Untitled Document
January 28, 2025 [GMT]
சீனா செல்கிறார் ரில்வின் சில்வா!
[Sunday 2025-01-26 17:00]

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையிலான உத்தேச இருதரப்பு அரசியல் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
[Tuesday 2025-01-28 18:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு- இந்தியா கடும் கண்டனம்!
[Tuesday 2025-01-28 18:00]

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஷ்டித்து போராட்டங்களை முன்னெடுக்க முடிவு!
[Tuesday 2025-01-28 18:00]

இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் புரிந்துக்கொள்ளாது, இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளேயே வாழும் நிலை காணப்படுவதால் இம்முறை இலங்கையின் சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஷ்டித்து வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்திய மீனவர்களை சுட்டுப் பிடித்தது கடற்படை- துணைத் தூதுவர் பார்வையிட்டார்!
[Tuesday 2025-01-28 18:00]

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இயேசுவின் பாதத்தில் இருந்து வடிந்த நீர்! Top News
[Tuesday 2025-01-28 18:00]

வடமராட்சி கிழக்கு -கட்டைக்காடு பகுதியில் உள்ள சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் பாதத்தில் இருந்து இன்று நீர் கசிந்துள்ளது . ஆண்டவர் இயேசுவின் கால் விரல் பகுதியில் இருந்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் கசிந்தது. இதை அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஆண்டவரின் காலில் இருந்து வழிந்தோடும் நீரை எடுத்துச் சென்றனர்.


புலிகளுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் மஹிந்த நோபல் பரிசை வென்றிருப்பார்!
[Tuesday 2025-01-28 18:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.


புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறாராம் அனுர!
[Tuesday 2025-01-28 18:00]

உத்தியோகபூர்வ இல்லம் பறிக்கப்படுமென்றும் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவார்களென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியது, தேர்தலில் அவர்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந் தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.


மயக்க மருத்து தெளித்து 12 பவுன் நகைகள் கொள்ளை!
[Tuesday 2025-01-28 18:00]

சூரிய மின்கலம் (சோலார்) திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி, வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சரத் பொன்சேகா மீதான தாக்குதல் வழக்கு விசாரணை!
[Tuesday 2025-01-28 18:00]

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி "துர்கா"வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


சிவமோகன் இடைநிறுத்தத்திற்கு எதிராக இடைக்கால தடைவிதிக்க மறுப்பு!
[Tuesday 2025-01-28 18:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தம்மை இடைநிறுத்தி எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி கோரி அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் அத்தகைய இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.


தமிழரசின் முடிவுக்காக காத்திருக்க தீர்மானம்!
[Tuesday 2025-01-28 05:00]

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்த முத்தரப்பு கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தாம் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி அக்கட்சி இறுதித் தீர்மானத்தை அறிவிக்கும் வரை காத்திருப்பதற்கு உத்தேசித்திருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் விரிவுரையாளர்கள் போராட்டம்!
[Tuesday 2025-01-28 05:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2 வாரங்களுக்குள் நாமலைக் கைது செய்ய திட்டம்!
[Tuesday 2025-01-28 05:00]

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்னும் இரு வாரங்களில் கைது செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கும் வகையில் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.


மஹிந்தவின் சடலத்தை பாதுகாக்க வேண்டும்!
[Tuesday 2025-01-28 05:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சடலம் எதிர்கால சந்ததியினருக்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அஜித் ராஜபக்ச, 30 வருட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மஹிந்த ராஜபக்ஷ தேசத்தின் போற்றத்தக்க ஆளுமை என்று கூறினார்.


யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களின் காற்றின் தரம் மோசம்!
[Tuesday 2025-01-28 05:00]

நாட்டின் 6 நகரங்கள் மற்றும் பிரதேசங்களில் காற்றின் தர நிலை சற்று மோசமான நிலையை எட்டியுள்ளது.யாழ்ப்பாண நகரம், கொழும்பு நகரம், காலி கரப்பிட்டி, திருகோணமலை நகரம், பொலன்னறுவை நகரம் மற்றும் அனுராதபுரம் நகரங்களில் இவ்வாறு காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யோஷித மீது ஒரு மாதத்துக்குள் வழக்கு!
[Tuesday 2025-01-28 05:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச, குற்றப் பிரேரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஒரு மாத காலத்துக்குள் பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.


விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து!
[Tuesday 2025-01-28 05:00]

விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.


பிரதமரைச் சந்தித்தார் பிரித்தானிய அமைச்சர்!
[Tuesday 2025-01-28 05:00]

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட் நேற்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமசூரியவை சந்தித்தார்.


வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விசேட வர்த்தமானி!
[Tuesday 2025-01-28 05:00]

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விசேட வர்த்தமானியை அவர் வெளியிட்டார்.


மியான்குளம் காட்டில் இளைஞனின் சடலம்!
[Tuesday 2025-01-28 05:00]

வாழைச்சேனை - மியான்குளம் காட்டுப் பாதையில் மாடு மேய்க்கச் சென்ற 19 வயது இளைஞன் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டவான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜீவேந்திரன் சினேஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


பேராசிரியர் ரகுராமுக்கு ஆதரவாக விரிவுரையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம்!
[Monday 2025-01-27 16:00]

பதவி விலகிய கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமிற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.


தனியார் அபகரித்துள்ள பாடசாலைக் காணி- மீட்டுத் தரக் கோரி போராட்டம்!
[Monday 2025-01-27 16:00]

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பகுதியில் பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அபகரித்து வைத்திருப்பதால் அதனை மீட்டுத்தரக்கோரி இன்று காலை முதல் பாடசாலை சமூகத்தினர், ஊர் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அரசாங்கத்தை விமர்சிப்பதால் குடும்பத்தினரை இலக்கு வைக்கிறார்கள்!
[Monday 2025-01-27 16:00]

நானோ அல்லது எனது சகோதரர் யோசித ராஜபக்சவோ தவறிழைத்துள்ளோம் என்பதை அரசாங்கம் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச சவால்விடுத்துள்ளார்.


உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் - 2 நாட்களில் தீர்ப்பு!
[Monday 2025-01-27 16:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தில் சில சரத்துக்களை அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை முடித்த உயர் நீதிமன்றம், அந்த முடிவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சபாநாயகருக்கு அனுப்புவதாக இன்று அறிவித்துள்ளது.


தடுத்து வைக்க போதிய ஆதாரங்கள் இல்லை - யோஷிதவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!
[Monday 2025-01-27 16:00]

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


மகிந்தவுக்கு வேறு வீடு கொடுப்போம்!
[Monday 2025-01-27 16:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் அதற்குப் பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நாயை தூக்கிலிட்டு கொன்ற பெண் கைது!
[Monday 2025-01-27 16:00]

நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், மாங்குளத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரிக்கும் சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 வயதுடைய பெண்ணை மாங்குளம் பொலிஸார் கைது செய்தனர்.


டிஜிட்டல் அடையாள அட்டையால் தரவுகள் வெளியே போகாது!
[Monday 2025-01-27 16:00]

டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.


தமிழ் காதலனின் தந்தையை அடித்துக் கொன்றார் சிங்கள காதலியின் தாத்தா!
[Monday 2025-01-27 16:00]

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இடம்‌ பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.


முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல்!
[Monday 2025-01-27 16:00]

முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா