Untitled Document
January 26, 2025 [GMT]
யோஷித ராஜபக்‌சவுக்கு சிஐடி அழைப்பாணை!
[Saturday 2024-12-28 17:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித ராஜபக்‌சவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆஜராக அழைப்பு விடுத்துள்ளது. சட்டவிரோத சொத்துக்களை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் யோஷித ராஜபக்சவை எதிர்வரும் 3ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி கால இடைக்கால அறிக்கையை கைவிட்டுள்ளோம்!
[Sunday 2025-01-26 17:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை கைவிட்டுள்ளோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் சடலங்களாக மீட்பு!
[Sunday 2025-01-26 17:00]

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் - புலிபாய்ந்த கல் வீதியை குறுக்கறுத்துச் சென்ற வெள்ள நீரில் நேற்று அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன இருவர் இன்று சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 71, 52 வயதுகளை உடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.


சுமந்திரனுக்கு மட்டும் 2 மெய்ப்பாதுகாவலர்கள் ஏன்?
[Sunday 2025-01-26 17:00]

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


வயலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!
[Sunday 2025-01-26 17:00]

கிளிநொச்சியில் வயலுக்கு சென்ற நிலையில் நேற்றையதினம்(24) காணாமல் போன குடும்பஸ்தர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இந்திய குடியரசு தினம்!
[Sunday 2025-01-26 17:00]

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினமான இன்று (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன.


அமைச்சர் சமந்தவிடம் 100 மில்லியன் ரூபா கேட்டு நோட்டீஸ்!
[Sunday 2025-01-26 17:00]

முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் குறித்து அவதூறான, தவறாக வழிநடத்தும் மற்றும் இழிவான கருத்துக்களை வெளியிட்டதாக , பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவிடமிருந்து ரூ.100 மில்லியன் நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.


அமெரிக்க உதவிகள் நிறுத்தப்பட்டதால் இலங்கைக்கும் நெருக்கடி!
[Sunday 2025-01-26 17:00]

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை நிறுத்தி வைப்பதற்கும் எதிர்காலத்தில் வெளிநாட்டு உதவிகளை அரைவாசியாக குறைப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதால் இலங்கை உட்பட பல நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


மகிந்தவின் மகன் என்பதற்கான யோஷிதவை கைது செய்யவில்லை!
[Sunday 2025-01-26 17:00]

யோஷித்த ராஜபக்ஷவை, அவர் மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.


அடுத்த மாதம் 10ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் அனுர!
[Sunday 2025-01-26 17:00]

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார்.


சீனா செல்கிறார் ரில்வின் சில்வா!
[Sunday 2025-01-26 17:00]

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையிலான உத்தேச இருதரப்பு அரசியல் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.


கொழும்பு வந்த 24 கப்பல்கள் திரும்பிச் சென்றன!
[Sunday 2025-01-26 06:00]

பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் துறைமுகத்தில் 2724 கொள்கலன்கள் தேங்கியிருக்கின்றன. அவற்றை துரிதமாக விடுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த 24 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்தார்.


யோஷித ராஜபக்ஷவுக்கு நாளை வரை விளக்கமறியல்!
[Sunday 2025-01-26 06:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ நேற்றுமாலை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


செல்லப் பிராணிகளால் அரிசித் தட்டுப்பாடா?
[Sunday 2025-01-26 06:00]

செல்லப்பிராணிகளுக்கு உணவு வழங்குவதால் தான் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகின்றார். மக்களுக்கு அரிசியை வழங்கி அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியாத அரசாங்கம், அதன் இயலாமையை மறைப்பதற்கு செல்லப்பிராணிகளைக் குறைகூறுவது வெட்கக் கேடு என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.


மதுபோதையில் பெண்ணை மோதிய பொலிஸ் அதிகாரி!
[Sunday 2025-01-26 06:00]

கிளிநொச்சி - ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மோதியதில் தலையில் வயோதிபப் பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்!
[Sunday 2025-01-26 06:00]

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியும். எவ்வாறிருப்பினும் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.


யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் காயம்!
[Sunday 2025-01-26 06:00]

திருகோணமலை - கம்பகொட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை, எத்தாபெந்திவெவ- பகுதியைச் சேர்ந்த சின்தக விமலசேன (42வயது) எனவும் தெரியவந்துள்ளது.


17 சுயேட்சைக் குழுக்கள் ஒன்றிணைந்தன!
[Sunday 2025-01-26 06:00]

கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட 17 சுயேட்சைக்குழுக்களை ஒன்றிணைத்து ஐக்கிய தமிழர் ஒன்றியம் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அங்குரப்பணம் செய்யப்பட்டது.


கேத்தரின் வெஸ்ட் இலங்கைக்கு விஜயம்!
[Sunday 2025-01-26 06:00]

பிரிட்டனின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.


எவரையும் பழிவாங்கும், பாதுகாக்கும் நோக்கம் இல்லை!
[Sunday 2025-01-26 06:00]

அரச நிதியை மோசடி செய்த ஊழல்வாதிகளை சட்டத்தின் பிரகாரம் கைது செய்யும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. ஊழலை இல்லாதொழிக்க வேண்டுமாயின் நிதி மோசடியாளர்கள் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்த வேண்டும். எவரையும் பழிவாங்கவும், பாதுகாக்கவும் வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாதென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.


பண மோசடி குற்றச்சாட்டில் யோஷித ராஜபக்ஷ கைது!
[Saturday 2025-01-25 17:00]

இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சந்தேகநபர், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


அதானியின் மின் திட்டங்களை ரத்துச் செய்ய தீர்மானிக்கவில்லை!
[Saturday 2025-01-25 17:00]

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் அமுல்படுத்தப்படவுள்ள அதானி நிறுவன காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த 442 மில்லியன் டொலர் முதலீட்டில் 1,500 முதல் 2,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கைபேசி அழைப்பால் 2 இலட்சம் ரூபாவை இழந்தார் வர்த்தகர்!
[Saturday 2025-01-25 17:00]

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் "உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்து வந்த கைதொலைபேசி அழைப்பால் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 2 இலட்சம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ள சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.


பலாலியில் 101 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Saturday 2025-01-25 17:00]

யாழ்ப்பாணம், பலாலி, அன்ரனிபுரம் கடற்கரை பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபராருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தியாவில் இருந்து 4,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி!
[Saturday 2025-01-25 17:00]

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு திங்கட்கிழமை நாட்டை வந்தடையும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


கடலில் தாக்குதல் - மீனவர் படுகாயம்!
[Saturday 2025-01-25 17:00]

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இன்று காலை தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரின் வலைகள் கடலில் அறுத்தெறியப்பட்ட வேளை சம்பந்தப்பட்ட இன்னொரு படகில் வந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


ஓகஸ்ட் மாதம் மாகாணசபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை!
[Saturday 2025-01-25 17:00]

மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்குரிய சட்ட திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்படும் என மாகாணசபைகள், உள்ளுராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.


கிளிநொச்சியில் புதையல் தோண்டிய 10 பேர் கைது!
[Saturday 2025-01-25 17:00]

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.


வாழைச்சேனையில் குழு மோதல் - 8 பேர் படுகாயம்!
[Saturday 2025-01-25 17:00]

வாழைச்சேனை- செம்மண்ணோடைப் பகுதியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண குழுவொன்றை அமைக்க எம்.பிக்கள் இணக்கம்!
[Saturday 2025-01-25 07:00]

வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.


மற்றொருவர் கைது - கைதானவர்கள் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள்!
[Saturday 2025-01-25 07:00]

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை கைது செய்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர்.

 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா