Untitled Document
July 2, 2024 [GMT]


தாய்வான் வான் எல்லைக்குள் 10 சீன போர் விமானங்கள்!
[Friday 2024-06-28 19:00]

தாய்வானின் வான் பரப்புக்குள் பத்து சீன விமானங்கள் இவ்வார முற்பகுதியில் பிரவேசித்ததாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


"உன் தாயை பலாத்காரம் செய்வேன்" - போராட்டக்காரரிடம் கீழ்த்தரமாக பேசிய பொலிஸ் அதிகாரி!
[Tuesday 2024-07-02 18:00]

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அல் - குத்ஸில் குவிந்த சுமார் 1,30,000 போராட்டக்காரர்கள் நாட்டில் புதிதாக தேர்தல் நடத்த வலியுறுத்தியும், காசாவில் பிணைகக் கைதிகளாக மீதமுள்ள 100 இஸ்ரேலியர்களை விரைவில் மீட்க கோரியும் போராட்டம் நடத்தியுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க இஸ்ரேல் பொலிஸார் கடுமையான முறைகளை பிரயோகித்தது சர்ச்சையாகியுள்ளது.


கனடாவின் மாண்டரின் உணவகங்களில் குவிந்த மக்கள் கூட்டம்!
[Tuesday 2024-07-02 18:00]

ஜூலை 1 கனடா தினத்தை முன்னிட்டு மாண்டரின் உணவகங்கள்(mandarin) நேற்றையதினம் இலவச பஃபேக்களை (free buffet) வழங்கியுள்ள நிலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இலவச பஃபே மதியம் முதல் இரவு 8 மணி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது மாண்டரின் 100 க்கும் மேற்பட்ட கிளாசிக் உணவுகளைக் கொண்டுள்ளது.


உக்ரைன் அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சதிப்புரட்சி!
[Tuesday 2024-07-02 18:00]

உக்ரைன் அரசாங்கத்தை பதவி கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சி முறியடித்துள்ளதாக அந்த உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 30ம் திகதி உக்ரைன் தலைநகரில் கலவரமொன்றை ஏற்படுத்தி அதனை பயன்படுத்தி உக்ரைன் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கும் இரணுவத்தையும் அரசியல் தலைமைத்துவத்தையும் அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கும் சதிபுரட்சி முயற்சி குழுவினர் திட்டமிட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.


லண்டனில் கைதியுடன் பெண் அதிகாரி பாலியல் உறவு: காணொளி வெளியானதால் இராஜினாமா!
[Tuesday 2024-07-02 18:00]

லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறைசாலையில் பெண் அதிகாரி ஒருவர் கைதியுடன் பாலியல் உறவில் இருந்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு லண்டன் வாண்ட்ஸ்வொர்த் மாவட்டத்தில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.


சுற்றுலா தலத்தில் 2 மகள்களை கைவிட்டுவிட்டு ஓடிய கனேடிய தாய்!
[Tuesday 2024-07-02 06:00]

சுற்றுலாத் தலமான கன்குனில் (Cancun) இரு கனடா சிறுமிகளை கைவிட்டுச் சென்றதாக கனடா பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கனேடிய பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கான செலவுக்கு பணம் இல்லை என்று கூறி சுற்றுலாத் தளமான கன்குனில் (Cancun) கைவிட்டு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 3 வயதிற்குட்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் சுற்றுலாத் தலமான ஒரு தெரு மூலையில் தனியாக இருப்பதை கண்டுபிடித்தனர்.


கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய வட கொரியா!
[Tuesday 2024-07-02 06:00]

வட கொரியாவின் திடீர் ஏவுகணை தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடனான உறவுகளை சீர்குலைக்கும் நோக்கில் வட கொரியா திங்கட்கிழமை இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது. முதல் ஏவுகணை, ஒரு குறுகிய தூர ஏவுகணை, அதிகாலை வேளையில் ஏவப்பட்டது.


ஸ்பெயினில் கல்லறையை தோண்டியபோது கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான ஒயின்!
[Tuesday 2024-07-02 06:00]

உலகின் மிகப் பழமையான ஒயின் ஸ்பெயினின் கார்மோனாவில் உள்ள ரோமானிய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒயின் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது. 2019-இல் கல்லறை தோண்டியபோது, ​​நன்கு பாதுகாக்கப்பட்ட அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


இளம்பெண்ணை கொன்று சடலத்தை தூக்கிச்செல்லும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்!
[Monday 2024-07-01 18:00]

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவர், தன் சகநாட்டவரான இளம்பெண் ஒருவரைக் கொன்று பொலிஸ் வாகனம் ஒன்றின் அருகிலேயே தூக்கிச் செல்லும் அதிரவைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ஈக்வடார் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவரான Jhon Moises Chacaguasay-Ilbis, (21) என்னும் இளைஞர், தன்னைப்போலவே புலம்பெயர்ந்த, தனக்கு நன்கு அறிமுகமான Joselyn Jhoana Toaquiza (21) என்னும் இளம்பெண்ணை, அவரது பிறந்தநாள் அன்றே கொலை செய்துள்ளார்.


பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலால் வெடித்த வன்முறை!
[Monday 2024-07-01 18:00]

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


ஸ்பெயின் தீவுக்கு சென்று இதுவரை மாயமான பிரித்தானியர்கள்!
[Monday 2024-07-01 18:00]

ஸ்பெயின் நாட்டின் Tenerife தீவுக்கு சென்று, இதுவரை எத்தனை பேர்கள் மாயமாகியுள்ளனர் என்ற கேள்வி பிரித்தானியாவில் பரவலாக எழுந்துள்ளது. பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த 19 வயது Jay Slater கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாயமான நிலையில், இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அங்குள்ள பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.


கனடாவில் வாகன சோதனையின்போது சிக்கிய போதைப்பொருள்!
[Monday 2024-07-01 18:00]

கனேடிய நகரமொன்றில், பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்று முகப்பு விளக்குகள் எரியாத நிலையில் பயணிப்பதைக் கண்டு அந்தக் காரை நிறுத்தியுள்ளனர். கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள Greater Sudbury நகரில், கடந்த வார இறுதியில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை 2.00 மணியளவில், முகப்பு விளக்குகளை அணைத்த நிலையில் பயணித்த கார் ஒன்றைக் கண்டு, அந்தக் காரை நிறுத்தியுள்ளார்கள்.


வெளிநாடொன்றில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய சுற்றுலாப் பயணிகள் விமானம்!
[Monday 2024-07-01 06:00]

பிரான்ஸில் சுற்றுலா பயணிகள் சென்ற சிறிய விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் ஞாயிற்றுக்கிழமை மதியம், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.


பிரான்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!
[Monday 2024-07-01 06:00]

வடகிழக்கு பிரான்சில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடகிழக்கு பிரான்சில் ஞாயிறு அதிகாலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். தியோன்வில் (Thionville) அருகே உள்ள ஈடன் அரண்மனை அரங்கம் வெளியே நடந்த இந்த தாக்குதல், குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று பொலிஸார் கருதுகின்றனர்.


13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற அமெரிக்க பொலிஸார்!
[Monday 2024-07-01 06:00]

அமெரிக்காவின் நியூயார்க்கில் மாகாணத்தின் யூட்டிகா நகரில் 13 வயது சிறுவன் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் அடையாளங்களுடன் ஒத்திருந்த இரண்டு 13 வயது சிறுவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.


வித்தியாசமான வராற்றுச் சாதனை படைத்த கனேடிய வேட்பாளர்!
[Sunday 2024-06-30 18:00]

தேர்தலில் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் ஒருவர் வித்தியாசமான வராற்றுச் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு பூச்சிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வரலாறு படைத்துள்ளார். பீலிக்ஸ் அன்டனி ஹமோல் என்ற நபரே இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வாக்கு எதனையும் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளார்.


நைஜீரிய நாட்டில் பெண் தற்கொலைப்படை நடத்திய தாக்குதல்: 18 பேர் பலி!
[Sunday 2024-06-30 18:00]

நைஜீரிய நாட்டில் திருமண நிகழ்ச்சி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, மருத்துவமனையில் பெண் தற்கொலைப்படையாளர்கள் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.


நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரிஷி சுனக்!
[Sunday 2024-06-30 18:00]

லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் மீள முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்னும் 3 நாட்களில் பிரித்தானியாவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு அவர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.


எலான் மஸ்க்கிடம் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஒப்படைக்க முடிவு!
[Sunday 2024-06-30 18:00]

பசுபிக் பெருங்கடலில் சர்வதேச விண்வெளி நிலையத்தை விழவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்துசர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கின. சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் தொடங்கியது.


கனடாவில் துப்பாக்கி சூடு தாக்குதல்: 19 வயது இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!
[Sunday 2024-06-30 07:00]

கனடாவின் ஒட்டாவாவில் 19 வயது இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ஒட்டாவாவில் வெள்ளிக்கிழமை இளம் வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரித்தானியாவில் எக்ஸ் எல் புல்லி இன நாயை சுட்டுக் கொன்ற பொலிஸார்!
[Sunday 2024-06-30 07:00]

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பொதுமக்களை தாக்கிய XL புல்லி இன நாயை காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டரில் XL புல்லி இன நாய் ஒன்று பொதுமக்களை தாக்கியதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து எக்லெஸ் என்ற இடத்தில் "கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாக இருக்கும்" நாய் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.


பிரான்ஸ் தேர்தல் அறிவிப்பால் புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள கவலையும் பதற்றமும்!
[Sunday 2024-06-30 07:00]

பிரான்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விடயம், சில பிரிவினருக்கு பெரும் கலக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம், வலது சாரியினர். பிரான்சில் இன்று வலதுசாரியினருக்கு இருக்கும் இதே ஆதரவு, நமது பெற்றோர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்தபோது இருந்திருந்தால், நாமெல்லாம் பிரான்ஸ் குடிமக்களாக ஆகியிருக்கவே முடியாது என்கிறார் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை மற்றும் நகர மேம்பாட்டுச் செயலர் பொறுப்பு வகிக்கும் சப்ரினா (Sabrina Agresti-Roubache).


அமெரிக்க அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா!
[Saturday 2024-06-29 16:00]

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.


புதின் வட கொரிய அதிபருக்கு பரிசளித்த காரால் வெடித்த சர்ச்சை!
[Saturday 2024-06-29 16:00]

24 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் 19 ஆம் திகதி இரண்டாவது முறையாக ரஷிய அதிபர் புதின் வட கொரியாவுக்கு பயணம் செய்துள்ளார். இதன்போது ரஷிய தயாரிப்பான அவுரஸ் லிமவுசைன் [Aurus என்ற சொகுசு காரை பரிசளித்தார் புதின்.


காசாவில் இருந்து 6,000 மக்கள் இடம்பெயர்வு!
[Saturday 2024-06-29 16:00]

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில் , இஸ்ரேலின் தரைவழித்தாக்குதலினை தொடர்ந்து காசாவின் ஷுஜேயா (Shujayea) பகுதியில் 6,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


கனேடியர் விற்ற ரசாயனத்தால் உயிரிழந்த பிள்ளைகள்: விரைவில் துவங்க இருக்கும் வழக்கு விசாரணை!
[Saturday 2024-06-29 16:00]

கனேடியர்கள், பிரித்தானியர்கள் உட்பட பல பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி, அதை உட்கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.


கடற்கரையில் இறந்து கிடந்த பிரித்தானிய மாலுமி: கிரேக்க தீவில் சோகம்!
[Saturday 2024-06-29 06:00]

கிரேக்க தீவான ஸ்பெட்ஸஸில்(Spetses) பிரித்தானிய மாலுமி உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிரேக்க தீவான ஸ்பெட்ஸஸில்(Spetses) அருகில் நாற்பது வயதுடைய பிரித்தானிய மாலுமி வெள்ளிக்கிழமை இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. உள்ளூர் படகுப் போட்டியில் பங்கேற்றதாகக் கூறப்படும் அந்த மனிதர், கிரேக்க கடலோரக் காவல் படையினர் தகவலின்படி, தலையின் இடது பக்கத்தில் காயங்களுடன் ஒரு விரிகுடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


உலகில் முதல் முறையாக கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிப்பு: எந்த நாடு தெரியுமா?
[Saturday 2024-06-29 06:00]

டென்மார்க்கில் பசு, பன்றி போன்ற கால்நடைகள் கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, டென்மார்க் அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், பசு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது உலகிலேயே முதல் முறையாக அமல்படுத்தப்படும் திட்டமாகும்.


இத்தாலியில் இந்திய தொழிலாளர் உயிரிழப்பு!
[Saturday 2024-06-29 06:00]

இத்தாலியில் இயந்திர விபத்தில் கை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த இந்தியரின் முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் நிகழ்ந்த ஒரு மனிதத்தன்மை இல்லாத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துள்ளது. 31 வயதான இந்திய குடியுரிமை பெற்ற சத்னம் சிங்( Satnam Singh) என்பவர் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா