Untitled Document
September 15, 2024 [GMT]
மியன்மாரில் துன்புறுத்தல்களிலிருந்து தப்பி வங்கதேசத்தில் வாழும் ரொஹிஞ்சா மக்கள் தொடர்பில் கணக்கெடுப்பு!
[Friday 2016-02-12 20:00]

மியன்மாரில் துன்புறுத்தல்களிலிருந்து தப்பி வங்கதேசத்துக்குள் வந்துள்ள ரொஹிஞ்சா இன மக்களில் பதிவுசெய்யப்படாதவர்கள் தொடர்பான சனத்தொகை கணக்கெடுப்பு ஒன்றை வங்கதேச அரசாங்கம் துவங்கியுள்ளது.அகதி முகாம்களில் தங்கியுள்ள பல்லாயிரக் கணக்கான ரொஹிஞ்சா மக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.ஆனால், வங்கதேசத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரொஹிஞ்சா மக்கள் தங்கியிருப்பதாக நம்பப்படுகின்றது.குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பான ஐஓஎம்-இன் ஒத்துழைப்புடன் இந்தக் கணக்கெடுப்பு சில வாரங்களுக்கு நடக்கும்.ரொஹிஞ்சா மக்களில் யார் வங்கதேச பிரஜைகள், யார் இல்லை என்பதை உறுதிசெய்வதற்கும் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆராய்வதற்குமே இந்தக் கணக்கெடுப்பு நடக்கின்றது.


பாகிஸ்தான் ஐதராபாத் மத்திய சிறையை தாக்க திட்டமிட்ட 97 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது!
[Friday 2016-02-12 17:00]

அமெரிக்காவின் பிரபல வால் ஸ்டிரீட் பத்திரிகை நிருபரான டேனியல் பியர்ல் என்பவர் கடந்த 2002-ம் ஆண்டு அல்-கொய்தா தீவிரவாதிகளால் கடத்தி, கொல்லப்பட்டார்.டேனியல் பியர்ல் கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற காலித் ஒமர் ஷேக் என்பவன் பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளான். இந்த சிறையை தாக்கி, தகர்த்து அவனை விடுதலை செய்ய அல்-கொய்தா தீவிரவாதிகள் ரகசியமாக திட்டம் தீட்டி வருவதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல் வந்தது.


அமைதி நடவடிக்கை பலனளித்தால் மட்டுமே அடுத்தகட்டத்திற்கு செல்வோம்: சிரியா போராளிக்குழு தலைவர் அறிவிப்பு
[Friday 2016-02-12 17:00]

உள்நாட்டுப் போரால் கடந்த ஐந்தாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து செல்ல வசதியாக அமெரிக்க, ரஷியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பலமிக்க 17 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நேற்றுகூடி ஆலோசனை நடத்தினர்.சிரியா ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தனிநபர் போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஹெஜ்புல்லா இயக்கப் போராளிகள் மற்றும் ரஷியா ஆதரவுப் படைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒருவாரத்துக்குள் வெள்ளை கொடி ஏந்தி போரை கைவிட வேண்டும். இருதரப்பினரும் தங்கள்வசம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தெற்கு சூடான் உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி: - துணை அதிபராக ரைக் மச்சாவை மீண்டும் நியமித்த அதிபர்
[Friday 2016-02-12 16:00]

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் என்ற புதிய நாடு கடந்த 2011


கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் புதிய பயனாளர்களை ஈர்க்காத டுவிட்டர்!
[Friday 2016-02-12 07:00]

கடந்த ஆண்டின் கடைசிக் காலாண்டில் புதிய பயனாளர்கள் எவரையும் ஈர்க்கவில்லை என்று டுவிட்டர் நிறுவனம் அதன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இறுதிக் காலாண்டில் டுவிட்டர் வலைதளம் 32 கோடி பயனாளர்களைக் கொண்டிருந்தது. இதற்கு முந்தைய ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டிலும் பயனாளர்களின் எண்ணிக்கை இதே அளவில்தான் இருந்தது. ஆக, கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் புதிய பயனாளர்களை ஒருவரைக்கூட டுவிட்டர் வலைதளம் ஈர்க்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. டுவிட்டரின் வளர்ச்சி தடைபட்டுள்ளதையடுத்து, அடிப்படையான சேவைகளில் மாறுதலை செய்ய வேண்டிய நிலைக்கு அந்த வலைதளம் தள்ளப்பட்டுள்ளது.டுவிட்டருக்குப் போட்டியாக விளங்கும் ஃபேஸ்புக் வலைதளம் 150 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள சிறையில் கலவரம்: - 52 பேர் பலி
[Friday 2016-02-12 07:00]

மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள மான்டெர்ரி நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் திடீரென கைதிகளுக்கு இடையே பயங்கர கலவரம் மூண்டது. கைதிகள் ஒருவரையருவர் தாக்கிக்கொண்டதுடன், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளையும் சரமாரியாக தாக்கினர். இந்த பயங்கர கலவரத்தில் போலீசார் உள்பட 52 பேர் பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த கலவரத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காத நிலையில்,


சவூதி அரேபிய கல்வித்துறை அலுவலகத்தில் ஆசிரியரின் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!
[Friday 2016-02-12 07:00]

சவூதி அரேபியாவின் ஜாசான் மாகாணத்தில் கல்வித்துறை அலுவலம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று வந்த ஆசிரியர் ஒருவர் தீடிரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். எதற்காக துப்பாக்கிசூடு நடத்தினர் என்ற விவரம் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்த கல்வி அலுவலம் வெளியே, ஆம்புலன்ஸ் வண்டிகள் அணி வகுத்துள்ளன. சம்பவ இடத்தை சுற்றிலும் போலீஸ் அதிகாரிகளும் குவிந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பற்றி விவரித்த மாகாண உள்துறை மந்திரி, இது ஒரு குற்றச்செயல் என்றார். எப்படி 6 பேரும் கொலைசெய்யப்பட்டனர் என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் துப்பாக்கிசூடு நடைபெற்றது என்று செய்தி வெளியிட்டு வருகின்றன.


மனிதர்களின் முக உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ளும் ஆற்றல் குதிரைகளுக்கு உள்ளது: - ஆய்வில் தகவல்
[Friday 2016-02-12 07:00]

மனித முகத்தில் தெரியும் கோபம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை குதிரைகளால் அறிய முடியும் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது.ஆண்களின் முகத்தின் புகைப்படங்களை கொண்டு அவற்றை குதிரைகள் புரிந்துகொள்வதை விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறார்கள். நீண்டகாலம் மனிதர்களோடு ஒன்றி வாழ்ந்தமை இந்த சக்தியை குதிரைகளுக்கு கொடுத்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.


மேற்கு உலகால் கைவிடப்பட்டுள்ளோம்: - சிரிய கிளர்ச்சிக்குழு தளபதி தெரிவிப்பு
[Thursday 2016-02-11 22:00]

வடக்கு சிரியாவில் மனித நேய நிலவரம் பேரழிவு நிலையை எட்டியுள்ளதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.அலெப்போ நகரைச் சுற்றிய பகுதிகளில் நடக்கும் அண்மைய மோதல்களால் ஐம்பதினாயிரம் மக்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள் என்றும் உணவு, நீர் மற்றும் மருந்து விநியோகம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகின்றது.ரஷ்ய வான் தாக்குதல்களின் ஆதரவுடன் சிரியாவின் அரசாங்க படைகள் தமது தாக்குதல்களை அதிகரித்துள்ளன.அத்துடன் ஒரு கிளர்ச்சிக்குழுவின் மூத்த தளபதி ஒருவர் தாம் மேற்கு உலகால் கைவிடப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.


உலக பங்குச் சந்தையில் வீழ்ச்சி: - 4 வீத நட்டத்தை எதிர்கொண்ட ஹாங்காங் பங்குச்சந்தை
[Thursday 2016-02-11 22:00]

உலக பங்குச் சந்தையில் கொந்தளிப்பு நிலவும் நிலையில், இன்று ஆரம்பத்தில் ஐரோப்பா பங்குச் சந்தை பரிவர்த்தனையில் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.பாரிஸ், ஃபிராங்க்பர்ட், மற்றும் லண்டன் ஆகிய இடங்களில், பங்குகளின் விலை 2 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சிகண்டது.ஆசியாவில் ஆரம்பத்தில் இன்று ஹாங்காங் பங்குச்சந்தை நட்டத்தை எதிர்கொண்டது.சீனப் புதுவருடத்தை தொடர்ந்து மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்த ஹாங்காங் பங்குச்சந்தை கிட்டத்தட்ட 4 வீதம் நட்டத்தை எதிர்கொண்டது.


தென் கொரியநாட்டவர் அனைவரையும் வெளியேற்றப் போவதாக வடகொரியா அறிவிப்பு!
[Thursday 2016-02-11 18:00]

வடகொரியாவும் தென்கொரியாவும் இணைந்து வடகொரிய எல்லைக்குள் உருவாக்கி நிர்வகித்துவரும் தொழிற்பேட்டையில் இருக்கும் தென் கொரியநாட்டவர் அனைவரையும் வெளியேற்றப் போவதாக வடகொரியா அறிவித்துள்ளது.கெசாங்க் வளாகம் என்று அழைக்கப்படும் இந்த தொழிற்பேட்டையில் இயங்கிவரும் நிறுவனங்களின் சொத்துக்கள் அனைத்தையும் வடகொரியா முடக்குகிறது.இந்த தொழிற்பேட்டையில் இருக்கும் தமது நாட்டு மேலாளர்களைத் தென்கொரியா திரும்ப அழைத்துக்கொள்ளத்துவங்கியதோடு, அங்கிருக்கும் உபகரணங்கள் மற்றும் சரக்கு கையிருப்புகளையும் படிப்படியாக அகற்றத்துவங்கியதைத் தொடர்ந்து வடகொரியாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காதலர் தினம் கொண்டாட பாகிஸ்தானில் தடை!
[Thursday 2016-02-11 13:00]

பிப்ரவரி 14


நைஜீரியாவில் பெண்கள் தற்கொலைப் படை தாக்குதல்: - 58 பேர் பலி
[Thursday 2016-02-11 10:00]

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 2 பெண் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலியாகினர்.நைஜீரியா நாட்டின் வடக்குப் பகுதியில் அமைதுள்ளது போர்னோ மாகாணம். இந்த மாகாணத்தின் தலைநகரான மாய்துகுரியிலிருந்து 90 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது திக்வா நகரம். போகோ ஹராம் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த முகாமில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தபோது, அங்கு நுழைந்த இரு பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீரென்று தாங்கள் கட்டி வந்த வெடிபொருளை வெடிக்கச் செய்தனர்.


பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கின்றது: - அமெரிக்கா
[Thursday 2016-02-11 07:00]

பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு இயக்குனர் வின்சென்ட் ஸ்டீவார்ட், அந்த நாட்டின் செனட் சபை ஆயுத பணிகள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது,


பதான்கோட் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நீடிக்கிறது: - அமெரிக்கா
[Thursday 2016-02-11 07:00]

பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் நீடித்து வருகிறது என்று அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் தெரிவித்தார்.இதுகுறித்து வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராணுவ விவகாரங்களுக்கான செனட் குழுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. இருப்பினும், பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படைத் தளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பதற்றம் நீடிக்கத் தொடங்கியது.இந்தத் தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்தியதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பதான்கோட் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால், அந்நாட்டுடனான நல்லுறவை இந்தியா தொடர வாய்ப்புள்ளது என்றார் ஜேம்ஸ் கிளாப்பர்.


பேஸ்புக்கில் பெயரை மாற்றிய மனைவியை போட்டு தாக்கிய கணவன்: - மலேசியாவில் சம்பவம்
[Thursday 2016-02-11 07:00]

மலேசியாவின் பினாங் நகரை சேர்ந்த பெண் ஸ்டெல்லா ஓய். ஸ்டெல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் தனது குழந்தையின் படத்தை போட்டு அதில் கணவரின் பெயருக்கு பதிலாக டத்தோ லீ என்று வேறு ஒருவர் பெயரை போட்டு விட்டார். இதை பார்த்த கணவர் மனைவியை அடித்து உதைத்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஸ்டெல்லா இது குறித்து போலீசில் புகார் கூறி உள்ளார். மேலும் பேஸ் புக்கத்தில் தான் படுகாயமடைந்த பல படங்களை பதிவு செய்து உள்ளார்.இது குறித்து ஸ்டெல்லா தனது பேஸ் புக் பக்கத்தில் இது குறித்து கூறி இருப்பதாவது:-தற்போது எனது காயங்கள் குணமடைந்து வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது.நானும் எனது கணவரும் இனி நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்வது கடினம் என கூறி உள்ளார். இந்த டத்தோ லீ தனது நண்பர் மற்றும் பேஸ் புக் நண்பர் என கூறி உள்ளார்.


பிரெஞ்சு அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல்!
[Thursday 2016-02-11 07:00]

கடந்த ஆண்டு பாரிஸில் ஜிஹாதிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவசரகால அதிகாரங்களில் திருத்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் தீவிரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரெஞ்சு மக்களின் குடியுரிமையை பறித்தல் எனும் இரண்டு சர்ச்சைக்குரிய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த மசோதா பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் மேலவைக்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் வைக்கப்படவுள்ளது.ஆளும் சோஷலிசக் கட்சியில் உள்ள பலர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.எனவே இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தேவையான பெரும்பான்மையை பெறுமா என்பது தெளிவில்லாமல் உள்ளது.


தென்னாப்பிரிக்காவில் கன்னித்தன்மையை நிரூபிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை!
[Thursday 2016-02-11 07:00]

தென்னாப்பிரிக்காவில் கன்னித்தன்மையை நிரூபிக்கும் மாணவிகளுக்கு ''உதவித்தொகை'' வழங்கும் திட்டம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் திட்டம், பதின்ம வயதில் கர்ப்பமடைதலை குறைக்கும் என்று க்வா ஷுலு நாட்டல் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற நகரின் மேயர் கூறியுள்ளார். ஆனால், இது பாரபட்சமானது என்று கூறும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அதனை ரத்துச் செய்யுமாறு கோரியுள்ளனர்.


ஸிகா வைரஸை கட்டுப்படுத்த 1.8 பில்லியன் டொலர்களை அமெரிக்கா வழஙகுகிறது!
[Wednesday 2016-02-10 18:00]

ஸிகா வைரஸ் தொற்றைக் கையாள அவ


சிலி நாட்டின் மத்திய பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: -மக்கள் பீதி
[Wednesday 2016-02-10 07:00]

நிலநடுக்க பாதிப்பு அதிகமாக நிகழக்கூடிய நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டின் மத்தியப் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக பாறைகள் உருண்டு விழுந்ததால் நெடுஞ்சாலைகள் முடங்கியுள்ளன. மத்திய சிலியின் கடலோர நகரமான கோக்குவிம்போ நகரில் இருந்து வடமேற்கே 69 கிலோமீட்டர் தூரத்தில் கடல்படுகைக்கு கீழே 32 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 9.33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவாகியுள்ளது. அண்டைநாடான அர்ஜெண்ட்டினாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கோக்குவிம்போ நகரில் வீடுகள் அதிர்ந்ததாகவும், மக்கள் பீதியில் கூச்சலிட்டபடி வீதிகளுக்கு ஓடத் தொடங்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ரமாடி நகரின் கிழக்குப்பகுதியை கைப்பற்றிய ஈராக் ராணுவம்!
[Wednesday 2016-02-10 07:00]

ஈராக் நாட்டின் மிகப்பெரிய மாகாணமான அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த ரமாடி நகரின் கிழக்குப்பகுதியை ஈராக் ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை கைப்பற்றும் நோக்கத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உள்நாட்டு சன்னி பழங்குடியின மக்களின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். படைகளுடன் உச்சகட்ட மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கிழக்கு ரமாடியில் உள்ள சஜாரியா மற்றும் ஜுவைபா மாவட்டங்களை கைப்பற்றிய ஈராக் படைகள் அருகாமையில் உள்ள ஹுஸைபா அல்-ஷ்ர்க்கியா மாவட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


உலகம் முழுவதும் இலவச இணைய தொடர்புக்கு உள்ள தடைகளை அகற்ற நாங்கள் உறுதியாக உள்ளோம்:பேஸ்புக் நிறுவனர்
[Wednesday 2016-02-10 07:00]

இணைய சமத்துவத்துக்கு சாதகமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான இணைய கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. டிராயின் இந்த உத்தரவால், ஏமாற்றம் அடைந்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் இது பற்றி கூறியிருப்பதாவது "இந்தியாவில் இலவச டேடா பயன்படுத்த அனுமதி செய்யும், திட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்க டிராய் முடிவு செய்துள்ளது. இது இண்டெர்நெட் ஆர்க், பீரி பேஸிக்ஸ், உள்ளிட்ட இலவச இணைய சேவையை முன்னெடுத்த பிற அமைப்புகளின் முயற்சிக்கும் தடையாக அமைந்துள்ளது.


எகிப்து அதிபர் புறப்படும் பகுதியில் இருந்து விழா மேடை வரை 3 மைல் தூரம் சிவப்பு கம்பளம்: - சர்ச்சையில் சிக்கிய அதிபர்
[Wednesday 2016-02-10 07:00]

எகிப்து நாட்டு அதிபர் அப்துல் பத்தாஹ் அல் சிசி கெய்ரோவின் புறநகர் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இலவச வீடுகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்குவதாக அந்த விழா அமைந்திருந்தது.விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்பாளர்கள் அதிபர் புறப்படும் பகுதியில் இருந்து விழா மேடை வரை 3 மைல் தூரம் சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றுள்ளனர். இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து மீடியாக்களில் இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!
[Wednesday 2016-02-10 07:00]

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்.பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வாரிஸ் அலுவாலியா எனும் அந்த சீக்கியர் மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தபோது கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.


ஜெர்மனியில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து, 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
[Tuesday 2016-02-09 23:00]

ஜெர்மனியின் BAVARIA மாகாணத்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். MUNICH நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள BAD AIBLING என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்துக்குள்ளான இரு ரயில்களில் ஒன்றின் பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்துள்ளதாகவும் ஜெர்மனி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. விபத்து நடந்த இடத்தில் பேரிடர் கால மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஹோல்ஸ்கிர்சென் மற்றும் ரோசன்ஹெய்ம் இடையேயான பாதையில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இணைய சமநிலை பற்றிய அறிவிப்பு - விட மாட்டோம் என்கிறார் பேஸ்புக் நிறுவனர்!
[Tuesday 2016-02-09 23:00]

'இணைய சமநிலை தொடரும்' என, 'டிராய்' வெளியிட்டுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள, 'பேஸ்புக்' சமூக வலைதள நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், இத்துடன் நின்று விடப் போவதில்லை; தொடர்ந்து முயற்சிப்போம் என, தெரிவித்துள்ளார். 'நெட் நியூட்ராலிட்டி' எனப்படும் இணைய சமநிலைக்கு ஆதரவான, டிராய் அறிவிப்பை, இந்தியாவில் பலரும் வரவேற்றுள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.ஏனெனில், டிராயின் அறிவிப்பு, 'பிரீபேசிக்ஸ்' எனப்படும், இலவச இணையதள சேவை வழங்க திட்டமிட்டிருந்த பேஸ்புக் நிறுவனத்திற்கு தடையாக அமைந்துள்ளது தான். மார்க் ஜுக்கர்பெர்க் கூறியதாவது:டிராய் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இந்தியாவில் இணைய இணைப்புகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை ஓய மாட்டோம். இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தான், பிரீ பேசிக்ஸ் திட்டத்தை கொண்டு வந்தோம்.


ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்!
[Tuesday 2016-02-09 23:00]

ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த, 60 பயங்கரவாதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் நியமித்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, மேற்கத்திய நாடுகளின் புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்தாண்டு நவம்பரில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதி அபு முகம்மது அல் - அட்னானி தலைமையிலான குழுவை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழு அனுப்பி வைத்திருந்தது. இக்குழு, பாரீஸ் நகரின் பல இடங்களில் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில், 130 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் நடக்கும் முன், பாரீஸ், பிரிட்டன் தலைநகர் லண்டன், ஜெர்மனியின் பெர்லின் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் தாக்குதல் நடத்த, 60 பயங்கரவாதிகளை, ஐ.எஸ்., நியமித்துள்ளதாக, ஐரோப்பிய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், பாரீசில் தாக்குதல் நடத்தப்பட்டு விட்டது. அதில், மொத்தமுள்ள, 60 பயங்கரவாதிகளில், 20 பேர் ஈடுபட்டிருந்தால், மீதமுள்ள, 40 பேர், பிற நாடுகளில் எந்நேரமும், பிற ஐரோப்பிய நகரங்களில் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என, யூகிக்கப்படுகிறது.


பாலைவனத்தில் சவுதியின் கனவு நகரம் வெற்றி அளிக்குமா..?
[Tuesday 2016-02-09 19:00]

செங்கடலின் கரையில், மாபெரும் நகரம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை சவுதி அரேபியா 10 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது.இந்த நகரத்தை கட்டி எழுப்புவதற்காக, பல பில்லியன் டாலர் பணம் செலவிடப்பட்டு வருகின்றது.ஆனால், எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் சவுதியின் ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலையின் மத்தியில், இந்தத் திட்டம் வெற்றி அளிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.வெறும் 5000 பேர் தான் அங்கு இதுவரை குடியேறியுள்ளனர்.

Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா