Untitled Document
June 26, 2024 [GMT]
யுவதியை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற இளைஞருக்கு அபராதம் செலுத்த உத்தரவு!
[Wednesday 2016-01-06 19:00]

யுவதி ஒருவரின் புகைப்படத்தை நிர்வாணமாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி பணம் கோரிய இளைஞனுக்கு, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட யுவதிக்கு 25 ஆயிரம் ரூபாய் நட்டஈடாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.


கைதடிப் பாலத்தில் தமிழ் இராணுவச் சிப்பாய் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயம்!
[Wednesday 2016-01-06 19:00]

கைதடி, கோப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்தில் வைத்து தமிழ் இராணுவ வீரர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த இராணுவ வீரர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைதடி பாலத்தில் வைத்து இடைமறித்த இனந்தெரியாத குழுவினர் அவரை கொட்டன்களால் தாங்கியுள்ளனர்.


வதைமுகாம் அல்லவாம், மருத்துவ ஆய்வுகூடமாம்! - இராணுவப் பேச்சாளர்
[Wednesday 2016-01-06 19:00]

வலிகாமம் வடக்கில்,இராணுவ முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ ஆய்வுக் கூடத்தையே சித்திரவதை முகாம் என சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார். 'மருத்துவ ஆய்வு கூடத்தை விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவே கூரையில் முட்கம்பிகளை அமைத்தோம். தற்போது, மக்கள் அந்த இடத்தில் மீளக்குடியேறியதையடுத்து, அந்த கம்பிகளை அகற்றி, வீட்டைச் சுத்தப்படுத்தியுள்ளோம்' என்றார்.


கிழக்கில் அடைமழை- மூன்று மாவட்டங்களிலும் வெள்ளம்! Top News
[Wednesday 2016-01-06 19:00]

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல் இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 58.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.


மன்னாரில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு! Top News
[Wednesday 2016-01-06 19:00]

மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்துக்கு முன்னால் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை மன்னார் பொலிஸார், இன்று காலை மீட்டனர். மன்னார், சின்னக்கடையைச் சேர்ந்த பி.யூட் கோடீஸ்வரன்(வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறது இலங்கை!
[Wednesday 2016-01-06 07:00]

எட்டு ஜே.எப்-17 போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் இலங்கை விஜயத்தின் போது இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்த ஜேஎப் 17 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யாது என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.


சிவா பசுபதி குறித்து சந்தேகம் கிளப்பும் சிங்கள ஊடகம்!
[Wednesday 2016-01-06 07:00]

முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதி இலங்கைக்கு மேற்கொண்டள்ள பயணம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் தெரிவித்துள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிவா பசுபதி விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் என்றும் அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.


இவ்வாண்டு பல்கலைக்கழக அனுமதி 10 வீதத்தினால் அதிகரிப்பு!
[Wednesday 2016-01-06 07:00]

கடந்த ஆண்டு நடந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில், இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு கூடுதலாக 10 வீத மாணவர்களை உள்ளீர்க்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வாவின் தகவல்படி. உயர்தரத்தில் மேலதிகமாக தொழில்நுட்ப பாடநெறியும் உள்ளடக்கப்பட்டுள்ளமையால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இராணுவத்தைக் காட்டிக் கொடுத்த மேஜர் ஜெனரலுக்கு மீண்டும் பதவியாம்!
[Wednesday 2016-01-06 07:00]

இராணுவத்தை காட்டிக் கொடுத்த இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு மீளவும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அமெரிக்க சட்டநிபுணர் ஒருவருக்கு சத்தியக் கடதாசி வழங்கிய இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரே மீளவும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார். இந்த இராணுவ மேஜர் ஜெனரலை கடந்த அரசாங்கம் பணி நீக்கியிருந்தது. அரசியல்வாதி ஒருவரின் உறவினரான இந்த மேஜர் ஜெனரல் மற்றும் அவரது குடும்பத்திற்கு பிரிட்டன் அரசியல் தஞ்சம் வழங்கியிருந்தது.


அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை! - பிரதமர் ரணில் தகவல்
[Wednesday 2016-01-06 07:00]

எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


புதிய அரசியலமைப்பு தனிஈழத்தை உருவாக்கும்! - என்கிறது பொது பலசேனா
[Wednesday 2016-01-06 07:00]

புதிய அரசியல் அமைப்பு தனிஈழத்தை அமைக்கும் அடிப்படையில் அமையும் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,


போரின்போதும், ஐநாவிலும் பாகிஸ்தான் அளித்த உதவியை மறக்க முடியாது! - மைத்திரி
[Wednesday 2016-01-06 07:00]

எமது இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையாகவே பங்கு பற்றும் உண்மை நண்பனான பாகிஸ்தானுடனான நட்புறவை மென்மேலும் மேம்படுத்துவது மிக அவசியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


குடும்பங்களைச் சீரழித்து விட்டார் மஹிந்த! - விவாகரத்து அதிகரிப்புக்கு அவரே காரணம்.
[Wednesday 2016-01-06 07:00]

நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே காரணம் என அமைச்சர் தயா கமகே குற்றஞ்சாட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் தயா கமகே இதனைக் குறிப்பிட்டார்.


இலங்கையின் கல்வித் திட்டத்தில் விரைவில் மாற்றம்!
[Wednesday 2016-01-06 07:00]

இலங்கையின் கல்வித் திட்டம் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்யப்படுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.


நோர்வே வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்குப் பயணம்!
[Wednesday 2016-01-06 07:00]

இலங்கையுடன் மீள உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்கே பிரென்டே நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. 2006 ம்ஆண்டிற்கு பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற் கொள்வது இதுவே முதற் தடவை என நோர்வே வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


சிவா பசுபதி விவகாரம் - பதிலளிக்க மறுத்த முதலமைச்சர்!
[Tuesday 2016-01-05 19:00]

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உப குழுவில் சிவா பசுபதியை பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பு தொடர்பாகவும், அதனை அவர் நிராகரித்தது தொடர்பாகவும், வெளியான செய்திகள் விஷமத்தனமானவை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


வீமன்காமம் வதைமுகாம் தடயங்கள் அழிப்பு
[Tuesday 2016-01-05 19:00]

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதைமுகாம்களாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட வீடுகளில் இருந்த தடயங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதி கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து, கடந்த 29ம் திகதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.


பேஸ்புக் பாவிக்க விமானப்படையினருக்குத் தடை!
[Tuesday 2016-01-05 19:00]

விமானப் படையினர் பேஸ்புக் பாவிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானப்படை தளபதி சுகத் புளத் சிங்களவின் உத்தரவுக்கு அமையவே விமானப்படை நிர்வாக இயக்குனர் இதற்கான அறிவுறுத்தலை விமானப்படை வீரர்களுக்கு வழங்கியுள்ளார். அதன்படி, சுமார் 4000 விமானப்படை வீர வீராங்கணைகள் தமது பேஸ்புக் பயன்படுத்தும் உரிமையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.


மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த இனவாத சக்திகள் தலைதூக்குகின்றன! - அர்ஜுன ரணதுங்க
[Tuesday 2016-01-05 19:00]

இலங்கையில் மீண்டும் யுத்தத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இனவாத சக்திகள் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த தேர்தலில் வெற்றபெற்ற போதிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாது போனவர்கள், மற்றும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றவர்களும் இவ்வாறான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


பாகிஸ்தான்- இலங்கை இடையே 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்து! Top News
[Tuesday 2016-01-05 19:00]

இலங்கை - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில், இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் முன்னிலையில் குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்கள் பேரவையுடனும் ஈபிஆர்எல்எவ் இணைந்து செயற்படும்:
[Tuesday 2016-01-05 19:00]

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான வரைபை மக்களிடம் கையளித்து அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் முழுப்பங்களித்தல் உட்பட முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) மத்திய குழுக்கூட்டம் அவ்வமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் 05.01.2016 அன்று வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 10.30முதல் 1.30வரையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர்கள்; பங்கேற்றிருந்தனர்.


முல்லைத்தீவு பொலிசார் வராததால் 4 நாட்களாக பிரேத அறையில் காத்திருந்த பெண்ணின் சடலம்!
[Tuesday 2016-01-05 19:00]

முல்லைத்தீவுப் பொலிசாரின் அசமந்த செயற்பாட்டினால், மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் கடந்த நான்கு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஜீவகுமார் செல்வகுமாரி (வயது 30) என்பவர் கடந்த இரண்டாம் திகதி மரணம் அடைந்துள்ளார்.


மைத்திரி ஆட்சியின் ஒரு வருட நிறைவு நிகழ்வில் தலைமையுரை ஆற்றுகிறார் காந்தியின் பேரன்!
[Tuesday 2016-01-05 19:00]

இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓராண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெறும் தேசிய நிகழ்வில் மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பினை ஏற்று கலந்து கொள்ளும் கோபாலகிருஸ்ணகாந்தி இந்த நிகழ்வில் தலைமையுரை ஆற்றவுள்ளார்.


மன்னார் கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்! Top News
[Tuesday 2016-01-05 19:00]

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட போது நேற்று இரவு 9 மணியளவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று மதியம் மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


தாஜூடின் கொலை - சிசிடிவி காட்சிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப பரிந்துரை!
[Tuesday 2016-01-05 19:00]

றகர் வீரர் வசீம் தாஜூடின் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை, வௌிநாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி பரிசோதிப்பது சிறந்தது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக கனணிப் பிரிவினரால் இன்று இந்த விடயம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


முதிரை மரக்குற்றிகளைக் கடத்திய 15 இராணுவத்தினர் கைது! Top News
[Tuesday 2016-01-05 19:00]

அனுமதிப்பத்திரம் இன்றி முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற வேளை கைது செய்யப்பட்ட 15 இராணுவ வீரர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா, இன்று அனுமதியளித்தார். கஜுவத்தை இராணுவ முகாமிலுள்ள இவ் இராணுவ வீரர்கள், நேற்று மாலை 14 முதிரை மரக்குற்றிகளை தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இராணுவ முகாமிற்குச் சென்றுள்ளனர்.


வலி.வடக்கில் இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய வீடுகள் மட்டும் தப்பின!
[Tuesday 2016-01-05 19:00]

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய வீடுகள் மட்டும் நல்ல நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறான வீடுகளின் சொந்தக்காரர்கள் அந்த வீடுகளை உடனடியாக தங்களின் மீள்குடியேற்றத்துக்கு பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில் வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளும், வலிகாமம் கிழக்கில் 233 ஏக்கர் காணிகளும் கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டன.


ஊடகவியலாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த ஐதேகவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்!
[Tuesday 2016-01-05 19:00]

தன்னைக் கொலை செய்யப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன், அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அலைபேசியின் தன்னை தொடர்புகொண்ட துவாரகேஸ்வரன், கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன் என்றும், வீடு புகுந்து தூக்குவேன் எனவும் தன்னை மிரட்டியதாக ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா