Untitled Document
November 22, 2024 [GMT]
 
பாடசாலையைத் தேடிவந்த முதலை! Top News
[Wednesday 2016-10-26 18:00]

வவுனியா - உக்கிளாங்குளத்தில் நேற்று இரவு முதலையொன்றை இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர். வறட்சி காரணமாக குளத்தில் நீர் வற்றிப் போயுள்ளதால், முதலைகள் மக்கள் வாழ்விடங்களை நோக்கி படையெடுக்கின்றன. நேற்று இரவு 11.30 மணியளவில் உக்கிளாங்குளம் கனரா பாடசாலைக்கு அருகே வந்த முதலையை கண்டு நாய்கள் குரைத்தமையினால் அயல் வீட்டாரின் உதவியுடனும் உக்கிளாங்குளம் இளைஞர்களின் உதவியுடனும் முதலை பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளது.


சிற்பாசாரியார் அமரர் இராமலிங்கம் வடிவேலுவின் ஞாபகார்த்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள்! Top News
[Wednesday 2016-10-26 10:00]

சிற்பாசாரியார் அமரர் இராமலிங்கம் வடிவேலுவின் ஞாபகார்த்த நிகழ்வு முல்லை மாற்றுத்திறனாளிகளுடன் ஒரு முன்மாதிரியான செயற்பாடு ஒன்றினை செய்திருந்தனர். யாழ் சங்கானையை சேர்ந்த சிற்பாசாரியார் அமரர் இராமலிங்கம் வடிவேலு அவர்களது 51ம் நாள் நினைவு நிகழ்வினை முல்லைத்தீவில் போரினால் கடும் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுடன் உணர்வு மிக்க ஒரு உறவாடலாக மேற்கொண்டிருந்தனர்.


பிரித்தானியா வாழ் தமிழ் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்களுடன் வடக்கு முதல்வர் சந்திப்பு! Top News
[Sunday 2016-10-23 18:00]

லண்டன் கிங்ஸ்ரன் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்கள் இடையே 'இரட்டை நகர்' உடன்படிக்கையை செய்வதற்காக பிரித்தானியா வந்துள்ள வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் அவரது குழுவினர் வெள்ளிக்கிழமை பிரித்தானியா வாழ் தமிழ் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை சந்தித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.


அநுராதபுரத்தில் சிவசேனைக் குழு! - உடைக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டது Top News
[Thursday 2016-10-20 18:00]

19.10.2016 புதன், சிவசேனைக் குழு அநுராதபுரம் சென்றது. சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர் (நல்லூர்), மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன் (வட்டுக்கோட்டை), வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன் (முள்ளியவளை), சட்ட மாணவர் யசோதரன் (வவுனியா), சச்சிதானந்தன் (மறவன்புலவு) என ஐவருடன் படப்பிடிப்பாளர் குகராசன் என அந்த குழு சென்றது.


50 அடி நீள திமிங்கலம் கரையொதுங்கியது! Top News
[Thursday 2016-10-20 18:00]

காலி- அம்பலாங்கொடை, ரன்தொம்பே கடற்பகுதியில் சுமார் 50 அடி நீளமான திமிங்கிலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதனைக் காண்பதற்காக பெருமளவு மக்கள் குழுமியிருந்தனர்.


"GAME SHOW " வழங்கிய நிதி அன்பளிப்பில் தேவிபுரம் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி: Top News
[Saturday 2016-10-15 20:00]
ஒளிரும் வாழ்வு அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக சுவிஸ் அன்பர்கள் "GAME SHOW " வழங்கிய 80.000. 00 ரூபா நிதி அன்பளிப்பில் தேவிபுரம் பகுதியை சேர்ந்த செ .தனுசியன் உடைய பராமரிப்பிற்காக அமைத்து கொடுக்கப்பட்ட கிணறு . கடந்த யுத்தகாலத்தில் கைக்குழந்தையாக இருந்த போது குண்டுவீச்சினால் ஏற்பட்ட அதிர்வினால் தூக்கி எறியப்பட்டதனால் ஏற்பட்ட தாக்கத்தினால் நடக்க ,கதைக்க , முழுமையாக இயங்க முடியாத நிலையில் காணப்படும் இச்சிறுவனை பராமரிப்பதற்கு நீர் வசதி இன்றி சிரமங்களை எதிர்கொண்டிருந்த நிலையில் எமது அமைப்பின் வேண்டுகோளின் அடிப்படியில் GAME SHOW குழுவினர் அவர்களை நேரடியாக பார்வையிட்டு எமது அமைப்பிடம் ரூபா 80000.00 வழங்கி இருந்தனர் .


யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாம் பிறந்தநாள் நிகழ்வு! Top News
[Saturday 2016-10-15 17:00]

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 85வது பிறந்த நாள் இன்று யாழ்.பொதுநூலகத்தில் கொண்டாடப்பட்டது. யாழ். இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது யாழ் பொது நூலகத்தில் இந்திய பகுதியில் உள்ள டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவச்சிலைக்கு இந்திய துணை தூதுவரினால் மாலை அணுவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


கிளி.கால் நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்திற்கு குளிர்களி இயந்திம் வழங்கிய மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை: Top News
[Friday 2016-10-14 17:00]

கிளி.கால் நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கிளிநொச்சி பொதுச் சந்தையில் அமைந்திருக்கும் காமதேனு பால்பொருள் உற்பத்தி நிலையத்திற்கு குளிர் களி இயந்திரம் (ஐஸ்கிறிம் மெசின்) ஒன்று வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்களால் கையளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டிற்கான மாகாண சபை உறுப்


Save Act Foundataion இற்கு தமிழருவியின் உதவும் உள்ளங்கள்: Top News
[Thursday 2016-10-13 18:00]

வவுனியா கூமாங்குளத்தில் கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளின் தொழில் பயிற்சி, வதிவிட இல்லம் Save Act Foundation இற்கு தமிழருவியின் உதவும் உள்ளங்கள் செயற்றிட்டத்தினூடாக 25 000 ரூபாய் பெறுமதியான இரண்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (13) இடம்பெற்றது. North East Media Networks (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர், தமிழருவி வானொலி, சஞ்ஜீவ ஒலி பல்சுவை இணையம் ஆகியவற்றின் முதன்மை செயலதிகாரி (COO) சாந்தி, மற்றும் தமிழருவி வானொலியின் பணிப்பாளர், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் K.R.கிருஷ்ணா ஆகியோரால் கையளிக்கப்பட்ட இந்த உதவி தொகையினை கனடா வாழ் உறவுகளான புஷ்பநாதன் குடும்பத்தினர், மகேந்திரன், கேசவன், சயந்தன் ஆகியோர் அன்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு தமிழருவி நிர்வாகம் சார்பில் அன்பான நன்றிகளை தெரிவிக்கின்றோம்.


முதலமைச்சர் அலுவலகத்தில் விஜயதசமி விழா! Top News
[Wednesday 2016-10-12 17:00]

வடக்கு மாகாண முதலைமைச்சர் அலுவலகத்தில் விஜயதசமியை முன்னிட்டு பூஜை வழிபாடுகளுடன் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அலுவலக உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


பிரான்சில் தமிழ்க்கலை அறிமுறைத் தேர்வு 2016! Top News
[Tuesday 2016-10-11 09:00]

அனைத்துலக தமிழ் கலை நிறுவகம் சுவிஸ் (ITTA) அனைத்துலக ரீதியில் வருடாந்தம் நடாத்தும் தமிழ்க்கலை அறிமுறைத் தேர்வு 2016 பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சில் Laplace இல் அமைந்துள்ள அரச தேர்வு மண்டபத்தில் நேற்று முன்தினம் (09.10.2016) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.30 மணிமுதல் பி.ப. 19.30 மணிவரை 3 பிரிவுகளாக இடம்பெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பமான இத்தேர்வில் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.


ஒரே நிமிடத்தில் 20 உருக்குக் கம்பிகளை வாயினால் வளைத்து உலக சாதனை! Top News
[Thursday 2016-10-06 18:00]

ஒரு நிமிடத்தில் 12mm உடைய 20 உருக்குக் கம்பிகளை வாயினால் வளைத்து ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஜனக காஞ்சன முதன்னாயக என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார். உலகில் சக்திமிக்க பற்களின் சொந்தக்காரன் என்ற கின்னஸ் சாதனை பெறுவதே கொழும்பு துறைமுகத்தில் பணிப்புரியும் இந்த இளைஞரின் எதிர்பார்ப்பாகும்.


இராசேந்திரன்குளம் அ.த.க. பாடசாலைக்கு நிழல் பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது! Top News
[Wednesday 2016-10-05 18:00]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ இ.இந்திரராசா அவர்களினால் இராசேந்திரன்குளம் அ.த.க. பாடசாலைக்கு நிழல் பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது! வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம்ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதிஒதுக்கீட்டின் கீழ் இன்றைய தினம் இப்பாடசாலையில் நடைபெற்ற சிறுவர்தின விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு நிழல் பிரதி இயந்திரத்தை வழங்கி வைத்தார். இன் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தார்கள்


பிரான்சில் நடைபெற்ற மாவீர்ர் கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டியில்க டினபந்து துடுப்பாட்டம்,கரப்பந்தாட்டம்: Top News
[Monday 2016-10-03 18:00]

02/10/2016 அன்று பிரான்சில் நடைபெற்ற மாவீர்ர் கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டியில்க டினபந்து துடுப்பாட்டம்,கரப்பந்தாட்டம் என்பன இடம்பெற்றன. இதில் கடினபந்து துடுப்பாட்ட இறுதிச்சுற்றில் ஈழவர் விளையாட்டுகழகத்தை எதிர்த்து பல்பீனியன்(BALBEENIANS) விளையாட்டு கழகம்மோ தியது. இதில் பல்பீனியன் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது. கரப்பந்தாட்டசுற்றுப்போட்டியில் நியூஸ்ரார் விளையாட்டு கழகத்தை எதிர்த்து லாக்கூர்ண 93விளையாட்டுக்கழகம் விளையாடியது. இதில்நி யூஸ்ரார் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.


மெல்பேர்ணில் உணர்வுடன் நடந்தேறிய தியாகதீப கலைமாலை நிகழ்வு-2016 Top News
[Saturday 2016-10-01 19:00]

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்களாக நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து 26-09-1987அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினமும் கலைமாலை நிகழ்வும் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 30-09-2016 வெள்ளிக்கிழமையன்று சென்யூட்ஸ் மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.


கனடாவில்
[Friday 2016-09-30 18:00]

தாயகத்தில் மிகவும் எழுச்சியோடு இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க


தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு: Top News
[Wednesday 2016-09-28 18:00]

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட நிதி முழுவதும் வன்னி மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்காக


தமிழர்களுக்கு நீதி கோரி ஜெனிவாவில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம்! Top News
[Monday 2016-09-26 20:00]

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றலில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில்,ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபையின் வளாகத்தின் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.


கனடாவில் சிறப்பாக நடைபெற்ற Canada: An evolving vision புத்தக வெளியீடு: Top News
[Monday 2016-09-26 16:00]

கனடாவில் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளரும், சமய மற்றும் சமூகப் பிரமுகருமான திரு.சாமி அப்பாத்துரை அவர்களால் என்ற ஆங்கில நூல் நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. தமிழர்கள் என்றல்லாது மிகவும் ஆரோக்கியமாக கனடிய தேசிய நீரோட்டத்தைச் சார்ந்தவர்களும் பங்குபற்றியதொரு நிகழ்வாக அமைந்த இந்த நிகழ்வில் பல கனடிய பிரமுகர்களும் உரையாற்றினர்.


10 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்! Top News
[Sunday 2016-09-25 19:00]

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 10 வது நாளாக சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஜெனிவா நகரை அண்மித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான பயணம் பல்வேறு நாடுகளை ஊடறுத்து பல்லின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்து , அரசியல் சந்திப்புகளை மேற்கொண்டது. இப் பயணம் பின்வரும் கோரிக்கைகளுடன் எதிர்வரும் திங்கள் கிழமை அன்று ஜெனிவா நகரில் நடைபெறும் மாபெரும் பேரணியில் இணைத்துக்கொண்டு ஐநா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்திடம் மனுவை கையளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


எமது தாய் தமிழக உறவுகளுக்காக கனடாவில் இடம்பெற்ற கண்டன கூட்டம்: Top News
[Thursday 2016-09-22 18:00]

தமிழீழ விடுதலை வரலாற்றில் தமிழக மக்களின் பங்களிப்பும் ஈகமும் ஒப்பற்றவையாக போற்றப்பட வேண்டியவை. காலம் காலமாக ஈழத்தமிழர்கள் துயரில் தமிழக உறவுகள் தாய்மை உணர்வோடு பங்கேற்று துயர் துடைக்க உயிரையும் கொடுத்து போராடி வந்துள்ளார்கள். அந்த வகையில் காவிரி நதி நீர் சிக்கலில் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ் தேசிய மாந்தர்களாக வாழும் ஈழத்தமிழர்களின் குரல் கொடுப்பும் வரலாற்று கடமையாக எம் முன் உள்ளமையை கனடிய தமிழர்களின் தேசிய கட்டமைப்பாக திகழும் கனடிய தமிழர் தேசிய அவையினராகிய (NCCT) நாம் உணர்கின்றோம்.


[Wednesday 2016-09-21 19:00]

தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கலை கண்டித்தும், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்குமாறு வலியுறுத்தியும் நடைபெறவுள்ள எழுக தமிழ் என்ற, மாபெரும் மக்கள் பேரணிக்கான பிரசார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


கனடிய அரசிடமிருந்து அதியுயர் விருது பெற்ற தமிழ் பொலிஸ் அதிகாரி! Top News
[Tuesday 2016-09-20 19:00]

ஹால்ரன் பிராந்திய துணைப் பொலிஸ்மா அதிபரான நிசான் துரையப்பா கனடிய மத்திய அளுனரிடமிருந்து ஓடர் ஒவ் மெரிற் விருதினைப் பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பெற்ற முதல் தென்னாசியர் என்ற பெருமையை இவர் பெறுவதோடல்லாது, கனடிய தமிழ்ச் சமுதாயத்தில் கனடிய அரசின் அதியுயர் விருதினைப் பெற்ற முதலாவது பிரதிநிதியாகவும் இருக்கின்றார். மாணாக்கர்கள் பொலிசார் நட்புறவுக் குழுவினூடாக பொலிஸ் தொண்டராக 1991ல் இணைந்த நிசான் துரையப்பா 1995ல் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளாக பதவியேற்று தனது பணியை ஆரம்பித்திருந்தார்.


ஓயாத தமிழர்களின் உரிமைப்போராட்டம் - ஐநாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் பிரான்ஸ் சென்றடைந்தது! Top News
[Monday 2016-09-19 20:00]

நான்காவது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது. தொடர்ந்து Saargem


மன்னாரில் 1400ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தொல்பொருள் எச்சங்கள் மீட்பு! Top News
[Saturday 2016-09-17 18:00]

மன்னார் - மாதோட்டம், கட்டுக்கரை குளத்தை அண்மித்த குருவில்வான் பகுதியிலிருந்து, பண்டையகால தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் பா.புஸ்பரட்னம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் தலைமையிலான யாழ். பல்கலை மாணவர் குழுவினர் குருவில்வான் பகுதியில் கடந்த முதலாம் திகதி முதல் தொல்பொருள் அகழ்வு பணிகளில் ஈடுபட்ட போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம்! - ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐ.நா நோக்கி ஆரம்பம். Top News
[Friday 2016-09-16 06:00]

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி ஆரம்பித்தது. காலம் காலமாக இலங்கை பேரினவாத அரசால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு எண்ணிப் பார்க்க முடியாத ரணங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்தாலும் என்றும் சோராத ஓர்மத்தோடு புலத்தில் அறப்போராட்டத்தில் எம் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.


நிவாரணம் இன்னிசை மாலை நிகழ்ச்சி மூலம் டொலர் 50,000 சேகரிப்பு! ஒரு பாட்டுப் பாடி டொலர் 18,000 குவித்து செந்தில் குமரன் சாதனை! Top News Top News
[Thursday 2016-09-15 19:00]

கடந்த ஞாயிறு மாலை Metropolitan Centre, Scarborough Canada மண்டபத்தில் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு நடத்திய இன்னிசை மாலை நிகழ்ச்சி மூலம் மொத்தம் டொலர் 50,000 ஆயிரம் திரட்டப்பட்டது. கடந்த காலங்களில் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் மூலம் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி தாயகத்தில் துன்பத்தின் மத்தியில் அவலப்படும் பல உறவுகளுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்தவர் மின்னல் மியூசிக் செந்தில் குமரன். செந்தில் குமரன் பேசும் போது


தேரேறி வந்த செல்வச்சந்நிதி வேலவன்! Top News
[Thursday 2016-09-15 18:00]

வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் முருகப் பெருமான் திருத்தேர் ஏறி அடியவர்களுக்கு காட்சியளித்தார். தேர்த்திருவிழாவில் குடாநாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


சர்வதேச கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Monday 2016-09-12 18:00]

சர்வதேச கைதிகள் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளால் இன்று காலை 10.30 மணியளவில் யாழ் பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் என்.சகாயம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் சர்வதேச கைதிகள் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி , துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.


கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர் பயிலுனர் விடுதிக்கு அடிக்கல்! Top News
[Monday 2016-09-12 18:00]

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர் பயிலுனர்களுக்காக 20 மில்லியன் ரூபா செலவில் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அடிக்கலை நாட்டி வைத்தார். சிறப்பு அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன், மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரிய பயிலுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா