Untitled Document
July 19, 2024 [GMT]


பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றால்...? - ஜேர்மனிக்கு உருவாகியுள்ள அச்சம்!
[Friday 2024-07-05 18:00]

பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த விடயம் ஜேர்மனிக்கு அச்சத்தை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் முதல் சுற்றுத் தேர்தலில் வலதுசாரிக் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், அக்கட்சி வெற்றி பெறுமானால், அந்த வெற்றி பிரான்சுடனான உறவை பாதிக்கலாம் என்ற அச்சம் ஜேர்மனிக்கு அச்சம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஓமன் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலில் மாயமான இலங்கைத் தமிழர்!
[Friday 2024-07-19 18:00]

ஓமன் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் கப்டன் இலங்கையை சேர்ந்த தமிழர் உட்பட 6 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் தலைமை மாலுமியும் இலங்கைத் தமிழருமான கே வைத்தியகுமாரின் மகள் துளசி வைத்தியகுமார், காணாமல் போனவர்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.


ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானால்... எதிர்கொள்ள தயாராகும் ஜேர்மனி!
[Friday 2024-07-19 18:00]

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே நல்ல உறவு நிலவுகிறது. ஆனால், அடுத்து ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகலாம் என்ற கருத்து நிலவுவதால், ட்ரம்பை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிவருகிறது. விடயம் என்னவென்றால், ட்ரம்புக்கும் ஜேர்மனிக்கும் இடையில் சரியான உறவு இல்லை. ஆகவே, அவர் அமெரிக்க ஜனாதிபதியானால், இரு நாடுகளுக்குமிடையிலான உறவு எப்படி இருக்குமோ என ஜேர்மன் அரசியல்வாதிகள் கவலைப்படுகிறார்கள்.


உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம்: உருவாகியுள்ள உலகப்போர் அச்சம்!
[Friday 2024-07-19 18:00]

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து அச்சத்தை உருவாக்கும் வகையில் இணையத்தில் வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


கனடாவின் முக்கிய அமைச்சர் ராஜினாமா!
[Friday 2024-07-19 18:00]

கனடிய லிபரல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சீமோஸ் ஓரீகன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ரீகன் தொழில் அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாம் அடுத்த பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். சமூக ஊடக பதிவு ஒன்றின் மூலம் தனது ராஜினாமா குறித்து அவர் அறிவித்துள்ளார்.


போர்க்களமான பிரித்தானிய நகரம்: கலவரக்காரர்களால் தப்பியோடிய பொலிசார்!
[Friday 2024-07-19 06:00]

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரம் போர்க்களமாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொலிஸ் வாகனம் ஒன்றை கவிழ்த்தக் கலவரக்க்காரர்களால் பொலிசார் சம்பவயிடத்தில் இருந்து வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Harehills பகுதி மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைப்பு: போர்க்களமான ஆசிய நாடு - 30 பேர் பலி!
[Friday 2024-07-19 06:00]

வங்காளதேசத்தில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக குறிப்பிட்டு போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள் தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர். போராட்டங்களை கைவிட்டு அமைதி திரும்ப வேண்டும் என்று நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கோரிக்கை விடுத்த அடுத்த நாளில், அரசு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.


"போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும்" - பராக் ஒபாமா வெளிப்படை!
[Friday 2024-07-19 06:00]

2024 தேர்தலை எதிர்கொள்ள ஜோ பைடனின் திறமை குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள ஒபாமா, அவரது திறமை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.


நெருக்கடியின் உச்சம்: ஜோ பைடனுக்கு கோவிட் பாதிப்பு!
[Thursday 2024-07-18 06:00]

ஜனாதிபதிப் போட்டியில் இருந்து விலக, சொந்தக் கட்சியினரே நெருக்கடி அளித்துவரும் நிலையில், ஜோ பைடனுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாகவும் வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பத்திரிகை செயலாளர் தெரிவிக்கையில்,


தாய்லாந்து விடுதியில் சயனைடு மரணம்: இதுவரை வெளியான பகீர் பின்னணி!
[Thursday 2024-07-18 06:00]

தாய்லாந்தில் பிரபலமான ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் சயனைடு விஷத்தால் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள Grand Hyatt Erawan என்ற ஆடம்பர ஹொட்டலிலேயே குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. ஹொட்டலில் சம்பவம் நடந்த அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது.


பாரீஸ் நகரில் அதிர்ச்சி சம்பவம்: பொலிசார் குவிப்பு!
[Thursday 2024-07-18 06:00]

பாரீஸ் நகரில் உணவம் ஒன்றில் கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தை அடுத்து, அந்த வாகனத்தின் சாரதி தப்பி ஓடியதை அடுத்து, பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை துவங்கியுள்ளனர். பாரீஸ் நகரில் அமைந்துள்ள Le Ramus உணவகத்தின் மீதே தமது வாகனத்தை அந்த சாரதி செலுத்தியுள்ளார்.


கனடாவில் பெண்களின் உடல்களை கூறுபோட்டு இறைச்சியுடன் கலந்து விற்ற பயங்கர நபர்!
[Wednesday 2024-07-17 18:00]

கனடாவில் கால்நடைப்பண்ணை நடத்திவந்த ஒருவர், பல பெண்களைக் கொன்று, தடயங்களை மறைத்ததுடன், சில பெண்களின் உடல்களை அரைத்து, இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்துவந்துள்ளார். விதி வலியது என்பது போல, இந்த நபர் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அகால முடிவை சந்திக்க நேர்ந்தது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Port Coquitlam என்னுமிடத்தில் கால்நடைப் பண்ணை ஒன்றை வைத்திருந்த ராபர்ட் (Robert Pickton, 74) என்பவர் பன்றி இறைச்சியை அரைத்து விற்பனை செய்துவந்துள்ளார்.


மன்னருடைய நாடாளுமன்ற உரையின்போது பக்கிங்காம் அரண்மனையில் பிணைக்கைதியாக வைக்கப்படும் அரசியல்வாதி!
[Wednesday 2024-07-17 18:00]

பிரித்தானியாவில் தேர்தல் நடைபெற்று புதிய அரசு பதவியேற்றபின், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பக்கிங்காம் அரண்மனையில் பிணைக்கைதியாக வைக்கப்படுவதைக் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. Vice-Chamberlain of the Household என்னும் பொறுப்பிலிருக்கும் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Samantha Dixon என்பவர்தான் பக்கிங்காம் அரண்மனையில் பிணைக்கைதியாக வைக்கப்படுபவர் ஆவார்.


டிரம்பை கொல்ல முயன்றதா ஈரான்? - அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!
[Wednesday 2024-07-17 18:00]

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டள்ளமை தெரியவந்ததாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலனாய்வு தகவல் மூலம் டிரம்ப்பை கொலை செய்வதற்கான ஈரானின் முயற்சி குறித்த விபரங்கள் தெரியவந்ததாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டிரம்ப் இன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


கனடாவின் இந்தப் பகுதியில் விற்று காலியாகும் மதுபானங்கள்!
[Wednesday 2024-07-17 18:00]

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் காணப்படும் மதுபான கடைகளில் வழமைக்கு மாறான கூடுதல் விற்பனை பதிவாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாண எல்லை பகுதியில் அமைந்துள்ள கடைகளில் இவ்வாறு அதிகளவு மதுபான வகைகள் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஸ்வீடனில் தீக்கிரையான காருக்குள் சடலமாக இரு பிரித்தானியர்கள்!
[Wednesday 2024-07-17 06:00]

ஸ்வீடனின் மால்மோ நகரில் தீக்கிரையான காருக்குள் இரு பிரித்தானியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இரட்டைக் கொலை வழக்காகவே பொலிசார் விசாரணை நடத்த உள்ளனர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், ஒரு மண் சாலையில் தீக்கிரையான நிலையில் காணப்பட்ட கார் ஒன்றில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.


கமலா ஹாரிஸை அடுத்து அமெரிக்காவில் ஊடக கவனம் பெறும் உஷா சிலுக்குரி!
[Wednesday 2024-07-17 06:00]

துணை ஜனாதிபதி பொறுப்புக்கு டொனால்டு ட்ரம்பால் தெரிவு செய்யப்பட்ட செனட்டர் ஜே.டி.வான்ஸ் குறித்து ஊடகங்கள் விவாதிக்க, அவருடன் ஊடக கவனம் பெற்றுள்ளார் இன்னொருவர். அவர் செனட்டர் ஜே.டி.வான்ஸின் காதல் மனைவி உஷா சிலுக்குரி என்பவரே. முன்பு கடும் ட்ரம்ப் விமர்சகரான செனட்டர் ஜே.டி.வான்ஸ் தற்போது டொனால்டு ட்ரம்பால் துணை ஜனாதிபதி பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


ட்ரம்பின் துணை ஜனாதிபதி தெரிவு: ஐரோப்பாவுக்கும் உக்ரைனுக்கும் காத்திருக்கும் பேரிடி!
[Wednesday 2024-07-17 06:00]

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் தமது துணை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ள நபர் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவதில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களில் முதன்மையானவர் என்றே கூறப்படுகிறது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் கண்டத்தை பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்காவை நம்பியிருப்பதை கைவிட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் என்பதும் ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் எனும் பெருமையை பெற்ற யாழ் தர்ஷன் செல்வராஜா!
[Tuesday 2024-07-16 18:00]

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற பெருமையை பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழரான வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது.


கனடாவில் மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நிர்வாணமாக புகுந்த நபர்!
[Tuesday 2024-07-16 18:00]

கனடாவில் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியொன்றுக்குள் நபர் ஒருவர் ஆயுதங்களுடன் நிர்வானமாக புகுந்துள்ளார். மொன்றியாலின் சய்னா டவுன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு சென்ற போது நபர் ஒருவர் கத்தியொன்றுடன் நிர்வாணமாக நிற்பதனைப் பார்த்து அதிர்ச்சியுற்றதாக மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஒலிம்பிக்கில் வீராங்கனைகளுக்கு ஹிஜாப் தடை!
[Tuesday 2024-07-16 18:00]

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது சில முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபை பிரான்ஸ் நாட்டு வீரர்கள் அணிவதற்கு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரான்ஸ் விளையாட்டு அமைச்சர் Amelie Oudea-Castera அத்தகைய முடிவை அறிவித்தார்.


42 பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி: நடுங்க வைத்த சம்பவம்!
[Tuesday 2024-07-16 18:00]

கென்யாவில் தனது மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாக கொன்று புதைத்த வழக்கில் ஜோமைசி கலிசியா (33) கைது செய்யப்பட்டுள்ளார். கைவிடப்பட்ட குவாரி குப்பை கிடங்கில் அடுத்தடுத்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஒபாமா கருத்து!
[Tuesday 2024-07-16 06:00]

அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என, டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது சரிதான் என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (Donald Trump) மீது கொலை முயற்சியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.


கால்வாயை கடந்து பிரித்தானியா வந்த 300 புலம்பெயர்ந்தோர்!
[Tuesday 2024-07-16 06:00]

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை எடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளில் வந்த 127 பேர், 21 மைல் பயணத்தை கடந்தனர். அதேபோல் மறுநாள் 41 பேர் ஒரு படகில் வந்தனர்.


குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு!
[Tuesday 2024-07-16 06:00]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மில்வாக்கியில் நடத்த மாநாட்டில் டொனால்டு டிரம்ப் துப்பாக்கிசூட்டிற்கு ஆளானது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


பிரான்சில் அவசர அவசரமாக உருவான புதிய கூட்டணி!
[Monday 2024-07-15 19:00]

பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக இடதுசாரிக் கூட்டணி ஒன்றை அமைத்தன. ஆனால், இதுவரை யாரும் ஆட்சி அமைக்கவில்லை! பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக உருவாக்கிய கூட்டணி The New Popular Front (NPF).


இங்கிலாந்தில் சூட்கேஸ் ஒன்றில் கிடந்த மனித உடல் பாகங்கள்!
[Monday 2024-07-15 19:00]

இங்கிலாந்தில் பாலம் ஒன்றில் கிடந்த சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் பல வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள பாலம் ஒன்றில் கிடந்த இரண்டு சூட்கேஸ்களில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன், லண்டனிலுள்ள குடியிருப்பு ஒன்றில் சில உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.


அமெரிக்காவில் மனிதர்களுக்கு பறைவைக் காய்ச்சல்!
[Monday 2024-07-15 19:00]

அமெரிக்காவின் கொலோராடோவில் (Colorado) கோழிப் பண்ணையின் 4 ஊழியர்களுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 5ஆவது நபர் ஒருவருக்கு அது தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


கனடாவில் போலி முதலீட்டுத் திட்டங்கள்: 148 மில்லியன் டொலர் இழப்பு!
[Monday 2024-07-15 19:00]

கனடாவில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மோசடியான முதலீட்டு திட்டங்களின் மூலம் சுமார் 148 மில்லியன் டாலர்கள் வரையில் மக்கள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பெரும்பாலான முதலீட்டு திட்டங்கள் கிரிப்டோ கரன்சியை அடிப்படையாகக் கொண்டவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா