Untitled Document
January 15, 2025 [GMT]
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்!
[Tuesday 2025-01-14 18:00]

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்த போராட்டம் திங்கட்கிழமை (13) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

கூட்டுறவு தேர்தல்களில் என்பிபிக்கு பின்னடைவு!
[Wednesday 2025-01-15 04:00]

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது.


மழைக்கு மத்தியில் களை கட்டிய பட்டத் திருவிழா! Top News
[Wednesday 2025-01-15 04:00]

வல்வெட்டித்துறை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மழைக்கும் மத்தியில் விநோதமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.


ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு கடிதம்!
[Wednesday 2025-01-15 04:00]

25 சிவில் சமூக அமைப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.


மீனவர் பிரச்சினை குறித்து விரைவில் தமிழக முதல்வருடன் பேச்சு!
[Wednesday 2025-01-15 04:00]

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.


வடகொரியாவில் இல்லாத கட்டுப்பாடுகள் இலங்கையில்!
[Wednesday 2025-01-15 04:00]

ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் சுற்று நிருபம் மூலம் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்களுடன் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வரையறை விதிக்கப்பட்டிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


கல்ஓயா உடைப்பெடுக்கும் ஆபத்து!
[Wednesday 2025-01-15 04:00]

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அம்பாறையின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர பகுதிகளில் உள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.


காற்றுச் சுழற்சிகளால் வரப் போகும் ஆபத்து!
[Wednesday 2025-01-15 04:00]

வங்காள விரிகுடாவில் கடந்த 07 ஆம் திகதி அன்று உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாத்தறைக்கு தென் மேற்கு திசையில் 380 கி.மீ. தூரத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் வேறுபட்ட அளவுகளிலான மழை தொடரும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


13இல் கை வைக்க விரும்பவில்லை!
[Wednesday 2025-01-15 04:00]

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.


18ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம்!
[Tuesday 2025-01-14 18:00]

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது. திருகோணமலையில் உள்ள சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் குறித்த தினமன்று காலை பத்து மணிக்கு கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.


அனுரவுக்கு செங்கம்பள வரவேற்பு!- நாளை சீன ஜனாதிபதியை சந்திக்கிறார்.
[Tuesday 2025-01-14 18:00]

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை, புதன்கிழமை சந்திக்கிறார்


மக்களை பட்டினி போட்டுக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது!
[Tuesday 2025-01-14 18:00]

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோ கிராம் பச்சை அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியதால் தான் பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது என சர்வஜன சக்தியின் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.


அரசியல் கைதிகள் யாரும் இல்லை!
[Tuesday 2025-01-14 18:00]

நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வீரகேசரியிடம் தெரிவித்தார்.


கலாநிதி பட்ட விவகாரம்- பாராளுமன்ற ஊழியர்களிடம் நாளை விசாரணை!
[Tuesday 2025-01-14 18:00]

பாராளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, பாராளுமன்ற ஊழியர்கள் பலர் நாளை (15) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


தினமும் 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை!
[Tuesday 2025-01-14 18:00]

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


மடுவிற்கு சென்ற இளைஞன் மல்வத்து ஓயாவில் மூழ்கி மாயம்!
[Monday 2025-01-13 18:00]

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக மடு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை!
[Monday 2025-01-13 18:00]

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.


அனைவரது வாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டும்!
[Monday 2025-01-13 17:00]

தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற முதுமொழிக்கு அமைய எமது உறவுகள் அனைவரதுவாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டுமென பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். என வட மாகாண சபையின் அவைத்தலைவர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி விபத்தில் இருவர் காயம்!
[Monday 2025-01-13 17:00]

கிளிநொச்சியில் இன்று (இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஓட்டுனர் பயிற்சி பாடசாலையின் முச்சக்கர வண்டியினை, அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.


இன்று சீனா பயணமாகிறார் ஜனாதிபதி!
[Monday 2025-01-13 17:00]

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார்.


எமது பிரச்சினையை பேசாமல் ஸ்டாலினுடன் செல்பி எடுக்கவா சென்றனர்?
[Monday 2025-01-13 17:00]

இந்தியா - தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.


கடத்தப்பட்ட மாணவி மீட்பு- கடத்தியவரும் கைது!
[Monday 2025-01-13 17:00]

கண்டி கெலிஓயா பிரதேசத்தில் 18 வயது பாடசாலை மாணவியான பாத்திமா ஹமீரா என்ப​வரை கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர், பாடசாலை மாணவியுடன் ‌அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வெல்லாவெளி விபத்தில் ஒருவர் பலி!
[Monday 2025-01-13 17:00]

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்துறை சவலக்கடை வீதியில் பிலாலி வெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்றுமாலை விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.


மன்னாரில் கைதான மீனவர்களுக்கு விளக்கமறியல்!
[Monday 2025-01-13 17:00]

மன்னார் கடற்பரப்பில் நேற்று கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த 8 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் அந்த மீனவர்களை ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.


புதுக்குடியிருப்பில் சிறுமியை வைத்து பாலியல் தொழில்! - கணவன் மனைவி கைது.
[Monday 2025-01-13 17:00]

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும், அவரது கணவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


பிரதான நீர்த்தேக்கங்கள் நிரம்பின!
[Monday 2025-01-13 17:00]

73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் சாவகச்சேரியில் கைது!
[Monday 2025-01-13 17:00]

போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டனர். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலிற்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 23 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் 200 போதை மாத்திரைகளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.


போட்டியில் இருந்து விலகினார் அனிதா ஆனந்த்!
[Monday 2025-01-13 06:00]

கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் விலகினார். இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த், தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


பிரிந்தவர்களை இணைக்க உள்ளக கலந்துரையாடல்!
[Monday 2025-01-13 06:00]

பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


இலங்கையில் 400 றோ உளவாளிகள்!
[Monday 2025-01-13 06:00]

இந்தியாவின் றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா