Untitled Document
May 20, 2026 [GMT]
 
பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிருக்கு ஏற்படும் அபாயம்!
[Saturday 2020-01-04 17:00]

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம் நேரும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பவை எவை? தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு அவை பதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த உணவு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கலோரி உணவு என்பது ‘பதப்படுத்தப்படாத அல்லது குறைந்தபட்ச அளவு பதப்படுத்திய உணவுகள்’ ஆகும். அவற்றில், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, அவரை வகை காய்கறிகள், விதைகள், அரிசி போன்ற உணவு தானியங்கள், முட்டைகள் அடங்குகின்றன. ‘பதப்படுத்திய உணவுகள்’ என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக இதற்காக உப்பு, எண்ணெய், சர்க்கரை அல்லது நொதித்தல் முறையைப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்தப் பிரிவில் அடங்குபவை பாலாடைக் கட்டி, இறைச்சி, வீட்டில் தயாரித்த ரொட்டி, டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், புகை மூலம் பதப்படுத்திய மீன் போன்றவை.


அதிகப்படியான சர்க்கரை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
[Friday 2020-01-03 17:00]

பிஎல்ஓஎஸ் உயிரியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக சர்க்கரை சேர்த்து கொண்டால் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அதிக சர்க்கரை சாப்பிட்டால் விந்தணுக்களின் தரம் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது. ஸ்வீடனில் உள்ள லிங்கோப்பிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு குழுவினர் முன்னணி எழுத்தாளர் அனிதா ஓஸ்ட் தலைமையில் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:- விந்தணுக்களில் இருக்கும் ஆர்.என்.ஏ கூறுகள் (RNA fragments) என்பது மரபணு தொடர்புடையது. இது அளவுக்கு அதிகமான சர்க்கரையை உட்கொண்டால் பாதிக்கப்படுகிறது இதற்காக 15 ஆண்கள் அதுவும் புகை பழக்கம் இல்லாத ஆண்களை தேர்வு செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அதிக சர்க்கரைக் கொண்ட குளிர்பானங்களை தினமும் 3.5 லிட்டர்கள் அல்லது அல்லது 450 கிராம் மிட்டாய்களுக்கு ஒத்த சர்க்கரை கொடுக்கபட்டது.


குழந்தைகளின் படிப்பை பாதிக்கும் அதிக உடல் எடை!
[Thursday 2020-01-02 18:00]

எல்லா விதத்திலும் வசதிகள் பெருகிக்கொண்டே வருவதும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணம். உடல் செயல்பாடுகள் என்பது இப்போதுள்ள குழந்தைகளிடம் குறைந்துவருகிறது. எல்லாவற்றிலும் நவீன வசதிகள் வந்தபிறகு, அவற்றைப் பயன்படுத்தவே அவர்களும் விரும்புகிறார்கள். இதனால் சாப்பிடும்போது உடலில் சேரும் கலோரிகள் அப்படியே இருப்பதால், உடல் பருமன் அதிகரிக்கிறது. எந்த அளவுக்கு உணவில் கலோரிகளை எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடல் உழைப்பும் அவசியம். இது, தற்போதுள்ள பெரும்பாலான குழந்தைகளிடம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. முன்பெல்லாம், பெற்றோர்கள் குழந்தைகளை வேலைவாங்குவார்கள். ஆனால், இப்போது குழந்தைகள் பெற்றோரை வேலைவாங்கும் நிலை வந்துவிட்டது. உடல் எடை அதிகரிக்க மற்றொரு காரணம் ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் குப்பை உணவுகள். குழந்தைகள், உணவின் சுவைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் குப்பை உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். பெற்றோர்களும் இவற்றை வாங்கிக்கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர் என்பது வருத்தமளிக்கும் விஷயம். பெரும்பாலும், அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் குழந்தைகளுக்கு ரெடிமேட் உணவு வகைகளைச் சமைத்துத் தருகின்றனர். அவை உடல் எடையை அதிகரிப்பதுடன், பல நோய்களுக்கும் காரணமாகின்றன.


புத்தாண்டு!.. புதுவாழ்வு!..
[Wednesday 2020-01-01 17:00]

எதிர்பார்த்து காத்திருந்த 2020 புத்தாண்டு நாள் இன்று. விண்ணில் மிளிர்ந்த வான வேடிக்கைகளும், மண்ணில் இசைத்த இசைக்கருவிகளும், ஒரு மத்தாப்புக் கொண்டாட்டத்தை மனசெல்லாம் மகிழ வைத்தது. வருடத்தில் எந்நாளும் விடியாதது போல் இந்நாள் விடிந்ததாக அனைவரின் மனதிலும் ஓர் உற்சாக துள்ளல். முகந்தெரியாத மனிதர்களுக்கெல்லாம் “ஹேப்பி நியூ இயர்” என்று சத்தமாய் வாழ்த்து சொல்லி, வாட்ஸ்-அப்பின் ஸ்டேட்டஸில் புது வருட வாழ்த்தினை வித விதமாக எல்லோருக்கும் அனுப்பி புத்தாண்டை மகிழ்ச்சியாய் கொண்டாடியாகிவிட்டது. தீபாவளியை குடும்பத்தோடும், பொங்கலை சுற்றத்தோடும், கொண்டாடி மகிழ்வது போல் புத்தாண்டும், குடும்பமும் சுற்றமும் சூழ நிறைந்திருந்தால் அது கொண்டாட்டம். மாறாக, காற்றையும், காதையும் கிழித்திடும் சைலன்ஸர் கழட்டிய இருசக்கர வாகனங்களும், பாடல்களை இரைச்சலாக்கி அபாய வேகத்தில் ஓட்டும் வாகனமும், நடுரோட்டில் நண்பர்களோடு முகம் சுழிக்கும் வகையில் நடனமிட்டு புத்தாண்டை வரவேற்றிருந்தால் அது கொண்டாட்டமல்ல, கும்மாளம். உறவுகள் ஒன்று சேர்ந்து வீட்டில் பின்னர் வீதியில், விளக்கேற்றி, உதிக்கின்ற புத்தாண்டு ஓர் உன்னத ஆண்டாக அமைய பிரார்த்தித்து, இருக்கின்ற இனிப்புகளை இல்லாதோருக்கு வழங்கி, தொடங்குகின்ற புத்தாண்டு, ஒரு புது வாழ்வாகும்.

 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா