவிட்டதாக டெல்லியில் நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த காலங்களிலும் இதேபோல் சில பல்கலைக்கழகங்கள், தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வந்த போது அதை பெற்றுக்கொள்ள மோடி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் ஆண் வர்க்கத்தை சீரழித்தேன் என வாக்குமூலம்!
[Thursday 2016-02-18 22:00]

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆண்வர்க்கத்தை பழிவாங்கும் நோக்கத்தில் பலருடன் உடலுறவு கொண்டு எய்ட்ஸ் நோயை பரவவிட்டதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் அபுதாபி நகரில் இருவருடன் விபசாரத்தில் ஈடுபட்டபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படவில்லை. பின்னர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த அந்த 19 வயது இளம்பெண் எய்ட்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இந்த நோய் என்னை தொற்றிக் கொண்டது. நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தும் பல ஆண்களுடன் நான் உடலுறவு வைத்துக் கொண்டேன். என்னுடைய வாழ்க்கையை ஒருவன் சீரழித்ததுபோல் ஆண் வர்க்கத்தை சேர்ந்த பலரை சீரழிக்க நான் முயன்றேன் என்று கூறியுள்ளார்.

Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா