Untitled Document
July 4, 2024 [GMT]


எலான் மஸ்க்கிடம் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஒப்படைக்க முடிவு!
[Sunday 2024-06-30 18:00]

பசுபிக் பெருங்கடலில் சர்வதேச விண்வெளி நிலையத்தை விழவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்துசர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கின. சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் தொடங்கியது.


பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள 8 தமிழர்கள்!
[Thursday 2024-07-04 18:00]

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் இன்றையதினம் (04-07-2024) விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 8 தமிழர்கள் களம் காண்கின்றனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.


பதவி விலகுவோம்: ட்ரூடோ தலைவராக நீடிப்பதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு!
[Thursday 2024-07-04 18:00]

கனடாவில் கடந்த வாரம் நடைபெற்ற இடைத்தேர்தலில் ட்ரூடோ கட்சி முக்கியமான இருக்கை ஒன்றை இழந்தது. ஆகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைமையிலிருந்து விலகவேண்டும் என கட்சிக்குள்ளேயே குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St. Paul's தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது.


பிரித்தானிய தேர்தலில் புலம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்க முடியும்!
[Thursday 2024-07-04 18:00]

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று (04) ஆரம்பமாகிற நிலையில் புலம்பெயர்ந்த வாக்காளர்களும் அங்கு வாக்களிக்க முடியும் என்பது விசேட அம்சமாகும். அதன்படி, நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற பிரிட்டிஷ் பேரரசின் முன்னாள் பிரதேசங்களான காமன்வெல்த் நாடுகளில் இருந்து அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் பிரிட்டிஷ் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.


பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்!
[Thursday 2024-07-04 18:00]

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.


கனேடிய வரலாற்றில் முதன்முறையாக ராணுவ தளபதியாக பெண் ஒருவர் நியமனம்!
[Thursday 2024-07-04 06:00]

கனடா முதன்முறையாக ஒரு பெண்ணை நாட்டின் உயர் ராணுவ அதிகாரியாக நியமித்துள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் ஜென்னி கரிக்னன் (Jennie Carignan), ஆயுதப்படைகளில் பாலியல் மற்றும் தவறான நடத்தைகளை ஒழிப்பதற்கான முயற்சிகளில் முன்னணியில் உள்ளார்.


பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி வைத்தியர் சடலமாக மீட்பு!
[Thursday 2024-07-04 06:00]

பிரித்தானியாவில் காணாமல் போன இந்திய வம்சாவளி வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் Ipswich-சில் குடும்பத்துடன் வசித்து வந்த மலையாளியான வைத்தியர் ராமசாமி ஜெயராம் (56) இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 30-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.45 மணிக்கு ராமசாமி வீட்டில் இருந்து வெளியே சென்று பின்னர் காணாமல் போனார்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் லொட்டரியில் ரூ.22 கோடி வென்ற இந்தியர்!
[Thursday 2024-07-04 06:00]

அபுதாபி Big Ticket லொட்டரியில் இந்தியர் ஒருவர் 22 கோடி ரூபாய்க்கு மேல் (10 மில்லியன் திர்ஹாம்) வென்றுள்ளார். துபாயில் வசிக்கும் இந்தியரான ரைசூர் ரஹ்மான் (Raisur Rahman Anisur Rahman), ஜூன் 15 அன்று, Big Ticket-ன் 264-வது டிராவில் கலந்துகொண்டு, 078319 என்ற டிக்கெட்டை வாங்கியுள்ளார்.


அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் வருவதற்கு வாய்ப்பு!
[Wednesday 2024-07-03 18:00]

தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் , அமெரிக்க அதிபராக மாற்றுவதற்கன வாய்ப்புக்கள் உள்ளதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர்.


மியான்மரில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளி கைது!
[Wednesday 2024-07-03 18:00]

மியான்மரில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடை உரிமையாளரை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடை உரிமையாளரின் மூன்று செல்போன் கடைகளையும் அரசாங்கம் மூடக்கியுள்ளது.


எலான் மஸ்க் தவறை சுட்டிக்காட்டிய சீன சிறுமி!
[Wednesday 2024-07-03 18:00]

சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகிறது. இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார். அத்துடன் இதை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார்.


காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பாலஸ்தீனர்கள் பலி!
[Wednesday 2024-07-03 18:00]

மத்திய காசாவில் நேற்று இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல் நடத்தியதில் 12 பாலஸ்தீனர்கள் பலியானதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளன. காசாவில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹமாஸ் அமைப்பினருடன் அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகின்றனர். மத்திய காசாவில் நேற்று இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல் நடத்தின.


பிரித்தானிய மருத்துவமனை குண்டு தாக்குதல் சதி: நடுங்க வைக்கும் செவிலியரின் திட்டம்!
[Wednesday 2024-07-03 06:00]

பிரித்தானியாவில் மருத்துவமனை மீது பயிற்சி செவிலியர் ஒருவர் சுய-அழிப்பு குண்டு தாக்குதல் நடத்த சதி செய்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் பயிற்சி செவிலியர் ஒருவர் அவர் பணியாற்றிய அதே மருத்துவமனை மீது சுய-அழிப்பு குண்டு தாக்குதல் நடத்த சதி செய்த குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்.


ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகளை களமிறக்கும் புடின்?
[Wednesday 2024-07-03 06:00]

கிம் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனை தாக்குவதற்கு ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களை நிலைநிறுத்த விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரியப் போரில் அதன் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பியாங்யாங் தனது சொந்த நிலத்தடி போர்க் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது. கிம் இல்-சுங் தனது இராணுவத்தை உருவாக்க உத்தரவிட்டிருந்தார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் நீண்டு கொண்டிருக்கும் அந்த சுரங்கங்கள் 1970யில் கண்டுபிடிக்கப்பட்டது.


பிரித்தானிய செவிலியர் லூசி லெட்பி மீதான வழக்கு: குற்றத்தை உறுதிப்படுத்திய தீர்ப்பு!
[Wednesday 2024-07-03 06:00]

பிரித்தானிய மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை முயன்ற செவிலியர் லூசி லெட்பி குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரித்தானிய மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் லூசி லெட்பி மீதான மறு விசாரணையில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


"உன் தாயை பலாத்காரம் செய்வேன்" - போராட்டக்காரரிடம் கீழ்த்தரமாக பேசிய பொலிஸ் அதிகாரி!
[Tuesday 2024-07-02 18:00]

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அல் - குத்ஸில் குவிந்த சுமார் 1,30,000 போராட்டக்காரர்கள் நாட்டில் புதிதாக தேர்தல் நடத்த வலியுறுத்தியும், காசாவில் பிணைகக் கைதிகளாக மீதமுள்ள 100 இஸ்ரேலியர்களை விரைவில் மீட்க கோரியும் போராட்டம் நடத்தியுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க இஸ்ரேல் பொலிஸார் கடுமையான முறைகளை பிரயோகித்தது சர்ச்சையாகியுள்ளது.


கனடாவின் மாண்டரின் உணவகங்களில் குவிந்த மக்கள் கூட்டம்!
[Tuesday 2024-07-02 18:00]

ஜூலை 1 கனடா தினத்தை முன்னிட்டு மாண்டரின் உணவகங்கள்(mandarin) நேற்றையதினம் இலவச பஃபேக்களை (free buffet) வழங்கியுள்ள நிலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இலவச பஃபே மதியம் முதல் இரவு 8 மணி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது மாண்டரின் 100 க்கும் மேற்பட்ட கிளாசிக் உணவுகளைக் கொண்டுள்ளது.


உக்ரைன் அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சதிப்புரட்சி!
[Tuesday 2024-07-02 18:00]

உக்ரைன் அரசாங்கத்தை பதவி கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சி முறியடித்துள்ளதாக அந்த உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 30ம் திகதி உக்ரைன் தலைநகரில் கலவரமொன்றை ஏற்படுத்தி அதனை பயன்படுத்தி உக்ரைன் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கும் இரணுவத்தையும் அரசியல் தலைமைத்துவத்தையும் அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கும் சதிபுரட்சி முயற்சி குழுவினர் திட்டமிட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.


லண்டனில் கைதியுடன் பெண் அதிகாரி பாலியல் உறவு: காணொளி வெளியானதால் இராஜினாமா!
[Tuesday 2024-07-02 18:00]

லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறைசாலையில் பெண் அதிகாரி ஒருவர் கைதியுடன் பாலியல் உறவில் இருந்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு லண்டன் வாண்ட்ஸ்வொர்த் மாவட்டத்தில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.


சுற்றுலா தலத்தில் 2 மகள்களை கைவிட்டுவிட்டு ஓடிய கனேடிய தாய்!
[Tuesday 2024-07-02 06:00]

சுற்றுலாத் தலமான கன்குனில் (Cancun) இரு கனடா சிறுமிகளை கைவிட்டுச் சென்றதாக கனடா பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கனேடிய பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கான செலவுக்கு பணம் இல்லை என்று கூறி சுற்றுலாத் தளமான கன்குனில் (Cancun) கைவிட்டு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 3 வயதிற்குட்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் சுற்றுலாத் தலமான ஒரு தெரு மூலையில் தனியாக இருப்பதை கண்டுபிடித்தனர்.


கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய வட கொரியா!
[Tuesday 2024-07-02 06:00]

வட கொரியாவின் திடீர் ஏவுகணை தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடனான உறவுகளை சீர்குலைக்கும் நோக்கில் வட கொரியா திங்கட்கிழமை இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது. முதல் ஏவுகணை, ஒரு குறுகிய தூர ஏவுகணை, அதிகாலை வேளையில் ஏவப்பட்டது.


ஸ்பெயினில் கல்லறையை தோண்டியபோது கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான ஒயின்!
[Tuesday 2024-07-02 06:00]

உலகின் மிகப் பழமையான ஒயின் ஸ்பெயினின் கார்மோனாவில் உள்ள ரோமானிய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒயின் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது. 2019-இல் கல்லறை தோண்டியபோது, ​​நன்கு பாதுகாக்கப்பட்ட அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


இளம்பெண்ணை கொன்று சடலத்தை தூக்கிச்செல்லும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்!
[Monday 2024-07-01 18:00]

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவர், தன் சகநாட்டவரான இளம்பெண் ஒருவரைக் கொன்று பொலிஸ் வாகனம் ஒன்றின் அருகிலேயே தூக்கிச் செல்லும் அதிரவைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ஈக்வடார் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவரான Jhon Moises Chacaguasay-Ilbis, (21) என்னும் இளைஞர், தன்னைப்போலவே புலம்பெயர்ந்த, தனக்கு நன்கு அறிமுகமான Joselyn Jhoana Toaquiza (21) என்னும் இளம்பெண்ணை, அவரது பிறந்தநாள் அன்றே கொலை செய்துள்ளார்.


பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலால் வெடித்த வன்முறை!
[Monday 2024-07-01 18:00]

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


ஸ்பெயின் தீவுக்கு சென்று இதுவரை மாயமான பிரித்தானியர்கள்!
[Monday 2024-07-01 18:00]

ஸ்பெயின் நாட்டின் Tenerife தீவுக்கு சென்று, இதுவரை எத்தனை பேர்கள் மாயமாகியுள்ளனர் என்ற கேள்வி பிரித்தானியாவில் பரவலாக எழுந்துள்ளது. பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த 19 வயது Jay Slater கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாயமான நிலையில், இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அங்குள்ள பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.


கனடாவில் வாகன சோதனையின்போது சிக்கிய போதைப்பொருள்!
[Monday 2024-07-01 18:00]

கனேடிய நகரமொன்றில், பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்று முகப்பு விளக்குகள் எரியாத நிலையில் பயணிப்பதைக் கண்டு அந்தக் காரை நிறுத்தியுள்ளனர். கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள Greater Sudbury நகரில், கடந்த வார இறுதியில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை 2.00 மணியளவில், முகப்பு விளக்குகளை அணைத்த நிலையில் பயணித்த கார் ஒன்றைக் கண்டு, அந்தக் காரை நிறுத்தியுள்ளார்கள்.


வெளிநாடொன்றில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய சுற்றுலாப் பயணிகள் விமானம்!
[Monday 2024-07-01 06:00]

பிரான்ஸில் சுற்றுலா பயணிகள் சென்ற சிறிய விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் ஞாயிற்றுக்கிழமை மதியம், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.


பிரான்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!
[Monday 2024-07-01 06:00]

வடகிழக்கு பிரான்சில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடகிழக்கு பிரான்சில் ஞாயிறு அதிகாலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். தியோன்வில் (Thionville) அருகே உள்ள ஈடன் அரண்மனை அரங்கம் வெளியே நடந்த இந்த தாக்குதல், குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று பொலிஸார் கருதுகின்றனர்.


13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற அமெரிக்க பொலிஸார்!
[Monday 2024-07-01 06:00]

அமெரிக்காவின் நியூயார்க்கில் மாகாணத்தின் யூட்டிகா நகரில் 13 வயது சிறுவன் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் அடையாளங்களுடன் ஒத்திருந்த இரண்டு 13 வயது சிறுவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா