Untitled Document
September 15, 2024 [GMT]
நேதாஜியின் அஸ்தி டோக்கியோவில் உள்ள கோயில் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது: - பிரிட்டன் வலைதளம் தகவல்
[Tuesday 2016-02-16 08:00]

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியானது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கோயில் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இறுதி நாள்கள் குறித்து பல்வேறு தகவல்களை பிரிட்டனில் செயல்படும் வலைதளம் ஒன்று வெளியிட்டு வருகிறது. தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறி, அதனை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களையும் இந்த வலைதளம் அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில், நேதாஜியின் அஸ்தி, ஜப்பானில் உள்ள கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அந்த வலைதளத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


மும்பை மேக் இன் இந்தியா வார விழா தீ விபத்து: - விசாரணை தொடங்கியது
[Tuesday 2016-02-16 08:00]

மும்பை கிர்காவ் கடற்கரையில்


தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,773 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்: - ராஜ்நாத் சிங்
[Tuesday 2016-02-16 07:00]

தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக மேலும் ரூ.1,773 கோடியே 78 லட்சத்தை வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிவாரண உதவியை வழங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான உயர் நிலைக் குழு கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் மஹரிஷி மற்றும் உள்துறை, நிதி மற்றும் வேளாண் அமைச்சகங்களின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தின்போது கடும் பேரிடர் பாதிப்புக்கு உள்ளான தமிழகம், ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய ஏழு மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருந்த முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டன.கூட்டத்தின் முடிவில், தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் (என்டிஆர்எஃப்) இருந்து தமிழகத்துக்கு ரூ.1,773 கோடியே 78 லட்சத்தை நிவாரண உதவியாக அளிக்க உயர் நிலைக் குழு ஒப்புதல் அளித்தது.


காதலர் தினத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்: - பேஸ்புக் காதலால் வந்த விபரீதம்
[Monday 2016-02-15 19:00]

பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணுடன் காதல்வயப்பட்ட இளைஞர் காதலர் தினத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது பற்றி டெல்லி காவல்துறை தரப்பில், "டெல்லியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஈஷ்வர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண் மீது காதல் கொண்டுள்ளார்.இதனையடுத்து அவர், அந்தப் பெண்ணை நேரில் சந்திக்க காதலர் தினத்தன்று குர்கான் பகுதிக்குச் சென்றுள்ளார்.முதலில் பொது இடத்தில் ஈஷ்வரை சந்தித்த அந்தப் பெண், பின்னர் அவரை தான் தங்கியிருக்கும் அடுக்குமாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.


சாதி வெறி பிடித்த இந்திய நாட்டில் நான் இருக்க விரும்பவில்லை: - சென்னை ஐகோர்ட் நீதிபதி பகீர்
[Monday 2016-02-15 19:00]

"சாதிவெறி பிடித்த நாடு இந்தியா... அந்த நாட்டில் நான் இருக்க கொஞ்சமும் விரும்பவில்லை..!'' என்று சொல்லி அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன்.சமீபத்தில் கர்ணனை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி வெளியிட்ட உத்தரவின் மீது நீதிபதி கர்ணன் தடை விதித்தார். அத்தோடு நீதி பரிபாலனத்தில் யாரும் தலையிடக் கூடாது என்றும், பணியிட மாற்றம் தொடர்பான ஆவணங்களுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதிலளிக்க வேண்டும் என்றும் அவருக்கு கர்ணன் நோட்டீஸ் அனுப்பினார். இந்த சம்பவம் இந்திய அளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்யக்கோரி சிறை அதிகாரிக்கு தாயார் மனு!
[Monday 2016-02-15 18:00]

முன்னாள் பிரமதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவருடைய தாய் அற்புதம் சிறை அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளார்.அந்த மனுவில் கூறி இருப்பதாவது:


உத்திரப்பிரதேசத்தில் காணாமல் போன மாணவியின் சடலம் முதல்வரின் வீட்டருகே மீட்பு!
[Monday 2016-02-15 12:00]

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பனிரெண்டாம் வகுப்பு மாணவியின் உடல், கவுதம்பள்ளியில் உள்ள முதல்வர் அகிலேஷ் யாதவின் வீட்டுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.ஜானகிபுரத்தைச் சேர்ந்த பெற்றோர், தனது மகளை 10ம் தேதி முதல் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவின் வீட்டுக்கு மிக அருகே, கல்லெறி தூரத்தில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கொங்கு மண்டலத்தின் 60 ஆண்டு காலக் கோரிக்கை நிறைவேற்றப்படும்: - வைகோ
[Monday 2016-02-15 08:00]

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், கொங்கு மண்டல மக்களின் முக்கிய கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை. மக்கள் நலனில் அக்கறையற்ற தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சிகள் கைவிட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று, மக்கள் நலக்கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதி அளித்து இருக்கின்றோம்.


அழகிரிக்கும் தி.மு.க.வுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது: - கருணாநிதி அறிக்கை
[Monday 2016-02-15 08:00]

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பற்றி கருத்து கூறிய மு.க.அழகிரிக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், மு.க.அழகிரி செய்யும் துரோகத்திற்கு என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் கருணாநிதி அறிவித்துள்ளார்.சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், கூட்டணி வியூகங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மு.க.அழகிரி இந்த கூட்டணி குறித்து விமர்சித்ததுடன், அ.தி.மு.க.வை யாராலும் வெல்லமுடியாது என்று கூறினார்.இந்தநிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர்.


பீகார் மாநிலத்தில் குற்றச் செயல்கள் குறைந்து வருகின்றது: - எதிர்க்கட்சிகளுக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் பதிலடி
[Monday 2016-02-15 08:00]

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து குற்றச் செயல்கள் குறைந்து வருவதாக அம்மாநில முதல்-மந்திரி நீதிஷ்குமார் தெரிவித்துள்ளார். கடந்த, 25 ஆண்டுகளாக பீகாரை ஆட்சி செய்வோர் காட்டாட்சி நடத்துகின்றனர் என்றும் இதனால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்று முக்கிய எதிர் கட்சியான பா.ஜ.க., தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், லாலு பிரசாத் ஆட்சி காலத்தை போன்றே தற்போதைய நிதிஷ் குமார் ஆட்சியிலும் காட்டாட்சியால், சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று பா.ஜ.க., கூறி வருகிறது.


பயங்கரவாத இயக்கங்களுக்கும் மதத்துக்கும் தொடர்பு இல்லை: - முக்தார் அப்பாஸ் நக்வி
[Monday 2016-02-15 08:00]

பயங்கரவாதிகளுக்கும், மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம் காம்பாத்தில் சூஃபி முஸ்லிம் பிரிவினரின் சர்வதேச மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது:ஐஎஸ், அல்-காய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கும் மதத்துக்கும் தொடர்பு இல்லை. பயங்கரவாதிகள் தங்களைப் பாதுகாக்கும் கேடயமாக மதத்தைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்றவர்கள் மனித இனத்துக்கும், உலகின் அமைதிக்கும் எதிரானவர்கள். மத அமைப்புகளின் தலைவர்கள், பயங்கரவாதிகளின் தவறான பிரசாரத்தில் இருந்து மக்களைக் காக்க வேண்டும். முக்கியமாக இளைஞர்கள் பயங்கரவாதப் பாதையில் செல்லாமல் தடுக்க வேண்டும்.


காஷ்மீர் மாநிலத்தில் மறியலில் ஈடுபட்டோர் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு: - இருவர் பலி
[Monday 2016-02-15 08:00]

காஷ்மீர் மாநிலம் வடக்கு பகுதியில் உள்ள குப்வாரா மாவட்ட எல்லைப்பகுதியில் நேற்று முன்தினம் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.இதையடுத்து ராணுவம், போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் கக்போரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் இருப்பதை அறிந்து அங்கு நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அங்கு மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது.


உத்தரப்பிரதேசத்தில் குரங்கிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் ஓடிய பெண் கீழே விழுந்து பலி!
[Sunday 2016-02-14 16:00]

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குரங்கிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் ஓடிய பெண் தவறி கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இங்குள்ள முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி (55) என்பவர் நேற்று மாலை வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் காயவைத்துள்ள துணிகளை எடுத்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று குரங்குகள் அவரைப் பார்த்து கொரூரமாக முறைத்தபடி தாக்க வந்தன.அவற்றிடம் இருந்து தப்பிப்பதற்காக லீலாவதி வேகமாக ஓடினார். ஓரிடத்தில் நிலைதவறி மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.


ஊட்டியில் காதலர் தினம்: தாவரவியல் பூங்காவில் குவிந்த காதல் ஜோடிகள்
[Sunday 2016-02-14 14:00]

காதல்... இந்த ஒற்றைச்சொல் உலகையே கட்டிப்போட்டுள்ளது. மனித இனம் தோன்றியது முதல் வரலாற்றையே புரட்டிப்போட்டுள்ளது. வாலன்டைன்ஸ் நினைவாக இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.காதலர் தினத்தையொட்டி ஊட்டியில் இன்று காதலர்கள், மற்றும் காதல் திருமணம் செய்த புதுமணத்தம்பதிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், பைக்காரா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் ரோஜா மலர்களுடன் காதல் ஜோடிகள் உலா வந்தனர். எங்கு பார்த்தாலும் இளம் ஜோடிகள் பட்டாம்பூச்சியாய் சுற்றத்திரிந்தனர்.


தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்த ஜெயலலிதா!
[Sunday 2016-02-14 08:00]

தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல்வர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வனத்துறை மற்றும் ஊரக வளர்சித் துறை சார்பில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆல மரக்கன்றினை நட்டு, திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.


நாம் தமிழால்,நாம் தமிழராய் இணைவதை தவிர வேறு வழியில்லை: - சீமான் வேண்டுகோள்
[Sunday 2016-02-14 08:00]

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று கடலூரில் நடந்தது.அப்போது கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:


பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக பிரகடனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்: - பாஜக
[Sunday 2016-02-14 08:00]

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்தை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கான ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. இதுதொடர்பாக தில்லியில் பாஜக தேசியச் செயலாளர் சித்தார்த் நாத் சிங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், பாகிஸ்தான் அரசு அமைப்புகளைச் சேராத நபர்கள் என்று தெரிவித்து தனக்கு இருக்கும் பொறுப்பை தவிர்ப்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கச் சிறையில் இருந்தபடி காணொலி மூலம் ஹெட்லி வாக்குமூலம் அளித்து வருகிறார்.


விஜயகாந் நிச்சயம் வருவார் என்று நம்புகிறேன்: - குஷ்பு
[Sunday 2016-02-14 08:00]

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது கட்சி நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: காங்கிரஸ்


மோடியின் மனைவி யசோதாபென் மும்பையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் !
[Saturday 2016-02-13 22:00]

பிரதமர் மோடி தனது மனைவி யசோதாபென்னை பிரிந்து பல ஆண்டுகளாக தனியே வசித்து வருகிறார். தனது தேர்தல் வேட்பு மனுவில் மனைவியின் பெயரை சுட்டிக்காட்டவில்லை என்ற சர்ச்சையிலும் சிக்கினார். இதற்கிடையில், தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று கூறியும், பாஸ்போர்ட்டில் பிரதமர் மோடி குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் அடிக்கடி யசோதாபென் பரபரப்புகளை ஏற்படுத்தி வந்தார். இந்த சூழலில் இன்று மும்பையில் மேக் இந்தியா திட்டத்திற்கான வாரத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி மும்பை வருகிறார். இந்நிலையில் நேற்று குடிசை வாழ் மக்களின் நலன்களை வலியுறுத்தி யசோதாபென் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். யசோதாபென் அண்மைகாலமாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.


தெற்காசிய விளையாட்டில், இந்தியா வென்றுள்ள தங்கபதக்கங்களின் எண்ணிக்கை 155-ஐ தாண்டியுள்ளது:
[Saturday 2016-02-13 22:00]

தெற்காசிய விளையாட்டில், இந்தியா வென்றுள்ள தங்கபதக்கங்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 155 தங்கம்‌, 84 வெள்ளி 26 வெண்கலம் என மொத்தம் 265 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 25 தங்கம், 55 வெள்ளி, 81 வெண்கலம் என 161 பதக்கங்களுடன் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 8 தங்கம், 26 வெள்ளி, 45 வெண்கலம் என 79 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் அணி பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. நேபாள அணி ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திலும் உள்ளன.


மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணிதான் திமுக - காங்கிரஸ் கூட்டணி: - தமிழிசை சௌந்தரராஜன்
[Saturday 2016-02-13 17:00]

திமுக - காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினர்.இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.இந்த கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கருத்துக் கேட்ட போது, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. திமுக - காங்கிரஸ் கூட்டணியை பாஜக கூட்டணியோடு ஒப்பிட வேண்டிய அவசமியல்லை.


பாகிஸ்தானுக்கு 18 புதிய எப்-16 ரக போர் விமானங்கள்: - அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்
[Saturday 2016-02-13 16:00]

பாகிஸ்தானுக்கு 18 புதிய எப்-16 ரக போர் விமானங்களை அமெரிக்கா வழங்குவதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரிடம் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா போர் விமானங்களை வழங்குவதில் இந்தியாவின் அதிருப்தியை வெளியிட இருப்பதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு 18 புதிய எப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு வகை செய்யும் கெர்ரி-லுகர் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவில் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிப்பதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் மிகவும் கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய பின்னணியில், பாகிஸ்தானுக்கு புதிய எப்-16 ரக போர் விமானம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள 18 புதிய எப்-16 ரக போர் விமானங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் வழங்கப்பட்டுவிடும் என அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும்: - குலாம் நபி ஆசாத் அறிவிப்பு
[Saturday 2016-02-13 13:00]

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கூறினார். சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத் இதனைக் கூறினார்.மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல.வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து திமுகவே முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.இந்த பேட்டியின் போது, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உடன் இருந்தார்.


உற்பத்தித் திறனை உலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் மேக் இன் இந்தியா வாரம்: - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
[Saturday 2016-02-13 12:00]

இந்தியாவின் தொழில் துறை உற்பத்தித் திறனை உலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் மேக் இன் இந்தியா வாரம் கடைபிடிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2 ஆயிரத்து 500 பன்னாட்டு நிறுவனங்களும் 8 ஆயிரம் உள்நாட்டு நிறுவனங்களும் இந்த ஒரு வார நிகழ்வில் பங்கேற்க உள்ளன. மேலும் ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். 68 நாடுகளில் இருந்து 72 வர்த்தக குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். மும்பை என்எஸ்ஐசி அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, சைரஸ் மிஸ்த்ரி, ஆனந்த் மகிந்திரா, கவுதம் அதானி உள்ளிட்டோரை பிரதமர்‌ சந்தித்து பேச உள்ளார்.


பெங்களூரில் செல்ஃபி மோகத்தால் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூவர்: எச்சரிக்கையை மீறியதனால் வந்த வினை
[Saturday 2016-02-13 12:00]

பெங்களூருவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள ஹுலிவனா கிராமத்தில், செல்ஃபி எடுக்க கால்வாயில் நின்ற 3 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.வெள்ளிக்கிழமை மாலை செல்ஃபி எடுக்கும் போது கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரும் மாண்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மாணவர்கள் ஆவர்.கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டன. ஒருவரது உடல் தேடப்பட்டு வருகிறது.


ஒடிசாவில் வீடியோ கான்பரன்சிங்கில் பேசியபடியே தூக்கில் தொங்கியவாறு இறந்த ஆராய்ச்சி மாணவி!
[Saturday 2016-02-13 12:00]

ஒடிசாவில் ஆராய்ச்சி மாணவி ஒருவர், தனது நண்பருடன் செல்போனில் வீடியோ கான்பரன்சிங் பேசிக் கொண்டே தூக்குப் போட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஐஎம்எம்டியின் ஆராய்ச்சி மாணவியாக இருந்தவர் சுபலஷ்மி அர்ச்சனா (34).மான்சேஷ்வரில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தற்கெலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.


அ.தி.மு.க., தி.மு.க.வை விமர்சனம் செய்து கடுமையாக தாக்கி பேசும்படி பா.ஜ.க. உத்தரவு!
[Saturday 2016-02-13 09:00]

அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகளில் பாரதீய ஜனதா கட்சி இடம் பெறாது என்பது உறுதியாகி விட்டது. இதனால் பா.ஜ.க. தலைவர்கள் தனித்து போட்டியிட தயாராகி வருகிறார்கள். இதையடுத்து அ.தி.மு.க., தி.மு.க.வை விமர்சனம் செய்து கடுமையாக தாக்கி பேசும்படி தமிழக தலைவர்களுக்கு மேலிட பா.ஜ.க. தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே வரும் நாட்களில் பா.ஜ.க. தலைவர்கள் சூடுபறக்க அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையும் தாக்கி பேச போவதை பார்க்க முடியும்.


மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார் பீகார் பா.ஜ.க. துணைத்தலைவர்!
[Saturday 2016-02-13 09:00]

பீகார் மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பீகார் மாநில பா.ஜ.க. துணைத்தலைவராக இருந்தவர் விசேஷ்வர் ஓஜா (வயது 45). கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஷாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவர் மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.இந்நிலையில், விசேஷ்வர் ஓஜா போஜ்பூர் மாவட்டம், பர்சவுரா கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 12-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் விசேஷ்வர் ஒஜா காரை வழிமறித்து, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா