Untitled Document
June 26, 2024 [GMT]
ரவிராஜ் கொலைக்கு கடற்படைப் புலனாய்வுப் பிரிவே காரணம்! - அம்பலப்படுத்திய அரசதரப்பு சாட்சி
[Tuesday 2016-01-05 09:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பு உள்ளதாக, அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ள வழக்கின் சந்தேகநபர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். சம்பத் ப்ரித்விராஜ் என்ற நபரே இவ்வாறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.


கடுமையான நிலைப்பாடுகளின் மூலம் சந்தர்ப்பத்தை பாழடிக்கக் கூடாது! - இரா.சம்பந்தன்
[Tuesday 2016-01-05 09:00]

கடுமையான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தை பாழடித்து விடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேவையில்லாத கண்டிப்புக்கள் மற்றும் கடுமையான தோரணைகள் ஒருபோதும் உதவியளிக்காது. எந்தவொரு தீர்வும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுடன், அது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.


ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர்கள்! - புலனாய்வு தகவலுக்கு அமைய நடவடிக்கை
[Tuesday 2016-01-05 09:00]

இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 36 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விவ காரம் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு அமைய சரியான வகையில் விசாரணைகளை முன்னெடுப்போம். எவ்வாறு இருப்பினும் உறுதியான வகையில் இந்த தகவல்கள் கிடைக்காத நிலையில் அவை தொடர்பில் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்க முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன தெரிவித்தார்.


முஸ்லிம்களின் வீடுகளில் சிங்க லே! - இனமோதலை உருவாக்க முயற்சி
[Tuesday 2016-01-05 09:00]

முஸ்லிம்களின் வீடுகளில் சிங்கலே என எழுதி இனங்களுக்கிடையில் பேதங்களை உருவாக்க முற்படுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க இனிமேலும் இடமளிக்க கூடாது எனவும் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தனது முக நூலில் கருத்து வௌியிட்டுள்ளார்.


சேனாதிபதியிடம் 7 மணிநேரம் விசாரணை! Top News
[Tuesday 2016-01-05 09:00]

அவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழுவிடம் நேற்று வாக்குமூலம் அளித்துள்ளார். நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சேனாதிபதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். காலை 10 மணியளவில் ஆணைக்குழுவிற்கு சென்ற சேனாதிபதி மாலை 5 மணி வரையில் வாக்குமூலம் அளித்துள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இவ்வாறு நேற்று வாக்குமூலம் அளித்துள்ளார்.


புலிகளின் அச்சுறுத்தல் நீங்கவில்லை! - என்கிறார் கோத்தபாய
[Tuesday 2016-01-05 09:00]

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் இன்னமும் முழுமையாக நீங்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்குகள் நிறைவேறும் வரையில் ஓயப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் உறுதியுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெப்பிலியான சுனேத்திராதேவி விஹாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம்! - டக்ளஸ், தொண்டாவுக்கும் வாய்ப்பு?
[Tuesday 2016-01-05 09:00]

பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக் கூடும் என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, தற்போதைய அமைச்சர்கள் பலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று அறியமுடிகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்து கொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கும் இரண்டு அமைச்சுகள் கிடைக்கவிருக்கின்றன என்றும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொய்ச்சாட்சி சொன்ன மேஜர் ஜெனரலுக்கு பிணை!
[Tuesday 2016-01-05 09:00]

பொய்ச்சாட்சி கூறிய முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் பண்டார ஜெயசுந்தரவை 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 500,000 பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல கொழும்பு முதன்மை நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய நேற்று உத்தரவிட்டார். ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஜெயசுந்தரவிடம் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்ட போதே பொய்த்தகவல்களை வழங்கியிருந்தார்.


நான்கு ஆண்டுகளில் புகையிலை உற்பத்தியைத் தடை செய்ய அரசாங்கம் திட்டம்!
[Tuesday 2016-01-05 09:00]

2020ஆம் ஆண்டு முதல் புகையிலை உற்பத்திகளுக்குத் தடைவிதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார். மஹாவலி அமைச்சின் கள உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், புகைப்பொருட்களின் ஊடாக ஏற்படுகின்ற புற்றுநோயைத் தடுப்பதே, அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.


உலகிலேயே மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டுபிடிப்பு! Top News
[Tuesday 2016-01-05 09:00]

உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட் என்று நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இதன் சந்தைப் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அழகுக்கல் நிறுவகம் மதிப்பிட்டுள்ளது.


விக்னேஸ்வரனின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி!
[Monday 2016-01-04 20:00]

தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவில் இணையுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை முன்னாள் சட்டமா அதிபரும் சட்டவாக்க நிபுணருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். இந்த பேரவையின் சார்பில் அரசியல் தீர்வைத் தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள உபகுழுவுக்கு தமது பிரதிநிதியாக செயற்படும் வகையிலேயே விக்னேஸ்வரன் சிவா பசுபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.


இவ்வருடத்துக்குள் தமிழ் மக்களுக்குள் சகல உரிமைகளும் கிட்டும்! - என்கிறார் பிரதமர் ரணில்.
[Monday 2016-01-04 20:00]

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இவ் வருடத்துக்குள் சகல உரிமைகளையும் வழங்குவதோடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சகல காணிகளையும் விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


தமிழர்களால் ஒன்ராறியோ பெருமிதமடைந்துள்ளது. மரபுரிமை மாதத்தை வெகுசிறப்பாகக் கொண்டாடுவோம்: - பற்றிக் பிறவுன் Top News
[Monday 2016-01-04 20:00]

தமிழர்களின் மரபுரிமை மாதத்தை ஒன்ராறியோ சட்டமன்றத்தில் பிரேரணையாகக் கொண்டு வந்து அங்கீகரிக்க வைத்தது முன்னேற்றவாத கண்சவெட்டிவ் கட்சியே என்றும், தொடர்ந்தும் அதனைப் பெருமையுடன் கொண்டாடுவோம் எனவும் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பற்றிக் பிறவுன் தனது மரபுரிமை நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழர்களிற்கும் தனக்குமான பிணைப்பு மிகவும் இறுக்கமானது என்றும், அநேக தமிழர் நிகழ்வுகளில் கலந்து கொண்டவனாகத் தான் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ள திரு. பற்றிக் பிறவுன், தமிழர்களுடனான உறவாடல் மிகவும் ஆழமானது எனத் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 28ம் திகதி வியாளக்கிழமை மாலை 8 மணிக்கு ஒன்றாரியோ சட்டமன்ற வளாகத்தில் இடம்பெறும்.


நியாயமான, நிலையான தீர்வின் அவசியத்தை ரொனி பிளயரிடம் வலியுறுத்தினார் சம்பந்தன்! Top News
[Monday 2016-01-04 20:00]

நிலையான, ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய, நியாயமான, செயற்படுத்தப்படக் கூடிய ஓர் அரசியல்தீர்வை எட்டுவதன் அவசியத்தை முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயருடனான சந்திப்பின் போது வலிறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன். இலங்கை வந்துள்ள முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்தார்.


மரணதண்டனையை ஒழிக்குமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
[Monday 2016-01-04 20:00]

மனித உரிமைத் தத்துவம், விழுமியங்கள் என்பவற்றோடு இயையும் இரக்கமான சமுதாயம் தொடர்பான இலங்கையின் கட்டுபாட்டுக்கு அமைய மரணதண்டனையை ஒழிக்குமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது. ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரியுள்ளது.


வரும் 8ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு ஜேவிபி அழைப்பு!
[Monday 2016-01-04 20:00]

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் 8ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடையவுள்ள நிலையில், அன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்த ஜேவிபி தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.


விசமிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பேருந்து கண்ணாடிகளுக்கு இரும்பு வலை! Top News
[Monday 2016-01-04 20:00]

யாழ்ப்பாணம்


வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன:Top News
[Monday 2016-01-04 20:00]

வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பிள்ளைகளுக்கு லண்டனைச்சேர்ந்த யோகானந்தம் (ஜெயா) அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவின் ஒழுங்கமைப்பில், 03.01.2016 அன்று, கிளிநொச்சி பரந்தனில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் அனந்தராஜ், சுவிஸ் அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் குமணன், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர், மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள், சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட விழிப்புலனற்றவர்கள் போரினால் விழிப்புலனற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு இராணுவ முகாம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்! Top News
[Monday 2016-01-04 20:00]

கேப்பாபிலவில் இருந்து வெளியேற்றப்பட்ட அக்கிராம மக்கள் தம்மை தமது சொந்த கிராமத்தில் குடியேற்ற வேண்டும் என வலியுத்தி இன்று 4-1-2016 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேப்பாபிலவில் பொது மக்களது வாழ்விடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள பாரிய ஸ்ரீலங்கா இராணுவ படைத்தளத்திற்கு முன்பாக காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி 11.30 மணி வரை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இராணுவத்தினரை வெளியேறுமாறு வலியுறுத்தியும், தமது சொந்த இடங்களில் மீள் குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தியும், மாதிரிக்கிராமம் தமக்கு வேண்டாம், அகதி வாழ்க்கை தமக்கு வேண்டாம், என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசங்களை எழுப்பினர்.


காணிகளை ஒப்படைக்கும் ஜனாதிபதியின் வாக்குறுதியை வரவேற்கிறது கூட்டமைப்பு!
[Monday 2016-01-04 20:00]

காணிகளை ஒப்படைப்பது குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போர் காரணமாக வெளியேற்றப்பட்ட 100,000 பேருக்கு காணிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். ஆறு மாத காலப் பகுதியில் காணிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியது எனவும் ஆரோக்கியமான நகர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவு மீனவரின் படகை மூழ்கடித்த இந்திய இழுவைப்படகு சிறைபிடிப்பு! Top News
[Monday 2016-01-04 20:00]

முல்லைத்தீவு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவை படகு மோதியதில் முல்லைத்தீவு மீனவர்களின் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இதனால் கோபமடைந்த முல்லைத்தீவு மீனவர்கள் இந்திய இழுவை படகு ஒன்றையும் 8 மீனவர்களையும் சிறைப்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.


பாகிஸ்தான் பிரதமருக்கு கட்டுநாயக்கவில் கோலாகல வரவேற்பு! Top News
[Monday 2016-01-04 20:00]

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் அவரை வரவேற்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று வருகை தந்த பாகிஸ்தான்' பிரதமருடன் அவரது பாரியார் பேகம் ஷெரிப், வர்த்தக அமைச்சர் குராம் தஸ்தகிர்கான், பாதுகாப்பு உற்பத்திகளுக்கான அமைச்சர் ராணா தன்வீர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட உயர் மட்ட முக்கியஸ்தர்கள் பலரும் வருகை தந்தனர்.


கூட்டமைப்புக்கு துணை நிற்கும் பேரவையால் பயனில்லை! - ஆனந்தசங்கரி
[Monday 2016-01-04 20:00]

அரசியல் ரீதியான கட்சியாக தமிழ் மக்கள் பேரவை செயற்படாது எனக் கூறப்பட்டுள்ள நிலையில், பேரவையின் இலக்கு என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். 'தமிழ் மக்களின் இனப்பிரச்சினை சம்பந்தமாக மிக அவதானமாகவும் புரிந்துணர்வோடும் செயற்பட வேண்டிய காலம் இதுவென நினைக்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் பெரும் சாதனைகளை புரியலாமென கருதி நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினோம்.


வவுனியா யுவதியின் 15 பவுண் நகைகளை அபகரித்த பேஸ்புக் காதலன்!
[Monday 2016-01-04 19:00]

பேஸ்புக் காதலனை நம்பி தனது 15 பவுண் நகைகளை 28 வயதான வவுனியா யுவதியொருவர் இழந்த சம்பவம் நேற்று யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நண்பராகியுள்ளார். தான் கனடாவில் இருப்பதாகக்கூறி அந்தப் பெண்ணுடன் கதைத்து பெண்ணைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.


போர்க்குற்ற விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் அவசரமாக அமைக்கப்படாது! - மைத்திரிபால சிறிசேன
[Monday 2016-01-04 07:00]

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரமான நடவடிக்கைகளில் ஈடுபடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். த ஹிந்துவுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்திய வெளிவிவகார செயலாளர் கொழும்பு வருகிறார்!
[Monday 2016-01-04 07:00]

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் எதிர்வரும் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார். இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆராயும் நோக்கிலும் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடும் வகையிலுமே இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு பயணம்! - வடக்கிற்கும் செல்கிறார்
[Monday 2016-01-04 07:00]

இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரித்தானியாவின் பொதுநலவாயத்துக்கான வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹிகோ ஸ்வயர் வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆளும் மற்றும் எதிர்கட்சியை சந்திக்க உள்ளதுடன் வடக்கிற்கும் விஜயம் செய்ய உள்ளார்.


காணிகள் விடுவிப்புக் குறித்த பலாலியில் ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம்! - வரும் 15ஆம் திகதி நடக்கிறது
[Monday 2016-01-04 07:00]

இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பது குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தலைமையில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா