Untitled Document
October 24, 2026 [GMT]
 
தலைக்கு எண்ணெய் வைக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்!
[Wednesday 2020-03-04 18:00]

சிலருக்கு தலையில் எண்ணெய் வைப்பது என்றாலே அலர்ஜி போல் தெரித்து ஓடுவார்கள். காரணம் எண்ணெய் பிசுக்கு முகத்தை டல்லாக்கும். வழித்த தலையாக இருக்கும். ஃபிரெஷ் ஃபீல் இருக்காது என பல காரணங்களை அடுக்குவார்கள். தலைக்கு பளபளப்பு அளிக்கவும், சிக்கல்கள் இல்லா கூந்தலைப் பெறவும் மாய்ஸ்ரைஸர் போல் ஹேர் கண்டிஷ்னர் வந்தது. ஆனால் இயற்கையில் தலைக்கு சிறந்த மாய்ஸ்சரைஸர் எனில் அது எண்ணெய்தான். எனவே முடிந்தால் இரவிலாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி காலையில் தலை குளித்துவிடுங்கள்.


ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் பீட்ரூட் ஜூஸ்!
[Tuesday 2020-03-03 17:00]

முதுமை வந்தாலே வாழ்க்கை பிடிப்பு இல்லாமல் போய்விடும். எதிலும் மனம் லயிக்காது. சோம்பல் தானாக வந்து ஆக்கிரமித்து கொள்ளும். முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி பீட்ரூட் ஜூஸ் பருகினால் முதுமையையும் சுறுசுறுப்பாக மாற்றமுடியும் என்று தெரிவிக்கிறார்கள். மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை நைரேட் என்கிற சத்து வெகுவாக குறைப்பதாக ஏற்கனவே நடத்தப்பட்ட பல ஆய்வு மூலம் தெரியவந்தது. பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் பீட்ரூட் சாப்பிடும்போது நைட்ரேட்டை உருவாக்குவதற்கான ஆக்சிஜன் தேவைப்படாது.


உடல் பருமனை குறைக்க உதவும் சப்பாத்திக்கள்ளி பழம்!
[Monday 2020-03-02 18:00]

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் ஙி மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.


வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
[Sunday 2020-03-01 18:00]

பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனை சமையலில் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. அவை என்னவென பார்ப்போம்... தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.


வைட்டமின் குறைபாட்டால் அவதிப்படும் நகரவாசிகள்!
[Saturday 2020-02-29 18:00]

இந்திய நகரவாசிகளிடம் கடும் வைட்டமின் பற்றாக்குறை காணப்படுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சில விஞ்ஞானிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 30 முதல் 70 வயதுக்கு உள்பட்ட பலரை ஆய்வு செய்தனர். அதில் 100 பேரில் 46 பேருக்கு வைட்டமின் சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடத்தில் வைட்டமின் பி2 மற்றும் பி6 ஆகிய வைட்டமின்களின் சத்து பற்றாக்குறை அதிக அளவில் காணப்பட்டது. இன்றைக்கு நகரவாசிகள் அதிக அளவில் நோய்வாய்ப்படுவதும் ஒவ்வொரு நகரத்திலும் ஏராளமான மருத்துவமனைகள் முளைத்து வருவதையும் காண முடிகிறது. மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கு சத்து பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக இருப்பது ஏற்கனவே மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. இது போன்ற சத்துப்பற்றாக்குறை என்பது பெரும்பாலும் வறுமை நிலவும் நாடுகளில் தான் இருந்து வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக இந்திய அளவில் அதுவும் நகரப்பகுதிகளில் 100-ல் 46 பேருக்கு வைட்டமின் சத்து பற்றாக்குறை காணப்படுவது விஞ்ஞானிகளை திகைப்படைய வைத்துள்ளது.


நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் மருத்துவ பலன்கள்!
[Friday 2020-02-28 18:00]

நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். நெல்லி வேர், நரம்புகளைச் சுருக்கும்; வாந்தி, அருசி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும். நெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும்; இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும்; உடலைப் பலப்படுத்தும். நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும்; பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.


ஏலக்காயின் மருத்துவ குணங்கள்!..
[Thursday 2020-02-27 18:00]

ஏலக்காய் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளன. நன்மைகளை பற்றி இங்கு காண்போம்... ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது. வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.


முகப்பருவை குணமாக்க உதவும் எண்ணெய்கள்!
[Wednesday 2020-02-26 18:00]

நம்மில் சில பேருக்கு முகப்பரு அதிகமாக இருக்கும், அவை நம் முக அழகையே கெடுத்து விடும். நம்மில் 10% மக்களில் 9% மக்களுக்கு முகப்பருக்குள இருக்குமாம். பருக்கள் நம் முகத்தில் வந்து கருப்பு தழும்பாகவே மாறி விடும். அதிலும் சில பேருக்கு வாழ்நாள் முழுக்க ஆறாத வடுவாகவும் இருந்து விடும். அதற்காக பார்லருக்கு சென்று நாம் அதிகமாக செலவிடுவதுண்டு. ஆனால் பரு பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. சில கிரீம்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் நம் முக அழகே கெட்டுவிடுகிறது. இந்த பிரச்சனை காரணத்தால் நமக்கு அதிகமாக செலவிட்டு பயன் கிடைக்காமலே போயிருக்கும். இனி நீங்கள் அதை நினைத்து வருந்த வேண்டாம். ஹார்மோன்கள் குறைபாடு, உணவு பற்றாக்குறை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் நமக்கு முகத்தில் பருக்கள் வருகின்றன. இவற்றால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் முகங்களில் அதிகமாக வலி ஏற்படும்.


இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றும் தேங்காய்!
[Tuesday 2020-02-25 18:00]

நம் இந்திய உணவுகளில் தேங்காய் இல்லாமல் மிகக் குறைந்த உணவு வகைகளே உள்ளன. தேங்காய் கூழ், பால், நீர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை தேங்காயிலிருந்து நமக்கு கிடைக்கும் பொருட்கள். தேங்காய் நீர் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் தேங்காய் கூழ் நிறைவுற்ற கொழுப்புகளுடன் இருப்பது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பாதிக்கும். உண்மையில் இந்த பதிவின் விவாதம் உணவில் தேங்காய் பால் அல்லது தேங்காய் எண்ணெயைப் போன்றவற்றை சேர்க்கலாமா வேண்டாமா என்பதை பற்றியது தான். தேங்காய் எண்ணெயில் இதய ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல. மிக அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆயுர்வேத ஆய்வுகள் தேங்காய் கூழ் மற்றும் தேங்காய் எண்ணெய் அல்லது பிற பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றும் பலர் தேங்காய் பற்றிய கருத்தை மிகவும் சாதகமான முறையில் தருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். தேங்காயை வழக்கமாக உட்கொள்வது கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தும். தேங்காய் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்று அலோபதி ஆராய்ச்சி ஆய்வுகள் கூறுகின்றன. எது உண்மை? தேங்காய் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிக்குமா? உங்களுக்கு தெளிவை வழங்குகிறது இந்த பதிவு.


நரை முடியை கருமையாக்க உதவும் கறிவேப்பிலை எண்ணெய்!
[Monday 2020-02-24 18:00]

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரை தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான். இப்போது இருக்கும் இளைய தலைமுறை கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவது, போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது. இது அவர்களது மன தைரியத்தை குறைக்கிறது. இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தலாம். இப்போது கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்…


உடல் ஆரோக்கியத்தில் பழங்களின் முக்கிய பங்கு!
[Sunday 2020-02-23 18:00]

பச்சை நிற காய்கறிகள் மட்டுமல்ல மற்ற வண்ணங்களை கொண்ட காய்கறிகள், பழங்களும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றுள் மஞ்சள் நிற உணவு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டிருக்கின்றன. சரும ஜொலிப்புக்கும் வித்திடுகின்றன. அன்னாசி, மாம்பழம், வாழைப்பழம், முலாம் பழம், மஞ்சள் குடை மிளகாய், பூசணி, சோளம், எலுமிச்சை போன்றவைகள் அதில் குறிப்பிடத்தக்கவை. மஞ்சள் உணவுகளில் வைட்டமின் சி, பையோபிளவனாய்டு, கரோட்டினாய்டுகள் நிரம்பியுள்ளன. இவற்றுள் வைட்டமின் சி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.


உடல் சூட்டை தணிக்க உதவும் அகத்திக்கீரை!
[Saturday 2020-02-22 18:00]

அகத்திக்கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் 8.4 சதவீதம் புரதச்சத்து 1.4 சதவீதம் கொழுப்புச்சத்து 3.1 சதவீதம் தாது உப்புகள் மட்டுமின்றி மாவுச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் ஏ சி ஆகிய சத்துகளும் உள்ளன. பொதுவாக அகத்திக் கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று சிவப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை பூ பட்டை வேர் ஆகியவை மருந்தாக பயன்படுகின்றன. அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். மலச்சிக்கலை தடுக்கும். வயிற்றுப்புண் குணமாகும்.


சருமத்தை அழகாக்க உதவும் ஆவாரம் பூ!
[Friday 2020-02-21 18:00]

பனிக்காலங்களில் நம் உடலில் ஏற்படும் வளர்ச்சியை போக்க ஆவாரம்பூ மிகுந்த அளவில் உதவி புரிகின்றது. இந்த பூவுடன் வெள்ளரியின் விதை, கசகசா, பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உடலுக்கு தேய்க்கலாம். இதே போல் கோடை சமயங்களில் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உடல் வறட்சி நீங்கிவிடும், நிறம் பளிச்சென்று இருக்கும் முகத்திற்கும் தடவலாம்.


ஞாபகச்தியை அதிகரிக்கும் பச்சைப் பட்டாணி!
[Thursday 2020-02-20 18:00]

வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும். உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.


பலவித நோய்களை குணமாக்கும் ஜப்பானியர்களின் நீர் சிகிச்சை!
[Wednesday 2020-02-19 18:00]

மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக நீர்தான் முக்கிய ஆகாரமாக விளங்குகிறது. மனித உடலில் 70 சதவீதம் நீர் நிறைந்திருக்கிறது. இது தாகத்தை கடந்து மனித உடல் இயக்கத்திற்கு நீரின் பங்களிப்பு எந்த அளவுக்கு அவசியமானது என்பதை உணர்த்துகிறது. சுறுசுறுப்புக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஜப்பானியர்கள் உடல் ஆரோக்கியத்திலும் வலுவானவர்களாக இருக்கிறார்கள். அவர்களது தேகமும் பளபளப்புடன் பிரகாசமாக காட்சியளிக்கும். அதற்கு அவர்கள் கையாளும் நீர் தெரபி சிகிச்சையே காரணமாகும். தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கு, ஐந்து டம்ளர் தண்ணீர் பருகுகிறார்கள். அந்த தண்ணீர் அந்தந்த காலநிலைக்கு ஏற்ப அறையின் வெப்பநிலைக்கு இணையாக சாதாரணமாகவோ அல்லது மிதமான சூடுடனோ இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள்.


மன அழுத்தத்தை குறைக்க உதவும் எளிய வழி முறைகள்!..
[Tuesday 2020-02-18 17:00]

காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும். வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள். வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.


உடலை வலுவாக்க உதவும் "ஏழைகளின் இறைச்சி"!
[Monday 2020-02-17 17:00]

ஏழைகளின் இறைச்சி என்று கூறப்படும் பயறு வகைகள் உடலை வலுவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் பயறு வகைககள் அசைவ உணவுக்கு இணையாக கூறப்படுகின்றன. அதிலும் சோயாவில் சுமார் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் காணப்படுகிறது. சாதாரணமாக சாப்பிடுவதை விட , முளைகட்டிய பயறு வகைகள் உடலுக்கு இருமடங்கு ஆற்றலை வழங்க கூடியவை.


அழகு ரகசியத்திற்கு துணைபுரியும் அரிசி!
[Friday 2020-02-14 17:00]

பெண்கள் சரும அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் தோன்றுவதற்கு அரிசி உணவை குறைக்குமாறு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அழகு ரகசியத்திற்கு அரிசியும் துணைபுரிகிறது. சருமத்திற்கு அது ஏராளமான நன்மைகளை தருகிறது. குறிப்பாக விரைவிலேயே வயதான தோற்றம் உண்டாவதை அரிசி உணவுகள் தடுக்கிறது. சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் செய்கிறது. அரிசியில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. சரும ஆரோக்கியத்திற்கு அரிசி நீரும் முக்கிய பங்காற்றுகிறது.


புளியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Thursday 2020-02-13 18:00]

நம் முன்னோர்கள் தினமும் பயன்படுத்தி புளியை நம்முடைய சமையலில் பெரிதாக நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் அதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. அவற்றைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். நம் தென்னிந்திய சமையலைப் பொறுத்த வரை அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் புளி. இதுவரை இந்த புளி வெறும் சுவைக்காக மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தோம். ஆனால் குழம்பில் சேர்க்கும் புளியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. புளி ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது, புளி ஒரு ஆன்டி செப்டிக் மருந்தாக செயல்படுகிறது. சருமம் வயதாகுவதை தடுக்கிறது. இந்த புளிக்கரைசலை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு வந்தாலே ஏகப்பட்ட பிணிகளை ஓட்ட முடியும். இது நன்மையை மட்டும் தருவதோடு சுவை யிலும் இதை அடிச்சிக்க எதுவும் கிடையாது. உணவில் சேர்த்த பிறகு தொட்டு நாக்கில் வச்சு சாப்பிடும் போது ஏற்படும் புளிப்பு சுவைக்கு எது ஈடு. அந்தளவுக்கு இதன் சுவையும் ஆரோக்கிய மும் நம்முடைய ஒட்டியுள்ளது.


தர்பூசணி விதையில் இருக்கும் மருத்துவ குணங்கள்!
[Wednesday 2020-02-12 18:00]

தர்பூசணி பழத்தின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் பெரும்பாலும் தூக்கிப்போடும் தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம். தர்பூசணி பழத்தில் அதிக தண்ணீர் சத்து உள்ளது. வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தால் நீர் சத்து பற்றாக்குறை நம் உடலில் ஏற்படும் பொழுது தர்ப்பூசணி பழங்கள் அதைப் பாதுகாத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. உணவிற்கு பதில் தர்பூசணி பழங்களை உண்டு வருகின்றனர் தர்பூசணி பழத்தில் மிகக் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை குறைக்க உதவுவதாக அவர்கள் நம்புகின்றனர்.


சமையலில் செய்யக்கூடாதவை!
[Wednesday 2020-02-12 06:00]

ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய பயிற்சிகள்!
[Tuesday 2020-02-11 18:00]

மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு குறுக்கெழுத்து, சுடோகு, புதிர் போன்ற விளையாட்டு பயிற்சிகள் உதவும். அவை மூளைக்கு சவால் விடும் விதத்தில் சிந்தனை திறனை தூண்டி விடும். வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளுக்கும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை இருக்கிறது. அதுதவிர வேறு சில எளிய பயிற்சிகளும் மூளைக்கு நலம் சேர்க்கும். நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கருத்துப்படி, நடனத்தில் புதிய யுக்திகளை கற்றுக்கொள்வது மூளையின் செயல் திறனை மேம்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. அதுபோல் நினைவாற்றல் திறனும் கூடும்.


பலா பழத்தில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்!
[Monday 2020-02-10 18:00]

முக்கனிகளுள் இரண்டாவது கனி பலாப்பழம். இந்தப் பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும். கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பலாக்காயை சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும். பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும். பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.


ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கும் உணவு முறைகள்!
[Sunday 2020-02-09 17:00]

ஆஸ்துமா என்பது சுவாச அமைப்பில் உருவாகும் ஒரு நோயாகும். காற்று செல்லும் வழிகள் சுருங்குவதால் இது ஏற்படுகிறது. நுரையீரல், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றது. இந்நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருகின்றது. ஆண்களுக்கு அதிகமாக வரக்காரணம் அதிக மன ழுத்தம், கவலை. இதன் காரணமாக முதலில் தலைவலி, தூக்கமின்மை வரும். பின் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல், ஆஸ்துமாவாக வருகின்றது.


நகங்களை நீளமாக வளர்க்க சிறந்த வழிமுறைகள்!
[Sunday 2020-02-09 08:00]

பெண்கள் பெரும்பாலும் தங்களது நகங்களை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். மேலும் அவர்களது நகங்களையும் அலங்கரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் பலர், தங்களுக்கு நீண்ட நகங்கள் வளர்வதில்லை எனவும், அதன் காரணமாக தங்களது நகங்களின் மீதான கலையினை செய்யமுடிவதில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். அவ்வாறு புகார் அளிக்கும் பெண்களுக்கு இந்த உதவிக்குறிப்புகள் உதவும்... நகங்களை மென்று துப்பும் கெட்ட பழக்கம் சிலருக்கு உண்டு. அவர்கள் நகங்களை எப்போதும் மென்று கொண்டே இருப்பார்கள். இதனால் பல வகையான பாக்டீரியாக்களை அவர்கள் உட்கொள்கின்றனர். இது உங்கள் வாயின் வழியாக வயிற்றில் செல்வதன் மூலம் உங்களை நோய்வாய்ப்படுத்தும். மேலும் நகங்களை மென்று துப்புதல் அவற்றின் வளர்ச்சியில் வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக சில ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கிறது.


கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்!
[Friday 2020-02-07 18:00]

கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை என்று சொல்லுமளவு உணவு பொருள்களில் நீக்கமற நிறைந்திரு க்கிறது. இதை வாசனைக்காக மட்டும் பயன்படுத்தவில்லை என்பதை உணர்ந்திருப்பவர்களின் சதவீதம் குறைவு என்றே சொல்லலாம். சமீப வருடங்களாக சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற முக்கிய நோயை தாண்டி, அழகு குறிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதற்கான விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது என்றும் சொல்லலாம். கறிவேப்பிலையின் பயன்களை தெரிந்து கொண்டால் அதை பயன்படுத்தும் ஆர்வமும், சாப்பிடும் ஆர்வமும் இயல்பாக வந்துவிடும் என்கிறார்கள் உணவு பொருள்களை ஆராய்ச்சி செய்பவர்கள். கறிவேப்பிலை காலங் காலமாக சித்த மருத்துவத்திலும்,ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. கறி வேப்பிலை என்பது ஒரு வகை இலை. இது கறிவேம்பு இலை என்ற பெயரை உடையது. காலப்போக்கில் மருவி கறிவேப்பிலை ஆகிவிட்டது. தனி மணமும் சுவையும் கொண்ட இந்த இலையை வெறும் வாயில் இட்டு மென்றால் சற்று காரம் இலேசான கசப்பு சுவையை அளிக்கும். அதனால் பெரும்பாலோனோர் உணவில் இருக்கும் கொத்துமல்லித் தழையை சாப்பிட்டாலும் கறிவேப்பிலையை முதலில் எடுத்து அப்புறப்படுத்திய பிறகு சாப்பிட தொடங்குவார்கள். இதன் நன்மைகளை அறியாமல் இருப்பவர்கள் இனியாவது தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


கூந்தலை பாதிக்கும் தவறான மசாஜ் முறைகள்!
[Thursday 2020-02-06 18:00]

எண்ணெய் தேய்க்கும்போது, எண்ணெய் முழுவதையும் உங்கள் தலையில் தேய்க்கத் தேவை இல்லை. எண்ணெயில் உங்கள் விரல்களில் நனைத்து, பின்னர் கூந்தலில் கோர்த்து மெதுவாக அழுத்தம் கொடுக்கவேண்டும். அல்லது உச்சந்தலையில் எண்ணெய் அப்ளை செய்து விரல்களால் அழுத்தி மசாஜ் செய்யலாம். தவறான மசாஜ் முறைகளால் கூந்தல் வீழ்ச்சியடையலாம். இரத்த ஓட்டம் அதிகரிக்க 15 முதல் 20 நிமிடங்கள் விரல்களால் நன்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். உச்சந்தலையில் மசாஜ் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. எஃப்லேரேஜ் மற்றும் பேட்ரிஸஜ். எஃப்லேரேஜ் என்பது கைகளில் வாதம் ஏற்பட்டால் அதை நீக்குவதற்காக மசாஜ் செய்வது. பேட்ரிஸஜ் என்பது உச்சந்தலையில் விரல்களால் அழுத்தி தேய்த்து விடுவது ஆகும்.


அழகை பராமரிப்பதில் நல்லெண்ணெயின் பங்கு!
[Wednesday 2020-02-05 17:00]

நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மெண்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.


சருமத்தை அழகூட்ட உதவும் காபி தூள்!
[Tuesday 2020-02-04 17:00]

காபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம். சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும். எனவே காபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும். இந்த காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. என்னடா நம்ம காபி குடிக்க மட்டும் தான பயன்படுத்துவோம் இது என்ன புதுசா இருக்குனு நீங்க யோசிக்கலாம். ஆமாங்க காபி தூள் நம்ம முகத்த அழகாக்கவும் பயன்படுகிறது. காபி தூள் ஒரு கப், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி?
[Monday 2020-02-03 18:00]

மத்திய சீனாவில் உள்ள ஊஹான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு வினோத நோய் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஒரு புது வகையான கொரோனா வைரஸ் தான் இந்த புதிய தொற்று நோய்க்கு காரணம் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 17 வருடங்களில் நூற்றுக்கணக்கான உலக மக்களை கொன்றுகுவித்த சார்ஸ் (severe acute respiratory syndrome coronavirus/SARS-CoV) மற்றும் மெர்ஸ் (Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வைரஸ் தான் இந்த புதிய கொரோனா வைரஸ். இந்த புதிய கொரோனா வைரஸ்க்கு 2019-nCoV என்று பெயரிட்டுள்ளது உலக சுகாதார மையம். தொடக்கத்தில் அதிகம் ஆபத்துகளை ஏற்படுத்தாத வைரசாக இருக்கும் என்று கருதப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் ஒரு மாத காலத்துக்குள் சீனாவில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு தொற்றியுள்ளது, நூற்றுக்கும் அதிகமானவர்களை பலிவாங்கியுள்ளது.

Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா