Untitled Document
October 24, 2026 [GMT]
 
கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் 5 முக்கிய வழிமுறைகள்!
[Wednesday 2020-04-01 17:00]

உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது. ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ள நிலையில், பல நாடுகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த தொற்றின் கடும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் பலவும் சந்தித்து வரும் நிலையில், லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.


கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி?..
[Tuesday 2020-03-31 17:00]

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் 177 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 7,87,010 பேருக்குப் பரவியுள்ளது. 37,829 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 1,66,214ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251ஆக உயர்ந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.


நீரிழிவு நோயை விரட்டும் முருங்கை டீ!
[Monday 2020-03-30 18:00]

முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பவுடரை ஒரு நாளைக்கு அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.


கொரோனாவிடமிருந்து நோய்வாய்பட்டவர்களை காப்பாற்றும் வழிமுறைகள்!..
[Sunday 2020-03-29 18:00]

கொரோனா என்னும் பெருந்தொற்று உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் தீவிரமாக பரவிவரும் இந்த தொற்றை எதிர்கொள்ள மக்கள் அச்சத்துடன் தயாராகிவருகிறார்கள்.மருத்துவர்களும், அரசும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மற்றொரு புறம் கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனமும், மருத்துவர்களும் அவ்வபோது கொரோனா குறித்த செய்திகளையும் வெளியிட்டுவருகிறார்கள். இதில் வயதானவர்களை தவிர உடலில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நுரையீரல் குறைபாடு, சுவாசக்கோளாறு பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த தொற்று பரவினால் அவர்களை காப்பாற்றுவது சவாலாக இருப்பதாகவும் உயிரிழப்பில் இந்த பாதிப்புக்குரியவர்களே அதிகம் என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அச்சப்படவேண்டியதில்லை. கூடுதல் கவனத்தோடு நோயை கட்டுக்குள் வைத்துகொண்டால் அச்சம் இல்லை என்று ஆறுதல் தருகிறார்கள் மருத்துவர்கள்..


ஆண்களை அதிகம் தாக்கும் கொரோனா: காரணம் என்ன?..
[Saturday 2020-03-28 17:00]

சீனா உகான் மாமிச உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்டுள்ளது. வவீஹூய்சியான் என்ற 57 வயதான பெண்மணியே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கான முதல் நபர் ஆவார். உகான் சந்தையில் இறால் விற்கும் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.ஆனால் பொதுவாக தனக்கு அடிக்கடி வரும் காய்ச்சல் என்றே இதையும் கருதியுள்ளார். இதனையடுத்து உள்ளூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சென்று இருமல் மற்றும் காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து இறால் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார்.


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது?..
[Friday 2020-03-27 18:00]

மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமானது காற்றை பிரித்து உடல் இயக்க செயலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நுரையீரல். நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு சுவாசக் குழாயின் வழியே நுரையீரலுக்குள் செல்கிறது. அங்கு காற்றிலிருந்து ஆக்சிஜனை மட்டும் பிரித்து எடுத்து, ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றும் முக்கியமான பணியை நுரையீரல் செய்கிறது. இதயத்திலிருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்துவிட்டு வரும் கெட்ட ரத்தத்தை ஆஜ்சிஜன் துணை கொண்டு சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றி மீண்டும் இதயம் வழியாக உடல் முழுவதற்கும் அனுப்பும் முக்கியமான பணியை மேற்கொள்கிறது. இப்போதே உடல் உறுப்புகளில் நுரையீரல் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.


கொரோனாவிலிருந்து தப்பிக்க நாம் கடைபிடிக்க வேண்டியவை...
[Thursday 2020-03-26 18:00]

நோயை எப்போதும் அச்சத்துடன் எதிர்கொள்ள கூடாது. அதிலும் நோய் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சமே மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடும். தற்போது கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துதான் இருக்கிறது அதைவிட அதிகமாய் அச்சமும் சேர்ந்திருக்கிறது. எதையும் பயத்துடன் எதிர்கொள்ளும் போது அவை அதிக வலிமையைப் பெற்றுவிடும். அந்த வகையில் கொரோனா வைரஸ் இப்போது வலிமை மிக்கவர்களையும் அசைத்து பார்த்துள்ளது என்பதே உண்மை. பொதுவாகமருத்துவர்கள் அறிவுறுத்துவது ஒரு விஷயம் தான். நோய் வந்தாலும் அதை மன உறுதியோடு நம்பிக்கையுடன் எதிர்கொண்டாலே போதுமானது. அப்படி இருந்தால் வரும் நோய் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் அவை ஆச்சரியத்தக்க வகையில் குணமடைந்துவிடும். அப்படி இருக்கும் போது வராத நோயை நினைத்து பயம் கொள்வதை விட நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை கொண்டிருந்தாலே போதும். பீதி அடைய தேவையில்லை. அப்படி நீங்கள் என்னெல்லாம் செய்ய வேண்டும். தெரிந்துகொள்வோமா?


நிபுணர்களால் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறி!
[Wednesday 2020-03-25 17:00]

கொரோனா வைரஸ் வழக்குகளின் விரைவான உயர்வு தொடர்ந்து உலகத்தை அச்சுறுத்தி வருகிறது.இங்கிலாந்தை சேர்ந்த நிபுணர்கள் சுவை மற்றும் வாசனையை இழப்பது கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறிகளாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இங்கிலாந்து பத்திரிகையான இன்டிபென்டன்ட் பத்திரிகையின் தகவல் படி, பிரிட்டிஷ் அசோசியேஷன் ஆஃப் ஓட்டோரினோலரிங்காலஜி (ஈ.என்.டி யுகே) கொரோனா நோய்களுக்கான பிற அறிகுறிகள் இல்லாத நிலையில்" புதிய அறிகுறி கண்டறியப்பட்டதாகவும், இந்த அறிகுறியைக் கொண்டிருப்பவ்ர்கள் வைரஸின் மறைக்கப்பட்ட கேரியர்கள் ஆவார்கள் என கூறி உள்ளது.


கொரோனா வைரஸ் மனித உடல் பாகங்களில் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்?..
[Tuesday 2020-03-24 18:00]

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி மக்களும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். ஏனெனில் இது ஒரு தொற்று நோய் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு எளிதாக பரவும். எனவே மக்கள் எப்பொழுதும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. அடிக்கடி கை கழுவுவது, நம் வீட்டை சுத்தமாக வைப்பது போன்றவை COVID-19 வராமல் தடுக்க உதவுகிறது. ஆனால் வெறும் கைகளை மட்டும் கழுவினால் போதுமா, நமது கைகள் தலைமுடியை கோத வாய்ப்புள்ளது, முகத்தை தொட வாய்ப்புள்ளது, நகங்கள் சுத்தமாக இருக்குமா இது போன்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே இருக்கிறது. கொரோனா மற்ற பரப்புகளிலும் இருக்குமா, இருந்தால் எவ்வளவு காலம் நீடிக்கும் இது குறித்து மருத்துவர்கள் நிறைய கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் நமக்கு கொரோனா வைரஸை பற்றி அறிந்து கொள்வதற்கும், இதன் மூலம் அதை தடுக்க கூடுதல் நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.


நீரிழிவு நோயாளிகளை கொரோனா அதிகம் தாக்குவதற்கான காரணம் என்ன?..
[Monday 2020-03-23 18:00]

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்கள். தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம். இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது.


வெப்ப நோய்களிலிருந்து காக்கும் சுரைக்காய்!
[Sunday 2020-03-22 17:00]

கொடி இனத்தைச் சார்ந்த தாவரமான சுரைக்காய் சுவையான உணவு மட்டும் இல்லை. பல உயர்ந்த நற்குணங்கள் கொண்ட ஒரு மருந்தாகும். சுரைக்காய் குக்குபைஸ் புடலை இனத்தைச் சார்ந்தது ஆகும். ‘இனிப்புச் சுரை’ அல்லது காட்டுச் சுரை’ என்றும் பிரித்துப் பார்ப்பது வழக்கம். சுரைக் காயை ஆசியா கண்டத்தில் உள்ள மக்கள் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அறிந்து அதைப்பயன்படுத்தி வருவதாக வரலாறு கூறுகிறது. சுரையை கறிச்சுரை என்றும் குறிப்பதுண்டு. பொதுவாக கசப்பில்லாத சுரையே கறியாக சமைப்பதற்குப் பயன்படும். சுரைக் கொடியை மழைக்காலங்களில் வீட்டுத் தோட்டத்திலும் கொல்லைப் பகுதியிலும் பயிராக வளர்ப்பது வழக்கம்.


கொரோனாவை தடுக்கும் உணவுப்பொருட்கள்!..
[Sunday 2020-03-22 08:00]

வைட்டமின் சி அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் 2 தக்காளி பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம். மஞ்சள் இயற்கையாகவே சிறந்த கிருமிநாசினி ஆகும். மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலில் தங்கியுள்ள நச்சுகள், குடற் பூச்சிகள் போன்றவை அழிகின்றன. 2 கிராம் சுத்தமான பூண்டுவை 2 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 7 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி மற்றும் பூண்டுவை அரைத்து, சட்னி அல்லது குழம்பு வைத்து உணவில் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.


கொரோனா தொற்று: குழந்தைகளுக்கு கற்றுத்தரவேண்டியவை!..
[Thursday 2020-03-19 17:00]

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் சூழ்நிலையில், ஒவ்வொரு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்கள். நமது குழந்தைகள் டியுஷன் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை பலவகையான சூழல்களை எதிர்கொள்கின்றனர். எனவே சரியான நடவடிக்கைகளின் மூலம் குழந்தைகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், பதட்டமடையத் தேவையில்லை.


கொரோனா வைரஸ் ஒரு பொருளின் மேற்பரப்பில் எத்தனை நாட்கள் உயிர்வாழும்?..
[Wednesday 2020-03-18 17:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 873 ஆக அதிகரித்து உள்ளது.நேற்று ஒரே நாளில் ஒரு இந்தியர் உள்பட 862 பேர் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தோன்றிய உகான் நகரில் அதன் வீரியம் குறைந்து வருகிறது. நேற்று கூடுதலாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கியது. ஆனால், சீனா முழுவதும் மேலும் 13 பேர் பலியானார்கள். இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவிவருவதால் எங்கும் கொரோனா எதிலும் கொரோனாவாக உள்ளது. மக்களிடம் எந்த பொருட்களின் மேற்பரப்புகளைப் தொடுவது குறித்தும் பயம் தொற்றி உள்ளது.


கொரோனா வைரஸ் நுரையீரலை எப்படி பாதிக்கும்!... Top News
[Tuesday 2020-03-17 18:00]

கொரோனா வைரஸ் எப்படி நுரையீரலை அழிக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட சீனா தம்பதியின் நுரையீரல் படங்கள் வெளியாகி அதிர வைத்துள்ளது. கொரோனா தோன்றிய சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்த 60 வயதுடைய தம்பதிகள், இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நடந்த பரிசோதனையில் 2020 ஜனவரி 29ம் திகதி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.


கொரோனா வைரஸ் மனித உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்?..
[Monday 2020-03-16 17:00]

கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வரும் நிலையில், அதன் தாக்கம் மற்றும் வீரியம் குறித்து சீன மருத்துவர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தும் தொற்று நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் அதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும், இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் திணறி வருகின்றனர்.


சிறுநீரக நோயின் அறிகுறிகள்! Chronic Kidney Disease
[Sunday 2020-03-15 23:00]

எமது உடலில் இரண்டு சிறுநீரகங்கள் காணப்படுகின்றன. சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டும் தொழிலை செய்கின்றன. இதனால் எமது இரத்தத்தில் காணப்படும் கழிவுகள், உடலுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய நச்சுப் பதார்த்தங்கள் மற்றும் மேலதிக நீர் சிறுநீராக அகற்றப்படுகிறது.


வல்லாரை கீரையின் மகத்தான குணங்கள்!
[Sunday 2020-03-15 18:00]

நமது ஆயுர்வேதத்தில் ஏராளமான மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். நம் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மூலிகைகளில் மருத்துவ குணங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அந்த வகையில் பிராமி அதாவது வல்லாரை என்ற கீரை நினைவாற்றல் அதிகரிப்பு, கூந்தல் வளர்ச்சி போன்ற ஏராளமான பயன்பாட்டுக்கு சிறந்து விளங்குகிறது. நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தவும், நினைவுகளை தக்க வைக்கும் திறனை அதிகரிக்கவும் வல்லாரை சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும், பதட்டமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சைமர் நோய், அனிஸிட்டி பிரச்சனை, கவனக் குறைவு, அழற்சநயை போக்க என்று இதன் நன்மைகள் ஏராளம். இதன் நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.


குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?..
[Saturday 2020-03-14 17:00]

1-4 வாரங்கள் ஆன குழந்தைகள்: நாளொன்றுக்கு 15 - 16 மணி நேரம் புதிதாக பிறந்தவர்கள் 15 முதல் 18 மணி நேரம் வரை தூங்குகிறார்கள் ஆனால் அவர்கள் அதை 3 அல்லது 4 மணி நேர குறுகிய கால தூக்கமாக தூங்குகிறார்கள். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் நீண்ட நேரமும் மற்றும் வயிற்றுவலி உள்ள குழந்தைகள் குறுகிய நேரத்திற்கும் தூங்குவார்கள். புதிதாக பிறந்தவர்களுக்கு இன்னும் ஒரு உட்புற உயிரியல் கடிகாரம் அல்லது சர்காடியன் ரிதம் இல்லாததால், தூக்க நேரமானது பகல்நேர மற்றும் இரவுநேர சுழற்சிகளுடன் தொடர்பில் இல்லை. உண்மையில், அஅவர்களுக்கு தூங்குவதற்கான ஒரு குறிப்பிட்ட நேரமே இருக்காது.


உயர்ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் முந்திரி!
[Friday 2020-03-13 18:00]

முந்திரியில் முந்திரி பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப்பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள கடித்த பூக்காம்பு பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர். முந்திரியில் முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டையில் பயன்படுத்தப்படும் கையுறை வடிவில் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழம் ஆகும். இதன் உள்ளே இருக்கும் உண்ணக் கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.


கொரோனா தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி?..
[Thursday 2020-03-12 17:00]

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 லட்சம் பேர் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். தடுப்பு மருந்து இல்லாத கொரோனா வைரஸ் என்ன காரணத்தினால் பரவுகிறது? இதை தடுக்க முடியுமா? கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பது குறித்து மக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வு பெற வேண்டும். கொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதை சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. முதலில் காய்ச்சலில் தொடங்கும். அதாவது உடல் வெப்பத்தை காட்டிலும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும். தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக்கோளாறு உண்டாகும். அதைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும். இவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்த அறிகுறியால் மருத்துவமனைக்கு வந்தவர்களில் இதுவரை அதிகம் பேர் இறந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


அழகு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் தரும் மெனிக்யூர்!
[Wednesday 2020-03-11 18:00]

மெனிக்யூர் (manicure) என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல, நமது கைகளையும், கைவிரல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஒரு சிறந்த சிகிச்சையாகும். இதனை அழகு நிலையங்களுக்கு சென்று அதிக பணம் செலவழித்து தான் செய்யவேண்டும் என்பது அல்ல, வீட்டில் இருந்தபடியே எளிதாக நாம் செய்யாலாம். எப்படி செய்வது என்பது குறித்து இங்கு விரிவாக காண்போம். முதலில் கைவிரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால் அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள். தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப நகங்களை சேவ் செய்து வடிவமைத்து கொள்ளவும். நீளமான நகங்களை நீங்கள் வைக்க நினைத்தால் அது எளிதில் உடைய வாய்ப்புள்ளதால் மீடியமான வடிவத்தில் நகத்தை வெட்டிக் கொள்ளுங்கள்.


புற்றுநோயை எதிர்த்து போராட உதவும் கரும்புச்சாறு!
[Tuesday 2020-03-10 18:00]

பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவதாக பெரிய அளவில் கரும்பு உற்பத்தி செய்வது இந்தியாதான். இந்தியாவில் வளர்க்கப்படும் பெரும்பாலான கரும்பு குர் (வெல்லம்) ஐத் தொடர்ந்து கந்த்சாரி (சுத்திகரிக்கப்படாத அல்லது பழுப்பு சர்க்கரை) தயாரிக்கப் பயன்படுகிறது, இறுதியாக, ரசாயனங்கள் மற்றும் கந்தகத்தைப் பயன்படுத்தி பதப்படுத்தப்பட்ட சர்க்கரை. மீதமுள்ள சக்கைப் பொருள் எரிபொருளாகப் பயன்படுத்தலாம் அல்லது காகிதம் மற்றும் ஒலி இன்சுலேடிங் போர்டுகளை உருவாக்கலாம். உண்மையில், ஒரு சில நாடுகளும் இதைப் பயன்படுத்துகின்றன. ஒரு தம்ளர் கரும்பு சாறில் பல நன்மைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.


ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் நடைப்பயிற்சி!
[Monday 2020-03-09 18:00]

நடைப்பயிற்சியில் Trekking, Leisure Walking, Race Walking, Power Malking என பலவகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு எந்த வகைப் பயிற்சி ஒத்துவருகிறதோ அதைத் தொடர்ச்சியாகச் செய்து வர வேண்டும். மற்ற வகையான உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும். இப்பயிற்சியை மேற்கொள்ள ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும். எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் பல. அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.


நீரிழிவு நோயை தடுக்கும் நாவல்பழம்!
[Sunday 2020-03-08 18:00]

நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் ஙி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை என்று சித்த மருத்துவர் கூறுகின்றனர். நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.


மகளிர் தினம் உருவான வரலாறு!
[Sunday 2020-03-08 18:00]

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றது அந்த காலம். ஆனால் கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை. இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம். ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி அன்று இந்த மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை விடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.


ஆயுளை அதிகரிக்கும் வாழ்க்கை முறைகள்!
[Saturday 2020-03-07 18:00]

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழ்ந்தால், புற்றுநோய், இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் இல்லாமல், ஆயுள் பெண்களுக்கு 10 ஆண்டுகளும், ஆண்களுக்கு 7 ஆண்டுகளும் அதிகரிக்கும் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆயுளை நீட்டிக்க, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும், மது பானத்தைத் தவிர்க்க வேண்டும், உடல் எடை ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும், உணவு வகைகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும், புகைபிடிக்கக் கூடாது என்று பல ஆலோசனைகளை அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வந்தனர்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நீரா பானம்!
[Friday 2020-03-06 18:00]

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒருவகை பானம்தான் நீரா. நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம். எனவே இதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி பருகலாம். மேலும் நீராவில் போதை தரும் ஆல்கஹால் 0.0001 சதவீதம் கூட இல்லை என்பது நிதர்சன உண்மையாகும். நீராவை பதநீர் இறக்குவது போல எளிதில் இறக்க முடியாது. 5 டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் இறக்க வேண்டும். எனவேதான் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ்பெட்டிகளை பொருத்தி சேகரிக்க வேண்டும்.


கொரோனாவிலிருந்து நம்மை காத்துக்கொள்ள சில வழிமுறைகள்!
[Friday 2020-03-06 08:00]

கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது. எந்த முகமூடியும் (Mask) அதன் நுழைவைத் தடுத்து விடும். அதனால் சாதாரண முகமூடியையே பயன்படுத்தலாம். வைரஸ் காற்றில் கலப்பதில்லை. அதனால் கொரோனா காற்றின் மூலம் பரவுவது இல்லை. ஆனால் தரையில் படியும். அதனால் நம் வீட்டு அலுவலக தரைகளை அவ்வப்போது சுத்தமாக துடைப்பது நலம்.


புற்றுநோய் வருவதை தடுக்க உதவும் டிராகன் பழம்!
[Thursday 2020-03-05 17:00]

ஒரு காலத்தில் டிராகன் பழத்தை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். கடைகளிலும் கிடைப்பது அரிதான ஒன்றாக இருந்து வந்தது. இப்போது, டிராகன் பழம், பழ அங்காடிகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் மையத்தில், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்திலான இனிப்புக் கூழ், சிறு கருப்பு விதைகளுடன் இருக்கும்.சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்ட டிராகன் பழம், உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா