Untitled Document
September 18, 2024 [GMT]
சோமாலியாவைத் தளமாகக்கொண்டு அல்-ஷபாப் இயக்கத்தின் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டார்!
[Thursday 2016-02-18 21:00]

சோமாலியாவைத் தளமாகக்கொண்டு இயங்கும் இஸ்லாமியவாதக் குழுவான அல்-ஷபாபின் உளவுத்துறை தலைவரை கொன்றுவிட்டதாக கென்ய இராணுவம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8-ம் திகதி நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் மொஹமத் கராட்டே என்ற அந்த உளவுத்துறை தலைவரும், 10 தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக கென்ய பாதுகாப்பு படை கூறியுள்ளது.சோமாலியாவில் இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டுவரும் ஆப்பிரிக்க ஒன்றிய படையின் அங்கமாகவே கென்ய இராணுவம் அங்கு இயங்குகின்றது.


வேகமாக பரவும் ஸிகா வைரஸ் நோயை தடுக்க 56 மில்லியன் டொலர் நிதி தேவை: - உலக சுகாதார நிறுவனம்
[Thursday 2016-02-18 19:00]

அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் ஸிகா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. அங்கு மட்டும் 34 நாடுகளில் இந்த நோய் பரவி இருக்கிறது. இது தவிர, மேலும் 5 நாடுகளிலும் அவை பரவி உள்ளன.இதை தடுக்க இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே, உலகம் முழுவதும் இந்த நோய் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.ஸிகா வைரஸ் நோயை தடுப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இப்போது நோயை தடுக்க 56 மில்லியன் டாலர் நிதி (ரூ.383 கோடி) தேவைப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


துருக்கி கால் பந்து போட்டி: - ரஷ்ய அதிபரின் படத்துடன் டி-சர்ட் அணிந்திருந்த கால்பந்து வீரரால் சர்ச்சை
[Thursday 2016-02-18 19:00]

துருக்கியின் இஸ்தான்புல் துருக்கிய கால்பந்து அணிக்கு எதிரான போட்டியின்போது, ரஷ்ய அணி வீரர் ஒருவர் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.செவ்வாயன்று ஆட்டம் முடிந்தபின்னர் ரஷ்ய வீரர் டிமிட்ரி டாராஸோவ், தனது அணியைக் குறிக்கும் டி-சர்ட்டை கழற்றி, உள்ளே ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூடினின் படத்துடன் தான் அணிந்திருந்த டி-சர்ட்டை காண்பித்துள்ளார். ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள சூழலில் ரஷ்ய அதிபரின் படத்துடன் டி-சர்ட் அணிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு, ரஷ்ய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இருநாட்டு உறவுகளும் கடுமையாக மோசமடைந்துள்ளன.


ஆஸ்திரேலியாவில் வீட்டு வாசலை மூடுமளவுக்கு கூடிய களைகள்: - சிரமப்படும் மக்கள்!
[Thursday 2016-02-18 19:00]

''ஹெயாரி பனிக்'' என்ற பெயரில் காய்ந்துபோன களைகள் தும்பு போல படர்ந்து வேகமாக பரவியதால் ஆஸ்திரேலியாவில் சிறிய நகர வீடுகள் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன. மிகுந்த வறட்சி காரணமாக விக்டோரியாவின் வடகிழக்கில் இருக்கும் வங்கரட்டாவின் வீடுகளின் வாசல்கள் எல்லாம் மூடிப்போகும் அளவுக்கு இந்த களைகள் காற்றில் அடிபட்டுவந்து தேங்கியுள்ளன.சில இடங்களில் வீடுகளின் கூரையின் உயரத்துக்கு அவை தேங்கிக் கிடக்கவே அவற்றை அகற்ற அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்கள்.


எம்.எச்.370 விமான விபத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தினாரா விமானி: - புதிய கோணத்தில் விசாரணை
[Thursday 2016-02-18 15:00]

மாயமாகிப் போன எம்எச் 370 விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க முடியாமல் போனால், விமானத்தை வேண்டும் என்றே விமானி மோதி விபத்துக்குள்ளாக்கினாரா என்ற கோணத்தில் விசாரிக்க தேடுதல் படையினர் தீர்மானித்துள்ளனராம். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானத்தில் இருந்த 239 பயணிகளின் கதி என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் கண்டுபிடிக்க இயலவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானதாகவும், விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.


துருக்கி அங்காரா ராணுவ தலைமையகம் அருகே தற்கொலை படை தாக்குதல்: - 28 பேர் பலி
[Thursday 2016-02-18 14:00]

துருக்கி நாட்டில் அவ்வப்போது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று பயங்கர தாக்குதல் சம்பவம் நடந்தது.தலைநகரம் அங்காராவில் ராணுவ தலைமையகம் அருகே இன்று ராணுவ வீரர்கள் ஒரு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய காரில் வந்து அந்த பஸ் மீது மோதினான். இதில் காரில் இருந்த குண்டு வெடித்து ராணுவ பஸ் நொறுங்கியது.மேலும் அந்த பகுதியில் இருந்த ஏராளமான வாகனங்களும் சேதமாகின.


துப்பாக்கிதாரியின் கைபேசியை திறக்க மறுத்த ஆப்பிள் நிறுவனம்!
[Thursday 2016-02-18 07:00]

அமெரிக்காவின் சான் பேர்னாடினோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில், ஒருவரின் கைத்தொலைபேசியில் உள்ள தகவல்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு உதவுமாறு, கலிஃபோர்னியா நீதிமன்றம், ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விடுத்துள்ள உத்தரவை, ஆப்பிள் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக், அமெரிக்க புலனாய்வு துறையினரின் இந்த கோரிக்கை, தமது நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகளினுள் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான, எஃப்.பி.ஐ முறையற்ற வகையில் உள் நுழைய வழிவகுப்பதுடன், தமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்றார்.நீதிமன்றின் உத்தரவினை நிறைவேற்றுவதற்கு, ஆப்பிள், தாம் தயாரித்த எந்த ஒரு ஸ்மார்ட்ஃபோனையும் திறக்க செய்ய ஏற்புடைய மென்பொருட்களை உருவாக்க வேண்டும் என, தெரிவித்த அவர் இது ஒரு அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றார்.


டேவிட் கேமரனின் சீர்திருத்த கோரிக்கைகளில் பெரும்பான்மை நியாயமானவை: - ஏங்கெலா மெர்க்கல்
[Thursday 2016-02-18 07:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை நியாயமானவையே என ஜெர்மன் ஆட்சித் தலைவி ஏங்கெலா மெர்க்கல், ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேசமயம், எந்த ஒப்பந்தமாயினும், அது யூரோ வலய நாடுகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்றும், அவர் தெரிவித்தார்.ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் உறுப்புரிமையை மறுசீரமைக்கும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவது குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியமான மாநாடு ஒன்று நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர், மெர்க்கலின் இந்த கருத்து வந்துள்ளது.ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான பிரிட்டனின் உறவை மாற்றியமைக்கவல்ல புதியதொரு உடன்படிக்கையை, டேவிட் கேமரன் கோரிவருகிறார். அவர் கோரும் ஒப்பந்தம் ஏற்பட்டால், அது தொடர்பான பொதுமக்கள் வாக்கெடுப்பு ஒன்று பிரிட்டனில் ஜூன் மாதமே நடக்கக் கூடும்.


அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் வாய்ப்பு டோனால்டு டிரம்ப்புக்கு இல்லை: - அதிபர் ஒபாமா
[Thursday 2016-02-18 07:00]

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு அடைய உள்ள நிலையில், அங்கு நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட டோனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் வாய்ப்பு டோனால்டு டிரம்ப்புக்கு இல்லை என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்


சவுதியில் தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்க நடந்த 10 மணிநேர ஆபரேஷன் வெற்றி!
[Wednesday 2016-02-17 19:00]

சிரியாவைச் சேர்ந்த தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை பிரிப்பதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற சிக்கலான ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.சிரியாவைச் சேர்ந்த டுக்யா மற்றும் யாகீன் அல் காதர் என்ற இந்த பெண் குழந்தைகள் பிறக்கும்போதே தலைகள் ஒட்டியபடி பிறந்திருந்தன. இத்தகைய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் இலவசமாக ஆபரேஷன் செய்யப்படுகிறது.அவ்வகையில், இந்த ஆபரேஷனின் மூலம் தனது மகள்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு சவுதி மன்னருக்கு இந்தக் குழந்தைகளின் தந்தை கடந்த 2013-ம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மன்னரும் ஒப்புதல் அளித்தார்.


கேமரூன் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் - 162 போகோஹராம் தீவிரவாதிகள் பலி
[Wednesday 2016-02-17 17:00]

கேமரூனின் எல்லை நாடான நைஜீரியாவில் கேமரூன் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 162 போகோஹராம் தீவிரவாதிகள் சுட்டுக்குவிக்கப்பட்டதோடு, தீவிரவாதிகள் வசமிருந்த பகுதி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த தகவலை கேமரூன் நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் இஸ்ஸா சிரோமா பக்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் வெளியீட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளதாவது,


மேற்கத்தேய ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவதை கைவிட வேண்டும்: - சீனா
[Wednesday 2016-02-17 16:00]

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பரப்பில் சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளானது சில மேற்கத்தேய செய்தி ஊடகங்களின் புனைக் கதை என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தென்சீனக் கடற்பரப்பில் சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனை குறித்த தீவிற்கு உரிமை கோரிவரும் தாய்வானும் உறுதிப்படுத்தியுள்ளது.அத்துடன் இதற்கு சாட்சி பகரும் வகையில் அமெரிக்க ஊடகமொன்று, ஏவுகணை பேட்டரிகள் மற்றும் ராடார் அமைப்புகள் ஆகியன அப்பகுதியில் காணப்படுவது போன்ற செயற்கைகோள் படங்களையும் அண்மையில் வெளியிட்டிருந்தன.


ஹிலாரிக்கு ஆண்களை விட பெண்களையே பிடிக்கும்: கிளிண்டனின் முன்னாள் காதலி பேட்டி
[Wednesday 2016-02-17 16:00]

அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துவரும் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் 8


ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார்!
[Wednesday 2016-02-17 07:00]

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி, தனது 93ஆவது வயதில் காலமானார். பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி எகிப்தியரான இவர், ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்த முதலாவது அரேபியராவார். 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரக அவர் பதவியேற்றப்போது, உலக நாடுகள் முதலாவது வளைகுடா போரை சந்திந்திருந்தன.யூகோஸ்லாவியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு போர் மற்றும் வளைகுடாவில் தொடர்ந்த அமைதியின்மையையும் ஆகிவற்றை உடனடி பிரச்சினையாக அவர் எதிர்கொண்டார்.ருவாண்டா இனப்படுகொலையை தடுக்க ஐ.நா. தவறியமையை, பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி விமர்சித்திருந்தார்.பொஸ்னியா மீதான நேட்டோவின் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால், அவர் அமெரிக்காவின் கோபத்திற்கும் உள்ளானார்.


பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியருக்கு 3 ஆண்டு சிறை!
[Wednesday 2016-02-17 07:00]

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ளது, கொஹாட். அங்கிருந்து 3 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியரான ஹமித் நேஹல் அன்சாரி (வயது 31) என்பவரை ராணுவம் பிடித்துச்சென்றது. அதன்பின்னர் அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் போய் விட்டது. இவரது பூர்விகம், மும்பை. இதற்கிடையே மகனை காணாமல், அன்சாரியின் தாயார் பாஜியா அன்சாரி, பெஷாவர் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது குறித்து பதில் அளிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அப்போதுதான் அன்சாரி பாகிஸ்தான் ராணுவத்தின் காவலில் இருப்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.


சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையின் விமான தாக்குதலில் 15 பேர் பலி!
[Wednesday 2016-02-17 07:00]

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் மனித உரிமைக்கான கண்காணிப்புக் குழு இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. சிரியாவின் ஹசாகெஹ் மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள அல்-ஷாடாடி பகுதியில் நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.


மே மாதம் வியட்நாம் பயணம் செல்லவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா!
[Wednesday 2016-02-17 07:00]

ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகிற மே மாதத்தில் வியட்நாம் நாட்டிற்கு செல்ல இருக்கிறார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் இன்று கூறியுள்ளார். கலிபோர்னியாவில் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டம் ஒன்றில் வியட்நாம் பிரதமர் எங்குயென் டான் டங் விடுத்த அழைப்பை ஒபாமா ஏற்று கொண்டார்.இது பற்றி வெள்ளை மாளிகை அதிகாரி கூறும்பொழுது, தூதரக உறவுகள் புதுப்பித்தலின் 20வது ஆண்டு தினத்தை குறிக்கும் 2015ம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் வியட்நாம் இடையேயான உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவது குறித்து அதிபர் ஒபாமா மற்றும் பிரதமர் டங் ஆலோசனை நடத்தினர்.


50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா இடையே வர்த்த விமானங்களை இயக்க ஒப்பந்தம்!
[Wednesday 2016-02-17 06:00]
p> 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா இடையே வர்த்த விமானங்களை இயக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன. கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலாளர் அந்தோனி போக்ஸ் மற்றும் கியூபா போக்குவரத்து மந்திரி அடெல் ரோட்ரிகியுஸ் இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தப்படி, அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் நிறுவனம், நாள் ஒன்றிற்கு இருநாடுகளின் 110 வழித்தடங்கள் வழியாக விமானங்களை இயக்கும். இது தற்போது உள்ளதை விட 5 மடங்கு அதிகம்.


ஈராக்கில் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பலி!
[Tuesday 2016-02-16 20:00]

ஈராக்கில் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஈராக்கின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான பஸ்ராவில் இருந்து இரண்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரில் குட் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். குட் நகரை நெருங்கியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், தரையில் விழுந்து நொறுங்கியது. இதில், 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக ராணுவ பிரிகேடியர் ஜெனரல் தெரிவித்தார். ஈராக்கில் ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த விபத்தில் பைலட் பலியாகினார். எம்.பி. உள்ளிட்ட சிலர் காயங்களுடன் உயிர்தப்பினர்.


அமெரிக்காவால் முதல் தடவையாக நடத்தப்படும் ஆசியான் மாநாடு!
[Tuesday 2016-02-16 20:00]

அமெரிக்காவால் முதல் தடவையாக நடத்தப்படும் ஆசியான் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தென்கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள கலிபோர்னியா வந்துள்ள ஆசியான் நாட்டுத் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.பல ஆசியான் நாடுகள், தென்சீன கடலில் தமது பகுதிகள் இருப்பதாக பிரகடனம் செய்து, சீனாவுடன் தகராறில் இருப்பது குறித்து தனது வரவேற்புரையில் ஒபாமா குறிப்பிட்டு பேசியுள்ளார்.தென் சீனக் கடல் தொடர்பாக சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையில் நிலவும் முருகல் நிலை மற்றும் சர்வதேச வணிகம் குறித்தும் இங்கு அதிகமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.


ஜிம்பாவே நாட்டில் சரக்கு விமானத்திலிருந்து கோடிக்கணக்கான பணம்,சடலம் மீட்பு!
[Tuesday 2016-02-16 09:00]

ஜிம்பாவே நாட்டில் ஒரு சரக்கு விமானத்தில் கோடிக் கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.விமானத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தென்னாப்பிரிக்க ராண்ட் நோட்டுகள் ஏற்றப்பட்டிருந்தன.தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டபோது, அந்த விமானத்தில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் தலைநகர் ஹராரேவிலிருந்து வெளியாகும் தி ஹெரால்ட் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.


ஐ.எஸ்.மீது தாக்குதல் நடத்த சவூதி தயார்: - துருக்கியில் போர்விமானங்கள் குவிப்பு
[Tuesday 2016-02-16 09:00]

சிரி


தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி - ரோபோக்களால் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேலையை இழக்கும் சூழ்நிலை!
[Tuesday 2016-02-16 09:00]

தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக, இன்னும், ௩௦ ஆண்டுகளில் மனிதன் செய்யும் அனைத்து வேலைகளையும், ரோபோக்கள் செய்யத் துவங்கி விடும்,


சிரியாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது ஏவுகணை தாக்குதலில் 50 பேர் பலி: - ஐ.நா தகவல்
[Tuesday 2016-02-16 08:00]

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ மற்றும் இட்லிப் பகுதியில் உள்ள 5 மருத்துவ முகாம்கள் மற்றும் இரண்டு பள்ளிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் அப்பட்டமான சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள ஆலெப்போ பகுதியில் ரஷ்ய ஆதரவு சிரிய அரசு படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வந்ததாக ஐ.நா தெரிவித்துள்ளது.


நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தீவில் மீண்டும் நிலநடுக்கம் :- 6.2 ரிக்டராக பதிவு
[Tuesday 2016-02-16 07:00]

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தீவில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. பூமியின் அடியில் சுமார் 53 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்பலி, பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.முன்னதாக, நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன.கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதேபகுதியை தாக்கிய நிலநடுக்கத்துக்கு சுமார் 200 பேர் பலியாகினர். 4000 கோடி டாலர்கள் அளவுக்கு சேதாரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தான் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி!
[Tuesday 2016-02-16 07:00]

பாகிஸ்தானில் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன் கவா மாகாணத்தில் பெஷாவர் அருகே சரஸ்தாவில் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 20


ரஷ்யா ஒரு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது: - துருக்கி பிரதமர் கடும் தாக்கு!
[Monday 2016-02-15 19:00]

சிரியாவில் தீவிரவாத அமைப்பு போன்று ரஷ்யா செயல்படுகிறது என துருக்கி பிரதமர் கடுமையாக சாடியுள்ளார்.உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக, தீவிரவாதிகளின் நிலைகள் மீது ரஷ்யா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் துருக்கி-ரஷ்யா இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய விமானப்படையின் ஆதரவுடன் அதிபர் ஆசாத்தின் படை சமீபத்தில் அதிரடி தாக்குதல் நடத்தி போராளிகள் ஆதிக்கம் நிறைந்த அலெப்போ நகரை நெருங்கியது. சண்டை தீவிரமடைந்ததால், அங்கிருந்து துருக்கியை நோக்கி வரும் அகதிகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.


ஆஸ்திரேலியாவில் உள்ளாடைக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ. ஐயாயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல்!
[Monday 2016-02-15 18:00]

ஆஸ்திரேலியா நாட்டின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வரலாற்றில் முதன்முறையாக 100 கோடி ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான

Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா