Untitled Document
November 22, 2024 [GMT]
 
டென்மார்க்கில் கேர்ணிங், கோள்பேக் ஆகிய நகரங்களில் மாவீரர் நாள் மிகவும் உணர்புபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது: Top News
[Monday 2016-11-28 18:00]

டென்மார்க்கில் கேர்ணிங், கோள்பேக் ஆகிய நகரங்களில் மாவீரர் நாள் மிகவும் உணர்புபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது. மாவீரர் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது .அதன் பின்பு டென்மார்க் பொறுப்பாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் நடைபெற்றது .தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் கல்லறைக்கு சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.


யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்குட்பட்ட நிலையில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி: Top News
[Monday 2016-11-28 18:00]

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்குட்பட்ட நிலையில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக கனடாவில் வாழ்ந்துவரும் புலம்பெயர் உறவொன்று முன்வந்துள்ளமைக்கு யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் புதிய மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இவ்வாறு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா ரொறன்ரோவில் வாழ்ந்துவரும் புலம்பெயர் உறவான அம்பிகா ஜூவல்ஸ் உரிமையாளரான திருமதி ஜெயசீலி இன்பநாயகம் நிதியுதவி வழங்கியுள்ளார்.


ஸ்ராஸ்பூர்க் மாநகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு. Top News
[Monday 2016-11-28 18:00]

ஸ்ராஸ்பூர்க் மாநகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. பொதுச்சுடரை திரு. சகாதேவன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மாணவர்கள் அணிவகுத்து நிற்க தமிழீழத் தேசியக்கொடியை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் திரு. கிருபானந்தன் நடராசா அவர்கள் ஏற்றிவைத்தார்.


தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் - பிரித்தானியாவில் 62 பானைகளில் பொங்கல்! Top News
[Sunday 2016-11-27 09:00]

தமிழினத்தின் தனித்துவத்தை தரணியெங்கும் தலைநிமிர்த்திய தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 62வது பிறந்த நாள் நேற்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவில் கொண்டாடப்பட்டது. பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது 62 பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாட்டம் நடத்தப்பட்டது.


டென்மார்க் ஓகூஸ் பல்கலைகழக மாணவர்காளால் மாவீரர் நாள் வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. Top News
[Friday 2016-11-25 18:00]

25.11.2016 அன்று டென்மார்க் ஓகூஸ் பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களால் மாவீரர் நாள் வணக்க நிகழ்வு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் நடத்தப்பட்டுள்ளது. எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசப்புதல்வர்களை நினைவு கூர்ந்து பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது . மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டது. மாவீரர்களுக்கு ஈகச்சுடர்,மலர் வணக்கம் செலுத்தப்பட்டது . எமது தேசப்புதல்வர்களின் வீரத்தியாகத்தையும், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த கருத்துகளையும் சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நிகழ்வு அமைந்தது.


லண்டன் UCL பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் வார நிகழ்வு Top News
[Thursday 2016-11-24 18:00]

தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல லண்டன் UCL பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை மாலை தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரித்தானிய இளையோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த இந்த நிகழ்வில் ஒரு பேப்பர் கோபி அண்ணா, உயிர் பிழைத்தோர் கதைகள் பிரம்மி ஜெகன் , சத்தியசீலன் அண்ணா மற்றும் தமிழ்வாணி அக்கா சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்கள் எப்படி ஆரம்பகாலத்தில் ஈழப்போரினில் ஈடுபட்டார்கள் என்ற விளக்கங்களை சத்தியசீலன் அண்ணா விளக்கினார்.


கனடாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு: Top News
[Tuesday 2016-11-22 17:00]

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், 20.11. 2016 ஞாயிற்றுக் கிழமை முன்னெடுத்த மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு, மிக உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்த மதிப்பளிப்பு நாளுக்குக் கடந்த ஆண்டுகளை விடவும் பெருந் தொகையான மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள், குடும்ப அங்கத்தவர்கள் வருகை தந்து, வணக்கம் செய்தமை குறிப்பிடத் தக்கதாகும். தாய் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம்மைக் கொடை செய்த எமது பிள்ளைகளை நினைவில் ஏந்தி நின்று, வீர வணக்கம் செய்து. தமது பிள்ளைகளின் ஒளிப் படங்களுக்கு முன் நீர் சொரிந்து, காந்தள் மலர் வைத்து வணங்கி நின்றமை எல்லோர் மனங்களையும் நெகிழ வைத்தது. தமது பிள்ளைகளின் நினைவுகளைப் பெற்றோர்கள,; சகோதரர்கள் நினைவுரைகளாக எடுத்துரைத்தனர்.


பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் உருத்துடையோர் கெளரவிப்பு நிகழ்வு! Top News
[Monday 2016-11-21 17:00]

தமிழீழத் தாய் நாட்டின் விடிவிற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் மாவீரர்களை விடுதலைக்கு வித்தாக உவந்தளித்த பெற்றோர்,குடும்பத்தினர் மற்றும் உருத்துடையோரை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றது. தமிழீழ மாவீரர் பணிமனையும், நாடுகடந்த தமிழிழ்ழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மாவீரர் குடும்பம் மற்றும் போராளிகள் நலன்காக்கும் அமைச்சும் இணைந்து மாவீரர் பெற்றோர்,குடும்பத்தினர் மற்றும் உருத்துடையோரை கெளரவிக்கும் நிகழ்வை சிறப்பான முறையில் பிரித்தானியாவிலுள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் (OX17 3NX) உள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில் (20-11-2016) நேற்றையதினம் நடாத்தியது.


தமிழீழ தேசிய மாவீரர் நாள் - கனடா York பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட நினைவுசார் நிகழ்வுகள்! Top News
[Monday 2016-11-21 17:00]

தமிழீழ தேசிய மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு கனடாவில் பல பல்கலைக்கழகங்களில் பல்வேறு வடிவங்களில் நினைவு வணக்க நிகழ்வுகளை தமிழ் இளையோர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். அதன் ஒரு வடிவமாக கனடா Torontoவில் அமைந்துள்ள York பல்கலைக்கழகத்தில் எமது போராட்டம் மற்றும் மாவீரர்களின் தியாகங்கள் எமக்கென ஒரு தாயகம் தேவை என்பதனை தெரிவிக்கும் முகமாக பல்வேறு நிகழ்வுகளை இளையோர்கள் மேற்கொண்டிருந்தனர்.


இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி! Top News
[Friday 2016-11-18 18:00]

வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரியில் இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்றது. அஞ்சலி நிகழ்வுகளை அடுத்த மாணவர்கள் இரத்ததானம் செய்தனர்.


ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலில் திரு லோகன் கணபதி. Top News
[Thursday 2016-11-17 22:00]

எதிர்வரும் ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலில் கன்சவேட்டிவ் கட்சியின் மார்க்கம் தோர்ன்கில் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகத் திரு லோகன் கணபதி நேற்று மார்க்கம் Hilton Hotel மாநாட்டுக் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். கன்சவேட்டிவ் கட்சியின் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் ஊடகவியலாளர்களுமாக இருநூற்றைப்பதுக்கு மேற்பட்டடோர் இந்நிகழ்வில் கூடியிருந்தனர். பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்தோரையும் பல்லின சமூகத்தோர் பலரையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. காத்திரமான ஒரு முன்னெடுப்பை முன்னிட்டு உறுதியான தீர்மானத்தோடு அனைவரும் கூடியிருப்பதை உணரக் கூடியதாகவிருந்தது.


போரின் பேரவலத்தின் துயர் துடைக்கும் புலம் பெயர் உறவுகளின் மற்றுமொரு மகத்தான பணி
[Thursday 2016-11-17 18:00]

போரின் பேரவலத்தின் துயர் துடைக்கும் புலம் பெயர் உறவுகளின் மற்றுமொரு மகத்தான பணி கனடா உறவுகளிடம் இருந்து... தாயின் முகமறியது தந்தையின் அரவணைப்பின்றி இருவரையும் இழந்து தவிக்கும் பிள்ளைகள் மூவர் தந்தையை இழந்துவிட்டாலும் தாய் நானிருக்கிறேன் என்று உரைத்தவளும் தூரதேசமத்தில் தீயில் கருக ஆதரிப்பார் யாரென ஏங்கி நிற்கும் பிள்ளைகள் மூவர் கட்டிய மறுகணம் கட்டியவனை காலனிடம் பறிகொடுத்து தன் நிலைமறந்து உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்டு இருக்கும் பெண்பிள்ளை என ஏழு ஆதரவற்ற உறவுகளுக்காய் வன்னிப்பட்டறை Vanni Paddarai பிரதீபன் Piratheepan Tharmarajah அண்ணா அவர்களிடம் ஒளிரும் வாழ்வு புதுக்குடியிருப்பு விடுத்த அவசர வேண்டுகோளின் அடிப்படையில் RA Rytham இசைக்குழுவின் இஸ்தாபகர் திரு ரமேஷ் மகாலிங்கம் அவர்கள் ரூபா 30000 .00 வழங்கியிருக்கின்றார் .


கிழக்கு மாகாணத்திலுள்ள 10 பேருக்கான மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு Top News
[Thursday 2016-11-17 18:00]

கிழக்கு மாகாணத்திலுள்ள 10 பேருக்கான மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (17) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் 77 வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 19 பேருக்கான நியமனத்தினை வழங்குவதாகவும் மற்றைய 56 வெற்றிடங்களை ஜனவரி மாதத்திற்குள் நிரப்ப உள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கர்ணாகரன் பிரதி செயலாளர் ஜே.ஹுஸைன்தீன் மற்றும் கிழக்கு மாகாண பிராந்திய பிரதி பணிப்பாளர் ஏ,லதாஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கனடா பிரம்டன் ஈழமக்கள் ஆதரவில் மாற்றுத்திறனாளிகளிற்கான நிர்வாக தொழிற்பயிற்சி கட்டிடம்! Top News
[Wednesday 2016-11-16 17:00]

தமிழர் தாயகத்தில் தாயக விடுதலைப் பயணத்திலும் அசம்பாவிதங்களிலும் பாதிப்புற்று மாற்றுத்திறனாளிகளாகி வாழ்ககையில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் எம் உறவுகளின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபற்றோர் அமைப்பு தன் பணிகளை விரிவாக்கி செயற்பட அமையவிருக்கும் நிர்வாக தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாண வேலைகள் உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டு வைபவத்துடன் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கனடா - மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில்மாவீரர் நாள் வணக்க நிகழ்வு: Top News
[Tuesday 2016-11-15 21:00]

கனடா, ஹமில்டன் நகரிலுள்ள, மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களால் அங்கு மாவீரர் நாள் வணக்க நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் திகதி வரும் மாவீரர் நாளுக்கு முன்னதாக கனடிய பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும் மாவீரர் வணக்க நிகழ்வுகள் அங்குள்ள தமிழ் மாணவர்களால் நடத்தப்படுவது வழக்கம். இதனை கனடா தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கமைத்து வருகின்றது.


மட்டு அம்பாறையில் கல்வி மேம்பாட்டிற்காக ஏழுலட்சம் பெறுமதியான உதவி வழங்கல்: Top News
[Tuesday 2016-11-15 18:00]

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள இருட்டுச்சோலைமடு விஸ்ணு வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வித்தியாலய முதல்வர் திரு. ரூபஸ் பெனாண்டோ தலைமையில் கடந்த 09-11-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய வலயக் கல்விப்பணிப்பாளர் திரு க. சத்தியநாதன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் திரு.தர்மலிங்கம் சுரேஸ் வலயக் கல்வி அலுவலக பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் திரு.குணரெத்தினம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் பெற்றோர்கள் கிராம அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.


யேர்மனி- சின்டில்பிங்கன் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல்! Top News
[Tuesday 2016-11-15 18:00]

யேர்மனி , சின்டில்பிங்கன் நகரில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்திருந்த லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் மற்றும் மேஜர் செல்வம் ஆகிய மாவீரர்களின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.


அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் 'விடியலைத் தேடும் இரவுகள்' நூல் வெளியீடு! Top News
[Tuesday 2016-11-15 07:00]

அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீட்டு விழா நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.


மாபெரும் தமிழின
[Monday 2016-11-14 21:00]

2009 மே காலப்பகுதி வரை தமிழ் மக்களின் வாழ்விலும் வளத்திலும் கோலோச்சிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கைக்குள் செயல்பாட்டு தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், தமிழ் பண்பாட்டுச்சமுகம்


யாழ்ப்பாணத்தில் நீரிழிவு விழிப்புணர்வு சைக்கிளோட்டம்! Top News
[Saturday 2016-11-12 19:00]

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை விளையாட்டு மருத்துவ அலகு ஆகியனவற்றின் ஏற்பாட்டில், இன்று காலை விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது.


மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு: Top News
[Thursday 2016-11-10 20:00]

ஸ்ரீலங்கா அரசினால் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் ஆங்கில ஆசிரிய பயிற்றுவிப்பாளர் கோபாலகிருஸ்ணன் ஆசிரியர், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ரவீந்திரன் ஆகியோர் நினைவுச் சுடர்களை ஏற்றினர். தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்களும் மாமனிதருக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.


3.8 கிலோ எடையுள்ள மெகா முள்ளங்கி! - வீட்டுத் தோட்டத்தில் அதிசயம் Top News
[Thursday 2016-11-10 18:00]

மஸ்கெலியா - பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான- பெரியளவிலான முள்ளங்கி ஒன்று விளைந்துள்ளது. முள்ளங்கி விதையை விதைத்த சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இந்த முள்ளங்கியை தாம் அறுவடை செய்ததாக தோட்ட உரிமையாளர் தெரிவித்தார். இந்த முள்ளங்கி சுமார் 3 கிலோ 800 கிராம் நிறையுடையதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில் இடம்பெற்ற நில ஆக்கிரமிப்பு ஆவண வெளியீட்டில் நவநீதம்பிள்ளை அவர்கள் முதல் பிரதி பெற்றுக் கொண்டார்: Top News
[Wednesday 2016-11-09 19:00]

அமெரிக்க தமிழ் சங்கத்தின் வருடாந்த நிகழ்வில் பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF) 8 மாத ஆய்வின் வெளிப்பாடான "Proliferating Buddhist Structures in Tamil Home land- Sowing the Seeds of Disharmony" என்னும் ஆவணத் தொகுப்பு 5ஆம் திகதி நவம்பர் 2016 Monroe Township, New Jersey என்னும் இடத்தில் வெளியிடப்பட்டது. பிரித்தானிய தமிழர் பேரவையின் சகோதர அமைப்பான USTPAC இன் அனுசரணையுடன் அமெரிக்காவில் இடம்பெற்ற இன் நிகழ்வில் ஐ நா மனித உரிமை கழகத்தின் முன்னால் ஆணையாளர் டாக்டர் நவநீதம்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு ஆவணத்தின் முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார்.


புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு கௌரவிப்பு: Top News
[Sunday 2016-11-06 20:00]

புஸ்ஸல்லாவ ஸ்ரீ கல்கி மாணவ சேவா சமித்தியின் ஏற்பாட்டில் உடபளாத்த கல்வி கோட்டத்தற்கு உட்பட்ட பாடசாலைகளில் தரம் 05 இல் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கும் 100 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களையும் இதற்கு காரணமாக இருந்த அதிபர் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் பிரதான மண்டபமான இராஜரட்ணம் மண்டபத்தில் இன்று (06) நடைபெற்றது. மேற்படி அமைப்பின் போஷகர் ஐ.வீ.எஸ். விஜயனின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர்.


[Thursday 2016-11-03 08:00]

(டொரோண்டோ நவ. 2)


திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு! Top News
[Wednesday 2016-11-02 18:00]

இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வீ.சீ.சந்தோசம் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கிய திருவள்ளுவர் சிலை ஒன்று இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிபிட்டிய கல்வி வலையத்திற்கு உட்பட்ட இறக்குவானை பரியோவான் தமிழ் கல்லூரியில் அதிபர் பூபாலபிள்ளை கமலேஸ்வரன் தலைமையில் பிரதிஷ்டை செய்ததை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு சிலையை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.


கிளிநொச்சியில் மரநடுகையை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்! Top News
[Tuesday 2016-11-01 18:00]

வடக்கு மாகாணசபையின் விவசாய, நீா்ப்பாசன, கால்நடை, சுற்றுச் சூழல் அமைச்சினால் வருடந்தோறும் நடத்தப்படும் கார்த்திகை மரநடுகை மாத செயற்திட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


[Saturday 2016-10-29 17:00]

ஊவா மாகாண பதுளை மாவட்ட மீரியபெத்த மக்களுக்கான மக்கள்தெனிய புதிய மலைநாட்டு கிராமத்து மலையக தமிழர்களுக்கு, நாங்கள் அனைவரும் இந்த பூமி பந்தில் எங்கே வாழ்ந்தாலும் இனத்தால் ஒன்றுபட்ட தமிழர்களே என்ற செய்தியை, என் மூலமாக கனடிய தமிழர் தேசிய அவை அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் மலைநாடு, வடக்கு, கிழக்கு, மேலகம், நாடுகடந்து கனடா என்ற பல்வேறு தளங்களில் வாழும் அனைத்து தமிழரையும் இணைக்கும் ஒரு நாடோடி தமிழன் என்ற பெருமை எனக்கும் கிடைத்துள்ளது. மீரியபெத்த- மக்கள்தெனிய மக்களுக்கான நிதியுதவிகளை முழுமையாக வழங்கி இந்நிகழ்வை சாத்தியமாக்கிய, கனடிய தமிழர் தேசிய அவை நண்பர்களுக்கு எனது நன்றிகளையும், உள்ளூரில் இந்த நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்துள்ள ஜனநாயக இளைஞர் இணைய உடன்பிறப்புகளுக்கு எனது பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு: Top News
[Friday 2016-10-28 22:00]

தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் 24 வயதுடைய பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவருக்கும் நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் குளிரினையும் பொருட்படுத்தாது கலந்துகொண்ட மக்கள் இவ்விரு யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான இப்படுகொலை தொடரும் சிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே வெளிப்படுத்துகின்றது என்று தெரிவித்ததோடு நிகழ்வின் இறுதியில் மனு ஒன்றையும் கையளித்தனர்.


இராணுவமயமாக்கலின் பின்னணியில் நடைபெறும் நில ஆக்கிரமிப்பினை அம்பலப்படுத்தும் முக்கியமான ஆவணம் வெளியிடப்பட்டது. Top News
[Friday 2016-10-28 20:00]

"Proliferating Buddhist Structures in Tamil Home land - Sowing the Seeds of Disharmony" என்னும் ஆவணத் தொகுப்பு திங்கள் கிழமை 24 அக்டோபர் 2016 அன்று மாலை 6 மணியிலிருந்து 8:30 மணிவரை பிரித்தானிய பாராளுமன்றத்தில் Attlee Suite, Portcullis House, London SW1A 2LW என்னும் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடன் (APPG T) இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF) ஏற்பாடு செய்யப்பட்டது.

Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா