Untitled Document
September 18, 2024 [GMT]
மணமக்களின் நெற்றிப்பொட்டில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டுவதா...? - மு.க.ஸ்டாலின் கண்டனம்
[Monday 2016-02-08 17:00]

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:


தேர்தல் வெற்றி கொண்டாட்ட விழாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் பலி! - உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்
[Monday 2016-02-08 17:00]

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் நடத்திய தேர்தல் வெற்றிவிழா ஊர்வலத்தில் உற்சாகமிகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் செல்வந்தர்களின் திருமண விழாவில் சிலர் உற்சாகமிகுதியில் கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதேபோல் தேர்தல் முடிவுகள் வெளியாகி தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக தெரியவரும் வேளையிலும் உற்சாகமிகுதியில் துப்பாக்கியால் சுடுவது இங்கு வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில், இங்குள்ள ஷாம்லி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நபீசா என்ற சமாஜ்வாதி கட்சி வேட்பாளரின் வெற்றியை கொண்டாடும் வகையில் கைரானா நகரின் வழியாக அக்கட்சியினர் ஆரவாரத்துடன் நேற்று ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.


கடலூரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: - அலறியடித்து ஓடி வந்த மாணவிகளின் பெற்றோர்கள்
[Monday 2016-02-08 16:00]

கடலூர் கடற்கரை சாலையில் சி.கே. மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதே நிர்வாகத்துக்கு சொந்தமான கல்லூரி செல்லாங்குப்பத்தல் செயல்படுகிறது.இன்று காலை 7.45 மணிக்கு சி.கே. மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு போன் வந்தது. பள்ளி காவலாளி ராஜேந்திரன் அதை எடுத்து பேசினார். எதிர்முனையில் பேசியவர் உங்கள் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறினார்.10 நிமிடம் கழித்து மீண்டும் போன் வந்தது. அதில் பேசியவர் இன்னும் சில நிமிடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.


ஒன்லைனில் மருந்து பொருட்களை வாங்க வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் எப்.டி.ஏ.
[Monday 2016-02-08 09:00]

ஒன்லைனில் சட்டவிரோதமாக மருந்து பொருட்கள் விற்பனை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி பல மருந்து நிறுவனங்கள் தரமற்ற மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடிய மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால் பொது மக்கள் அதிகளவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் விதிமுறைப்படி டாக்டர் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. ஆனால் ஒன்லைனில் மருந்து பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்தநிலையில் இதுகுறித்து உணவு மற்றும் மருந்து கழக (எப்.டி.ஏ.) அதிகாரி பி.ஆர். மாசல் கூறியதாவது:- ஒன்லைனில் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை எங்களால் ஆய்வு செய்ய முடியாது. எனவே பொது மக்கள் ஒன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்


பா.ஜனதா கூட்டணியில் விஜயகாந்தை இணைக்க முயற்சி!
[Monday 2016-02-08 09:00]

தமிழக சட்டசபைக்கு மே மாதம் இரண்டாவது வாரம் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வருகிற 11, 12


தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்!
[Monday 2016-02-08 09:00]

ஈரோடு அருகே உள்ள பவானி கூடுதுறையில் மூன்று நதிகளும் சங்கமிக்கும் புகழ்மிக்க இடமாக உள்ளது. காவிரி ஆறு, பவானி ஆறு, அமுத நதி ஆகிய 3 நதிகளும் இங்கே ஒருங்கே சங்கமித்து பிறகு ஒன்றுபட்ட காவிரி ஆறாக பாய்ந்து செல்கிறது. ஒவ்வொரு அமாவாசை யன்றும் பவானி கூடுதுறையில் மக்கள் குவிவது வழக்கம். பொதுவாக ஆடி மற்றும் தை அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.இதேபோல் இன்று (திங்கட்கிழமை) தை அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறையில் குவிந்தனர். அவர்கள் கூடுதுறையில் புனித நீராடினர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் குளத்தில் மூழ்கி குருக்கள் உட்பட 4 பேர் பலி!
[Monday 2016-02-08 09:00]

இன்று தை அமாவாசை, திருவோண நட்சத்திரம், சோமவரம் ஆகிய மூன்றும் சேர்ந்து வருவது சிறப்பு அம்சமாகும் இந்த விசேஷம் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதிகாலை அண்ணாமலையார், உண்ணாமலையம்மன்னுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் தீர்த்தவாரி விழாவுக்காக சாமிகள் திட்டி வாயில் வழியாக கோவில் அருகே உள்ள அய்யங்குளத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், பராசக்தி மற்றும் திருவண்ணாமலை பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து அங்காளம்மன், ரெட்டைக்காளியம்மன், காமாட்சியம்மன், பட்டையம்மன், வடவீதி முருகன் ஆகிய சாமிகள் தீர்த்தவாரிக்காக அய்யங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.


புதிய அரசியலமைப்புச் சட்டம் - ஈழத் தமிழர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சி: - வீரமணி
[Sunday 2016-02-07 22:00]

இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் ஈழத் தமிழர்களை சட்ட ரீதியாக நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சி என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெப்ரவரி 2-ல், இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, புதிதாக உருவாக்கப்படும் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில், கூட்டாட்சி அமைப்பு முறைக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் 1948 ஆம் ஆண்டு, இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தை இலங்கையின் ஆளுனராக இருந்த ஜெனரல் சோல்பரி தலைமையில் அமைந்த ஆணையம் உருவாக்கியது. இதில் சிங்களவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் சட்டம் வலுப்படுத்தப்பட்டது. இதே சோல்பரியே, தமிழர்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை உருவாக்கி தமிழர்களுக்குத் துரோகம் விளைவித்து விட்டேன் என்று பிற்காலத்தில் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.


ஒரே மாதத்தில் 95.27 லட்சம் பக்தர்களுக்கு லட்டு - அன்னபிரசாதம்: - திருப்பதி ஏழுமலையான் சாதனை
[Sunday 2016-02-07 19:00]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே மாதத்தில் 95.27 லட்சம் பக்தர்களுக்கு லட்டு மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 18 லட்சத்து, 53 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு 76.86 லட்சம் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், 16.6 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டது. 7.6 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். 7 ஆயிரம் தங்கும் அறைகளில் 95 சதவீதம் அறைகள் பயன்படுத்தப்பட்டது.இந்த ஆண்டு 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 லட்சத்து, 61 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


படிக்க விரும்பி திருமணத்துக்கு மறுத்த மகளை எரித்து கொன்றார் தந்தை!
[Sunday 2016-02-07 19:00]

படிக்க விரும்பி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த 16 வயது மகளை, தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கொண்டு எரித்துக் கொன்றுள்ளார் பீகாரை சேர்ந்த ஒரு கல்நெஞ்சம் படைத்த தந்தை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் பெண்கள் குழந்தைகளின் கல்விக்கும், பாதுகாப்புக்கும் மத்திய அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனாலும், பல மாநிலங்களில் பெண் குழந்தைகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது தொடர்கதையாகவே உள்ளது. இதற்கு உதாரணமாக பீகார் மாநிலத்தில் ஒரு சிறுமிக்கு ஏற்பட்டுள்ள கோர முடிவு அமைந்துள்ளது.


இந்தியாவில் 8.6 லட்சம் பாலியல் தொழிலாளர்கள்: - குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் இவை
[Sunday 2016-02-07 08:00]

டெல்லியை சேர்ந்த வேத் பால் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்ற தகவல்கள் பின்வருமாறு - 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மேப்பிங் ஆய்வின்படி இந்தியாவில் 8.6 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதில், 19 சதவீதம் பேர் பதிவு செய்யப்படாத பாலியல் தொழிலாளர்கள். மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தகவலின் படி 6.96 லட்சம் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். எனினும், இந்த தகவல் லைன் லிஸ்டிங் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் திரட்டப்பட்ட புள்ளிவிபரங்களாகும். புதிய பதிவுகளுக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டவை.


தன்னுடன் பலாத்காரமாக பாலியல் உறவு கொண்டவர்களின் தகவல்களை வெளியிட்டார் சரிதா நாயர்!
[Saturday 2016-02-06 19:00]

சோலார் விசாரணை கமிஷனில் ஆஜராகி வரும் சரிதா நாயர் தினமும் பல்வேறு அதிரடி விவரங்களை வௌியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை அமைச்சர் ஆரியாடன் முகமதிற்கு ரூ.40 லட்சமும் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து தன்னை பலாத்காரம் செய்தவர்கள் பெயர் பட்டியலை சோலார் விசாரணை கமிஷனிடம் சீல் வைத்த கவரில் தாக்கல் செய்யப்போவதாக கூறியிருந்தார். இதன்படி நேற்று விசாரணை கமிஷனில் ஆஜரான அவர், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் பெயர் பட்டியல் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது சனிக்கிழமை (இன்று) மேலும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யப் போவதாகவும் கூறினார்.


ஆண்டுக்கு 5 ஆயிரம் தலித்துகள் சந்தேக மரணம்! தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! - தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
[Saturday 2016-02-06 19:00]

தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை தேசியக் குற்ற ஆவண மையத்தின் அறிக்கை வெளிப்படுத்தியது. இப்போது தமிழகக் காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூக நீதிப் பிரிவுக்குப் பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரி திரு. ராஜேஷ் தாஸ் அவர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் தலித்துகள் சந்தேகமான முறையில் மரணமடைவதாகவும், அதில் 45 விழுக்காட்டினர் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்கொலை வழக்குகள் சிலவற்றைப் புலனாய்வு செய்தபோது அவை தூண்டுதலின்பேரில் செய்துகொள்ளப்பட்ட தற்கொலைகள் என்பதும், சில வழக்குகளில் கொலைகள் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, சந்தேக மரண வழக்குகள் அனைத்தையும் தீவிரமாகப் புலனாய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது: - சரத்பவார் பரபரப்பு செய்தி
[Saturday 2016-02-06 14:00]

பள்ளிக்கூட புத்தகங்களில் வரலாற்றை திரித்து வெளியிட்டு, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சரத் பவார் கூறியதாவது - பள்ளிக்கூட புத்தகங்களில் வரலாற்றை திரித்து வெளியிட்டு, இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இது தீங்கு விளைவிப்பதால், இது மிகவும் ஆபத்து நிறைந்தது. சமுதாயத்தில் நஞ்சை பரப்புவதற்காக, இது இளைஞர்களின் மனதில் கெடுதியை விதைக்கும் செயல் என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், இது மிகவும் தீவிரமான பிரச்சினை என்பதால், எழுத்தாளர்கள் இது தொடர்பாக கட்டுரை எழுத வேண்டும். விவாதங்களும் அரங்கேற வேண்டும்.சிவாஜி மகாராஜா முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. தன்னுடைய படையில் அவர் முஸ்லிம்களை முக்கியமான இடத்தில் வைத்திருந்தார். ஆகையால், இதுபோல் வரலாற்றை திரித்து கூறுவது மதச்சார்பற்ற நாட்டுக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லது அல்ல


100 நாள் வேலை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருதினை வழங்கிய அருண் ஜெட்லி!
[Saturday 2016-02-06 13:00]

100 நாள் வேலை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருதினை மத்திய மந்திரி அருண் ஜெட்லி வழங்கினார்.இதுதொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகவும், ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முறையில், உடல் உழைப்பினைத் தரவல்ல ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் சராசரியாக 100 நாட்களுக்கு வேலைக்கான உத்தரவாதத்தை வழங்கும் திட்டமாகவும் அமைந்துள்ளது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 2006-ம் ஆண்டு முதல், இத்திட்டத்தினை செயலாக்குவதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. தொழிலாளர் மதிப்பீடு, பெண்கள் பங்கேற்பு, ஒரு ஆண்டில் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் சராசரி வேலை நாட்கள் போன்றவற்றில், தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. நடப்பு நிதியாண்டில், தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட 37.29 கோடி மனித சக்தி நாட்கள் என்ற இலக்கீடு இந்தியாவிலேயே அதிகம் ஆகும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
[Saturday 2016-02-06 07:00]

கன்னியாகுமரி மாவட்டம் சீதப்பால் அரசுப் பள்ளியில் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக தலைமை ஆசிரியரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சீதப்பாலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 16 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு ஆசாரிப்பள்ளம் பள்ளவிளையைச் சேர்ந்த சுப்பையன் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இவர் இங்கு 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.


வரி ஏய்ப்பு செய்வோருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்! - நிதி அமைச்சக ஆலோசனை கமிட்டி யோசனை
[Saturday 2016-02-06 07:00]

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும்,


ராகுலை தமிழக முதல்வராக்க வேண்டும் என கூறுவது மிகப்பெரிய தமாஷ்: - கிண்டலடித்த பொன். ராதாகிருஷ்ணன்
[Saturday 2016-02-06 07:00]

ராகுலை தமிழக முதல்வராக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தமாஷ் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு எம்எல்ஏ பதவி கூட கிடைக்காது. நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. ஒரு எம்.பி. தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத நிலையில் உள்ளது காங்கிரஸ் கட்சி.


கர்நாடக முதல்வர் சித்தராமையா அணிந்துள்ள கைகடிகாரம் 10 லட்சம் ரூபாய் பெறுமதி!
[Saturday 2016-02-06 07:00]

கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரு சுத்துார் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நிருபர்கள் அவரிடம், 'முன்னாள் முதல்வர் குமாரசாமி, நீங்கள் அணிந்துள்ள கைக்கடிகாரம், 10 லட்சம் ரூபாய், கண்ணாடி, 50 ஆயிரம் ரூபாய் என்று கூறியுள்ளாரே' என, கேள்வி எழுப்பினர். இதனால் கடுப்பான முதல்வர் சித்தராமையா, தன் கையில் கட்டியிருந்த வாட்சையும், கண்ணாடியையும் உடனடியாக கழற்றி வைத்து விட்டு,


பிரபல பாடகி ஷான் - வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்!
[Saturday 2016-02-06 07:00]

சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்ற பிரபல பின்னணி பாடகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மலையாள திரை உலகில் பிரபல இசையமைப்பாளரான ஜோன்சன் மாஸ்டர் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு காலமானார். இவரது மகளான ஷான் (வயது 31) திருமணம் ஆகி கணவரை பிரிந்து சென்னை அசோக் நகரில் வசித்து வந்தார். மயிலாப்பூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தமிழில் எங்கேயும் எப்போதும் மற்றும் பறவை ஆகிய படங்களில் ஷான் பாடியுள்ளார்.


ஊட்டச்சத்து உணவு பொருட்களை சாப்பிடுவதில் சென்னை முதலிடம் வகிக்கிறது.
[Saturday 2016-02-06 07:00]

காய், கனிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்களை சாப்பிடுவதில், இந்திய பெருநகரங்களில், சென்னை முதலிடம் வகிக்கிறது. சர்வதேச பொருளாதார உறவுகள் மீதான, இந்திய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பெங்களூரை சேர்ந்த, இந்திய மேலாண்மை கல்வி மையம் நடத்திய ஆய்வு அறிக்கை விவரம் கீழ்வருமாறு:


பனிச்சரிவில் இறந்த தமிழக வீரர்களுக்கு நினைவு சின்னம் தேவை! - ராமதாஸ் கோரிக்கை
[Saturday 2016-02-06 07:00]


குஜராத்தில் ஆற்றுக்குள் அரசு பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி!
[Friday 2016-02-05 19:00]

குஜராத் மாநிலத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத் மாநில அரசு பேருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சூரத் அருகில் உள்ள நவ்சாரியில் இருந்து இன்று மாலை உகாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்தில், பூர்ணா ஆற்றுப் பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், பலியானவர்களின் உடல்களை மீட்டனர்.


ஒரே ஒரு குடும்பம் மக்களவைத் தேர்தல் தோல்விக்காக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: -பிரதமர்
[Friday 2016-02-05 19:00]

ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவதை தடுக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக சாடினார் பிரதமர் நரேந்திர மோடி.அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார்க் மாவட்டத்தின் மோரான் நகரில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பேரணிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது:ஒரே ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவது தடுக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்காக அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளில் உள்ள சில தலைவர்கள் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு தயாராக இருக்கும் நிலையில், ஒரே ஒரு குடும்பம் மட்டும் மாநிலங்களவையை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: -கேரள அரசு தெரிவிப்பு
[Friday 2016-02-05 19:00]

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பனை 18 படியேறி தரிசனம் செய்வதற்கு, 41 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடியுடன் வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர். கோயிலின் புனிதத்தை காக்கும் பொருட்டு, மாதவிடாய் ஏற்படும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் பருவம் அடைவதற்கு முன், 10 வயது வரையிலும், மாதவிடாய் நின்றபின் 50 வயதுக்கு மேற்பட்டும் பெண்கள் சபரிமலைக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க கோரி இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன் கடந்த மாதம் (ஜனவரி) 12-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.


டெல்லியில் ஐ.எஸ்.ஆதரவாளர் கைது: - சிறப்பு போலீஸ் படை அதிரடி நடவடிக்கை
[Friday 2016-02-05 19:00]

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அனுதாபி என சந்தேகிக்கப்படும் நபரை டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு இன்று கைது செய்துள்ளது. மும்பை மேற்கு மலாட் பகுதியைச் சேர்ந்த மொசின் என்ற வாலிபர், இன்று டெல்லி பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது, அவரை டெல்லி சிறப்பு போலீஸ் படையினர் சுற்றி வளைத்து, ஐ.எஸ். தீவிரவாத இயக்க அனுதாபி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்தபோது 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மொசின், ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வரும் சிரியாவிற்கு செல்வதற்கு முயற்சி செய்துவந்துள்ளார். கடந்த மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 4 பேர் பிடிப்பட்டனர்.


ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்!
[Friday 2016-02-05 18:00]

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கில் உயிரிழந்த 10 ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 19,600 அடி உயரத்தில் உள்ள லடாக்கின் வடக்கு பனி முகட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவு அங்கிருந்த ராணுவ முகாமை மூடியது. இங்கு மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர்.ராணுவ முகாம் மீது விழுந்த அதிகப்படியான பனி, அதனை மிக ஆழத்தில் புதைத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து, 10 வீரர்களும் மரணமடைந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


இரு நாள் பயணமாக இன்று இலங்கை செல்லும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்!
[Friday 2016-02-05 07:00]

வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். அப்போது தமிழக மீனவர் பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்களை பேசுகிறார்.வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று (வெள்ளிக்கிழமை) 2 நாள் பயணமாக இலங்கை செல்கிறார். கொழும்பு நகரில் இன்று நடைபெறும் 9-வது இந்தியா-இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பொருளாதாரம், வர்த்தகம், மின்சாரம், கடல்சார் ஒத்துழைப்பு, சமூக, கலாசாரம், கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், ராணுவ ஒத்துழைப்பு, சுகாதாரம், விமான போக்குவரத்து, சுற்றுலா, இருநாட்டு மக்களின் தொடர்புகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா