Untitled Document
November 22, 2024 [GMT]
 
மும்பையில் மாயமான கல்லூரி மாணவியின் உடல் அக்ஷா கடற்கரையில் மீட்பு!
[Saturday 2016-03-12 07:00]

மும்பை போரிவிலி, கோரை பகுதியை சேர்ந்தவர் மம்தா(வயது 21). இவர் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். இவரது தந்தை போலீஸ்காரர் ஆவார். இந்தநிலையில் கடந்த புதன்கிழமை கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்ற மம்தா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து கவலையடைந்த அவளது பெற்றோர் இதுகுறித்து போரிவிலி போலீசில் புகார் அளித்தனர். இந்தநிலையில் மால்வாணி, அக்ஷா பீச்சில் இளம்பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாக போரிவிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண் மாயமான மம்தா என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடலில் காயம் எதுவும் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மால்வாணி போலீசார் மம்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


தனது உயிரை காப்பாற்றிய முதியவரை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் 5 ஆயிரம் மைல் பயணம் செய்யும் பென்குயின்! Top News Top News
[Friday 2016-03-11 08:00]

பென்குயின் பறவை ஒன்று தனது உயிரை காப்பாற்றிய முதியவரை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் 5 ஆயிரம் மைல் பயணம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் ரியொ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜூவா பெரேரா டி சவுசா (Joao Pereira de Souza). முதியவரான இவர் அருகில் உள்ள கடலில் மீன் பிடிப்பதை தனது பொழுதுப்போக்காக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு பாறையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பென்குயின் ஒன்றை பார்த்துள்ளார். உடனடியாக அதனை மீட்டு சிகிச்சை அளித்த ஜூவா அதற்கு டிண்டிம் (Dindim) என பெயரும் இட்டுள்ளார். பின்னர் அந்த பென்குயின் குணமடைந்ததும் கடலில் சென்று விட்டுள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் கழித்து தான் மீட்ட இடத்தில் டிண்டினை பார்த்த ஜூவா இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.


ஐ.எஸ் தீவிரவாதிகளின் தனிப்பட்ட சுய விபரக்கோவைகள் சிக்கியது!
[Thursday 2016-03-10 00:00]

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. தற்போது ஐ.எஸ் அமைப்பில் உள்ள 22 ஆயிரம் தீவிரவாதிகள் ஐ.எஸ் அமைப்பில் சேரும் போது தனிப்பட்ட தகவல்களை நிரப்பி கொடுத்த விலைமதிபற்ற படிவங்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேருவதற்கு 23 கேள்விகள் கொண்ட விண்பத்தை அவர்கள் நிரப்ப வேண்டும்.அதில் பிறந்த திகதி, திருமண விவரம், முந்தைய வேலைபார்த்த விவரங்கள் மற்றும் உறவினர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் தனிபட்ட தகவல்கள் குறித்து கேட்க்கப்பட்டு இருக்கும்.


அவருக்கு60.. இவருக்கு 27.. ஆனாலும் அமர்க்களமாக இருக்கிறதாம்!
[Wednesday 2016-03-09 20:00]

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதி அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்... காரணம், இந்தத் தம்பதியின் வயது வித்தியாசம். கணவரின் வயதில் பாதி கூட இல்லை அந்தப் பெண். ஆனாலும் தான் பல மடங்கு சந்தோஷத்தை தனது கணவர் மூலம் அனுபவிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார். இருவரும் இணைந்து அளித்துள்ள வீடியோ பேட்டி யூடியூபை கலக்கி வருகிறது. வைரல் ஆகியுள்ளது. அந்தக் கணவரின் பெயர் டேவிட் மேன்சன். மனைவியன் பெயர் அமி. டேவிட்டின் வயது 60. அமியின் வயது 27. இருவரும் மிக மிக சந்தோஷமாக தாம்பத்தியம் நடத்தி வருகின்றனராம். மற்ற எல்லா சந்தோஷமான தம்பதிகளைப் போலவே நாங்களும் முழுமையான கணவன், மனைவியாக திருப்திகரமாக வாழ்க்கை நடத்தி வருவதாக கூறியுள்ளார் அமி.


சீனாவில் ஐபோன் வாங்குவதற்காக பெற்ற குழந்தையை விற்ற தம்பதி! - காவல்துறையினரால் கைது
[Wednesday 2016-03-09 20:00]

சீனாவில் ஐபோன் வாங்குவதற்காக, பிறந்து 18 நாட்களே ஆன குழந்தையை விற்ற தம்பதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தைச்சேர்ந்த டூயன், ஜியோ மெய்‌ தம்பதிக‌ள், கியூகியூ(QQ) என்ற சமூக வலைதளத்தில் தங்கள் குழந்தையை விற்பதாக அறிவித்திருந்த‌னர். பிறந்து 18 நாட்களே ஆன குழந்‌தையை 23 ஆயிரம் யுவான்களுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 40 ஆயி‌ரம் ரூபாய்‌க்கு விற்க இவர்கள் விளம்பரம் அளித்திருந்தனர். இதனை கண்ட ஒருவர் தனது சகோதரிக்காக இந்த தொகையை கொடுத்து குழந்தை‌யை வாங்கியிருக்கிறார்.


2018ல் வர இருக்கும் புதிய கனடிய தாள் நாணயத்தில் கனடிய பெண்ணின் உருவம்! - பிரதமர் அறிவிப்பு.
[Wednesday 2016-03-09 19:00]

2018ல் புழக்கத்திற்கு வர இருக்கும் புதிய தாள் நாணயங்களில் இயல்பு கடந்த கனடிய பெண்ணின் உருவகம் அமையும் என பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ செவ்வாய்கிழமை அறிவித்தார். சர்வதேச பெண்கள் தின அர்ப்பணிப்பாக இன்று முத்திரை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார். புதிய தாள் நாணயத்திற்கான போற்றுதலுக்குரிய ஒரு பெண்ணை தெரிந்தெடுக்கும் பொது ஆலோசனையை இன்று ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார். எங்கள் நாட்டை கட்டி எழுப்பவதில் பெண்கள் ஒரு முக்கிய கருவிகளாவர். கிட்டத்தட்ட 150-வருடங்களாக வங்கி நோட்டில் கனடிய பெண் இடம்பெறவில்லை எனவும் கூறினார்.


தென் ஆப்பிரிக்காவில் சைக்கிள் பந்தைய காரர்களை ஓட ஓட விரட்டிச்சென்ற நெருப்பு கோழி! Top News
[Tuesday 2016-03-08 19:00]

சைக்கிளில் செல்பவர்களை நாய் துரத்தியது, மாடு துரத்தியது என்ற செய்திகளை கேட்டு உள்ளோம். ஆனால் இதில் புதுமையாக சைக்கிள் பந்தைய வீரர்களை நெருப்பு கோழி விரட்டியது! என்ற வியப்பும், ஆர்வமும் நிறைந்த வீடியோவானது வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடற்கரை ஒட்டிய ஆள் அதிகமாக நடமாட்டம் காணப்படாத சாலையில் சைக்கிள் பந்தைய வீரர் ஒலிக்சி மிஸ்சென்கோ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார், அவருடைய நண்பரும் ஆர்வமாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது பயிற்சியில் அழைக்கப்படாத போராட்டியாளராக நெருப்பு கோழி களமிறங்கி, அவர்களை பதறசெய்து உள்ளது. இது தொடர்பான வீடியோவை சைக்கிள் பந்தைய வீரர் ஒலிக்சி மிஸ்சென்கோ யூ டியூப் இணைய தளத்தில் வெளியிட்டு எனது தோழியை மிகவும் ஈர்க்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.


கேரளாவில் வலையில் சிக்கிய மனித உருவம் கொண்ட அபூர்வ வகை மீன்!
[Tuesday 2016-03-08 19:00]

மனித முகம் கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்று கேரளாவில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் கடிகை அருள்ராஜ். நாவல் ஆசிரியரான இவர், கேரளா மாநிலம் முனம்பம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு அருள்ராஜ், ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்களுடன் மீன்பிடி சென்றுள்ளார். இன்று காலை படகுடன் அருள்ராஜ் கரை திரும்பினார். அப்போது, அவரது வலையில் மனித உருவம் கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்று சிக்கி கிடந்தது.


[Tuesday 2016-03-08 12:00]

இந்தியா - மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (வயது 30). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் இந்தூரில் குடியேறினார். அவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திலீப், எத்தனையோ பேரிடம் கடன் வாங்கி, திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். கடன் கொடுத்தவர்களின் தொல்லை தாங்காமல், சொந்த கிராமத்துக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.


விண்வெளியில் இருந்த போது கூடுதல் உயரமாக வளர்ந்ததாக அமெரிக்க வீரர் விபரிப்பு!
[Monday 2016-03-07 18:00]

விண்வெளியில் இருந்த போது கூடுதல் உயரமாக வளர்ந்த அமெரிக்க வீரர் பூமிக்கு திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார். ஒரு வருடம் விண்வெளியில் இருந்த போது அமெரிக்க வீரர் கூடுதல் உயரமாக வளர்ந்தார். பூமி திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதற்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என பெயரிடப்பட்டுள்ளது. அங்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை 3 விண்வெளி வீரர்கள் அங்கு சென்று கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்காட் கெல்லி, ரஷியாவின் மிக்கேல் கோர்னியென்கோ ஆகிய 2 பேரும் 340 நாட்கள் அதாவது ஒரு வருடம் விண்வெளியில் தங்கியிருந்தனர். அவர்கள் கடந்த 3


தனது 49வது வயதில் ஐ.ஐ.டி யில் பட்டமேற்படிப்பு...! - படிப்பில் ஒரு கலக்கு கலக்குகிறார் சுந்தரி !
[Monday 2016-03-07 18:00]

தனது 49வது வயதில் ஐஐடி-யில் பட்டமேற்படிப்பில் சேர்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த பெண் பத்மா சுந்தரி. மெட்ராஸ் ஐஐடியில் இண்டஸ்டிரியல் மேத்தமேட்டிக்ஸ் அண்ட் சயின்டிபிக் கம்ப்யூட்டிங் பிரிவில் பட்டமேற்படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார் பத்மா சுந்தரி. படிப்பு குறித்து பத்மா சுந்தரி கூறியதாவது: நான் இதற்கு முன் பட்டப்படிப்பு முடித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். பின்னர் 4 வருடங்களுக்கு வேலையை விட்டு விட்டு கேட் தேர்வு எழுதினேன். இந்த விஷயத்தில் எனக்கு என் கணவர் மிகவும் உதவிகரமாக இருக்கிறார். தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வருகிறேன். என்னுடைய வருகைக்காக எனது கணவர் காத்திருப்பார். முதலில் பட்டமேற்படிப்பு சேரும்போது இங்கு ஒருவித தயக்கம் இருந்தது.


இலங்கை - கெப்
[Monday 2016-03-07 18:00]

கெப்


ஏற்கனவே 3 பெண்களை மணமுடித்த 84 வயது முதியவர் 59 வயதுடைய மாடல் அழகியையும் மணந்தார்!
[Sunday 2016-03-06 18:00]

இங்கிலாந்து பத்திரிகை அதிபர் ரூபெர்ட் முர்டோக். 84 வயதான இவர் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு தனது 3-வது மனைவி வென்டி டெங்கை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் ஜெர்ரி ஹால் என்ற 59 வயதுபெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. ஜெர்ரி ஹால் இங்கிலாந்தின் முன்னாள் மாடல் அழகி ஆவார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர். தனது கணவர் ஜக்கர் என்பவரை கடந்த 1999-ம் ஆண்டு விவா கரத்துசெய்தார். இவர் களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டகளாக காதலித்த முர்டோக்- ஜெர்ரி ஹால் ஜோடிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று லண்டனில் பிளீட் தெருவில் உள்ள செயின்ட் பிரைட்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடந்தது.


ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு ஐந்தரை வருடகால சிறை!
[Sunday 2016-03-06 09:00]

ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் ஐந்தரை ஆண்டு கால சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையர்கள் உள்ளிட்ட 65 அகதிகளை நியுசிலாந்து நோக்கி படகு மூலம் அழைத்துச் செல்ல அவர் சூத்திரதாரியாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த படகினை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழிமறித்து, அதன் மாலுமிகளுக்கு கையூட்டல் வழங்கி மீண்டும் இந்தோனேசியாவுக்கே திருப்பி அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் கடந்த வருடம் ஜுலை மாதம் இந்த ஆட்கடத்தலை புரிந்தமைக்காக, குகண் என்று அழைக்கப்படும் விஷ்வநாதன் தினேஷ்குமார் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்தோநேசியாவின் ரோட் நாடோ மாவட்ட நீதிமன்றம் ஐந்தரை ஆண்டு கால சிறை தண்டனை வித்துள்ளது.


பாம்புகள் கனவில் தோன்றிக்கொண்டே இருப்பதுபற்றி என்ன சொல்கிறார்கள்?
[Sunday 2016-03-06 09:00]

ஒரு சிலருக்கு பாம்புகள் கனவில் தோன்றிக்கொண்டே இருக்கும். அதற்க்கு காரணம் அவர்களுடைய ஜாதகத்தில் ராகு திசை அல்லது கேது திசை ராகு புத்தி அல்லது கேது புத்தி நடைபெற்றுகொண்டிருக்கும் கால கட்டமாக இருக்கும். அதே போல் அவர்கள் பிறந்த தேதி அல்லது பிறந்ததேதியின் கூட்டு எண் அல்லது பெயரின் மொத்த கூட்டு எண் ராகு( எண் 4 ) அல்லது கேது (எண் 7 ) இந்த எண்ணின் ஆதிக்கத்தில் இருந்தால் அவர்களின் கனவில் பாம்புகள் வந்து கொண்டே இருக்கும். இதற்க்கு ராகு கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும், முழுமையாகவும் உடனடியாக செய்வது நல்லது .


வலது காலுக்கு சிகிச்சை பெற வந்த மாணவிக்கு இடது காலில் சத்திரசிகிச்சை! - இலங்கை வைத்தியர்கள் சாதனை!
[Saturday 2016-03-05 18:00]

வலது கால் முழங்காலுக்கு சிகிச்சை பெற பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது பாடசாலை மாணவியின் இடது காலுக்கு சத்திரசிகிச்சை செய்துள்ளதாக மாணவியின் தந்தை பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பிலிமதலாவை விஜயதுங்க மாவத்தையில் வசிக்கும் ஒன்பதாம் ஆண்டில் கல்விபயிலும் குறித்த மாணவிக்கு சிறு வயது முதல் வலது முழங்காலில் சிறு கட்டி ஒன்று காணப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெற்றுகொள்வதற்காக கடந்த 20ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் 16ஆம் வாட்டில் தனது மகள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள தந்தை, பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தான் மாநிலத்தில் 46 ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு பரீட்சை எழுதும் தாத்தா!
[Friday 2016-03-04 19:00]

ராஜஸ்தான் மாநிலம் ஹோகரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ் சரண் யாதவ் (வயது 77) இவர் முதல் முறையாக 1968 ஆம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பரீட்சை எழுதி வருகிறார். இந்த ஆண்டு 10 ஆம் திகதி யாதவ் தான் எழுதும் தேர்வில் தேர்ச்சி அடைவேன் என நம்புகிறார். 10 வகுப்பில் தேர்ச்சி அடைந்த பின்தான் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சபதம் செய்து இருந்தார் ஆனால் இதுவரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அவருக்கு கணிதபாடம் மிக சவாலாக அமைந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நான் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். ஆனால் வேறு பாடத்தில் தோல்வி அடைந்து விடுகிறேன். குறிப்பாக நான் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் போதுமான மதிப்பெண் பெற்றிருந்தேன் ஆனால் இந்தி மற்றும் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்து விட்டேன்.


மீனவரின் தூண்டிலில் சிக்கிய பொன்னிற விலாங்கு மீன்! Top News
[Friday 2016-03-04 19:00]

அனுராதபுரம்- நச்சதுவ குளத்தில் மீனவர் ஒருவரின் தூண்டிலில் பொன் நிற விலாங்கு மீன் சிக்கியுள்ளது. தூண்டில் போட்டு மீன்பிடித்து வரும், பாரூக் என்ற மீனவருக்கே இந்த அரியவகை மீன் கிடைத்துள்ளது. இவருடைய தூண்டிலில் சிக்கிய விலாங்கு மீன், கொக்கியை முழுமையாக விழுங்காத காரணத்தில் இறக்கவில்லை. மீனை உயிருடன் பிடித்த மீனவர் அதனை தொட்டி ஒன்றில் இட்டு பார்வைக்கு வைத்துள்ளார். இந்த விலாங்கு மீனை பார்க்க நீர் வாழ் உயிரினங்களை ஆராய்ந்து வரும் அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான மக்களும் வந்து செல்கின்றனர்.


பேஸ்புக்கில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் கருத்து: - வாலிபருக்கு 13 ஆண்டு சிறை!
[Friday 2016-03-04 19:00]

பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள மதநிந்தனை சட்டத்தின்படி மத அவமதிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ரிஸ்வான் ஹார்டெர் (வயது 25) என்ற வாலிபர் தனது பேஸ்புக் சமூக வலைத்தள பக்கத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த பதிவில் அவர் மதநிந்தனை தகவல்களையும், பிரிவுவாதத்திற்கு ஆதரவான கருத்துகளையும் பதிவு செய்ததாக தெரிகிறது. மேலும், ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்த அந்த வாலிபர் சன்னி முஸ்லிம் நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டார் என கூறப்படுகிறது.


பொப்கோர்ன் நிறுவனத்துக்கு எதிராக மைக்கல் ஜக்ஸனுக்குச் சொந்தமான நிறுவனம் வழக்கு!
[Thursday 2016-03-03 07:00]

பொப்கோர்ன் நிறுவனமொன்றுக்கு எதிராக, மறைந்த பிரபல பாடகர் மைக்கல் ஜக்ஸனுக்குச் சொந்தமான நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. பாடகர் மைக்கல் ஜக்ஸனின் நிறுவனத்துக்கும் பொப்கோர்ன் எனும் சோளப்பொரி நிறுவனமொன்றுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் என எண்ணுவது கடினம். ஆனால், அமெரிக்க பொப்கோர்ன் நிறுவனமொன்று இத்தகைய வழக்குக்கு முகம் கொடுத்துள்ளது. பாடகர் மைக்கல் ஜக்ஸன் பொப்பிசை சக்கரவர்த்தி, அதாவது 'கிங் ஒவ் பொப்' ( King of Pop) என அழைக்கப்பட்டவர். இந் நிலையில், கிங்ஒவ்பொப் (KingOfPop.com) எனும் இணையத்தளம் நிறுவனமொன்று பொப்கோர்ன் (சோளப்பொரி) விற்பனை செய்துவருகிறது. KingOfPop எனும் பெயரானது, பாடகர் மைக்கல் ஜக்ஸனின் மிகப் பிரபலமான புனைபெயரைப் போல் உள்ளது என மைக்கல் ஜக்ஸனுக்குச் சொந்தமான ஜக்ஸன் எஸ்டேட் நிறுவனம் கூறுகிறது.


கலிபோர்னியாவில் 17 குட்டிகளை ஈன்ற ஷீப்டாக்!
[Thursday 2016-03-03 07:00]

கலிபோர்னியாவில் ஷீப்டாக் (Sheepdog ) ஒன்று 17 குட்டிகளை ஈன்றுள்ளது. கலிபோர்னியாவில் வசிக்கும் ஜோன், கெபி கொஸ்டன்சோ தம்பதியரின் பண்ணையில் உள்ள ஆடு, கோழிகளைப் பராமரிப்பதற்காக அவர்களால் வளர்க்கப்படும் ஸ்டெல்லா எனும் 3 வயது ஷீப்டாக்கே 17 குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளது. அதிகூடிய தொகையாக 24 குட்டிகளை ஈன்ற நாய் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கம்போடியாவில் சுற்றுலா சென்ற பிரான்ஸ் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம்:
[Wednesday 2016-03-02 19:00]

பிரான்சை சேர்ந்த இரண்டு ஜோடிகள் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணம் சென்றனர். அவர்கள் அங்கு கம்போடியா எல்லையில் உள்ள கோ குட் என்ற தீவிற்கு சென்றனர். அங்கு உள்ள ஒரு விடுதிக்கு சென்றனர். அப்போது அந்த இரண்டு ஜோடிகளையும் செல்லும் வழியில் உள்ளூரைச் சேர்ந்த சில வாலிபர்கள் மடக்கி உள்ளனர். பின்னர் அவர்கள் பெண்களிடம் தகாத முறையில் நடந்து உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மக்களிடம் உதவி கேட்டு ஓடி உள்ளனர். அவர்களை துரத்திய வாலிபர்கள் பெண்களை மட்டும் தனியான இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். ஓட்டம் பிடித்த ஆண்கள் உள்ளூர் மக்களின் உதவியை நாடி உள்ளனர். திரண்டு வந்த மக்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர். உடனடியாக போலீசுகு தகவல் தெரிவிக்கபட்டு வன்முறை மற்றும் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யபட்டனர்.


மனைவியின் பொய்ப்பல்லில் அமெரிக்காவின் உளவு கேமரா: - அச்சமடைந்த பின்லேடன்
[Wednesday 2016-03-02 17:00]

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் அபோட்டாபாத். பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்த அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன், கடந்த 2-5-2011 அன்று ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் 'சீல்' அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.அவனது சடலத்தை கடலின் நடுவே அடக்கம் செய்து விட்டதாக அமெரிக்கா அறிவித்தது. கொல்லப்பட்ட பின்லேடனின் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் டிஸ்க்குகள் மற்றும் சில முக்கிய கோப்புகளை அமெரிக்க ராணுவத்தினர் அப்போது கைப்பற்றி இருந்தனர். அவற்றில் இருந்த ரகசிய தகவல்களில் சிலவற்றை அமெரிக்க அரசு தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அதில் ஒரு கடிதத்தில் தன்னை அமெரிக்க அரசு மறைமுகமாக உளவுப்பார்த்து வருவதாக பின்லேடன் குறிப்பிட்டுள்ளான்.


செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 45 பேர் மீட்பு!
[Wednesday 2016-03-02 07:00]

உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 45 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இது பற்றி போலீசில் அளிக்கப்பட்ட புகாரில், ஒப்பந்த தொழிலாளர்களாக சிலரை வலுகட்டாயப்படுத்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலீஸ் மற்றும் தொழிலாளர் துறையினர் அடங்கிய குழு ஒன்று நேற்று சோதனையில் ஈடுபட்டது. இதனை அடுத்து கொத்தடிமைகளாக இருந்த 45 தொழிலாளர்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். அதன்பின் அவர்களது சொந்த கிராமம் ஆன கைரானாவுக்கு தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.


பிகார் மாநிலத்தில் நிர்வாணப்படுத்தி ராணுவ கிளார்க் தேர்வு: - பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு
[Tuesday 2016-03-01 11:00]

பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ராணுவத்தில் கிளார்க் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது.தேர்வு எழுதுவதற்கு தேர்வர்கள் ஆயத்தமாகி இருந்த நிலையில் அவர்களுக்கு காத்திருந்தது ஓர் அதிர்ச்சி. தேர்வகள் அணிந்து வந்த ஆடைகளை களைந்து தரையில் அமர்ந்து தேர்வு எழுத வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. புகைப்பட ஆதாரமும் வெளியானது.சம்பவம் குறித்து தேர்வு நடத்திய அதிகாரிகளிடம் கேட்டதற்கு முறைகேட்டை தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது. இதை ஏற்காத பாட்னா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.


இந்தியாவில் வயதான பூஜாரியை‬ திருமணம் செய்த ‎அழகி
[Friday 2016-02-26 23:00]

இந்தியாவில் 55 வயது ‎பூஜாரியை‬ திருமணம் செய்த 18 வயசு பெண்‬.. அதிகமான வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம் தொடர்பில் பல விமர்சனங்களை முகநுால் மூலம் பலர் முன்வைத்துள்ளனர். அன்மைக்காலமாக இப்படியான திருமணங்கள் சமூக மட்டத்தில் பாரிய எதிர் கருத்துக்களை உருவாக்கியுள்ளன. வாழ வேண்டிய பலர் திருமனம் மிக மிக பிரதானம் வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்தாலும் திருமணம் செய்து கொள்ளும் இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.


விண்வெளியில் கேட்ட அபூர்வ இசை! காலம்தாழ்த்தி நாசா வெளியிட்டது ஏன்?
[Friday 2016-02-26 15:00]

அப்போலோ - 10 விண்கலத்தின் மூலம் ஆம் ஆண்டு விண்வெளியில் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங்,யூகேன் கெர்னன் ஆகியோர் பூமியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் மைல்கள் தொலைவில் சந்திரனின் மறுபக்கம் இந்த அபூர்வ இசையை கேட்டனர் , அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவுசெய்து வைத்துள்ளது. இதுநாள்வரை இந்த அபூர்வ இசை தொடர்பான செய்திகள் வெளியாகாதது ஏன்? என்பது குறித்து நாசா தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. எனினும், விண்வெளி ஆராய்ச்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படாத வகையில் தங்களது விண்வெளிப் பயணத்தின்போது ஆய்வாளர்கள் சந்திக்கும் விபரீதமான, விசித்திரமான அனுபவங்களை பகிரங்கமாக வெளியிட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


தாய்லாந்தில் 12-க்கும் மேற்பட்ட கத்திக் குத்துக் காயங்களுடன் புதைக்கப்பட்ட சிசு உயிருடன் மீட்பு!
[Friday 2016-02-26 07:00]

தாய்லாந்தில் கத்தியால் பல முறை குத்தப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்ட ஆண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:கோன் கேன் மாகாணத்தில், யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த காட்டில், ஒரு பெண் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, உடலில் 12-க்கும் மேற்பட்ட கத்திக் குத்துக் காயங்களுடன் ஒரு பச்சிளம் குழந்தை குழிக்குள் போடப்பட்டு, இலைகளால் மூடப்பட்டிருப்பது தெரிய வந்தது.


இணையதள போட்டியில் வென்ற மாணவனுக்கு பரிசாக ஆபாச நடிகை! ஒரு மாதம் விடுதியில் தங்கும் வாய்ப்பு!
[Thursday 2016-02-25 22:00]

ரஷ்யாவைச் சேர்ந்த வீடியோ கேம் இணையதளதளம் ஒன்று வித்தியாசமான பரிசை அறிவித்து உள்ளது. தேர்ந்து எடுக்கபடும் அதிர்ஷடசாலி ஆபாச நடிகை எக்டரினா மோக்ரவோவாவுடன் ஒருமாதம் சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்காலம் என அறிவித்து இருந்தது. அதன் படி நடைபெற்ற பரிசு போட்டியில் 16 வயது சிறுவன் ஒருவன் வெற்றி பெற்று உள்ளான்.ரஷ்யாவை சேர்ந்த ருஸ்லான் ஸ்செட்ரின் ( வயது 16) என்ற பள்ளி மாணவன், இந்த வாய்ப்பை பெற்று உள்ளான்.இவன் குழந்தை நட்சத்திரமாகவும் உள்ளார். இதுகுறித்து அச்சிறுவன் கூறியதாவது...


ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்! - ரூ.493 கோடி நஷ்ட ஈடு...!
[Thursday 2016-02-25 19:00]

அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (வயது 62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாக்குலின் பாக்ஸ் இறந்தார். ஜான்சன் - ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே அவருக்கு கர்ப்ப்பபை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறிய அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான்சன்-ஜான்சன் நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்கு தெரிவிக்க தவறிவிட்டது என தெரிவித்தனர்.

Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா