Untitled Document
November 21, 2024 [GMT]
 
ரொறன்ரோ - பெரிய சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற Blends Of Bharatham நிகழ்வு: Top News
[Monday 2016-03-14 11:00]

Toronto Society Of Bharathanatyam Dancers presented - Blends Of Bharatham - A fundraiser event and donated $12,001 to the Scarborough Hospital Foundation, Sunday, March 13, 2016, Toronto. Toronto Society Of Bharathanatyam Dancers என்ற அமைப்பினால் முன்னணி நடன பள்ளிகளை மிகவும் சிறந்த முறையில் நடத்திவரும் பரத நாட்டிய ஆசிரியைகளின் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அமைந்த கூட்டணியினால் இன்று சரியாக திட்டமிட்டபடி நிகழ்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. வழக்கம்போல கனேடிய தமிழ் வாழ்த்து கீதங்கள் காற்றலைகளில் தவன்றது.


சிறப்புத்தேவையுள்ள சிறுவர்களிற்கான விழிப்புனர்வு தமிழர்களிடையே தாராளமாக ஏற்பட்டுள்ளது: Top News
[Monday 2016-03-14 11:00]

ஆட்டிசம் எனப்படும் சிறப்புத் தேவையுள்ளவர்கள் பற்றிய விழிப்புனர்வை தமிழர்களிடையே ஏற்படுத்தத் தென்னாசிய விழிப்புனர்வு சமூக சேவை நிலையம் தாரளமாகப் பங்களிப்புச் செய்துள்ளது என ஹரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சேர்க்கப்படும் பணம் யாவும் இத்தகைய சிறார்களிற்கான பயிற்சி மற்றும் நடைமுறைச் சிகிச்சை சம்பந்தமான செலவுகிளிற்கு பயன்படுத்தப்படும்.


யேர்மனியில் எழுச்சிகரமாக நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்: Top News
[Monday 2016-03-14 07:00]

அனைத்துலக பெண்கள் தின நிகழ்வு நேற்றையதினம் டுசுல்டோர்வ் நகரில் எழுச்சிகரமாக நடைபெற்றது. பெண்கள் அமைப்பினர் கறுப்புஉடையணிந்து கலந்துகொண்டுடிருந்தனர். தாயகத்தில் போரின் பின்பான காலங்களில் சிறீலங்கா இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் பெண்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் கருத்தடைகள், பாலியல் ரீதியான தொல்லைகள், இனக்கலப்பிற்கு தூண்டுதல், போன்ற கொடுமைகள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்றது.


தேசிய மட்ட அறிவிப்பாளர் போட்டி- கிளிநொச்சி மாணவன் முதலிடம்! Top News
[Friday 2016-03-11 18:00]

தேசிய மட்டத்தில் இடம்பெற்ற சிறந்த அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் கிளிநொச்சி மாணவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். பாராளுமன்ற அனுசரணையுடன் ஊடகத் துறையினரால், நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறந்த அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சித்திட்டம், கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெற்றது.


நீதிக்கான வேட்கையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: - ஜெனீவாவில் தீவிர செயல்முனைப்பு ! Top News Top News
[Friday 2016-03-11 17:00]

ஈழத் தமிழ்மக்களின் நீதிக்கான பயணத்தின் ஓர் அங்கமாக தற்போது நடைபெற்று வரும் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையின் 31வது கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர செயல்முனைப்பில் ஈடுபட்டு வருகின்றது. ஐ.நா மனித உரிமைச்சபையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்தினை மையமாக கொண்டு, நாடுகடந்த தமிழீ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்நாட்டு நிபுணர் குழுவின் நீதிபொறியமைவுக்கான செயற்பாடுகளை முதன்மைப்படுத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. பொறுப்புடமை மற்றும் அவதானிப்புக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் கையேடு, தமிழ்பெண்கள் எதிர்கொள்கின்ற சாவால்களை மையப்படுத்தி கையேடு, பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கை ஆகியன இக்கூட்டத் தொடரில் வெளியிட்டு வைக்கப்பட்டதாக நா.த அரசாங்கத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் மணிவண்னன் தெரிவித்துள்ளார்.


சிறிலங்காவை மையப்படுத்திய நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர் குழுவின் முதல் மாநாடு! Top News Top News
[Thursday 2016-03-10 19:00]

சிறிலங்காவை மையப்படுத்திய நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர்குழுவின் Sri Lanka Monitoring Accountability Panel (MAP) முதல் மாநாடு ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றது. இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு மனித உரிமை மீறல்கள் விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களில் பங்காற்றிய ஆறு நிபுணர்களை கொண்டதாக இக்கண்காணிப்பு குழு இயங்குகின்றது. சிறிலங்கா தொடர்பில் கடந்தாண்டு(2016) ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானித்தினை மையமாக கொண்டு நாடுகடந்த தமிழீ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இக்கண்காணிப்புக் குழு சுந்திரமான ஓர் செயற்பாட்டு நிறுவனமாக இயங்கி வருகின்றது.


அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் பேரணி! Top News
[Thursday 2016-03-10 19:00]

தமிழ் அரசியல் கைதிகளின் உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி திரேசம்மா ஆலயத்திலிருந்து சித்தி விநாயகர் ஆலயம் வரை நடைபயணமாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.


கனடாவில் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள இசைத் திருவிழா நிகழ்வு கலைஞர்கள் வந்தடைந்தனர்: Top News
[Thursday 2016-03-10 14:00]

கனடாவில் எழுந்தருளியிருக்கும் கனடா கந்தசாமி ஆலய புதிய கட்டட நிர்மாணபணி நிதிக்காக நடாத்தப்படும் மாபெரும் இசை நிகழ்ச்சியான Music Boss Imman - LIVE IN CANADA என்ற மாபெரும் நிகழ்வானது எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி மாலை 6.00 மணிக்கு கனடாவிலுள்ள The International Centre இல் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. மேற்படி இசை நிகழ்ச்சியில் பங்குபற்றவுள்ள அனைத்து கலைஞர்களும் ரொறன்ரோவை வந்தடைந்துள்ளனர். கனடா கந்தசுவாமி ஆலயத்தை பிரமாண்டமாக கட்டியெழுப்பும் நோக்கோடு நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சியை கண்டு களித்து கந்தபெருமானார் ஆலையவளர்ச்சிக்கு பேராதரவு நல்குமாறு கனடா கந்தசாமி ஆலய நிர்வாக சபையினர் எதிர்பார்த்துள்ளனர்.


யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினத்தில் ஈழத்தமிழ் பெண்களுக்கான நீதி கோரும் கவனயீர்ப்பு! Top News
[Wednesday 2016-03-09 13:00]

யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும் ஈழத்தமிழ் பெண்களுக்கு நீதி கோருவதற்கான வாய்ப்பாக கடைப்பிடித்தார்கள். இப் பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து கொண்டனர்.


நோர்வே: 'தமிழ்3 இன் தமிழர் மூவர்' - இளைய ஆளுமையாளர் விருது! Top News
[Wednesday 2016-03-09 07:00]

தமிழ்3 நோர்வே தமிழர் வானொலியின "சங்கமம்" நிகழ்வு கடந்த ஞாயிறு (06.03.16) ஒஸ்லோவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் "தமிழ்3 இன் தமிழர் மூவர்-2016": எனும் சிறப்பு விருது மூலம்; இளைய தலைமுறையைச் நேர்ந்த துறைசார் ஆளுமையாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.


மார்ச் 8 மில்லியன் பெண்கள் லண்டன் பேரணியில் தமிழ்பெண்களின் நீதிக்கான நடை ! Top News Top News
[Tuesday 2016-03-08 19:00]

அனைத்துல பெண்கள் நாளினை மையப்படுத்தி லண்டனில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மில்லியன் பெண்கள் பேரணில் தமிழ்பெண்களின் நீதிக்கான நடையும் இணைந்துள்ளது. அனைவரும் பெண்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் பல்லின பெண்கள் பல்லேறு கோரிக்கைகள் நிலைப்பாடுகளை முன்னிறுத்தி இடம்பெறும் இப்பேரணியில் இலங்கைத்தீவில் தமிழ்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நீதி கோரப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சின் ஒருங்கிணைப்பில் தமிழ்பெண்கள் பங்கெடுத்திருந்தனர்.


கண்டியில் நடைபெற்ற கலாச்சார நடன நிகழ்ச்சி Top News
[Sunday 2016-03-06 19:00]

கண்டி மயூரா நர்த்தன நாட்டியாலயத்தின் ஏற்பாட்டில் நடன பள்ளி மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சி கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் நடன ஆசிரியை கலைமணி ஸ்ரீமதி தனுஜா சிறிதரன் தலைமையில் நடைபெற்றது (06-03-16) இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்


பெற்றோரின் முயற்சியே குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது: - த.சித்தார்த்தன் எம்.பி
[Friday 2016-03-04 20:00]

யாழ். சென்ற் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்கான விளையாட்டுப் போட்டி இன்று (04.03.2016) கல்லூரியினுடைய அதிபர் அருட்தந்தை ஜெரோ செல்வநாயகம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் வலய ஆரம்பப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் மைதிலி தேவராஜா அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பப் பிரிவின் பொறுப்பாசிரியை அருட்சகோதரி மேரி நிரஞ்சலா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பும் இடம்பெற்றது.


பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற வன்னி மயில் நடனப் போட்டி: - 2016 இறுதிநாள் நிகழ்வு! Top News
[Wednesday 2016-03-02 21:00]

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - தமிழ் பெண்கள் அமைப்பு 7 ஆவது தடவையாக நடாத்திய தாயக விடுதலை பாடலுக்கான நடனப்போட்டி நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. மூன்றாவது நாளாக கடந்த 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை ஒள்னே சுபுவா பகுதியில் இடம்பெற்ற பிரமாண்டமான அரங்கில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. காலை 08.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின. ஈகைச்சுடரினை கடந்த 2007 ஆம் ஆண்டு திருகோணமலைப் பகுதியில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப். கட்டி அவர்களின் புத்திரி ஏற்றிவைத்தார். போட்டியின் நடுவர்களாக திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார் ( 'நாட்டியக் கலைமணி" - யாழ் பல்கலைக் கழகம், 'பரத சூடாமணி" நிருத்திய நாட்டியாலய அதிபர் - ஜேர்மனி), திருமதி நிஷாந்தி சண்முகதாசன் (பரத கலாவித்தகர் - வட இலங்கை சங்கீத சபை, நுண்கலைமாணி (பரதம்) - இராமநாதன் நுண்கலைப் பீடம்) சாவித்திரி இம்மானுவேல் (நாட்டியகலாரத்னா - பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி, MA/ Mphil தஞ்சாவூர் பல்கலைக்கழகம் தமிழ்நாடு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


குருநாகல் மாவட்டம் முவான்கந்த மாவத்தகம சரஸ்வதி தழிழ் வித்தியாலயத்தின் மணி விழா Top News
[Wednesday 2016-03-02 20:00]

குருநாகல் மாவட்டம் முவான்கந்த மாவத்தகம சரஸ்வதி தழிழ் வித்தியாலயத்தின் மணி விழா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.மைக்கள் தலையில் நடைபெற்ற (01-03-16) போது பிரதம அதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மணி விழா மலர் வெளியீடு கலை நிகழ்ச்சிகள் கௌரவிப்புக்கள் அதிதி உரைகள் போன்றன நடைபெற்றன.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமருடன் MAP பற்றிய ஊடக சந்திப்பும், கலந்துரையாடலும்: Top News
[Tuesday 2016-03-01 22:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும்


[Monday 2016-02-29 22:00]

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய


தற்போதைய நிலையில் ஒரு புதிய அரசியல் சாசன மாற்றம் முழுமையாக வருமா? - சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி Top News
[Monday 2016-02-29 18:00]

தற்போதைய நிலையில் ஒரு புதிய அரசியல் சாசன மாற்றம் முழுமையாக வருமா? அல்லது தற்போதைய ஒற்றையாட்சி சாசனத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்படுமா? சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி? - இலங்கைத்தீவின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான


கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா-2016 Top News
[Monday 2016-02-29 18:00]

கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தமிழ் விழா-2016 (சங்கமம் நிகழ்வானது) கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இன்று (28.02.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பிரதிநிதியாக கௌரவ அமைச்சர் சரத் அமுனுகம அவர்கள் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு: Top News
[Saturday 2016-02-27 22:00]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு இன்று 27-02-2016 சனிக்கிழமை யாழ் நல்லூர் சட்டநாதர் சிவன்கோவில் வீதியில் அமைந்துள்ள இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி நிகழ்வு துசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சிக் கொடியினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கொடியினை இ.எ.ஆனந்தராஜா அவர்களும் ஏற்றிவைத்தனர். தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்களுக்கான ஈகச் சுடரினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது மகனுமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஏற்றிவைத்தார். வரவேற்புரையினை நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய துசாந்தன் அவர்கள் நிகழ்த்தினார். வரவேற்புரையினைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான புதிய மத்திய செயற்குழுவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கான புதிய செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டது.


பொதுமக்களினால் உருவாக்கப்பட்டு சுயாதீனமாக தொடர்ந்து இயங்கி வந்த ஐந்து அமைப்புக்கள் ஒரு கட்டமைப்பின்கீழ் ஒன்றாகின! Top News
[Friday 2016-02-26 22:00]

கனடியத் தமிழர் சமூக பொருளாதர தர்ம நிலையத்தினால் (Canadian Tamil Social and Economic Foundation - CTSAEF) முதன் முதலாக நடாத்தப்பட்ட மக்கள்சந்திப்பில் பல ஊடகங்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். இன் நிகழ்வில் தர்ம நிலையத்தின் சார்பில் பேசவல்லவர்கள் தமதுவேலைத்திட்டங்களை தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்தனர். நீண்ட காலமாக பொதுமக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம் இன்று கை கூடி உள்ளது. கனடாத் தமிழ் தொழில்நுட்ப கல்லுஸரி அறிவகம் வணிகம் கனடாத்தமிழர் விழைட்டுத்துறை உலகத்தமிழர் பத்திரிகை கனடிய தமிழ் வானொலி ஆகியவையை ஆரம்பகட்டமாக உள்ளடக்கபட்டுள்ளது - இதனையும் தாண்டி பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற மற்றய அமைப்புக்களும் இம்முயற்சியில் விரைவில் இணைவார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது.


வன்னி மயில் நடனப் போட்டி - 2016 Top News
[Wednesday 2016-02-24 07:00]

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற வன்னி மயில் நடனப் போட்டி - 2016 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்திய நடனப்போட்டி நிகழ்வுகள் கடந்த 20.02.2016 சனிக்கிழமை மற்றும் 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் SARCELLES பகுதியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இரு தினங்களும் காலை 08.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின. ஈகைச்சுடரினை சனிக்கிழமை, மாவீரர் கேணல் பருதி அவர்களின் தாயாரும் ஞாயிற்றுக்கிழமை , சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர்.


மாணவி ஹரிஸ்ணவி கொலையைக் கண்டித்து வவுனியாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்! Top News
[Tuesday 2016-02-23 20:00]

மாணவி ஹரிஸ்ண வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வவுனியாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வன்முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வவுனியா காமினி மாகாவித்தியாலயத்தில் இருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை பேரணியாக பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்.


வறிய நிலையிலும் சாதனை படைத்த வடகிழக்கை சேர்ந்த மாணவர்களின் முன்னேற்ற பாதைக்கு உதவி! Top News
[Sunday 2016-02-21 09:00]

கடந்த கல்வி பொதுத்தர உயர் தர வகுப்பிலும் ஜந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப்பெற்று வறிய நிலையிலும் சாதனை படைத்த வடகிழக்கை சேர்ந்த மாணவர்களின் முன்னேற்ற பாதைக்கு மனிதாபிமான ரீதியில் கனடாவில் இருந்து வெளிவருகின்ற காலாண்டு தளிர் சஞ்சிகையும் அதன் தாய் அமைப்பான சுதந்திர மனித அபிவிருத்திகழகமும் இணைந்து நீண்ட தூரம் கால் நடையாக பாடசாலைக்கு பயணம் செய்யும் மாணவர்களுக்கு 20 - 02 - 2016 அன்று துவிச்சக்கர வண்டிகளை (சைக்கிள்) வழங்கி வைத்ததுடன் மாணவர்களுக்கான ருபா 5000,00 உதவு தொகையாகவும் வழங்கிவைக்கப்பட்டன இத்திட்டம் முதன் முறையாக மட்டக்களப்பு செங்கலடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது, மேலும் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையிலும் சுதந்திர மனித அபிவிருத்தி கழக கிழையினூடாக இது போன்ற செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகளை செயல் படுத்திவருவதும் குறிப்பிடதக்கது.


படுகொலை முயற்சியைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்! Top News
[Saturday 2016-02-20 09:00]

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு பரமலிங்கம் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் நேற்று வெள்ளிக்கிழமை (20) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. படுகொலை முயற்சி நடைபெற்ற Villeneuve-Saint-Georges நகரின் நகரசபை முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். பிரெஞ்சு மொழியிலான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, போராட்டம் குறித்து அப்பகுதியில் வந்து சென்ற மக்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டன.


அதிகமான எலிகளை வேட்டையாடக்கூடிய கருவி கண்டுபிடிப்பு: மட்டு - மாணவி சாதனை! Top News
[Thursday 2016-02-18 19:00]

ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடக்கூடிய ஒரு கருவியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி ஜூட் தவசீலன் என்சலேற்றா கண்டு பிடித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புக்காக, அகில இலங்கை ரீதியில் 2015 ஆம் ஆண்டின் புத்தாக்கப் போட்டியில், என்சலேற்றா இரண்டாமிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலையின் தரம் 9 இல் கல்வி கற்கும் என்சலேற்றா, வலயமட்டத்தில் முதல் இடத்தினை பெற்று, தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தார். அண்மையில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய ரீதியான போட்டியில் 2 ஆம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தை அவர் பெற்றுக்கொண்டார்.


கூகுள் பலூன் விழவில்லை, தரையிறக்கப்பட்டதாம்! Top News
[Thursday 2016-02-18 19:00]

கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை, பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்று கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த பலூன், சோதனை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூகுள் நிறுவனம் இலங்கையில் வை-பை இணைய சேவையை வழங்குவதற்காக இலங்கைக்கு மேல் இணைய சேவையை வழங்கும் பலூன் ஒன்றை பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக அண்மையில் அனுப்பியிருந்தது.


''கனடா தமிழர் பேரவையின் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தனர்" - 'தளிர்" இராப் போசன விருந்துபசாரத்தில் வியாழேந்திரன் எம்.பி.உரை Top News
[Monday 2016-02-15 23:00]

'கனடா தமிழர் பேரவையினர் நடாத்திய பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு என்னையும் மற்றும் சில எம்.பீ.க்களையும் அழைத்திருந்தார்கள். ஆனால் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள எமக்கு உரிய நேரத்தில் விசா கிடைக்கவில்லை. அதனால் நான் மாத்திரம் காலம் தாழ்த்தி இங்கு வந்தேன். இது தான் எனது முதலாவது வெளிநா ட்டு விஜயமாகும். இங்கு வாழும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு என்ற பாகுபாடு எதுவுமே இன்றி அன்புடன் என்னை வரவேற்று பல்வேறு சந்திப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய் திருந்தார்கள். ஆனால் எல்லாவற் றிலும் கலந்து கொள்ள எனக்கு அவகாசம் கிடைக்க வில்லை. அதனால் சிலர் மனவேதனை அடைந்துள்ளதாக அறிந்தேன். நாளை மாலை நான் நாடு திரும்புகின்றேன். அதுவரை சந்திக்கக் கூடியவர்களை நிச்சயமாக சந்திப் பேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் துன்பக் கடலில் மூழ்கியுள்ள மக்களுக்கு இங்குள்ள நீங்கள் அனைவரும் கைகொடுத்து உதவ ஆவலாய் இருப்பதையிட்டு நான் மிக்க மகி ழ்ச்சி அடைகின்றேன். எனது உற்ற நண்பரான சிவமோகன் ஏற்பாடு செய்துள்ள இவ் வைபவத்தில் கலந்து கொண்டுள்ள நீங்கள் மனிதாபிமானத்துடன் மட்டக்களப்பு மக்களுக்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளதை இட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடை கின்றேன். இதில் திரு. ஈழவேந்தன் ஐயாவும் கலந்து கொண்டிருப்பது பெரும் மகிழ்ச் சியை ஏற்படுத்துகின்றது."


பிரித்தானியாவில் இன்று இடம்பெற்ற "ஈகைப்பேரொளி" முருகதாசனின் 7ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு! Top News
[Friday 2016-02-12 22:00]

"ஈகைப்பேரொளி" முருகதாசனின் 7ம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது. "ஈகைப்பேரொளி" முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடத்தில் அவரதும், மற்றும் 21 தியாகிகள் நினைவாகவும் அமைக்கப்பட்டுள்ள நினைவுக் கல்லறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூன்று மாவீரர்களின் சகோதரன் திரு.கிருபா அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தாயவிடுதலைப் போரில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவேரர்களுக்காகவும், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், தியாகிகளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மலர் மாலையினை திரு.ரூபன் அவர்கள் அணிவிக்க மலர்ச் செண்டை "ஈகைப்பேரொளி" முருகதாசனின் தாயாரும், சகோதரியும் வைத்து வணங்கினர்.


தாயக மக்களுக்கு கரம் கொடுப்பதே எமது தலையாயக் கடமை: - (Help for Smile - Germany) Top News
[Friday 2016-02-12 20:00]

சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் இன அழிப்பு போரினால் பாதிக்கப்பட்டு , உடல் உறுப்புகளை இழந்து , சொந்த உறவுகளை இழந்து , உடமைகளை இழந்து அடிப்படை வசதி அற்று கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு வாழும் எம் உயிர் தாயக உறவுகளுக்கு யேர்மன் தமிழ் மக்கள் சார்பில் தொடர்ச்சியாக கரம் கொடுத்து வருகின்றோம் . அந்தவகையில் கடந்த நாட்களில் மட்டும் உதவித்திட்ட வழங்கலாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வாழும் உறவுகளுக்கு அழுத்தப்புண்ணுக்கு எதிரான மருந்துக்கு நிதியுதவி (25000 ரூபாய் ), சுயதொழில் செய்யும் வகையில் தையல் இயந்திரம் (40000 ரூபாய் ), புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் உறவுக்கு சிகிச்சை பெறுவதுக்கான (390000 ரூபாய் ), இரண்டு உறவுகள் சிறிய கடைகள் திறந்து வியாபாரம் செய்வதுக்கான(200000 ரூபாய் ),நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வாழும் உறவுக்கு முதற்தடவையாக (10000 ரூபாய் ), சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் (100000 ரூபாய் ), சிறுவர் கல்வித்திட்ட பராமரிப்புக்கு தொடர்ச்சியான மாதாந்த நிதிப்பங்களிப்பு என பல்வேறு வேலைத்திட்டங்களை ஹெல்ப் போர் ஸ்மைல் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா