Untitled Document
September 4, 2024 [GMT]
[Tuesday 2016-02-02 07:00]


சீனாவில் இணையம் மூலம் நிதி மோசடி: - போலீசார் தனிப்படை அமைத்து 21 பேர் கைது
[Monday 2016-02-01 19:00]

சீனாவில் இணையம் மூலமாக செயல்படும் நிதிநிறுவனங்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து சீன போலீசார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இசூபாவ் என்ற நிதிநிறுவனம் இணையம் வழியாக சுமார் 9 லட்சம் முதலீட்டாளர்களிடம் பல்வேறு திட்டங்களுக்கென முதலீட்டினை பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அந்த நிறுவனம் வெளியிட்ட திட்டங்களில் 95 சதவீதம் போலியானவை எனவும் தெரிகிறது. இதுபோன்ற மோசடிகள் மூலம் அந்த நிறுவனம் இதுவரை 760 கோடி டாலர் (சுமார் ரூ.45 ஆயிரத்து 600 கோடி) வரை கையாடல் செய்து உள்ளது. இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் உள்பட 21 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நிறுவனத்துக்கான இணைய முகவரி முடக்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களுக்கு சீல் வைத்ததோடு அவற்றின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


மியான்மரில் ஆங்சான் சூகி தலைமையிலான கூட்டணி பதவி ஏற்றுக் கொண்டது.
[Monday 2016-02-01 19:00]

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் ஜனாதிபதியாக தெயின் சீன் பதவி வகித்து வருகிறார். இங்கு கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக உரிமை கோரி போராடி வந்தவரும், நோபல் பரிசு பெற்ற பெண்மணியுமான ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மியான்மரில் 1962-ம் ஆண்டுக்கு பின்பு ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும். மியான்மர் நாட்டு சட்டத்தின்படி வெளிநாட்டவரை திருமணம் செய்தவர் ஜனாதிபதி (ஆட்சித் தலைவர்) பொறுப்பை ஏற்க முடியாது. ஆங்சான் சூகி வெளிநாட்டவரை திருமணம் செய்தவர் என்பதால் அவரால் ஜனாதிபதி ஆக முடியவில்லை.


தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பியுள்ளமை ஆபத்தானது: - சீனா எச்சரிக்கை
[Sunday 2016-01-31 22:00]

சீனாவை ஒட்டி உள்ள தென் சீன கடல் பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகள் ஜப்பானிடம் இருக்கின்றன. அவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் இந்த பகுதியில் ஒரு செயற்கை தீவையும் சீனா உருவாக்கி வருகிறது.அதேபோல சில தீவுகளுக்கு தைவான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் அந்த நாடுகளுக்கு மத்தியில் பதட்டம் நிலவி வருகிறது. இதில் தைவான், ஜப்பான் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஏவுகணை அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்காவின் கர்டிஸ் வில்பர் போர் கப்பல், சர்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் சென்றது இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.


ஜெனிவாவில் ஐநா தூதுவரை சிரியாவின் எதிர்க்கட்சிக்குழு சந்தித்தது!
[Sunday 2016-01-31 22:00]

ஜெனிவாவில் அமைதி பேச்சுக்களில் கலந்துகொள்ளும் சிரியாவின் முக்கிய எதிர்க்கட்சி குழு ஒன்று முதல் தடவையாக ஐநாவின் சிறப்புத்தூதுவர் ஸ்டாஃபன் த மிஸ்ட்ருவாவை சந்தித்துள்ளது.சிரியாவின் மனித நேய நெருக்கடிக்கு தீர்வு தரக்கூடிய முன்னேற்றத்துக்கான முக்கிய உறுதிப்பாடுகளை எட்டாதவரை தாம் அரசியல் சமரச பேச்சுக்களை ஆரம்பிக்க மாட்டோம் என்று அந்தக் குழு திரும்பத்திரும்ப வலியுறுத்தியுள்ளது.அதிபர் பஷர் அல் அஸ்ஸத்தின் பிரதிநிதிகளை ஸ்டாஃபன் த மிஸ்ட்ருவா அவர்கள் சந்தித்ததுடன், ஐநா அனுசரணையுடனான பேச்சுக்கள் வெள்ளியன்று ஆரம்பித்தன.


சிரியா இரட்டைக்குண்டு குண்டுத்தாக்குதலில் 45 பேர் பலி!
[Sunday 2016-01-31 22:00]

தெற்கு டமாஸ்கஸ் பகுதியில் சைதா ஷெய்னப் எனப்படும் ஷியா வழிபாட்டிடத்துக்கு அருகே இரட்டைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 45 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.அங்கிருந்த கட்டிடங்களும் கார்களும் எரிந்து கருகிப்போனதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.எரிந்துபோன ஒரு கட்டிடத்தில் ஒரு இராணுவ தலைமை அலுவலகமும், குடும்பங்கள் தங்கும் இருப்பிடங்களும் இருந்ததாகவும் அவர் கூறினார். ஷியா முஸ்லிம்களால் பெரும் புனித இடமாக கருதப்படும் இந்த வழிபாட்டிடத்துக்கு பெருமளவு யாத்திரிகர்கள் வருவது வழக்கம். முஹமது நபியின் ஒரு பூட்டியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த வழிபாட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என்பது, லெபனானின் ஷியா அமைப்பான ஹெஸ்புல்லா மற்றும் இரான் ஆகியன அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவு வழங்குவதற்கான ஒரு காரணமாக கூறப்படுகின்றது.


ரஷிய விமானம் தங்கள் வான் எல்லையில் அத்துமீறி பறந்ததாக துருக்கி குற்றச்சாட்டு!
[Sunday 2016-01-31 20:00]

ரஷிய நாட்டின் போர் விமானம் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் தங்களது வான் எல்லையில் அத்து மீறி பறந்ததாக கூறி, அதை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இந்த சம்பவத்தால் ரஷியா-துருக்கி இடையே மோதல் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், ரஷியாவின் எஸ்.யு.-34 ரக விமானம் ஒன்று, நேற்று தங்களது வான் எல்லையில் அத்துமீறி பறந்ததாக துருக்கி குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் இதை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனா-ஷெங்கெவ் கூறும்போது, எந்தவொரு ரஷிய விமானமும், துருக்கி எல்லையில் நுழைந்து பறக்கவில்லை. துருக்கியின் குற்றச்சாட்டு விஷமப்பிரசாரம் மட்டுமே. துருக்கியின் ரேடார்கள், எந்தவொரு விமானத்தையோ, அது எந்த நாட்டை அல்லது வகையை சேர்ந்தது என்பதையோ கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லாதவை. எந்தவொரு எச்சரிக்கையும் ஆங்கிலத்திலோ, ரஷிய மொழியிலோ விடுக்கப்படவில்லை என்று கூறினார்.


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ்!
[Sunday 2016-01-31 08:00]

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய


செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த நாசாவின் ரோபோ!
[Sunday 2016-01-31 08:00]

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைத்துள்ளது.செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த ரோபோ வாகனம் அங்கு ஒரு மலையின் பின்னனியில் செல்பி எடுத்து நாசா ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.கடந்த 5 மாதங்களாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வரும் இந்த ரோபோ வாகனம், அங்குள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து நாசா ஆய்வுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


கணிப்பொறிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்: - ஒபாமா வலியுறுத்தல்
[Sunday 2016-01-31 08:00]

அமெரிக்காவில் பொருளாதார சூழ்நிலை மாறிவரும் நிலையில் அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கணிணி அறிவியலை ஒரு அடிப்படை திறனாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகள், சிறுபான்மையின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற தகுதியாக இருக்கும் வகையில் கணிணி அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும். அதற்காக 4 பில்லியன் டாலர் நிதி உதவியை பாராளுமன்றம் வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். மேலும், புதிய பொருளாதாரத்தில் கணிணி அறிவியல் என்பது ஒரு துணை திறனாக கருதப்பட்டுவிடக் கூடாது. அது அடிப்படை திறனாகவே இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களை வெளியிட்ட ஐநா!
[Saturday 2016-01-30 18:00]

சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் ஈடுப்பட்டுள்ளவர்களின் விவரங்களை ஐநா வெளியிட்டுள்ளது சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐ.நா அமைதி காக்கும் படையினர் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை ஐநா முதல் முறையாக வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் சிறார் பாலியல் துன்புறுத்தல் என தெரிவிக்கப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் ஐநா ஒப்புக்கொண்டுள்ளது.ஐநாவின் அமைதி காக்கும் படையினர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் அறுபத்து ஒன்பது சம்பவங்கள் கடந்த ஆண்டில் மட்டும் பதிவாகியுள்ளதாக ஐநாவின் மூத்த அதிகாரி அந்தோனி பன்பரி தெரிவித்துள்ளார்.2014ஆம் ஆண்டில் ஐம்பத்து ஓரு சம்பவங்கள் பதிவாயின.இந்த ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களில் இருபத்து இரண்டு சம்பவங்கள் மத்திய ஆப்ரிக்க குடியரசி இடம்பெற்றுள்ளதாகவும், அதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வங்கதேசம், காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜீரியா மற்றும் செனகலை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துருக்கி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து: - பத்து குழந்தைகள் உட்பட 25 பேர் பலி!
[Saturday 2016-01-30 18:00]

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகளில் செல்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக அவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சத்தை எட்டியுள்ளது.


சிரியாவில் பட்டினியால் 16 பேர் உயிரிழப்பு: - எம்.எஸ்.எஃப் தெரிவிப்பு
[Saturday 2016-01-30 18:00]

சிரியாவில் கடந்த மாதத்திலிருந்து இதுவரை மேலும் பதினாறு பேர் பட்டினியால் இறந்துள்ளதாக மருத்துவ தொண்டு நிறுவனமான எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.சிரியாவில் முற்றுகையிடப்பட்டுள்ள மதாயா நகருக்கு உதவித் தொடரணி நுழைய கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து இதுவரை மேலும் பதினாறு பேர் பட்டினியால் இறந்துள்ளதாக மருத்துவ தொண்டு நிறுவனமான எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது. அந்நகரில் போஷாக்கின்மையால் முன்னூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது முப்பது பேராவது உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் எம்.எஸ்.எஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜெனிவாவில் பேச்சுக்கள் நடக்கும் சமயத்தில் எம்.எஸ்.எஃபின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.வெள்ளியன்று தொடங்கப்பட்ட சமாதானப் பேச்சுக்களை புறக்கணித்த சிரியாவின் முக்கிய எதிரணி குழுக்கள், சனிக்கிழமை பிற்பகுதியில் ஜெனிவாவுக்கு வந்திறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கர்ப்பகாலத்தின் போது பெண்கள் பாரசிடமால் மாத்திரைகளை பாவித்தால் குழந்தையின் உடல் நலத்துக்கு கேடு:ஆய்வில் புதிய தகவல்
[Saturday 2016-01-30 15:00]

வலி நிவாரண மருந்தாக


அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷன்!
[Saturday 2016-01-30 15:00]

அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் நாடுதழுவிய அளவில் மக்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் அரசின் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் உடல்சார்ந்த அனைத்து நோய்களுக்கும் அமெரிக்காவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் உள்ளிட்ட அனைத்துவகை சிகிச்சைகளையும் மக்கள் இலவசமாக பெறமுடியும். சிகிச்சைக்கு பின்னர் அந்தந்த மருத்துவமனைகள் அதற்கான கட்டணத்தை நோயாளிகளின் காப்பீட்டு கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ளும்.இந்நிலையில், அமெரிக்க விமானப்படையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சார்லேன் லாடர்டேல்(55) என்பவர் பிறவியிலேயே ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் கொண்டவராக பிறந்தார். விமானப்படையில் ஒரு ஆணாகவே பணியாற்றிய இவர், பணிஓய்வுக்குப் பின்னர் முழுப்பெண்ணாக மாற விரும்பினார்.


கைது செய்யப்பட்டிருந்த இஸ்ரேலியக் கழுகினை விடுவித்த லெபனான்!
[Saturday 2016-01-30 09:00]

லெபனானில் கைது செய்யப்பட்டிருந்த கழுகு ஒன்று விடுதலை செய்யப்பட்டுள்ளது.அந்தக் கழுகின் உடல்பகுதியில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.இஸ்ரேலுக்காக உளவு பார்த்தது எனும் சந்தேகத்தின் பேரில் அந்தக் கழுகு லெபனானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.மிகப்பெரிய அந்தக் கழுகு இஸ்ரேலிய எல்லையைக் கடந்து தெற்கு லெபனானுக்குள் பறந்தது. பின்னர் அந்தக் கழுகு அங்கு இறங்கியபோது டெல் அவிவ் பல்கலைக்கழத்தின் அடையாள அட்டை அதன் கால்களில் கட்டப்பட்டிருந்தது தெரிந்தது.அதுமட்டுமன்றி அந்தக் கழுகு இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்கான கருவி ஒன்றும் அதனுடன் பொருத்தப்பட்டிருந்தது.இருநாட்டு எல்லைப் பகுதியில் நிலைகொண்டுள்ள ஐ நா அமைதிப் படை வீரர்கள் நடத்திய சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அந்தக் கழுகு விடுவிக்கப்பட்டது என இஸ்ரேலிய வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால் அந்தக் கழுகு வேவுபார்க்கும் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட வரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு, அது தரையிறங்கிய கிராமத்து மக்களே அதை விடுவித்துவிட்டனர் என லெபனானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


ஸீகா நுளம்பை தேடி அழிக்கும் பணியில் பிரேஸில் இராணுவத்தினர்!
[Saturday 2016-01-30 08:00]

ஸீக வைரஸால் ஏற்பட்டுள்ள உலக கவலை அதிகரித்து வருவதன் இன்னுமொரு சமிக்ஞையாக சர்வதேச ஒலிம்பிக் குழு, ரியோ ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க வரும் விளையாட்டு வீரர்களுக்கும் ஏனையவர்களுக்கும் வழிகாட்டு விதிகளை அறிவிக்கவுள்ளது.இந்த வைரஸ் புதிதாக ஜெர்மனிக்கும் வந்திருப்பதை அந்நாடும் உறுதி செய்துள்ளது.அதேவேளை, வீடுவீடாக ஸீகா வைரஸை பரப்பும் கொசு(நுளம்பு) வளரக்கூடிய நீர் நிலைகளை தேடி அழிக்கும் பணியில் பிரேஸில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.ஸீகா வைரஸ் பரவியுள்ள இருபதுக்கும் அதிகமான நாடுகளில் பிரேசில்தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.


மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கண்ணிவெடி தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் சாவு!
[Saturday 2016-01-30 07:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோ உள்ளிட்டவற்றில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மாலியில் வெளிநாட்டினர் தங்கக்கூடிய நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இது போன்ற தாக்குதல்களில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.இந்த நிலையில் நேற்று வடகிழக்கு பகுதியில் உள்ள காவோ நகரில் இருந்து கோஷி நகருக்கு மக்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனத்துக்கு காவலாக ராணுவ வாகனம் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் ராணுவ வாகனம் சிக்கி வெடித்து சிதறியது. இதில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். முன்னதாக திம்புக்டு என்ற நகருக்கு அருகே உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு அருகே நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ராணுவவீரர் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பாகிஸ்தானில் 230 கல்வி நிறுவனங்கள் மூடல்: - கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடு.
[Saturday 2016-01-30 07:00]

பாகிஸ்தானில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என கல்வி நிறுவனங்களை குறி வைத்து தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 144 குழந்தைகள் உள்ளிட்ட 150 பேரை கொன்று குவித்தது உலகையே அதிர வைத்தது.அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகளால் கல்வி நிறுவனங்கள் தாக்கப்படும் ஆபத்து உள்ளது. தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.


பிரிட்டனில் மிகக் குறைந்த பெண்களே தாய்ப்பால் கொடுக்கின்றனர்: - ஆய்வில் தகவல்
[Friday 2016-01-29 21:00]

பல உள்நாட்டுப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவிலேயே உலகளவில் அதிகமான தாய்மார் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுகின்றனர் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பிரிட்டனிலேயே மிகக் குறைந்த தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதாக ஆய்வு கூறுகிறது ருவாண்டாவில் அதிகபட்சமாக 85% பெண்கள் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுகின்றனர் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.அதேவேளை பிரிட்டனிலேயே மிகக் குறைந்த அளவில் தாய்பால் புகட்டும் பழக்கம் உள்ளதாவும் அந்த ஆய்வு கூறுகிறது.


சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் மீது தாக்குதல்: - மூவர் பலி
[Friday 2016-01-29 19:00]

சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்து மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள மெஹசின் நகரிலுள்ள இமாம் ரேசா பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.இந்தத் தாக்குதலின் போது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தற்கொலை இடுப்புப் பட்டியை இயக்க முயன்றபோது, வழிபாடு செய்யவந்திருந்த ஒருவரால் தடுக்கப்பட்டார் என சமப்வத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார்.


காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் சீன கப்பல்!
[Friday 2016-01-29 19:00]

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் இப்போது சீன கப்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.பன்னாட்டு படைகள் தொடர்ந்து காணாமல் போன விமானத்தை தேடுகின்றன.அந்தக் கப்பலில் அதிநவீன ஒலி உணர்வு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்தியப் பெருங்கடலின் கடற்படுகையின் கரடுமுரடான பகுதிகளில், ஆய்வாளர்கள் நெருங்கிச் சென்று நுணுக்கமாக ஆய்வு செய்ய உதவும்.கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த எம்எச்-370 விமானம் திடீரெனக் காணாமல் போனது.அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்கு பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது. எனினும் இதுவரை, அந்த விமானத்தின் சிதிலங்களில் ஒரேயொரு பகுதி மட்டும் பிரெஞ்சுத் தீவான ரீயூனியன் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.


சர்வதேச ஊடகவியலாளர்கள் இருவரை கைது செய்த புருண்டி அரசு!
[Friday 2016-01-29 19:00]

புருண்டியில் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் தொடர்பான செய்திகளை சேகரித்துவந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் செய்தியாளர் ஜீன் பிலிப் ரெமி, மற்றும் பிரிட்டனை சேர்ந்த நிழற்பட ஊடகவியலாளர் பில் மூர் ஆகியோர், ஆயுதக்குற்றக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக புருண்டி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் இருவருடன் சேர்த்து, கடந்த வியாழக்கிழமை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மூன்றாவது தடவையாகவும் தான் அதிபர் பதவி வகிக்கப்போவதாக, அதிபர் பீயர் குரன்ஸீஸா அறிவித்தது முதல், கடந்த ஆண்டு ஏப்ரலில் துவங்கி அங்கே கலவரம் இடம்பெற்றுவருகிறது.இதன் காரணமாக, 400 க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாகவும் 2,50,000 க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.


ஜப்பானில் வர்த்தக வங்கிகள் தம் இருப்பில் பணம் வைத்திருந்தால் கட்டணம் கட்டவேண்டும்!
[Friday 2016-01-29 19:00]

ஜப்பானில் வர்த்தக வங்கிகள் தம் இருப்பில் பணம் வைத்திருந்தால் அதற்கு -0.1 சதவீதம் கட்டணம் கட்டவேண்டும் ஜப்பானில் முதல் முறையாக எதிர் வட்டிவிகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால், வர்த்தக வங்கிகள் தங்கள் இருப்பில் பணம் வைத்திருந்தால் அதற்கு -0.1 சதவீதம் என்ற அளவில் ஜப்பானின் மத்திய வங்கி கட்டணம் வசூலிக்கும். இதனால், வங்கிகள் பணம் சேமிப்பதைக் கைவிட்டுவிட்டு, கடன் கொடுக்க ஆரம்பிக்கும் என மத்திய வங்கி கருதுகிறது. இதனால், வளர்ச்சியின்றி இருக்கும் பொருளாதாரத்திற்கு உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோ வலைய நாடுகளில் ஏற்கனவே எதிர் வட்டிவிகிதம் நடைமுறயில் இருக்கிறது. ஆனால், ஜப்பானில் இம்மாதிரி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பின்னடவைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டுவந்தது.இந்த வட்டிக் குறைப்பு எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்ற சந்தேகமும் நிபுணர்களிடம் இருக்கிறது.


ஆஸ்திரேலியாவில் கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி!
[Friday 2016-01-29 15:00]

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகிகள் தினத்தன்று கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி போலீசார் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிராவாத இயக்கத்தின் ஆதரவாளர் திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது.மெல்போர்ன் நகரில் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஐ.எஸ். தீவிராவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவனான செவ்டெட் பெசிம் என்ற 19 வயது வாலிபனிடம் நடத்திய விசாரணையில் ஒரு புதிய தாக்குதல் முறையை அரங்கேற்ற அவன் திட்டமிட்டிருந்ததை அறிந்த போலீசார் திடுக்கிட்டனர்.


பிரேஸிலில் ஸீகா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பை அனுமதிக்க கோரிக்கை!
[Friday 2016-01-29 06:00]

ஸீகா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பை அனுமதிக்குமாறு பிரேஸில் உச்சநீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது. பிரேஸில் நீதிபதிகள், ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் கருக்கலைப்பை அனுமதிக்க உச்சநீதிமன்றத்தை கோரியுள்ளனர்.பிரேஸிலில் கருக்கலைப்பு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. சுகாதார நெருக்கடிகள் மற்றும் துஷ்பிரயோக வழக்குகளின் போது மாத்திரமே கருக்கலைப்பு அனுமதிக்கப்படும்.


கொசுக்கள் மூலம் ஸிக்கா நோய் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவலாம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
[Friday 2016-01-29 06:00]

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் வைரஸ் நோயான 'ஸிக்கா' கொசுக்களின் மூலம் இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளுக்கும் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது. தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன.


சிரிய நாட்டில் தலைத்தூக்கியுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதே முக்கிய பிரச்சினை: - ரௌஹானி
[Friday 2016-01-29 06:00]

சிரிய நாட்டில் தலைத்தூக்கியுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதே சிரியாவில் காணப்படும் மிக முக்கிய பிரச்சினையாகும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.ஐரோப்பாவிற்கான தனது இரண்டாம் கட்ட பயணமாக பிரான்ஸினை சென்றடைந்த ஈரான் ஜனாதிபதி அங்கு பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலன்டுடன் ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும், சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவரும் பேரழிவுக்கு ஜனாதிபதி பஷர் அல் அசாட் காரணமில்லை. இந்த பேரழிவுப் பிரச்சினைக்கு இஸ்லாமிய சுன்னி போராளிக் குழுக்களும் அவர்களது ஆதரவாளர்களுமே காரணம்.

Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா