Untitled Document
May 20, 2026 [GMT]
 
தினமும் காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Friday 2025-08-08 16:00]

உங்கள் தினசரி காலை உணவில் ஒரு பச்சை பூண்டுப் பல்லைச் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. உலகில் உள்ள அனைத்து மக்களும் பூண்டு இல்லாமல் சமைப்தே இல்லை. அது எந்த இனத்தவராக இருந்தாலும் சரி. பூண்டில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக, வைட்டமின் சி, பி6, மாங்கனீஸ், செலினியம் மற்றும் கந்தகம் போன்ற சத்துக்கள் பூண்டில் அதிகம் உள்ளன. இந்த அத்தனை சத்துக்களும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமாகும்.


சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பதால் ஆபத்தா?
[Thursday 2025-08-07 16:00]

பொது இடங்களில் சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக பெரும்பாலான நபர்கள் சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதனை வீட்டில் சாப்பிட்டு முடித்து கை கழுவிய பின்பு செய்வதில் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் வெளியிடங்களுக்கு சென்று இவ்வாறு செய்வதால், பாக்டீரியா, வைரஸ் தாக்கங்கள் ஏற்படுகின்றது.


A2 நெய் என்றால் என்ன? நாம் தினமும் சாப்பிடும் நெய்யை விட என்ன வித்தியாசம்?
[Wednesday 2025-08-06 16:00]

A2 நெய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சந்தையில் A1 மற்றும் A2 என பெயரிடப்பட்ட இரண்டு வகையான நெய் கிடைக்கிறது. A2 மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. A2 நெய் என்றால் என்ன, அதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம். நீங்கள் கடைகளில் நெய் வாங்கும் போது இதில் A1 மற்றும் A2 என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அனால் அதில் A2 நெய் மிகவும் ஆரொக்கியமானது என்று விற்கப்படுகின்றது.


30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!
[Tuesday 2025-08-05 16:00]

பெரும்பாலானவவர்கள் தங்களின் நாளை ஒரு கப் பிளாக் காபியுடன் தொடங்குகிறார்கள். இந்த பழக்கம் 30 நாட்களுக்கு தினசரி தொடர்ந்தால், பிறகு உங்கள் உடலில் என்ன மாற்றம் நிகழும் என போதாவது யோசித்திருக்கிறீர்களா? 30 நாட்களுக்கு தினமும் பிளாக் காபி குடிப்பதால், உங்கள் உடல் கவனத்தை மேம்படுத்துதல், கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரித்தல், எடை குறைப்புக்கு உதவுதல், மற்றும் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைத்தல் என பல வகையிலும் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றது.


அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு - நன்மைகள் இவ்வளவா?
[Monday 2025-08-04 16:00]

காலையில் எழுந்தவுடன் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும் என பல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இயற்கை மருத்துவத்தில் முக்கியமான இடம் பெற்றுள்ள எலுமிச்சை, பலவிதமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினசரி உணவுத் திட்டத்தில் எலுமிச்சையைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


இனி ABC ஜூஸ் தேவையில்ல: ஆயிரம் மடங்கு சத்து தரும் PBC ஜூஸ்!
[Sunday 2025-08-03 17:00]

நம்மில் பலருக்கும் ஏற்கனவே ஏபிசி ஜூஸ் (ABC Juice) ஆப்பிள், பீட்ரூட், கேரட் நன்கு தெரிந்ததாகும். ஆனால், அதைவிடச் சிறந்த நன்மைகளைத் தரக்கூடிய PBC ஜூஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா? PBC ஜூஸ் என்பது மாதுளை (Pomegranate), பீட்ரூட் (Beetroot), சியா விதை (Chia seeds) ஆகிய மூன்றின் சேர்க்கையாகும். இந்த மூலக்கூறுகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகின்றன.


அரிசியை கழுவாமல் சமைத்து சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?
[Saturday 2025-08-02 16:00]

இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று தான் சாதம். இந்தியர்கள் ஒரு நாளைக்கு கூட சாதம் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக சாதத்தை சாப்பிட வேண்டும். சாதத்தை கொண்டு பலவகையான உணவுகளை சமைக்கலாம். அந்த வகையில், நாம் அன்றாடம் சமைக்கும் அரிசியை கழுவாமல் சமைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.


முழு நாளையும் வீணாக்கும் தூக்க கோளாறு: தீர்வு என்ன?
[Friday 2025-08-01 16:00]

நம்மிள் பலர் நிம்மதியாக தூங்கி பல நாட்களாக இருக்கும். ஏனெனின் தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக இந்த நிலை உருவாகிறது. ஒருவர் இரவில் சரியான தூக்கம் இல்லாவிட்டால் அவர்களுக்கு அன்றைய நாளை நிம்மதியாக கடக்க முடியாது. மயக்கம், சோர்வு, தலைவலி மற்றும் வேறு விதமான கோளாறுகள் இருந்து கொண்டே இருக்கும். நிம்மதியான தூக்கம் வராமல் இருப்பதற்கு மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்ற காரணங்களாகவும் அமைகிறது.


முகத்தில் அழுக்கு, கருமை நீங்கி பளபளப்பாக வேண்டுமா?
[Thursday 2025-07-31 16:00]

தயிர் கொண்டு முகத்தில் உள்ள அழுக்கு, கருமையை நீக்குவதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம். கால்சியம் சத்து அதிகமாக கொண்ட தயிரை அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை பலரும் வைத்துள்ளனர். ஆனால் உணவாக மட்டுமின்றி அழகுக்காகவும் தயிரை நாம் பயன்படுத்த முடியும். தயிருடன் சில பொருட்களை கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போட்டால் முகத்தினை பளபளப்பாக வைத்திருக்க முடியும்.


வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!
[Wednesday 2025-07-30 16:00]

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் எவ்வாறு பயன்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காய் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு சிறந்த பலனை அளிக்கின்றதாம். செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் உதவும் வெண்டைக்காய், ரத்த சர்க்கரை அளவினை ஒழுங்குப்படுத்துவதிலும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் சிறந்ததாகும்.


"வாரம் ஒரு முறை போடுங்க" - தலைமுடி கொட்டுவது குறையும்!
[Tuesday 2025-07-29 16:00]

வீட்டிலுள்ள பெண்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமானால் வீடு முழுவதும் முடியை பார்க்கலாம். ஏனெனின் வீட்டு வேலைகள் செய்யும் பொழுது, சமைக்கும் பொழுது என வேலைகள் செய்யும் பொழுது தலையில் உள்ள முடி உதிர்ந்து அந்த இடங்களில் கிடக்கும். சிலருக்கு தலை பயங்கரமாக வியர்க்கும். இந்த பிரச்சினையுள்ளவர்கள் தலையை சொறிந்து கொண்டே இருப்பார்கள்.


மழைக்காலத்தில் ப்ரிட்ஜில் உப்பு ஏன் வைக்க வேண்டும் தெரியுமா?
[Monday 2025-07-28 17:00]

பருவமழைக்காலம் தொடங்கிவிட்டாலே சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும், இதற்கு முன்பாகவே நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. வீட்டில் மின்சாதனப் பொருட்களை சரிபார்த்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களின் கையிருப்பு என சொல்லிக்கொண்டெ போகலாம்.


மறந்தும்கூட இந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடாதீங்க!
[Saturday 2025-07-26 15:00]

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான பானம் என்றால் அது பால் தான், பாலில் கால்சியம், விட்டமின் டி, புரதம் மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளது. எலும்புகள், பற்கள் வலுப்பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புரதத்தின் ஆதாரமாகவும் பால் விளங்குகிறது. ஆனால் சில பொருட்களை பாலுடனோ, பால் அருந்திய பின்னரோ அல்லது முன்னரோ எடுத்துக்கொள்வது உடல் நல பிரச்சனைகளை உண்டாக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் என்பதை பார்க்கலாம்.


ஆடி வெள்ளி ஸ்பெஷல்: பால் பாயாசம் செய்வது எப்படி?
[Friday 2025-07-25 16:00]

ஆடி வெள்ளியன்று பூஜை அறையில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டு வர வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை. அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். லட்சுமி அம்மனுக்கு உரிய கோலமிட்டு அம்மனை வரவேற்க வேண்டும். பஞ்சமுக விளக்கேற்றி படையலிட்டு வழிபட செல்வங்கள் குவியும் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த பதிவில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம் போன்றதொரு சுவையில் பால் பாயாசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.


மழைக்கால வயிற்றுப் பிரச்சினைகளுக்கு 7 இயற்கை தீர்வுகள்!
[Thursday 2025-07-24 16:00]

மழைக்காலங்களில் பெரும்பாலும் அஜீரணம், வாயு, குமட்டல் மற்றும் மாசுபட்ட உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் தொற்றுகள் போன்றன வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இயற்கை வைத்தியங்கள், பொதுவான மழைக்கால வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து பயனுள்ள நிவாரணத்தை வழங்குகின்றன. அந்தவகையில் எளிமையான, அணுகக்கூடிய மற்றும் பக்க விளைவுகள் இல்லாத இந்த 7 பழங்கால தீர்வுகள் குடல் சமநிலையை மீட்டெடுக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் துணைப்புரிகின்றது.


மீதமுள்ள சாதத்தில் சுவையான சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?
[Wednesday 2025-07-23 17:00]

மதியம் சமைத்த சாதம் அதிகமாகி விட்டது என சிலர் வீடுகளில் கவலையாக இருப்பார்கள். அதனை என்ன செய்யலாம் என்ற பல வழிகளில் சிந்தனை போகும். அப்படி வீடுகளில் மீதமாகி விட்டால் வீட்டில் இருப்பவர்களுக்கு ப்ரைடு ரைஸ் செய்து கொடுக்கலாம். கடையில் சிக்கனை வாங்கி வந்து, அதை 65 போன்று செய்து அதனுடன் சாதம் சேர்த்து கிளறினால் வீட்டிலுள்ள விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில், மீந்து போன சாதம் கொண்டு சிக்கன் ப்ரைடு ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.


நாக்கிற்கு ருசியான செட்டிநாடு பூண்டு குழம்பு!
[Tuesday 2025-07-22 16:00]

அன்றாட சமையலில் பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் மதிய உணவுக்குப் பிரதானமாக இருக்கும். ஆனால், ஒரே மாதிரியான ரசம், குழம்பு, சாம்பார் செய்வது சமைப்பவருக்கும், சாப்பிடுபவருக்கும் நாளடைவில் ஒரே மாதிரியான சுவையால் சற்று சலிப்பு ஏற்படுத்தலாம். இதற்காகவே நாம் நமக்கு பிடித்த முறையில் பூண்டை வைத்து செட்டிநாடு ஸ்டைல் பூண்டு கார குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.


சிறுநீரை அடக்கி வைப்பவரா நீங்கள்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்!
[Monday 2025-07-21 17:00]

பொதுக் கழிப்பறையினைப் பயன்படுத்துவதற்கு கஷ்டப்பட்டு சிறுநீரை அடக்கி வைக்கும் வழக்கம் பலருடன் இருக்கும் நிலையில், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரிந்து கொள்வோம். இன்று பலரும் வெளியிடங்களுக்குச் சென்றால் சிறுநீரை அடக்கி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவை பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக பெண்களுக்கு கூடுதல் அபாயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


ஒருவாட்டி தேங்காய் சட்னி இப்படி செய்து பாருங்க!
[Sunday 2025-07-20 07:00]

உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி தான் செய்வார்கள். வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி செய்தால் வீட்டிலுள்ளவர்களுக்கு சாப்பாடு மீது சலிப்பு உண்டாகி விடும். சில சமயங்களில் தேங்காய் சட்னியின் சுவையிலும் மாற்றம் ஏற்படலாம். தேங்காய் சட்னி தான் செய்ய வேண்டும் ஆனால் சுவையில் மாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் அதில் சேர்க்கும் பொருட்களில் வித்தியாசப்படுத்தலாம். அந்த வகையில், வழக்கமாக செய்யும் தேங்காய் சட்னியை எப்படி வேறு சுவையில் கொடுக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.


குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் இறைச்சி வகைகள்!
[Friday 2025-07-18 16:00]

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கத்தினால் ஏகப்பட்ட நோய்கள் சிறுவயதிலேயே வந்து விடுகிறது. இதன்படி, உடலுக்கு தேவையான புரத சத்தை இறைச்சி வகைகள் வழங்குகிறது. சுவைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நாம் எடுத்துக் கொள்ளும் இறைச்சி குடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கடைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யும் இறைச்சி வகைகள் தான் இதில் முக்கியம் பெறுகிறது.


வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடித்தால் என்ன நடக்கும்?
[Thursday 2025-07-17 18:00]

இந்திய உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியில் உணவின் சுவையையும் மணத்தையும் மாற்றும் ஆற்றல் உள்ளது. வழக்கமாக செய்யும் உணவை விட இஞ்சி சேர்க்கும் பொழுது அதன் நறுமணம் நன்றாக இருக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துவதிலும் வாயுவை எதிர்த்துப் போராடுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் அதிகளவில் உள்ள இஞ்சியை பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் சேர்த்து கொள்கிறார்கள்.


இட்லி சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?
[Wednesday 2025-07-16 16:00]

தமிழர்களின் அன்றாட உணவில் முக்கியமானது இட்லி. அரிசி, உளுந்து கலந்து தயாரிக்கப்படும் இட்லி பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. தற்போது இட்லியின் நன்மையினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புதிதாக பிறக்கும் நாளில் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு காலை உணவு மிகவும் முக்கியமாகும். ஆனால் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் காலை உணவிற்கு பெரும்பாலான நபர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


கசப்பே இல்லாமல் பாகற்காய் வறுவல் எவ்வாறு செய்வது?
[Tuesday 2025-07-15 16:00]

அதிகமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பாகற்காயை அதன் கசப்பு தன்மை தெரியாமல் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கசப்பு சுவையைக் கொண்ட பாகற்காயை குழந்தைகள் பெரும்பாலும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பெரியவர்களும் பாகற்காய் என்றாலே முகம் சுழிக்கவும் செய்கின்றனர். ஆனால் பாகற்காய் வயிற்றிலுள்ள குடல் புழுக்களை நீக்குவதற்கும், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கின்றது. இதனை வறுவல் செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


பார்லர் செல்லாமல் முகத்தை பொலிவாக மாற்ற வேண்டுமா?
[Monday 2025-07-14 16:00]

பார்லர் செல்லாமல் முகத்தை ஜொலிக்க வைக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் முகத்தினை பளபளபாக்க பலவிதமான கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தின் அழகை அதிகரிக்கலாம். ஆம் சப்பாத்தி, பூரி இவற்றிற்கு பயன்படுத்தும் கோதுமை மாவு, முகம், கழுத்து, கைகளை பொலிவூட்டவும் செய்யும்.


அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்சனையா? - காரணங்களும், தீர்வும்!
[Saturday 2025-07-12 16:00]

அடிக்கடி ஏப்பம் வருவதற்கான காரணத்தையும் அதனை தடுக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வோம். நாம் உணவு உட்கொள்ளும் தருணத்தில் உணவுடன் சேர்த்து காற்றையும் விழுங்கிவிடுகின்றோம். இந்த காற்று வயிறையும், தொண்டையும் இணைக்கும் உணவுக்குழாய் பகுதியில் அதிகமாக சேருமாம். நாம் வேகமாக சாப்பிடும் போதோ, தண்ணீர் குடிக்கும் போதோ இந்த காற்றானது ஏப்பமாக வெளியேறுகின்றது.


இரவு முழுவதும் தூங்கினாலும் காலையில் களைப்பாக இருந்தால் நோயா?
[Friday 2025-07-11 16:00]

மனிதர்களாக பிறந்த நம் அனைவருக்கும் தூக்கம் மிகவும் அவசியம். ஒரு மனிதர் குறைந்தது ஒரு நாளைக்கு 6 மணிநேரம் சரி நிம்மதியாக தூங்க வேண்டும். அப்படி தூங்கும் பொழுது உடலில் உள்ள ஏனைய செயன்முறைகள் சீராக நடக்கும். சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என மருந்துவில்லைகளை எடுத்துக் கொண்டு இரவு வேளைகளில் தூங்காமல் வேலைச் செய்வார்கள். ஆனால் ஒருவர் 8 மணி நேரம் நிம்மதியாக தூங்கும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


தொப்பையைக் குறைக்க உணவு கட்டுப்பாடு அவசியம்!
[Thursday 2025-07-10 16:00]

தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் எந்தெந்த உணவுகளை குறைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் சாப்பிடும் உணவுகள் தான் உடல் எடையை அதிகரிப்பதுடன், தொப்பை கொழுப்பையும் அதிகரிக்கின்றது. அதாவது கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் உணவில் அதிக கவனம் எடுக்க வேண்டும். அதிலும் தொப்பை கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.


நாவல் பழ சட்னி காரமாகவும் சுவையாகவும் வேண்டுமா?
[Wednesday 2025-07-09 16:00]

தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார், பொடி இது நம்மிடையே வழக்கமான காம்போ. பொதுவாக நாவல் பழத்தை ஜாம் அல்லது ஜூஸ் செய்யவே பயன்படுத்துவோம். ஆனால், கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இதை சட்னியாகச் செய்தும் சாப்பிடுகிறார்கள். இதே யோசனையை பின்பற்றி, விவசாயி நந்தகுமார் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் சம்பா பாப்சிகல்ஸ், பனங்கிழங்கு கப் கேக் ஆகியவைக்கு இணையாக இந்த நாவல் பழ சட்னியை வைத்திருந்தார். இந்த ரெசிபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


காஷ்மீரி பாணியில் காரசாரமான சில்லி சிக்கன்!
[Tuesday 2025-07-08 16:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் நிச்சயம் முக்கிய இடத்தை பெற்றுவிடும். பல்வேறு முறைகளிலும் சமைக்க கூடிய ஒரு உணவாக இருப்பதே சிக்கனின் சிறப்பம்சமாகும். அந்த வகையில் சற்று வித்தியாசமான முறையில் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், காஷ்மீரி பாணியில் காரசாரமான சில்லி சிக்கன் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.


செலவே இல்லாமல் தலைமுடி உதிர்வுக்கு தீர்வு!
[Monday 2025-07-07 16:00]

பொதுவாக பெண்கள் தலைமுடி உதிர்வு, பொடுகு மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதனை ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் மற்றும் உரிய சிகிச்சை முறைகளால் கட்டுக்குள் வைக்கலாம். இவற்றை தவிர்த்து வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியங்கள் செய்யலாம். அந்த வகையில் தலைமுடி பிரச்சினைகளை எளியமுறையில் தீர்க்கும் மூலிகை எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா