Untitled Document
May 20, 2026 [GMT]
 
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி?
[Monday 2020-02-03 18:00]

மத்திய சீனாவில் உள்ள ஊஹான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு வினோத நோய் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஒரு புது வகையான கொரோனா வைரஸ் தான் இந்த புதிய தொற்று நோய்க்கு காரணம் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 17 வருடங்களில் நூற்றுக்கணக்கான உலக மக்களை கொன்றுகுவித்த சார்ஸ் (severe acute respiratory syndrome coronavirus/SARS-CoV) மற்றும் மெர்ஸ் (Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வைரஸ் தான் இந்த புதிய கொரோனா வைரஸ். இந்த புதிய கொரோனா வைரஸ்க்கு 2019-nCoV என்று பெயரிட்டுள்ளது உலக சுகாதார மையம். தொடக்கத்தில் அதிகம் ஆபத்துகளை ஏற்படுத்தாத வைரசாக இருக்கும் என்று கருதப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் ஒரு மாத காலத்துக்குள் சீனாவில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு தொற்றியுள்ளது, நூற்றுக்கும் அதிகமானவர்களை பலிவாங்கியுள்ளது.


நினைவாற்றலை அதிகரிக்கும் வால்நட்!
[Sunday 2020-02-02 18:00]

வால்நட்... நட்ஸ் வகைகளில் ஒன்று. சமீப வருடங்களாக பல கட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை கொண்டு மருத்துவ உலகமும் இதை அதிக மாக பரிந்துரைக்க தொடங்கியுள்ளது. மருத்துவர்களும் வளரும் பிள்ளைகளுக்கு ஸ்நாக்ஸ்-க்கு மாற்றாக நட்ஸ் வகைகளை கொடுக்க வலி யுறுத்துகிறார்கள். இவை உடல் ஆரோக்கியத்துக்கு குறிப்பாக உடல் உள்ளுறுப்புகளுக்கு பல நன்மைகளை தந்துவருகிறது. அந்த வகையில் வால்நட் சாப்பிடுவதால் மூளைக்கு என்னவிதமான பயன்கள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.


கணினிகளை தாக்கும் கொரோனா வைரஸ் - அதிர்ச்சி தகவல்!
[Saturday 2020-02-01 18:00]

மனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி உள்ளது. அந்த வைரஸ் பரவக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கம்ப்யூட்டர்களையும் தாக்கும் என்று என்ஜீனியர்கள் புதிய தகவல்களை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கஸ் பெர்ஸ்கை ஆன்டிவைரஸ் நிறுவனத்தை சேர்ந்த என்ஜினீயர்கள், கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களில் தீங்கிழைக்கும் கொரோனா வைரசை கண்டுபிடித்து உள்ளனர். இது பி.டி.எப்., எம்.பி.4 மற்றும் டாக்மென்ட் பைல்களை தாக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.


காலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவு!
[Saturday 2020-02-01 08:00]

காலையில் நமக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி ஏழு மணிக்கு கிளம்பும்போது இட்லி, தோசை போன்ற உணவுகள் உண்பதற்கு கனமான உணவாகும். இதனால் அநேகர் காலை உணவினை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் காலையில் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவே நம்மை, நாள் முழுவதும் தேவையற்ற தவறான உணவுகள் எடுத்துக் கொள்வதினை தவிர்க்கும். ஆக எளிதாக சத்தாக காலையில் எடுத்துக் கொள்ளக் கூடிய சில உணகளைப் பார்ப்போம்.


எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடும்போது நாம் செய்யும் தவறுகள்!
[Thursday 2020-01-30 18:00]

எடை குறைப்பு என்பது யாருக்குமே எளிதானது அல்ல. விதவிதமான உணவினை பல ஊர்கள், பல மாநிலங்கள், பல நாடுகளில் இருந்த இடத்தில் இருந்தே எளிதாய் பெறும் வசதியினை பெற்று விட்டோம். ஆக எடை எளிதல் கூடி விடுகின்றது. இளைப்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ஆனாலும் சிலவற்றினையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இயற்கை மருத்துவத்தில் வாழைப்பூ மகத்துவம்:
[Wednesday 2020-01-29 22:00]

இயற்கை மருத்துவத்தில் ஒன்று நாம் எடுக்கும் உணவுகள் ஆகும் .அப்படி வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள் முக்கனிகளுக்கு ஒன்றான வாழையின் அனைத்துப் பகுதிகளும் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்துமே சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பதோடு, ஒவ்வொன்றிலும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.


30 வயது நிரம்பிய பெண்களுக்கான சரும பராமரிப்பு!
[Tuesday 2020-01-28 18:00]

ஒளிரும் சருமத்திற்காக ஏங்காத பெண்களே கிடையாது. இளமையில் இயற்கையாகவே நம் சருமம் அழகாகவும், மினுமினுப்புடனும் இருக்கிறது. ஆனால், 30 வயதை கடந்துவிட்டால் சருமத்தில் ஏற்படும் சேதங்களை தடுத்து, அதை பராமரிக்க வேண்டியது மிக அவசியம். வயது அதிகரிக்கும் பொழுது, அதனுடன் நம் சருமத்தில் உள்ள பழைய உயிரணுக்கள் அழிந்து, புதிய உயிரணுக்கள் பிறக்கின்றன. ஆனால் நாம் வாழும் இடம், உண்ணும் உணவு போன்ற தினசரி வாழ்க்கை முறையால் நம் சருமம் மிகவும் பாதிப்படைகிறது. மேற்கூறிய காரணங்களால் நம் சருமத்தை கவனித்து பராமரிப்பது முக்கியமாகிறது. தினசரி சரும பாதுக்காப்பிற்காக 30 வயதை கடந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.


வேர்க்கடலையில் இருக்கும் கொழுப்புச்சத்து உடலுக்கு நல்லதா?..
[Monday 2020-01-27 18:00]

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரதச்சத்து அதிகமாக உள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.


மூட்டு வீக்கத்தினை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!
[Sunday 2020-01-26 18:00]

மூட்டு வீக்கத்தினை ஏற்படுத்தும் சில பாதிப்பு உணவுகளை அறிந்தால் அதனை தவிர்ப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தினை நாம் பாதுகாக்க முடியும். சர்க்கரை: அதிக சர்க்கரை என்றாலே பல் சொத்தை, உடல் எடை கூடுதல், வீக்கம், எடை கூடுவதால் ஏற்படும் ஒரு பாதிப்பாக சர்க்கரை நோய். உடலில் கெட்ட பாக்டீரியாக்களால் தாக்குதல்கள் ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. செயற்கை இனிப்பை அவசியம் தவிர்க்க வேண்டும். பலருக்கு பால், பால் சார்ந்த உணவுகள் ஒத்துக் கொள்ளாது. இந்த அலர்ஜியால் வீக்கம் உண்டாக்கி வயிறு கோளாறு, மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படலாம். தேங்காய் பால், பாதாம் பால் இவற்றினை வீட்டிலேயே தயாரித்து அளவான முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.


வயிற்றுப் புண்ணை போக்கும் அகத்தி கீரை!
[Saturday 2020-01-25 18:00]

அகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக்கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர மிகச் சிறந்த பலன்களைத் தரும். அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். இது நமது அகத்தின் தீயை அகற்றுவதால் அதை அகத்தி என அழைக்கின்றனர்.


கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க செய்ய வேண்டியவை!...
[Friday 2020-01-24 18:00]

கொரோனா வைரஸ் என்னும் உயிரைக் குடிக்கும் வைரஸ் தாக்கத்திலிருநு்து நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம். வருவதற்கு முன்பும் வந்த பின்பும் என்னென்ன தடுப்பு முறைகளைப் பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. புதிய உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்று சீனா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது தானே.


வாயு தொல்லையில் இருந்து விடுபட எளிய வழிமுறைகள்!..
[Thursday 2020-01-23 18:00]

பெரும்பாலும், வீட்டை விட்டு உணவகங்களில் உணவை சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகத் தொடங்குகிறது. வயிற்றில் வாயு இருப்பது பொதுவானது, பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை, ஆனால் சில சமையங்களில் இது மார்பு வலியையும் உண்டாக்கும் அளவிற்கு வலியதாய் மாறிவிடுகிறது. சில சமையங்களில் வயிற்றில் தங்கியிருக்கும் வாயு, தலைவலி, பித்தம், வாந்தி போன்ற உவாதைகளை உண்டாக்குகிறது. உணவை தவிர்த்து ஒரு ஆபத்தான வழியில் நீங்கள் வாயுவைப் பெற்றால், இந்த நோயை வேரிலிருந்து அகற்றலாம். உண்மையில், வாயு உற்பத்தி வாய்வு மற்றும் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. உங்கள் உடலில் வாயு அளவு அதிகரித்தால் அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் இது வயிற்று நோய்களுக்கு ஆபத்து விலைவிக்க கூடியது. வாய்வு மற்றும் வாயு உருவாக்கம் குறித்து நீங்கள் தெளிவாக அறிந்துக்கொண்டால், அதை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு விடுபடலாம்.


குளிர் காலத்தில் கீரையை சாப்பிடலாமா?..
[Wednesday 2020-01-22 18:00]

குளிர்காலத்தில் கீரையை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரத்தை அளிக்கிறது என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கீரை உட்கொள்வதிலிருந்து பெற முடியும் என்பது பலராலும் தெரிவிக்கப்படும் கருத்து.. கீரையில் பொட்டாசியம் போதுமான அளவில் காணப்படுகிறது மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த கீரை உதவியாக இருக்கும். கீரையின் நுகர்வு எலும்புகளையும் பலப்படுத்துகிறது. கீரை ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நல்ல மூலமாகும், மேலும் ஆயுர்வேதத்தின்படி, மருத்துவ குணங்களும் இதில் ஏராளமாக காணப்படுகின்றன.


முடி உதிர்வுக்கான சிறந்த தீர்வு பூண்டு எண்ணெய்!
[Tuesday 2020-01-21 18:00]

இன்றைய காலத்தில் இருக்கும் மிக பெரிய பிரச்சனை என்ன என்று தேடினால் கண்டிப்பாக அது முடி உதிர்தல் ஆக தான் இருக்கும். குறிப்பாக ஏசி உள்ள இடங்களில் வேலை செய்வோர், இரவில் அதிக நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்கள், போன்றவர்களுக்கு இந்த முடி உதிர்வு அதிகமாக இருக்கும். இதனால் தான் வெளி நாடுகளுக்கு சென்று வேலை செய்பவர்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக உள்ளது. எது எப்படி போனாலும் முடி உதிர்தல் எம் இளமையையும் முதுமையாக்கிவிடும். இவற்றுக்கு வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை கொண்டு இலகுவாக எண்ணெய் செய்துகொள்வோம். இதற்கு தேவையான பொருட்கள் : விளக்கெண்ணெய், சுத்தமான தேங்காய் எண்ணெய், மற்றும் பூண்டு. முதலில் பூண்டை தோல் உரித்து கேரட் சீவும் கட்டரில் சீவி எடுத்துக் கொள்ளுங்கள்.


ஆண்களை விட இனிப்பை அதிகம் விரும்பும் பெண்கள்: காரணம் என்ன?..
[Monday 2020-01-20 18:00]

ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக சர்க்கரை உட்கொள்கிறார்கள். இனிப்பு கலந்த பலகாரங்கள் உட்கொள்வதற்கும் அலாதி பிரியம் காட்டுகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவிதமாக வயதானவர்கள் அதிகமாக இனிப்பு வகைகளை நாடுகிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், இந்தியாவில் இயங்கும் சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டன. ஆய்வு முடிவுப்படி பெண்கள் தினமும் நுகரும் சர்க்கரையின் சராசரி அளவு 20.2 கிராமாக இருக்கிறது. ஆண்கள் சராசரியாக 18.7 கிராம் என்ற அளவில் சர்க்கரையை உட்கொள்கிறார்கள்.


புதிதாக உருவாகியிருக்கும் 'ஸ்லீப்பிங் பியூட்டி டயட்'!
[Sunday 2020-01-19 18:00]

‘‘நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தால் சாப்பிட வேண்டியதில்லை’’ என்ற கருத்தை வைத்து உருவாகியிருக்கிறது ஸ்லீப்பிங் பியூட்டி டயட். உலகம் முழுவதும் எடை குறைப்புக்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கினால் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம் என்பது. விழித்திருக்கும் சிறிது நேரத்துக்கு மட்டும் வெகு குறைவாகச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பதால் உடல் எடை குறையும் என்கிறார்கள். ஆனால் இந்த ஸ்லீப்பிங் டயட்டை மருத்துவ உலகம் நிராகரிக்கிறது. இதில் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் இருப்பதாகச் சொல்கிறது.


குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கும் எள்!
[Saturday 2020-01-18 18:00]

“இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.” தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எள்ளில் 20 சதவீதம் புரதமும், 50 சதவீதம் எண்ணெயும், 16 சதவீதம் மாவு பொருட்களும் உள்ளன. ஆராய்ச்சி ஒன்றில் எள்ளு விதை மற்றும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயினை குணமாக்கும்.


உடலுக்கு வலுவை சேர்க்கும் தானியங்கள்!
[Friday 2020-01-17 18:00]

உடலுக்கு சக்தியும் வலுவும் தரும் உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனி இடம் உண்டு. ஒவ்வொரு தானியத்துக்குக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டு உடலை வலுப்படுத்தலாம். சோளம் உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனை குறைக்கும். வயிற்றுப்புண், வாய் துர்நாற்றத்தைப் போக்கும். கோதுமை நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்கும். குடல் புண்ணை ஆற்றும்.


குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாக்க சில வழிமுறைகள்!
[Thursday 2020-01-16 18:00]

குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகளால் நீர்த்தரத்தைப் பற்றிக் கொள்ள முடியாது. இதனால்தான், உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது. எனவே உதட்டுக்கு எண்ணெய் பசை தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர், அதை லேசாகச் சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காட்டன் துணியால் அதிகப்படியாக இருக்கக்கூடிய எண்ணெய் பசையைத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும். சிலருக்குக் குளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாற ஆரம்பிக்கும். அவர்களுக்கான டிப்ஸ்


பொங்கல் சிறப்பு குறிப்பு: ஜவ்வரிசி பொங்கல்!...
[Wednesday 2020-01-15 18:00]

தேவையான பொருட்கள்:- ஜவ்வரிசி - 300 கிராம், வெல்லம் - 200 கிராம், பால் - 200 மி.லி., நெய் - 50 கிராம், முந்திரி பருப்பு - தேவையான அளவு, உலர்ந்த திராட்சை - தேவையான அளவு, ஏலக்காய் - 5, ஜவ்வரிசி.


சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!..
[Tuesday 2020-01-14 18:00]

உணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் சாப்பிடுவது பல்வேறு வகையில் உடல் நலனை மேம்படுத்த வழிவகை செய்யும். குடல்களை சுத்தம் செய்வதற்கும் வெல்லம் உதவும். ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் துணைபுரியும். வெல்லத்திற்கு செரிமான நொதிகளை தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால் உணவு எளிதாக செரிமானமாகும். நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டால் செரிமானம் ஆவதற்கு தாமதமாகும். அதன் மூலம் உடலும் அசவுகரியத்தை எதிர்கொள்ளும். அந்த சமயத்தில் சிறிதளவு வெல்லம் சாப்பிடலாம். அது செரிமானத்தை துரிதப்படுத்தும். மலச்சிக்கலையும் தடுக்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அது ஹீமோகுளோபின் அளவை சீராக தக்கவைத்துக்கொள்ள வழிவகை செய்யும். ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கவும் வெல்லம் பயன்படுகிறது. தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வருவது சருமத்திற்கு நலம் சேர்க்கும். சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்வதற்கும் துணைபுரியும்.


சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்!
[Monday 2020-01-13 17:00]

காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக் கூடியவையே. 150 மி.லி நீரில், 100 கிராம் அன்று பூத்த, ஆவாரம் பூவைப் போட்டு, மூடிவைத்து நீர் 100 மி.லி-யாக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும். ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு எடுக்க வேண்டும். நெல்லிச் சாற்றையும், ஆவாரம் பூ டிகாக்‌ஷனையும் தலா 50 மி.லி கலந்து, சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.


சீதா பழத்தில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்!..
[Sunday 2020-01-12 18:00]

சீத்தாப்பழம் பல அபூர்வ சத்துக்களையும் மருத்துவக் குணங்களையும் கொண்டது. சீத்தாவின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை, வேர் என எல்லாப்பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சதைப் பற்றுள்ள இந்தப்பழம் அனைத்து இடங்களிலும் காணப்படும். இந்தப்பழத்தின் சிறப்பு என்னவென்றால் இது மிகவும் ஆரோக்கியமானதாகும். வைட்டமின் சி போன்ற ஆன்டி -ஆக்ஸிடன்ட்கள் வலிமையாக உள்ள பழம்தான் சீத்தாப்பழம். இந்த வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள ப்ரி-ரேடிக்கில்ஸ்களை நீக்கும். இது போக உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பலருக்கு இந்த சதைப்பற்றுள்ள பழத்தின் மீது நாட்டம் இருப்பதில்லை. ஆனால் அதன் முக்கியத்துவம் மற்றும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்தால் அதனை ஒவ்வொரு சீசனிலும் கண்டிப்பாக வாங்கிச் சாப்பிடுவீர்கள்.


கைபேசியும்... எலும்பு சார்ந்த பாதிப்புகளும்...
[Saturday 2020-01-11 18:00]

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு. அது தற்சமயம் வாட்ஸ்-அப் பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இது வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்பதால் அதையே பெயரிலும் வைத்துவிட்டார்கள். எனவே இது வாட்ஸ்-அப் பயன்படுத்துகிற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது. செல்போன் வருவதற்கு முன்பு தட்டச்சு எந்திரத்தில் அதிக நேரம் தட்டச்சு செய்பவர்களுக்கு அனைத்து விரல்களிலும் தேய்மானம் ஏற்பட்டு தசை மற்றும் எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதை ‘ஸ்டெனோகிராபர் தம்ப் டிசார்டர்’ என்று சொல்வது உண்டு.


வெந்நீரின் அற்புத குணங்கள்!..
[Friday 2020-01-10 18:00]

தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதைவிட ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதுக்கு பிறகு ஒரு தம்ளர் வெந்நீர் குடிப்பது மிக மிக நல்லது என்றும் சொல்கிறார்கள். நாமும் வெந்நீர் குடிக்கிறோம். ஆனால் எப்போதாவது தான். ஆனால் தினமும் வெந்நீர் குடித்தால் பெரும்பாலான நோய்கள் வரவிடாமல் செய்ய முடியும் என்கிறார்கள். இயலாதவர்கள் குறிப்பிட்ட நேரத்திலாவது தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். அப்படி என்ன செய்துவிடும் வெந்நீர்.. வாங்க தெரிந்துகொள்வோம்.


முடி உதிர்வுக்கான முக்கிய தீர்வுகள்!...
[Thursday 2020-01-09 18:00]

முடி உதிர்வு என்பது பெண்கள், ஆண்கள் என அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்னையாகவே மாறிவிட்டது. மாசடைந்த சுற்றுசூழலில் வாழும் ஒவ்வொருவரும் நிச்சயம் ஏதாவது ஒரு கூந்தல் பிரச்னையை சந்திக்க நேரிடுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்காக, விலையுயர்ந்த ஷாம்பூ, கண்டிஷ்னர் மற்றும் சீரம் போன்ற பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்பவர்களே இங்கு அதிகம். இவை எல்லாவற்றிற்கும் ஓர் முற்றுப்புள்ளியாக, இயற்றை முறையில் சில வைத்தியங்களை இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். கெமிக்கல் இல்லாத இயற்கை மருந்தை பயன்படுத்தும் போது, எவ்வித பக்கவிளையும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் நாம் செய்யலாம் அல்லவா? கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடி உதிர்வை தடுக்க உதவும் காய்கறிகள் மற்றும் பழங்களின் ஜூஸ் பற்றி இப்போது பார்க்க போகிறோம்…


மனித உடலின் மத்திய பகுதியான வயிறு எப்படியிருக்க வேண்டும்?..
[Wednesday 2020-01-08 18:00]

நீங்கள் உண்ட உணவு சரியான நேரத்தில் ஜீரணமாக வேண்டும். பசி எடுத்தவுடன் உணவு உண்ண வேண்டும். உணவின் சத்துப்போக அசத்து (மலம், சிறுநீர்) தினமும் சரியாக வெளியேற வேண்டும். வயிறு பெரிதாக இல்லாமல் சாதாரணமாக இருக்கவேண்டும். வாயு தொந்தரவு எதுவும் இருக்கக் கூடாது. இப்படியிருந்தால் உங்கள் உடலின் மத்தியப் பிரதேசம் (வயிறு) சரியாக உள்ளது என்று அர்த்தம். 100 மார்க்குகள் போட்டுக் கொள்ளலாம். மத்தியப்பிரதேசம் (வயிறு) கீழ்கண்டவாறு உள்ளதா?: காலையில் பசியிருக்காது. வேறுவழியில்லாமல் உணவை உண்போம். உண்ட உணவு ஜீரணமாகாது. வயிறு உப்புசமாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி வரும். முதுகுவலி வரும். உட்கொண்ட ஆகாரம் செரிக்காமலேயே மலமாக வெளியேறும். முகம் உப்பிசமாக இருக்கும். இன்று நிறைய மனிதர்களின் மத்தியப் பிரதேசம் (வயிறு) மேற்குறிப்பிட்டவாறு தான் இருக்கின்றது. வயிறு பானை போல் உள்ளது. அதில் கடம் வாசிக்கலாம். அப்படியிருப்பவர்கள் இனி வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு தீர்வு யோகக்கலையில் உள்ளது. யோகாவும் நமது பழக்க வழக்கங்களையும் சற்று மாற்றிக் கொண்டால் போதும். எல்லா வியாதிக்கும் மூலகாரணம் வயிறு தான் இந்தப் பகுதி சுத்தமாக இருந்தால் உடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.


சருமத்தை பாதுகாக்கும் சோற்றுக்கற்றாழை!
[Tuesday 2020-01-07 18:00]

சோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டு அழகு பொருட்கள் தயாரிப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் ஒரு அற்புதமான இயற்கை பொருள் இது. சருமங்களில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை சோற்றுக்கற்றாழைக்கு உண்டு. இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை உடல்நல நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்துகொள்வோம். தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் சோற்று கற்றாழை மடலை நீக்கி, சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 45 நாட்கள் வெயிலில் காய வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும்.


தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்!..
[Monday 2020-01-06 18:00]

“தலைமுடி” என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். இந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். சூரியக் கதிர்களின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது. முடிக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் அதன் நிறத்தையும் இழக்கிறது. எனவே, முடிக்கு அவ்வப்போது பாதுகாப்பு தர வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியமான கடமையாகும். அதுமட்டுமின்றி அவ்வாறு சரியான பாதுகாப்பு கொடுக்காவிட்டால், முடி உதிர்தல் ஏற்பட்டு, நாளடைவில் வழுக்கையை அடைய நேரிடும்.


அடிக்கடி உண்ணும் பழக்கம் இந்த நோயின் அறிகுறியாம்!....
[Sunday 2020-01-05 18:00]

சிலருக்கு ஒரு வினோத பழக்கம் இருக்கும். அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டு தான் இருப்பார்கள். பசியே இராது. இருப்பினும் ஏதாவது ஒன்றினை மென்று கொண்டே இருப்பார்கள். இதனால் இவர்கள் உணவு அதிகம் உண்பவர்களாக இருப்பார்கள். இது ஒரு மனநலம் தொடர்புடைய பாதிப்பு. உண்மையில் இவர்களுக்கு மருத்துவ உதவி மிக அவசியம். இந்த பாதிப்பு உடையவர்கள் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வோடோ (அ) ஒருவித வெட்கத்தோடோ இருப்பார்கள். வேலை இழப்பு, விவாகரத்து போன்ற பல நிகழ்வுகளும் இந்த பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா