Untitled Document
May 20, 2026 [GMT]
 
இந்த பழம் சாப்பிடுங்க: தலைமுடி இடுப்பு வரை வளரும்!
[Sunday 2025-07-06 16:00]

பொதுவாக மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள் காரணமாக தலைமுடி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. போதியளவு ஊட்டச்சத்து இல்லாமை காரணமாக தலைமுடி உதிர்வு, முடி வறட்சியடைதல், முடி உடைதல் போன்ற முடி சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன. தலைமுடி பராமரிப்பதற்கு ஒரு சில எண்ணெய்கள் கடைகளில் விற்பனை உள்ளது. அதனை வாங்கி பயன்படுத்தும் பொழுது நாளடைவில் அதிலுள்ள ரசாயனங்கள் வேறு விதமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.


தோசைக்கு பக்காவாக பொருந்தும் புளி கார சட்னி!
[Saturday 2025-07-05 06:00]

தென்னிந்திய உணவுகளில் இட்லி,தோசை முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் இட்லி மற்றும் சோசையின் சுவையை மேமம்படுத்துவதில் சட்னி வகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. பொதுவாகவே இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி ஆகியவற்றில் ஒன்றை தான் பெரும்பாலும் செய்வார்கள். சற்று வித்தியாசமான முறையில் குறிப்பாக தோசைக்கு பக்காவாக பொருந்தும் புளி கார சட்னியை எவ்வாறு அசத்தல் சுவையில் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.


சிறுநீரக பிரச்சனைக்கு மருந்தாகும் பப்பாளி காய்!
[Friday 2025-07-04 16:00]

பொதுவாக தற்போது இருப்பவர்களுக்கு யூரிக் ஆசிட் என்பது பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகி விட்டது. யூரிக் ஆசிட் இரத்தத்தில் அதிகமானால் கீல்வாதம், சிறுநீரக கற்கள் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் யூரிக் ஆசிட் அளவைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு உணவு பழக்கங்களில் தேவை. அதே போன்று நம்முடைய வாழ்க்கை முறையையும் ஆரோக்கியமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.


முகப்பருவை வேரோடு எடுக்கும் தேங்காய் எண்ணெய் வைத்தியம்!
[Thursday 2025-07-03 16:00]

சிலரின் முகத்தில் தழும்புகள் மற்றும் முகப்பருக்கள் அதிகமாக இருப்பதை பார்த்திருப்போம். அதற்கு என்ன செய்யலாம் என கேட்ட பொழுது பலரும் வாய்க்கு வந்த வைத்தியங்களை கூறியிருப்பார்கள். இப்படி கேட்டுக் கேட்டு சலித்து விட்டது என்றால் கடைசியாக சருமத்திலுள்ள பருக்களுக்கு முடிவுக்கட்டும் வைத்தியம் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம். வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், முக ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால் முகப்பரு, கரும்புள்ளிகள், திறந்த துளைகள் மற்றும் வறண்ட சருமப் பிரச்சினை வருகின்றன.


இந்தியன் டாய்லெட் நல்லதா? வெஸ்டர்ன் நல்லதா?
[Wednesday 2025-07-02 16:00]

நவீன கால வசதிகளுக்கேற்ப வீட்டின் அமைப்பு மாறி வருகிறது. வசதியாக இருந்தாலும், ஒரு சில விடயங்கள் உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துகிறது. சமீப காலமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், இந்தியன் டாய்லெட் Vs வெஸ்டர்ன் டாய்லெட் இரண்டிற்கும் ஆயுள் வேத மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.


சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் புடலங்காய் பொரியல்!
[Tuesday 2025-07-01 16:00]

பொதுவாக காய்கறிகள் என்றாலே ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கும். அந்த வகையில், புடலங்காயும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கலை நீக்கவும், சிறுநீரக கற்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும், புடலங்காய் உடலில் உள்ள வாத நீரை வெளியேற்றவும், காய்ச்சலை தணிக்கவும் பயன்படுகிறது. புடலங்காய் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுத்து, சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த துணைப்புரிகின்றது. புடலங்காய் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால், இது உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தெரிவாக இருக்கும். இவ்வளவு நன்மைகளை கொண்டிருந்தாலும் பெரும்பாலானவர்கள் இந்த காயை ஒதுக்கிவிடுவார்கள். பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் புடலங்காய் பொரியல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்லாம்.


ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி வறுவல்!
[Monday 2025-06-30 16:00]

உங்கள் வீட்டில் நாட்டுக்கோழியை அடிக்கடி செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் நாட்டுக்கோழி செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவலை செய்யுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், இந்த ரெசிபியை செய்யலாம். ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்.


உடல் எடையை மளமளவென குறைக்கும் பார்லி கஞ்சி!
[Sunday 2025-06-29 16:00]

உடல் எடையைக் குறைப்பதற்கு பார்லி அரிசியை எவ்வாறு கஞ்சி வைத்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரித்து காணப்படுவதால் பலரும் சிரமத்தில் காணப்படுகின்றனர். மேலும் எடையைக் குறைப்பதற்கும், கடுமையான டயட் முறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நல்ல சத்தான மற்றும் உடல் எடையை குறைக்க தூண்டும் உணவினை தெரிவு செய்து சமைத்து சாப்பிட்டாலே எடையை எளிதாக குறைக்கலாம். அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் பார்லி கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


நாவூறும் சுவையில் பூண்டு தொக்கு!
[Saturday 2025-06-28 17:00]

இட்லி, தோசைக்கு எத்தனை சட்னி வகைகள் செய்தாலும், ஒருமுறை பூண்டு தொக்கை செய்து பார்த்தாலே, அந்த சுவையை மறக்கவே முடியாது. மிகச் சுலபமான முறையில் வீட்டிலேயே இந்த ருசிகரமான பூண்டு தொக்கை எப்படி செய்யலாம் என்பதைக் காணலாம். இதை சரியான அளவில் போட்டு முறையாக செய்தால் சுமார் 10 நாட்களுக்கு கெட்டு போகாமல் அப்படியே இருக்கும்.


முருங்கைகீரை ரசம் குடிங்க: தரை தொடும் தூரம் வரை தலைமுடி வளரும்!
[Friday 2025-06-27 16:00]

கிராமத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரம் கட்டாயம் இருக்கும். தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் இது போன்று மருத்துவ குணங்கள் உள்ள மரங்களை வளர்ப்பது குறைவு. இந்த முருங்கை மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை போன்ற அனைத்து பகுதிகளும் மருத்துவ பலன்கள் அதிகமாக கொண்டவையாகும். முருங்கைகீரையை கீரைகளின் அரசன் என்றும் அழைப்பார்கள். வாரத்திற்கு மூன்று முறையாவது சமைத்து சாப்பிட வேண்டும். ஏனெனின் இந்த கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், காப்பர், சோடியம், ஜிங்க் மெக்னீசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஃபைபர், புரதம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.


இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!
[Thursday 2025-06-26 16:00]

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நம்மில் சிலர் உணவு வீணாகக் கூடாது என்பதற்காக பல நாட்கள் எஞ்சிய உணவுகள் பிரிட்ஜில் வைத்து சூடு செய்து சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் மீண்டும் மீண்டும் சில உணவுகளை சூடு செய்து சாப்பிடுவதால், அது உங்கள் உணவை நச்சுத் தன்மையுடையதாக மாற்றலாம்.


பிரியாணி சுவையில் நவரத்தின புலாவ் செய்வது எப்படி?
[Wednesday 2025-06-25 16:00]

அட்டகாசமான ரெசிபி வழக்கமான பிரியாணி மற்றும் தக்காளி சாதம் இரண்டையும் சாப்பிட்டு சலித்து போய் விட்டது என்றால் புது வகையான உணவுகளை செய்து சாப்பிடலாம். வழக்கமான பிரியாணி சுவையில் இருக்கும் புலாவ் பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. தக்காளி சாதம் செய்முறையை பயன்படுத்தி செய்யக் கூடிய புலாவ்வை வீட்டில் செய்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில், வட இந்தியாவில் மிக பிரபலமாக இருக்கும் நவரத்தின புலாவை எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.


நாவூரும் சுவையில் மட்டன் மூளை மசாலா!
[Tuesday 2025-06-24 19:00]

பெரும்பாலும் அசைவ பிரியர்களின் விரும்பப்பட்டியில் மட்டன் முக்கிய இடத்தை பிடித்துவிடும். குறிப்பாக ஆட்டு மூளையில் செய்யப்படும் மசாலாவுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கும். ஆட்டு மூளையைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பிரபலமான மற்றும் சுவையான இந்திய உணவு தான் மட்டன் மூளை மசாலா. இது மசாலாப் பொருட்களுடன் வதக்கி செய்யப்படும் ஒரு காரசாரமான மற்றும் சுவையான சைடு டிஷ் ஆகும். அந்த வகையில் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும், மட்டன் மூளை மசாலாவை அசத்தல் சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


இறைச்சி உணவு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
[Monday 2025-06-23 16:00]

இறைச்சி உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதனை அளவோடு சாப்பிடுவது தான் ஆரோக்கியம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இறைச்சி உணவுகள் உடம்பிற்கு நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் அவ்வப்போது விவாதம் நடைபெற்று வந்தாலும், சமீபத்தில் ஆய்வுகள் ஒரு விடயத்தினை விளக்கியுள்ளது. சிவப்பு இறைச்சியில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் பல தாதுக்கள் செழுமையான அளவில் உள்ளன.


நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட வேண்டிய பழங்கள்!
[Sunday 2025-06-22 16:00]

தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனின் இந்த நோய்க்கு மருந்துவில்லைகள் எவ்வளவு உதவிச் செய்கின்றதோ, அதே அளவுக்கு உணவில் கட்டுபாடு காட்ட வேண்டும். கிளைசமிக் இண்டக்ஸ் குறைவான பழங்களை சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனெனின் இது குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் நார்ச்சத்துக்களும் ஊட்டசத்துக்களும் உள்ளன. அந்த வகையில், நீரழிவு நோயாளர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.


நாவூரும் சுவையில் சிக்கன் பிரட்டல்!
[Saturday 2025-06-21 16:00]

அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியவில் முதலிடம் வகிக்ககும் சிக்கனை பல்வேறு பாணிகளிலும் சமைக்கலாம்.சுமாராக சமைத்தாலே அட்டகாசமான சுவை தரும் உணவுகளில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கனை கொண்டு வித்தியாசமான முறையில் நாவூரும் சுவையில் சிக்கன் பிரட்டல் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டும் பன்னீர் கிரேவி!
[Friday 2025-06-20 16:00]

பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் இன்றியமையாதது. பன்னீர் புரதத்தின் சிறந்த மூலமாகவும் இருக்கின்றது. இது தசைகளின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்புக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது. பன்னீரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதுமட்டுமன்றி பன்னீரில் அதிகளவில் ஜிங்க் காணப்படுகின்றது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.


நாவூரும் சுவையில் பலாக்கொட்டை-கத்திரிக்காய் குழம்பு!
[Thursday 2025-06-19 16:00]

விதவிதமாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்கு தான் பிடிக்காது? மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் தான் சமையல். இது ஒரு அற்புதமான கலை என்றால் மிகையாகாது. அந்த வகையில் சற்று வித்தியாசமான முறையில் பாலாக்கொட்டை மற்றும் கத்திரிக்காயை வைத்து அசைவ சமையலே தோற்றும் போகும் அளவுக்கு அருமையான சுவையில் பலாக்கொட்டை கத்திரிக்காய் குழப்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


நாவூரும் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பூசணிக்காய் தோசை!
[Wednesday 2025-06-18 18:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய பூசணிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட், ஃபைபர், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது. இது சருமத்தை பளபளப்பாக்கும் தன்மையை கொண்டுள்ளதுடன், பூசணிக்காய் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாகும்.


தலைமுடி வளர்ச்சியை இரு மடங்காக்கும் கொய்யா இலை!
[Tuesday 2025-06-17 17:00]

பொதுவாக நம்மிள் பலருக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை இருக்கும். இது பிரச்சினை தினமும் கொஞ்சம் முடிகள் தலையிலிருந்து கொட்டத்தான் செய்யும். இதை நாம் கவனிக்க மாட்டோம். கண்டுகொள்ளவும் மாட்டோம். ஆனால் சிலருக்கு தலை வாரும்போதெல்லாம் நிறைய முடி கொட்டும். இது காலப்போக்கில் ஒட்டுமொத்த முடியையும் இழக்க நேரிடுமோ என்ற கவலை உருவாகும். குறைவாக முடி கொட்டும் பொழுது கொட்டும் முடியைவிட சற்று அதிகமாகவே புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும். அதனால் அந்த பிரச்சினை பெரிதாக வெளியில் தெரியாது.


மிஞ்சிய பழைய சாதத்தை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி?
[Monday 2025-06-16 17:00]

இரவு வேளைகளில் சமைத்த சாதம் மிஞ்சி விட்டது என்றால் அதனை காலையில் குப்பையில் கொட்டாமல் அதனை வைத்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். பச்சை புளி சாதம் செய்தும் சாப்பிடலாம். இல்லாவிட்டால் பழைய சாதத்தை வைத்து சிலர் வடகம் செய்வார்கள். ஆனால் பெரிதாக யாரும் சப்பாத்தி செய்து சாப்பிட்டிருக்கமாட்டார்கள். அந்த வகையில், இரவில் மிஞ்சிய சாதத்தை வைத்து எப்படி சப்பாத்தி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.


கறிசுவையை மிஞ்சும் பலாக்காய் குழம்பு!
[Sunday 2025-06-15 17:00]

முக்கனிகளில் ஒன்றான பலா பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.இந்தளவுக்கு அதனை சுவை அலாதியாக இருக்கும். அது போல் பலா காயையும் சமைத்து சாப்பிடும்போது எந்தளவுக்கு ருசியைத் தருமோ, அதே அளவுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. பலா காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலில் புதிய இரத்தம் உற்பத்தி சீராக நடைபெரும். பலா உடலின் வலிமையை அதிகரிக்கிறது. பலா காய் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும் என்பதால், அதனுடன் இஞ்சி, மிளகு, மிளகாய், சீரகம் சேர்த்துச் சமைத்து சாப்பிட வேண்டும். இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துவதால், உடல் எடையை கட்டுக்குள் வைப்க்க பெரிதும் துணைப்புரியும்.


எந்தெந்த உணவினை மீண்டும் சூடு பண்ணி சாப்பிடக்கூடாது?
[Saturday 2025-06-14 16:00]

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவசியமாக இருக்கும் உணவுகளில் எந்தெந்த உணவினை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படையாகும். உயிர்வாழ்வதற்கு அவசியமான உணவினை நாம் ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் வீட்டில் சமைக்கும் சில உணவுகள் நாம் செய்யும் தவறினால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கின்றது.


மாதவிடாய் முடிந்து அடுத்த நாள் என்ன சாப்பிடணும்!
[Friday 2025-06-13 17:00]

பொதுவாக ஒப்பீட்டளவில் ஆண்களில் ஹார்மோன்கள் நிச்சயமாக மேலும் கீழும் செல்லக்கூடும், மேலும் தினசரி மற்றும் பிற சிறிய மாறுபாடுகளுக்கு உட்பட்டிருக்கலாம், ஆனால் பெண்களின் ஹார்மோன்கள் மிகவும் வேறுபட்டவை.மற்றும் பரந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை.


தினமும் கீரை சாப்பிட்டால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுமா?
[Thursday 2025-06-12 16:00]

கீரையினை தினமும் சாப்பிட்டால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கீரை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு உணவுப் பொருள். கீரை வகைகள் பல உள்ளன, அவற்றில் சில முக்கிய கீரைகள் அகத்திக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை போன்றவை.


உலகின் சிறந்த காலையுணவு எது தெரியுமா?
[Wednesday 2025-06-11 17:00]

இந்திய உணவுகளுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் சமைக்கப்படும் உணவுகளின் சுவை மற்றும் மணம் வெளிநாடுகளில் உள்ளவர்களை அதிகமாக கவரும். அதிலும் குறிப்பாக காலையில் ஆரோக்கியமான தானியங்களில் செய்யப்படும் உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இப்படி செய்யப்படும் சுவையான காலை உணவுகள் பசியை போக்கி, உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.


இரவில் தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்?
[Tuesday 2025-06-10 17:00]

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் தொப்புளில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதனை பதிவில் பார்க்கலாம். தென்னிந்தியாவில் பலரும் தேங்காய் எண்ணெய் தான் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏனெனின் இதில், அதிகப்படியான செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ளதால் ஆக்சிஜனேற்றம் மெதுவாக நடக்கிறது. இதனால் 24°செல்சியசில் (75° பாரன்கீட்) இருக்கும் போது ஆறு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.


அம்மா கை பக்குவத்தில் குடல் கறி வைக்கத் தெரியுமா?
[Monday 2025-06-09 18:00]

தற்போது இருக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதிலுள்ள ஏகப்பட்ட சத்துக்கள் உடலுக்குள் சென்று அதிக எடை பிரச்சினை, இதய சார்ந்த நோய்கள், மலச்சிக்கல், கொலஸ்ட்ரோல் பிரச்சினைகள் என்பவற்றை ஏற்படுத்துகிறது. இப்படி இருந்தாலும் அசைவ உணவு பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் அவர்களின் சுவை உணர்வும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.


160 நோய்களுக்கு அருமருந்தாகும் ஒரு காய்!
[Sunday 2025-06-08 17:00]

சித்த மருத்துவத்தில் ஒரு கடுக்காய் தாய்க்கு நிகராக மதிக்கப்படுகின்றது. அதாவது கடுக்காய் தாயை விட சிறந்தது என்பதே அதன் பொருள். அறுசுவையும் ஒருங்கே கொண்டுள்ள ஒரே காய் கடுக்காய் தான். கடுக்காய் சாப்பிடும் போது எந்தவித சிக்கலும் ஏற்படாமல் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்பதன் மேன்மை கருதியே சித்த மருத்துவத்தில் கடுக்காய் கடுக்காய் தாயினும் மேலாம் என குறிப்பிடப்படுகின்றது.எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த கடுக்காயில் இருக்கக்கூடிய மருத்துவப் பயன்களை பற்றி இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


கூந்தல் கட்டுக்கடங்காமல் காடு மாதிரி வளரணுமா?
[Friday 2025-06-06 18:00]

பொதுவாகவே நாம் அன்றாடம் சமைக்கக்கூடிய பெரும்பாலான சமையல்களில் கறிவேப்பிலை முக்கிய இடம் பிடித்துவிடும் .நம்மில் பலரும் சமையலில் மணத்திற்காக சேர்க்கக் கூடிய ஒரு இலை தான் கறிவேப்பிலை என்று கருதுகிறோம்.ஆனால் அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கறிவேப்பிலையில் இருக்கிறது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதனை பச்சையாக தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.

Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா