Untitled Document
October 24, 2026 [GMT]
 
மதத்தை வென்ற மனித நேயம்: இந்து கோவில் கட்ட நிலம் வழங்கிய இஸ்லாமிய குடும்பம்!
[Sunday 2020-09-20 08:00]

சிவமொக்கா டவுன் ஜோகா ரோடு பகுதியில் மொய்தீன் தவக்கல் என்பவரின் குடும்பத்துக்கு சொந்தமான 875 சதுர அடி பரப்பளவில் இடம் உள்ளது. அந்த இடத்தில் அதேப்பகுதியை சேர்ந்த பசப்பா என்பவரின் மகன் உமேஷ், லட்சுமணா என்பவரின் மகன் கோவிந்தா, ராமண்ணாவின் மகன் ரவிசந்திரா ஆகியோர் ஒரு கல்லை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.


பிரித்தானியாவில் பாம்பை முகக்கவசமாக பயன்படுத்திய பயணி: பதறிய பயணிகள்!
[Tuesday 2020-09-15 19:00]

பிரித்தானியாவில் பேருந்தில் பயணிக்கும்போது முகத்தில் மாஸ்க் அணிவதற்கு பதில் பயணி ஒருவர் பயன்படுத்திய விடயத்தைக் கண்ட சக பயணிகள் திகிலடைந்தனர். மாஸ்குக்கு பதில் அந்த பயணி பயன்படுத்திய பொருள், உண்மையில் பொருளல்ல, உயிரினம்! ஆம், பாம்பு ஒன்றை கழுத்தில் அணிந்து அதைக் கொண்டு முகத்தை மறைத்திருந்தார் அவர்.


விரைவில் திருமணமாகவிருந்த கனேடிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Sunday 2020-09-13 18:00]

கனடாவில் விரைவில் திருமணம் நடக்கவுள்ள பெண்ணுக்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ளது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Port Severn-ஐ சேர்ந்தவர் Stephanie Thompson (36). இவருக்கு தான் LOTTO MAX லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ளது.


பூமியை நெருங்கிக்கொண்டிருக்கும் பேராபத்து!
[Saturday 2020-09-12 08:00]

நாசா மையமானது அவ்வபோது சூரிய மண்டலத்தில் நடக்கும் பல ஆச்சரிய விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய விஷயத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி ஒரு சிறுகோள் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் அளவில் பெரியது. கிட்டத்தட்ட இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடையது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


திடீர் கோடீஸ்வரியான கனேடிய பெண்!
[Monday 2020-09-07 17:00]

கனடாவில் பெண்ணொருவருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Richmond-ஐ சேர்ந்தவர் Lisa Tsang.இவருக்கு Lotto 6/49ல் $1 மில்லியன் பரிசு விழுந்தது. இது குறித்து அவர் கூறுகையில், பரிசு விழுந்ததாக எனக்கு தகவல் வந்தபோது, ​​நான் அதிர்ச்சியிலும் அவநம்பிக்கையிலும் இருந்தேன்.


ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!
[Sunday 2020-09-06 17:00]

ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. சைபீரியாவில் உள்ள தந்த்ரா பகுதியில் தொலைக்காட்சிக் குழுவினர், சுமார் 100 அடி ஆழமும், 70 அடி விட்டமும் கொண்ட பிரமாண்டமான பள்ளம் ஒன்றினைப் படம் பிடித்தனர். கடந்த 2013ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 9வது பள்ளம் இதுவாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


17 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட 7 கிலோ எடையுள்ள பொருள்: அதிர்ந்த மருத்துவர்கள்!
[Saturday 2020-09-05 16:00]

வயிற்றுவலியால் அவதியுற்ற இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த ஸ்வீட்டி குமாரி (17) என்ற அந்த இளம்பெண்ணை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவருக்கு புற்றுநோய் இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி குமாரிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றுக்குள்ளிருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.


ஐந்து குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றெடுத்த இலங்கை பெண்!
[Friday 2020-08-28 18:00]

இலங்கையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கொழும்பில் உள்ள பெண்களுக்கான டி சோய்சா மருத்துவமனையிலே பெண் ஒருவர் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.


இஸ்ரேலில் மண்ணில் புதைக்கப்பட்ட பழம்பெரும் தங்கப்புதையலை கண்டுபிடித்த இளைஞர்!
[Wednesday 2020-08-26 08:00]

இஸ்ரேல் நாட்டின் ரிஹோவோட் நகரில் உள்ள தொழிற்பூங்காவுக்கு அருகே தொல்லியல் துறையினர் பல நாட்களாக ஆராய்ச்சி நடைபெற்று வந்தன. இந்த ஆராய்ச்சியில் பல இளைஞர்கள் தன்னார்வலர்களாக தங்களை இணைத்துக்கொண்டு அப்பகுதியில் புதைத்திருந்த படிமங்களை தோண்டி பரிசோதனை செய்து வந்தனர்.


கனடாவில் இளம் தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Tuesday 2020-08-25 17:00]

கனடாவில் மளிகை கடைக்கு சென்று பால் வாங்கிய தம்பதி அங்கு லொட்டரி டிக்கெட்டை ஸ்கென் செய்த போது அவர்களுக்கு $500,000 பரிசு விழுந்தது தெரியவந்துள்ளது. பிரிட்டீஷ் கொலம்பியாவின் Surreyவை சேர்ந்த தம்பதியான ராபர்ட் ஜோலிபி - மந்தீப் கில் ஆகியோர் பால் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றிருக்கின்றனர்.


50 கிலோ வயிற்றுடன் வாழ்ந்து வந்த பெண்: உள்ளே இருந்தது என்ன தெரியுமா?
[Monday 2020-08-24 17:00]

பலூன் போல தன் வயிறு வீங்கிக்கொண்டே சென்றதால் கால்களும் வீங்கி நடக்க முடியாத நிலைமைக்கு சென்ற பெண் ஒருவர் நேற்றைய தினம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்தியாவின் தலைநகர் டில்லியைச் சேர்ந்த அந்த 52 வயது பெண்ணை சோதித்த மருத்துவர்கள், அவரது கர்ப்பப்பையில் பிரமாண்ட கட்டி ஒன்று வளர்ந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.


ஒரு தலை, நான்கு கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை!
[Sunday 2020-08-23 17:00]

நான்கு கால்கள், நான்கு கைகள், ஒரு தலையுடன் மிகவும் வினோதமாக பிறந்துள்ள ஆண் குழந்தையால் பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் சுஷாந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.


இங்கிலாந்தில் ஏலத்தில் விடப்பட்ட மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி: எவ்வளவு தெரியுமா?..
[Sunday 2020-08-23 08:00]

மகாத்மா காந்தி வட்ட வடிவ மூக்கு கண்ணாடி அணிவது வழக்கம். அவரது, தங்க பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி ஒன்று இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஹன்ஹாம் என்ற இடத்தில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது.


தங்கத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்ட அவுஸ்திரேலியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Sunday 2020-08-23 08:00]

அவுஸ்திரேலியாவில் இரண்டு பேர் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 1.87 கோடி மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை கண்டெடுத்துள்ளது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் தர்ணகுல்லா என்ற நகரம், தங்க சுரங்க நகரம் ஆகும். இங்கு பிரெண்ட் ‌ஷானன், ஈதன் வெஸ்ட் என்னும் 2 பேர், பூமியில் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.


இந்தோனேசியாவில் இறுதிச்சடங்கின்போது கண் விழித்த சடலம்!
[Friday 2020-08-21 18:00]

இந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமிக்கு இறுதிச்சடங்கின் போது உயிர் வந்து பின்னர் ஒரு மணி நேரத்தில் மீண்டும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Siti Masfufah Wardah என்ற 12 வயது சிறுமி நாள்பட்ட நீரிழிவு மற்றும் வேறு சில உடல்நல கோளாறுகளுடன் கடந்த 18ஆம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


டோக்கியோவில் நிறுவப்பட்டுள்ள நூதன கழிப்பறை!
[Thursday 2020-08-20 17:00]

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஜப்பான்காரர்களின் அணுகுமுறையும் பார்வையும் வித்தியாசமானதாக இருக்கும். பலரையும் முகம் சுளிக்க வைக்கும் ஒரு விஷயத்தைக் கூட அழகானதாக மாற்றுவார்கள். அவ்வகையில், பொது கழிப்பறைகள் குறித்த மக்களின் கருத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, புதுமையான கழிப்பறைகளை அறிமுகம் செய்துள்ளனர்.


கருவில் சிசுவை கண்காணிக்கும் கோர உருவம்: மருத்துவ பரிசோதனையின் போது அதிர்ந்த மருத்துவர்கள்!
[Monday 2020-08-17 17:00]

பொதுவாக ‘அல்ட்ராசவுண்ட்’ என்ற விஷயத்தை தமிழில் மீயொலி என்கிறார்கள். சாதாரணமாக மனித செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலிகளைத்தான் கேட்க முடியும் என்பதால் மீயொலிதனை மனிதர்களால் கேட்க முடியாது. அதிலும் ஐந்தறிவு படைத்த சில குறிப்பிட்ட விலங்குகளால் மட்டுமே கேட்க முடியும். அந்த வகையான மீயொலியைக் கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.


மூன்று ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த மனைவிக்கு உயிரளித்த பாசக்கார கணவன்: நெகிழ்ச்சி பதிவு!
[Tuesday 2020-08-11 17:00]

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர், 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த தனது மனைவியுடன் புதுமனை புகுவிழா கொண்டாடிய சம்பவம் உறவினர்களை திகைக்க வைத்துள்ளது. முடி ஏற்றுமதி செய்யும் வணிகத்தை நடத்தி வரும் 57 வயதான சீனிவாஸ் மூர்த்தி என்ற நபரே மறைந்த தனது மனைவியின் மீதுள்ள பாசத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி அனைவரையும் கலங்க வைத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் சீனிவாஸின் மனைவி மாதவி இரண்டு மகள்களுடன் காரில் திருப்தி சென்ற கொண்டிருந்த போது லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.


காட்டுப்பன்றியால் அசிங்கப்பட்ட ஜேர்மனியர்!
[Friday 2020-08-07 17:00]

ஜேர்மனியில் ஆடையின்றி நிர்வாணமாக சூரியக்குளியல் போட்ட ஒருவரின் பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தது காட்டுப்பன்றி ஒன்று. பெர்லினுக்குமேற்கே உள்ள ஏரி ஒன்றின் கரையில் சூரியக்குளியல் போட்டுக்கொண்டிருந்திருக்கிறார் ஒருவர். அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றி ஒன்று, அவரது லாப் டாப் வைத்திருக்கும் பையைத் தூக்கிக்கொண்டு ஓட, தான் பிறந்த நாள் உடையில் இருப்பதையோ, அங்கு பலர் தன்னைப்போலவே ஏரியின் அழகை ரசித்துக்கொண்டிருப்பதையோ பற்றிக் கவலைப்படாமல், பன்றியைத் துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறார் அவர்.


அமெரிக்காவில் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்ட தாய் மற்றும் மகள்!
[Thursday 2020-08-06 08:00]

அமெரிக்காவில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட ஒரு தாயையும் மகளையும் வித்தியாசம் காணமுடியாமல் அவர்களது கணவர்களே திணறிப்போகிறார்களாம். முறையே ப்ளோரிடா மற்றும் நியூயார்க்கில் வாழும் Dawn Hubsher (60) மற்றும் Cher Hubsher (30) இருவரையும் அருகருகே பார்ப்பவர்கள், அவர்களை இரட்டையர்கள் என்றே எண்ணிவிடுகிறார்களாம்.


மக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருக்கும் அரிய வகை பேபி டிராகன்!
[Tuesday 2020-08-04 17:00]

டிராகன் என்கிற ஒரு விலங்கினத்தை, நாம் இதுவரை திரைப்படங்களும், யூகிக்க பட்ட ஓவியம் மூலமாக மட்டுமே பார்த்து வந்த நிலையில், டிராகன் என்கிற இனம் ஒன்று இருந்தது என கூறி, மூன்று பேபி டிராகன்களை ஸ்லோவேனியா குகையில் காட்சிக்கு வைத்துள்ளார். திரைப்படங்களில் காட்ட கூடிய, நெருப்பு குழம்பை காக்கும் டிராகன் போல் இல்லாமல், ஓல்ப் என கூடிய, நீருக்கு அடியில் வாழக்கூடிய டிராகன் இனத்தை சேர்ந்த அரிய வகை உயிரினமான இது 100 ஆண்டுகளுக்கு மேல் .


பிரித்தானிய கடற்கரையில் சடலமாக கிடந்த 15 அடி நீளமுள்ள மர்ம மிருகம்!
[Sunday 2020-08-02 08:00]

பிரித்தானியாவில் சுமார் 15 அடி நீளமுள்ள ராட்சத கடல் மிருகம் போன்று இருக்கும் உயிரினத்தின் புகைப்பத்தைக் கண்டு பலரும் திகைத்து போயுள்ளனர். பிரித்தானியாவின் Merseyside கடற்கரையில் கடந்த புதன் கிழமை, குறித்த கடல் மிருகம் காணப்பட்டது. இது பார்ப்பதற்கே மிகவும் வினோதமாக உள்ளது. 15 அடி நீளம் கொண்ட இந்த உயிரினம் மீது மற்றொரு உயிரினம் இணைக்கப்பட்டுள்ளதைப் போன்று தெரிகிறது. அது குட்டியின் தொப்புள் கொடியாக இருக்கலாம் அல்லது குட்டியை பெற்றெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


33 வருடங்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த முதியவர்!
[Friday 2020-07-31 08:00]

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவித்தன. அதே நேரத்தில், 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் இந்த கொரோனாவால் ஆல் பாஸ் ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.


ரூ.47 ஆயிரத்திற்கு ஏலத்தில் விலை போன அதிசய மீன்!
[Saturday 2020-07-25 17:00]

பொதுவாக மீன் என்றால் அசைவப்பிரியர்களுக்கு அலாதி பிரியம் என்றே கூறலாம். ஆம் மட்டன், சிக்கன் கறிகளை விட கடல் உணவுகளையே அசைவப் பிரியவர்கள் அதிகமாக விரும்புகின்றனர். இங்கு ஒரே ஒரு மீனை ஏலம் எடுப்பதற்கு கூட்டம் திரண்டதோடு, அதனை 47 ஆயிரத்திற்கு இறுதியில் ஏலம் எடுத்துள்ளனர்.


கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி!
[Saturday 2020-07-25 07:00]

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹூவின ஹடகளி கிராமத்தை சேர்ந்த 101 வயது மூதாட்டியான ஹல்லம்மா என்பவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஏழு நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி உள்ளார் என்பது உறுதியானது.


முதலில் விமானத்தை பயன்படுத்தியது ராவணன்தான்: இலங்கை அரசு!
[Sunday 2020-07-19 17:00]

ராமாயணத்தில் சீதையை ஆகாயம் மார்க்கமாக ராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறை வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ராமர் ராணவனுடன் சண்டையிட்டு சீதையை மீட்பதாக புராணம் கூறுகிறது. இலங்கை அரசு ராவணன்தான் முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தினார். அவர்தான் உலகின் முதல் விமானி என்று கூறி வருகிறது. இந்நிலையில் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.


மனித உதடு மற்றும் பல்லை கொண்டிருக்கும் அதிசய மீன்!
[Sunday 2020-07-19 17:00]

மனிதனின் பல் மற்றும் உதடு போன்று இருக்கும் மீனின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அப்படி ஒரு மீன் உண்மையிலே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுலை மாதம் 2-ஆம் திகதி மலேசியாவை சேர்ந்த @raff_nasir என்ற இணையவாசி, தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், மனிதனின் உதடு மற்றும் பல் இருக்கும் மீனின் புகைபடத்தை பதிவிட்டு, இதன் உதடுகள் என்னுடையதை விட வெப்பமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்களை வியப்பில் ஆழ்த்திய வைரம் பதித்த முகக்கவசம்!
[Saturday 2020-07-11 17:00]

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை கவர பல்வேறு வண்ணங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களுடன் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் செய்திகளை பார்த்து வருகிறோம். ஆனால், சூரத்தில் உள்ள நகைக்கடை இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்ய இளைஞன் கொடுத்த வரதட்சணையால் அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்!
[Friday 2020-07-10 17:00]

இந்தோனேசியாவில் அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வரதட்சணையாக மணமகன் கொடுத்த பொருள் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் நடத்தும் திருமணத்தில் சில வித்தியாசங்கள் இருக்கும். அதில் முக்கியமானது மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை கொடுப்பது. அப்படி Iwan Firman Wahyudi என்ற சாதாரண பணியில் உள்ள ஏழை இளைஞனுக்கும், Helmi Susanti என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.


தடைகளை தாண்டி பிறந்த குழந்தை: அதிர்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்!
[Thursday 2020-07-09 17:00]

பெண் கருத்தடை சாதனத்தை மீறி கருத்தரித்த ஒரு பெண்ணிற்கு வடக்கு வியட்நாமில் உள்ள ஹைபோங் சர்வதேச மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அதிசயம் என்னவென்றால் அந்த குழந்தையின் கையில் அவரது தாயின் கருத்தடை சாதனமும் இருந்துள்ளது. இதனை பார்த்த மருத்துவர் மகப்பேறியல் நிபுணர் டிரான் வியட் பூங் ஆச்சர்யம் அடைந்து, குழந்தை கருத்தடை சாதனத்தை கையில் வைத்திருப்பதை அப்படியே புகைப்படம் எடுத்துள்ளார்.

Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா