Untitled Document
June 30, 2024 [GMT]
தலைவர் என்ற பதம் ஆண் பாலா, பெண் பாலா? - வடக்கு மாகாணசபையில் விவாதம்
[Wednesday 2015-12-30 19:00]

அனந்தி சசிதரனும் வடமாகாண சபை அவைத்தலைவர் ஆகலாம் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் இன்று நடைபெற்ற போது, கல்வி நியதிச் சட்டத்தின் திருத்தம் சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தாதியின் கையைப் பிடித்து இழுத்து சேட்டை விட்ட இளைஞர் கைது!
[Wednesday 2015-12-30 19:00]

ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த 28 வயது இளைஞன் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன், வீதியில் நின்று கொண்டு பல நாட்களாக தாதி பெண்ணை நக்கலடித்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமைபணிக்குச் செல்லும் போது, தாதியின் பின்னால் வந்த இளைஞன் அவரின் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.


104 வயதில் காலமானார் சதாசிவம் ஐயா! Top News
[Wednesday 2015-12-30 19:00]

வவுனியா சதாசிவம் ஐயா வாழ்வியல் சாதனையாளராக 104 வயது வரை வாழ்ந்து இறைபதம் அடைந்தார். வவுனியா மாவட்டத்தின் மூத்த பிரஜையாகிய சதாசிவம் ஐயா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் வேலாயுதம் சதாசிவம் நேற்று குருமண்காட்டில் உள்ள தமது குறிஞ்சி இல்லத்தில் இறைபதம் அடைந்தார். இறைவனடி சேர்ந்தபோது, அவருக்கு வயது 104.


வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிப்பு - பொங்கலுக்கு முன் மீள்குடியமர்வாம்!
[Wednesday 2015-12-30 08:00]

வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் என்பவற்றிலேயே இந்த 700 ஏக்கர் காணிகளையும் உரியவர்களிடம் கையளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.


பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு புலனாய்வு அதிகாரியும் சிக்கினார்!
[Wednesday 2015-12-30 08:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தலில் தொடர்புடைய மற்றுமொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அபேரத்ன எனப்படும் குறித்த இராணுவப் புலனாய்வாளர் பிரகீத் கடத்தல் சம்பவம் நடைபெற்றிருந்த காலகட்டத்தில் சார்ஜண்ட் தர அதிகாரியாக இருந்துள்ளார்.


வடக்கிலும் தெற்கிலும் அடிப்படைவாதிகள் அமைதியைக் குழப்ப முயற்சி! - ராஜித சேனாரத்ன
[Wednesday 2015-12-30 08:00]

வடக்கிலும், தெற்கிலும் சில அடிப்படைவாதிகள் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதியைக் குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.


ஈழ ஆதரவாளர்களை திருப்திப்படுத்த இராணுவத்தினரைப் பழிவாங்குகிறதாம் அரசாங்கம்! - கம்மன்பில குற்றச்சாட்டு
[Wednesday 2015-12-30 08:00]

ஈழ ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்கிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.


மக்களை அணிதிரட்டி நீதிக்கும் விடுதலைக்குமான ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம் !
[Wednesday 2015-12-30 08:00]

இனஅழிப்புக்கான பரிகாரநீதித் தேடலிலும், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் விருப்பினை வென்றெடுப்பதற்கும், சனநாயக வழிமுறையில் மக்களை அணிதிரட்டி, ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தினை அவதானிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது இணைத்தலைமையில் தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அமைச்சர் சுதன்ராஜ் இதனைச் தெரிவித்துள்ளார்.


சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவே முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் மஹிந்த! - எஸ்.பி. தகவல்
[Wednesday 2015-12-30 08:00]

ஜெனீவாவில் ஏற்பட்ட சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கும் நோக்கத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்கூட்டியே தேர்தலை நடத்தத் தீர்மானித்ததாக அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்தார். சாத்திரங்களை நம்பியே மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தலை முற்கூட்டியே நடத்தியதாகக் கூறப்படுகிறது. அது ஒரு காரணமாக இருந்தாலும், அதிகாரத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக ஜெனீவாவில் ஏற்பட்டிருந்த சவாலை சமாளிக்க முடியும் என அவர் நம்பியதாலேயே முற்கூட்டியே தேர்தல் நடத்தினார்.


சர்வஜன வாக்கெடுப்பு மூலமே அரசியலமைப்பு மாற்றப்படும்!
[Wednesday 2015-12-30 08:00]

1972 அரசியலமைப்பு போன்று புதிய அரசியலமைப்பு மக்கள் மீது திணிக்கப்படமாட்டாது. சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே இது நிறைவேற்றப்படும் என பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை எதிர்த்தரப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்று கூறிக் கொள்பவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.


தெற்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிங்களவர்கள் போராட வேண்டும்! - ஞானசார தேரர்
[Wednesday 2015-12-30 08:00]

வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழ் மக்கள் போராடுவதைப்போல தெற்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிங்கள மக்களும் போராட வேண்டும். வடக்கிற்கு ஒரு நியதியும் தெற்கிற்கு ஒரு நியதியும் இருக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

-->

கையாடிய பணத்தை திரும்ப ஒப்படைத்தார் முன்னாள் அமைச்சர்!
[Wednesday 2015-12-30 08:00]

மஹிந்த ராஜபக்ச அரசின் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தனது அமைச்சுப் பதவியைப் பயன்படுத்தி பாரிய மோசடிகளைச் செய்திருந்தார். தனது மனைவியின் பெயரில் உள்ள காணியொன்றுக்கு சுமார் நான்காயிரம் தென்னங்கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொண்டிருந்த அவர், அதற்கான நடுகைச் செலவையும் அமைச்சின் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார். இதன் காரணமாக தெங்கு அபிவிருத்திச் சபைக்கு பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருந்தது.


ஹிருணிகாவை கைது செய்ய முடியுமா? - சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியது சிஐடி
[Wednesday 2015-12-30 08:00]

தெமட்டகொடை மேம்பாலத்துக்கு அருகில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்குள் பட்டப்பகலில் அத்துமீறி அங்கிருந்த ஊழியர் ஒருவரை டிபென்டர் வண்டியில் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்ய முடியுமா என கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளது.


தாஜுதீனின் படுகொலை: முக்கியஸ்தர்களில் சிலர் விரைவில் சிக்குவர்! - ராஜித சேனாரத்ன
[Wednesday 2015-12-30 08:00]

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் முக்கியஸ்தர்களில் சிலர், மிகவிரைவிலேயே சிக்குவர் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இக்கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் ரக வாகனம் யாருடையது, பிரதான சந்தேகநபரான சாரதி, யாருடைய சாரதியாகக் கடமையாற்றிவர் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.


ஊடகங்களில் வெளியான அறிக்கையை மறுக்கிறார் செல்வம் அடைக்கலநாதன்!
[Tuesday 2015-12-29 19:00]

'எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை - ஒருபோதும் இணையோம்' என்ற தலைப்புடன் இன்று பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்-


யாழ்ப்பாணத்தில் மழையினால் பல இடங்களில் வெள்ளம்! - 24 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி Top News
[Tuesday 2015-12-29 19:00]

யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தென்மராட்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாகவும், இதன்காரணமாக தொற்றுநோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மக்கள் பேரவையில் இணைந்தவர்களிடம் விளக்கம் கோரப்படும்! - மட்டு.சிவில் சமூக அமைப்பு Top News
[Tuesday 2015-12-29 18:00]

தமிழ் மக்கள் பேரவையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினை முறையான வகையில் இணைக்காதது கவலைக்குரிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பிலிருந்து நிர்வாக சபையின் அனுமதியைப் பெறாமல், இணைந்து கொண்டவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இராணுவத்தினரை விடுவிக்கக் கோரி சத்தியாக்கிரகம்! Top News
[Tuesday 2015-12-29 18:00]

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு கோரி, கொட்டாவ போதிக்கு அண்மையில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின், ஆலோசகர் பெங்கமுவ நாலக்க தேரர், ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில உள்ளிட்ட பிரிவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


மட்டக்களப்பில் கடுமையான கடற்கொந்தளிப்பு! - மீன்பிடித் தொழில் முடங்கியது Top News
[Tuesday 2015-12-29 18:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று கடல் கடுமையான கொந்தளிப்புடன் காணப்பட்டதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை முற்றாக தவிர்த்திருந்தனர். இதனால், மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக முடங்கியதுடன் அன்றாட வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான பூநொச்சிமுனை, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், பாலமுனை மற்றும் நாவலடி உட்பட பல இடங்களிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.


நிர்வாணமாக வீதியில் செல்ல விரும்புகின்றனரா? - ஜனாதிபதி கேள்வி
[Tuesday 2015-12-29 18:00]

இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தான் வௌியிட்ட கருத்து தொடர்பில் இணையத்தில் சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறு சேறு பூசுவதால் தனக்கு ஏதும் நேராது என சுட்டிக்காட்டிய அவர், இந்த நாட்டில் கலாச்சாரச் சீரழிவே ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


யாழ் அளவெட்டி மகீசன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்க அழைக்கப்பட்டுள்ளார்.
[Tuesday 2015-12-29 18:00]

யாழ்-அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் (New Jersey) வசிக்கும் திரு, திருமதி நிர்மலா ஞானசேகரன் செல்லையா தம்பதியினரின் புதல்வன் செல்வன் மகீஷன் ஞானசேகரன் அவர்கள் நியூ ஜெர்சிக்கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 2015 ம் ஆண்டின் அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையிலான கல்வித்திறன், சமூகப்பணி ஈடுபாடு, மற்றும் மாணவ தலைமைத்துவம் உட்பட்ட பல்வேறுபட்ட தெரிவுப் போட்டிகளிலும் முதல் இடம் பெற்று அமெரிக்க ஜனாதிபதி Barack Obama வினால் கெளரவிக்கப்படும் நிகழ்வில் பங்கேற்பதற்கென 2016 பங்குனி 5ம் திகதி அமெரிக்கத் தலைநகரில் (Washington D.C .) அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு (White House) அழைக்கப்பட்டுள்ளார்.


அகில இலங்கை அளவில் சிறந்த பிரதேச செயலகமாக குச்சவெளிப் பிரதேச செயலகம் தெரிவு! Top News
[Tuesday 2015-12-29 18:00]

இலங்கையின் தேசிய உற்பத்தி அபிவிருத்தி அமைச்சினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த பிரதேச செயலகத் தெரிவில், 2014- 2015ஆம் ஆண்டின் சிறந்த பிரதேச செயலகமாக குச்சவெளி பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 313.37 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இரண்டாவது பெரிய பிரதேசமாக குச்சவெளி பிரதேசம் காணப்படுகின்றது.


திருகோணமலை விபத்தில் ஒருவர் பலி!
[Tuesday 2015-12-29 18:00]

திருகோணம​லை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதியம்மன்கேணி பகுதியில், இடம்பெற்ற விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதான எஸ்.நவரத்தினம் என்பவர் நேற்று உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், துவிச்சக்கர வண்டியை செலுத்தி வந்த மேற்படி நபர், படுகாயமடைந்தார்.


கூட்டமைப்பை பலவீனப்படுத்த முயன்றால் பேரவையில் இருந்து வெளியேறி விடுவோம்! - சித்தார்த்தன்
[Tuesday 2015-12-29 18:00]

தமிழ் மக்கள் பேரவை பரந்துபட்ட அளவில் மக்கள் பங்குகொள்ளும் அமைப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மக்களின் அபிப்பி்ராயங்களைப் பெற்றுக் கொண்டு தீர்வை ஏற்படுத்துகின்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில் நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டிலேயே இணைந்து கொண்டிருக்கிறோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.


புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு புதிய நீதிவானிடம்!
[Tuesday 2015-12-29 18:00]

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கை நடத்தி வரும் ஊர்காவற்றுறை நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வவுனியா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்துக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் பதவியேற்கவுள்ளார்.


பருத்தித்துறையில் மீனவரின் சடலம் கரையொதுங்கியது!
[Tuesday 2015-12-29 18:00]

பருத்தித்துறை முனைப் பகுதியிலிருந்து நேற்று அதிகாலை கடலுக்குச் சென்று காணாமற்போன மீனவர், முனை வெளிச்ச வீட்டுக்கு அருகிலிருந்து இன்று அதிகாலை, சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். முனைப் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜோர்ஜ் (வயது 42) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.


பிரசாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Tuesday 2015-12-29 18:00]

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரான ஹரனுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர்கள் இருவரையும் ஆஜர்படுத்தியபோது, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எம்.றியாழ் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.


அடைக்கலநாதனுக்கு நாவடக்கம் வேண்டும்: - வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
[Tuesday 2015-12-29 17:00]

எதிரிகள், துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டதே

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா