Untitled Document
October 24, 2026 [GMT]
 
நாட்டின் பார்வையை தன் பக்கம் திருப்பிய 2½ வயது சிறுவன்!
[Thursday 2020-11-19 17:00]

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜீவன்மாணிக்கம். அவருடைய மனைவி திவ்யா. இந்த தம்பதியின் ஒரே மகன் ரினேஷ் ஆதித்யா (வயது 2½). ஜீவன்மாணிக்கம் கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். திவ்யா மற்றும் ரினேஷ் ஆதித்யா ஆகியோர் ஆண்டிப்பட்டியில் வசித்து வருகின்றனர்.


கனடாவில் சேற்றுப் பள்ளத்தில் விழுந்த குதிரை: பின்னர் நடந்த அதிசயம்!
[Wednesday 2020-11-18 17:00]

கனடாவில் சேற்று குழிக்குள் சிக்கிய 680 கிலோ எடை கொண்ட குதிரை ஒன்று பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கனடாவின் Edmontonல் உள்ள குழிக்குள் தான் குதிரையானது சிக்கி கொண்டது. Fysik என்ற பெயர் கொண்ட அந்த 11 வயது குதிரை எதிர்பாராதவிதமாக சேற்றுப் பள்ளத்தில் தவறி விழுந்து விட்டது.


இந்தோனேஷிய நபருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த அதிர்ஷ்டம்!
[Wednesday 2020-11-18 08:00]

இந்தோனேஷியாவில் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் மூலம் நபர் ஒருவர் இப்போது மில்லியனராக மாறியுள்ளார். இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவின் Kolang-ல் Josua Hutagalung என்ற 33 வயது நபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரின் வீட்டின் கூரைப் பகுதியை ஏதோ பொருள் ஒன்று உடைத்து கீழே விழுவது போன்று இருந்தது.


உருவத்தில் ஆண், உள்ளுறுப்பில் பெண்: மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அமெரிக்கர்!
[Tuesday 2020-11-17 17:00]

சிறுநீர் கழித்தபின் வலி ஏற்படுவதால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை அறிவதற்காக மருத்துவமனைக்கு சென்ற இளைஞர் ஒருவரின் வயிற்றுக்குள் கருப்பையும் கர்ப்பப்பையும் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர் மருத்துவர்கள். அமெரிக்காவில் வாழும் Mikey Chanel (18) ஆணாக பிறந்தவர், ஆணாகவே வளர்க்கப்பட்டும் இருக்கிறார். வளரும்போது, ஒருவேளை தான் ஒரு திருநங்கையோ என்ற எண்ணம் அவ்வப்போது Mikey மனதில் வந்து போயிருக்கிறது.


13 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட 48 வயது விவசாயி!
[Tuesday 2020-11-17 08:00]

பிலிப்பைன்சில் 13 வயது சிறுமியை 48 வயது ஆண்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. பிலிப்பைன்சின் Maguindanao-வில் இருக்கும் Mamasapano-வில், கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் திகதி 13 வயது சிறுமி, 48 வயது நபரை திருமணம் செய்யும் படி நிர்பந்திக்கப்படுகிறார்.


10 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கி வரும் நபர்!
[Tuesday 2020-11-17 08:00]

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் ஆசிப் உசைன் சோஹைல். இவர் தனது மறைந்த தந்தை மற்றும் மகளின் நினைவாக சகினா தொண்டு அமைப்பு ஒன்றை கடந்த 2010ம் ஆண்டு உருவாக்கினார். இந்த அமைப்பின் கீழ் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் என்ற வகையில் உணவு மற்றும் உணவு சமைக்க தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்.


கொரோனா படுத்தும் பாடு: நூதன முறையில் நடைபெற்ற திருமணம்!
[Monday 2020-11-16 08:00]

துபாயில் வசித்து வரும் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த முகம்மது ஜாசம் மற்றும் அல்மாஸ் அகமது ஆகியோருக்கு திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமகள் அல்மாஸ் இங்கிலாந்து நாட்டில் இறுதியாண்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார். ஜாசம், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர்.


சீனாவில் 85 ஆண்டு கால பாரம்பரிய கட்டிடத்தை இடிக்காமல் மற்றொரு இடத்திற்கு நகர்த்தி சாதனை!
[Friday 2020-11-13 17:00]

தொழில்நுட்பத்துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்துள்ள நாடுகள் பட்டியலில் முன்னிலையில் உள்ள நாடு சீனா. அந்நாட்டில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை ரீதியில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களையும், வணிக வளாக கட்டிடங்களையும் வானலாய உயரத்தில் கட்டி வருகின்றன.


கனேடிய நபருக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்!
[Sunday 2020-11-08 17:00]

கனடாவில் லொட்டரியில் $2 மில்லியன் பரிசை வென்றுள்ள நபர் பரிசு பணத்தில் முதலில் வீடு வாங்கவுள்ளார். Nanaimo நகரை சேர்ந்தவர் Brad Rowan. இவருக்கு Daily Grand லொட்டரியில் $1 பரிசு விழுந்தது. அந்த பரிசு பணத்தை வைத்து B.C./49 லொட்டரியில் ஓன்லைன் மூலம் விளையாடினார்.


நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி!
[Sunday 2020-11-08 08:00]

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இடும்பன் நகரைச் சேர்ந்த அழகம்மாள் என்பவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது.


பிரேசிலில் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட இளைஞர்!
[Friday 2020-11-06 17:00]

பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரேசிலைச் சேர்ந்த டியோகோ ராபெலோ என்பவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண தேதி குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை வந்ததால், இருவரும் பிரிந்துவிட்டனர்.


9,000 ஆண்டுகளுக்கு முன் வனவிலங்குகளை வேட்டையாடிய பெண்கள்!
[Friday 2020-11-06 17:00]

பண்டைய காலங்களில் வேட்டைக்காரர்களின் உருவத்தைப் பற்றி பொதுவாக நாம் தொடர்புபடுத்துவது ஆண்கள்தான், ஆனால் ஒரு புதிய கண்டு பிடிப்பில் பெண்கள் வேட்டையாடி உள்ளார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. பெரு நாட்டில் ல ப்ளீஸ்டோசீன் மற்றும் ஆரம்பகால ஹோலோசீன் மொத்தம் 107 தளங்களில் புதைக்கப்பட்ட 427 நபர்களின் எலும்புகள் அங்கு கண்டறியப்பட்டது. இது 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.


இலங்கையில் அரியவகை அரணை உயிரினம் கண்டுபிடிப்பு!
[Monday 2020-11-02 17:00]

இலங்கைக்கே உரிய அரியவகை அரணை உயிரினம் கண்டுபிடிப்பு! வவுனியா, ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைக் காட்டுப் பகுதிக்கு கடந்த வாரம் சென்ற ஒருவர் Dasia halianus என்ற இலங்கைக்கே உரித்தான அரணை இனம் ஒன்றை மரத்தில் அவதானித்த நிலையில் அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி இவருக்குத்தான்: கணித்த பிரபல கரடி!
[Sunday 2020-11-01 08:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று சைபீரிய பழுப்புக்கரடி கணித்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் 3-ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதைய அமெரிக்க அதிபரும், குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டிரம்ப் பற்றும் இருக்கும் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


முக்கிய நிகழ்ச்சிக்காக 26 மணி நேரம் பயணம் செய்த நாய்க்குட்டி!
[Thursday 2020-10-29 17:00]

எஜமானரின் திருமணத்தில் பங்கேற்க 26 மணி நேரம் பயணம் செய்த நாய்க்குட்டி! தன்னை வளர்த்த எஜமானரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக நாய்க்குட்டி 26 மணிநேரம் பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் பணிபுரிந்து கொண்டிருந்த கேரள பெண் ஒருவர் நாய்க்குட்டியை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்.


வித்தியாசமான சாதனை படைத்த இந்திய நகைக்கடை அதிபர்!
[Sunday 2020-10-25 18:00]

ஹைதராபாத்தில் ஹால்மார்க் ஜூவல்லர்ஸ் என்னும் நகைக்கடையை நடத்தி வருபவர் கோட்டி ஸ்ரீகாந்த். இவர், 2018 ஆம் ஆண்டு பல வடிவங்களில் மோதிரம் செய்யும் பணியினை தொடங்கினார்.


ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்தி வரும் மாற்றுத்திறனாளி!
[Saturday 2020-10-24 08:00]

பாகிஸ்தானில் 33 லட்சம் மாற்று திறனாளிகள் உள்ளனர். ஆனால், 21 கோடி மக்கள் தொகையில் 13 சதவீதத்தினர் அளவுக்கு மாற்று திறனாளிகள் உள்ளனர் என்று மற்றொரு ஆய்வு தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சாமுந்திரி நகரில் வசித்து வருபவர் முகமது இக்ரம் (வயது 32). 9 பேர் கொண்ட ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் ஒருவராக பிறந்த இக்ரம் பள்ளி படிப்பு கிட்டாதவர். உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்கான பண வசதி இல்லாதவர். இவர் சிறு வயதில் இருந்து ஸ்னூக்கர் விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.


சூரியனில் திடீரென உருவாகியிருக்கும் மிகப்பெரிய கரும்புள்ளி!
[Friday 2020-10-23 08:00]

சார்ஜாவில் வானியல், விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சூரியனில் பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை நேற்று கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகம்மது தலபா கூறியதாவது:- சூரியனில் கருப்பு புள்ளி என்றால் அது உண்மையில் கருப்பான நிறத்தில் காணப்படும் புள்ளி அல்ல. சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் வெகு தொலைவில் நமக்கு கரும் புள்ளியாக தெரிகிறது.


வெளிநாட்டில் இருந்தபடி உள்ளூரில் வீட்டுக்குள் புகுந்த திருடனை போலீசாரிடம் சிக்கவைத்த தமிழர்!
[Wednesday 2020-10-21 17:00]

சென்னையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் திருடன் புகுந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சிசிடிவி கமெரா மூலம் அதை பார்த்த உரிமையாளர் திருடனை பொலிசில் சிக்க வைத்துள்ளார். போரூரில் தனியாக வசித்து வருபவர் சண்முக சுந்தரவள்ளி (67). இவரது மகன் அருள்முருகன், அயர்லாந்தில் குடும்பத்துடன் வசித்து வசிக்கிறார். இந்நிலையில், மூதாட்டி நேற்று அண்ணா நகரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த குழந்தை செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
[Friday 2020-10-16 08:00]

ஐக்கிய அரபு அமீரகத்தின் மகப்பேறு மருத்துவர் ஒருவர் வெளியிட்ட பச்சிளம் குழந்தையின் புகைப்படம் இணையதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று மருத்துவர் அணிந்திருந்த மாஸ்கை, கைகளால் பறிக்கும் அந்த புகைப்படமே தற்போது இணையத்தில் கோண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் தத்தளித்துவரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


பிரதமராக பதவியேற்ற 16 வயது சிறுமி: எந்த நாட்டில் தெரியுமா?..
[Friday 2020-10-09 17:00]

பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமியொருவர் பதவியேற்றுக் கொண்டார். இதன்படி, தெற்கு பின்லாந்தில் உள்ள வாக்சி (Vaaksy) என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆவா முர்டோ (Aava Murto) என்ற குறித்த சிறுமி நாட்டின் பிரதமராக நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். பாலின சமநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 11ஆம் திகதியை பெண் குழந்தைகளுக்கான சா்வதேச தினமாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது.


இந்தோனேஷியாவில் மகனுக்கு \'கூகுள்\' என பெயரிட்ட தம்பதி!
[Friday 2020-10-09 17:00]

இந்தோனேஷியாவில் எல்லா கரின் (வயது 27), ஆன்டி சாஹ்யா சாபுத்ரா (வயது 31) என்ற தம்பதியர் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்துள்ளது ஆச்சரித்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் பிறந்த இந்த குழந்தைக்கு பெயர் வைக்காமல் பெற்றோர்கள் இருந்த நிலையில், தொழில்நுட்ப சம்பந்தமான பெயரை வைக்க வேண்டும் என்று தேடி வந்துள்ளனர். இதனால் மூன்று மாதம் காத்திருந்த இந்த தம்பதிகள் கூகுள் என்று பெயர் வைத்து அசத்தியுள்ளனர்.


எகிப்தில் 2,500 வருடங்களுக்கு முந்தைய சவப்பெட்டி கண்டெடுப்பு: திறந்த போது ஆச்சரியத்தில் மூழ்கிய ஆய்வாளர்கள்!
[Thursday 2020-10-08 17:00]

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் எகிப்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட உடலை தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றனர். பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட 59 மர சவப்பெட்டியினை எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த பெட்டிகளை சமீபத்திய அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்துள்ளனர். மேலும், கண்டெடுக்கப்பட்ட பெட்டிகளை திறந்து பார்க்கையில் உள்ளே ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் இருந்துள்ளது. இதனை காண மக்கள் பலர் சம்பவ இடத்தில் ஒன்றுகூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


திடீரென அடித்த அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடிப்போன கனேடிய பெண்!
[Thursday 2020-10-08 17:00]

கனடாவை சேர்ந்த பெண்ணுக்கு லொட்டரியில் $60,291.70 பரிசு விழுந்துள்ள நிலையில் அவர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். ரிச்மண்டை சேர்ந்தவர் Jean Hsu. இவருக்கு தான் Lotto Maxல் $60,291.70 பரிசு விழுந்துள்ளது. அவர் கூறுகையில், லொட்டரியில் யாருக்கு வேண்டுமானாலும் பரிசு விழும், ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்றே நினைத்தேன்.


இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளைஞரின் வித்தியாசமான முககவசம்!
[Tuesday 2020-10-06 17:00]

கொரோனா வைரஸை தடுக்க பலரும் முககவசம் அணிய வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், முகமூடி வித்தியாசமாக தயாரித்து பல நிறுவனங்களும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு நபர் அணிந்திருந்த முககவசம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா!
[Monday 2020-10-05 08:00]

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா 3 தலைமுறைகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.


மெக்ஸிகோவில் நிலத்தை தோண்டியபோது சிக்கிய ராட்சத எலி!
[Friday 2020-10-02 08:00]

மெக்ஸிகோவில் நிலத்தடி வடிகால் அமைக்க நிலத்தை தோண்டியபோது ராட்சத எலி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் குழி தோண்டும் பொழுது பொம்மை எலி ஒன்று கிடைத்துள்ளது.


இலங்கையில் சுனாமியில் தொலைந்த மகனை 16 வருடங்களுக்கு பிறகு போராடி மீட்ட பாசத்தாய்!
[Tuesday 2020-09-29 08:00]

16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹூ நன்றி தெரிவிக்கின்றேன் என சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா என்பவர் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் சுனாமி அனர்த்தத்தினால் தனது 5 வயது மகனை இழந்து, மனநோயாளியாக தினமும் வாழ்ந்து வந்த நிலையில் தனது அதீத முயற்சியினால் கண்டுபிடித்திருக்கிறார் அந்த தாய்.


தங்கத்தை பிரசாதமாக வழங்கும் அதிசய கோயில்!
[Wednesday 2020-09-23 17:00]

கோவில்களில் பிரசாதம் வழங்கப்படுவது என்பது சாதாரணமான ஒன்று. பெரும்பாலும் கோவில் பிரசாதங்கள் மக்கள் உண்ணக்கூடியவையாக இருக்கும். ஆனால் சில கோவில் பிரசாதங்கள் அப்படிப்பட்டதாக இருக்காது. சிலசமயம் விலையுயர்ந்த பொருட்கள் கூட கோவில் பிரசாதமாக வழங்கப்படலாம். ஆனால் இந்தியாவில் ஒரு கோவிலில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கங்கள் பிரசாமாக வழங்கப்படுகின்றதாம்.


சிங்கப்பூர் ஆகாயத்தில் கண்கொள்ளாக் காட்சி!
[Wednesday 2020-09-23 08:00]

சிங்கப்பூர் ஆகாயத்தில் கண்கொள்ளாக் காட்சி சிங்கப்பூரின் ஆகாயத்தில் இன்று 22-09-2020 பிற்பகல் நேரத்தில் கண்கொள்ளாக் காட்சி ஒன்று பதிவானது. சூரியனின் அழகான அந்த ஒளிவட்டம் பலரின் கண்களைக் கொள்ளையடித்தது. ஒளிவட்டத்தின் அழகில் மயங்கி கழுத்து வலிக்க அந்நாந்து பார்த்துக் கொண்டே இருந்ததாகச் சிலர் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா