Untitled Document
November 21, 2024 [GMT]
 
கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) நடாத்திய வருடாந்த இராப்போசன விருந்து மிகச் சிறப்புற நடந்தேறியது. Top News
[Thursday 2016-04-28 19:00]

க.த.தே.அ (NCCT) நடாத்திய இவ் விருந்தில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முக்கியமாக கனடிய நாட்டின் பிரதமர், மந்திரிமார், ஒன்ராரியோ மாகாணத்தின் தலைவர், டொரொண்டோ நகரத்தின் தலைவர் மற்றும் உபதலைவர்கள், மார்க்கம் நகரத்தின் தலைவர் மற்றும் உபதலைவர்கள் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், பாடசாலை டிரஸ்டி என பலர் இன் நிகழ்விற்குரிய வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்தனர். இன் நிகழ்வில் பல முக்கிய தலைவர்கள் மந்திரிமார் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட வேற்றின மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.


அனைத்துலக பூவுலகின் நாளும் - தமிழினப் படுகொலைக்கு நீதிகோரும் இலட்சம் மரநடுகையும்: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! Top News
[Tuesday 2016-04-26 21:00]

ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று எனும் தொனிப்பொருளில் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி இலட்சம் மரங்களை நாட்டும் செயற்திட்டத்தினை முன்னெடுத்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், போரினால் சிதைந்து போயுள்ள தமிழர் தாயகத்தின் இயற்கை வளங்களை வளங்களை அக்கறையுடன் பேணிக்கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. பூவுலகின் நாளான ஏப்ரல் 22ம் நாளினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் விடுக்கப்பட்டிருந்த அறிக்கையிலே இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனடிய தமிழ் கலைஞர்களது படைப்பில்
[Tuesday 2016-04-26 20:00]

கனடிய புலம்பெயர் ஈழக் கலைஞர்களிடையே மிக பிரபலமாக இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இசையரங்கம் நிறுவனம் ஒரு புதிய ஆல்பத்தை வெளியிடவுள்ளது. இதில் பல கலைஞர்கள் தமது பாடல்களை தந்திருக்கிறார்கள். எதிர்வரும் ஏப்ரல் 30 தேதி மாலை 6.30மணிக்கு கனடாவின் டொரோண்டோவில் உள்ள Centennial college வளாகத்தில் இவ் இசைத்தட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது."இசையினும் மழைதனில்" எனும் இந்த ஆல்பத்தில் கிட்டத்தட்ட 30 பாடல்கள் நமது ஈழ கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இசையரங்கத்துடன் நீண்ட நாட்கள் தொடர்பில் இருப்பவர்கள் கவிஞர் அருள் சுப்ரமணியம் மற்றும் பாடகர்கள் ஐஸ்வர்யா சந்துரு , சாய் பிருந்தா மற்றும் பால முரளி தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.


ரொறன்ரோவில் 600 மாணவா்கள் கலந்துகொண்ட திருவையாறு நிகழ்வு: Top News
[Wednesday 2016-04-20 21:00]

கடந்த சனி ஞாயிற்று தினங்களில் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக கவின் கலை பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதள்களும் கழுத்துப்பட்டி கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. மாணவர்கள் மிகவும் சந்தோசத்துடன் தங்களுடைய சான்றிதல்களை பெற்றுக்கொண்டதனை அவதானிக்க முடிந்தது. பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் 2011 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டுஒன்றியம்


இலங்கை - ஹக்கலையில் பூத்துக் குலுங்கும் வசந்த கால பூக்கள் : Top News
[Wednesday 2016-04-20 20:00]

இலங்கையிலுள்ள மூன்று தாவரவியற் பூங்காக்களில் ஒன்றானதே ஹக்கலை தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையிலேயே இரண்டாவது பெரிய பூங்காவாகும். இப்பூங்கா கடல் மட்டத்தில் இருந்து 5,400 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 10,000 இற்கும் அதிகமான தாவர வகைகள் காணப்படுகின்றன. இங்கு வசந்த காலங்களில் 500,000 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இம்முறை வழமையை விட அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பல வண்ணங்களில் பல வகையான பூக்கள் கண்ணை கவரும் வகையில் காட்சியளிக்கின்றன.


நுவரெலியா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் இசை நிகழ்வுகள்: Top News
[Wednesday 2016-04-20 19:00]

நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் ரோயல் ட்ரூப் கழகத்தினால்; (ROYAL TURF CLUB) குதிரை பந்தய ஓட்ட நிகழ்வுகளின் போது நடாத்தப்பட்ட போட்டிகளின் இடைவேலையின் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந் இசை நிகச்சிகளை பார்வையாயர்கள் மிக குதுகலத்துடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.


பாரிசிலும் யாழ்பாணத்திலும் சமவேளையில் இணைந்த தாயகம் - புலம்பெயர் கலைஞர்களின் முதலாவது கூட்டுச் சந்திப்பு ! Top News
[Monday 2016-04-18 22:00]

தாயகம் - புலம்பெயர் கலைஞர்களிள் கூட்டுச் செயற்பாடுகளுக்கு, வழிமுறையினை உருவாக்கும் நோக்கிலான முதலாவது சந்திப்பு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதன் முதற்கட்டமாக, கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 16) தலைநகர் பரிசிலும், யாழ்பாணத்திலும் சமவேளையில் ஒன்றுகூடிய கலைஞர்கள், இணைய தொழில்நுட்ப காணொளி பரிவர்த்தனை வாயிலாக இச்சந்தித்துக் கொண்டனர். ஈழ சினிமாவை அடிப்படையாக கொண்டு, முழுநீள - குறும்பட உருவாக்கங்கள் சமீபத்திய காலங்களிலும் இரு தளங்களிலும் அதிகரித்து வருகின்ற நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


நுவரெலியா குதிரை பந்தய திடலில் பரிசளிப்பு விழா: Top News
[Monday 2016-04-18 19:00]

நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் ரோயல் டர்ப் கழகத்தினால்; (ROYAL TURF CLUB) குதிரை பந்தய ஓட்ட நிகழ்வுகளின் போது நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி ஈட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இலங்கைக்கான பிரித்தானிய உதவி தூதுவர் லோரா டேவிஸ் (Laura Davies), பிNஸில் நாட்டுக்கான தூதுவர் எலிசெபத் சொபி பல்சா (Elisabeth Sophie Balsa), இஅமைச்சர்களான நவீன் திஸாநாயக்க ஜோன் அமரதுங்க நுவரெலியா மாநகர சபை மேயர் மகிந்த தொடம்பெ கமகே கழகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் அங்கத்தினர்; கலந்து கொண்டு வெற்றி ஈட்டியவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.


பூவரசங்குளம் கந்தன்குளம்
[Sunday 2016-04-17 18:00]

தமிழ் - சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு பூவரசங்குளம் கந்தன்குளம்


ஹட்டனில் நடைபெற்ற தேசிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் ! Top News
[Thursday 2016-04-14 20:00]

தேசிய சித்திரை புத்தாண்டு கொண்டாங்கள் மலையகத்தின் கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிலும் ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்திலும் வெகு விமர்சியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் (14) தலைமையில் கொண்டாப்பட்டது. கல்வி இராஜாங்க அமைச்சு நேத்திரா தொலைகாட்சி ஹட்டன் டிக்கோயா நகர சபை ஹட்டன் பொலிஸ் ஹட்டன் கல்வி வலைய பனிமனை


துர்முகி வருடப் பிறப்பு - நல்லைக் கந்தன் வீதியுலா! Top News
[Thursday 2016-04-14 19:00]

துர்முகி வருடப் பிறப்பான இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்று சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வந்தார். இந்த விசேட பூசையில் பல இடங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றார்கள். தமிழ் புது வருடமான துர்முகி வருடம் நேற்றுப் புதன்கிழமை மாலை 6.36 மணிக்குப் பிறந்தது குறிப்பிடத்தக்கது.


பிரித்தானியப் பாரளுமன்றில் இடம்பெற்ற
[Tuesday 2016-04-12 22:00]

பிரித்தானியப் பாரளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று (11-04-2016) மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடல் ஒன்று நடைபெற்றது. பிரித்தானியத் தொழில்கட்சி உறுப்பினர் மதிப்பிற்குர்இய ஜோன் றயன் அவர்களின் தலைமையில் மாலை 7:00 மணி முதல் வரை 9:00 மணிவரை நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரதம விருந்தினராக தொழில்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எதிர்க் கட்சித் தலைவரும், தொழில் கட்சியின் தலைவருமான ஜெறமி கோபன் ( The Leader of the Labour Party Rt Hon Jeremy Corbyn MP), கெளரவ விருந்தினராக நிழல் வெளிவிவகார அமைச்சர் மதிப்பிற்குரிய கிலாரி பென் (The Shadow Foreign Secretary Rt Hon Hilary Benn MP), ஆகியோர் கலந்துகொண்டு இலங்கை நிலவரம் தொடர்பில் மிக ஆழமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.


முல்லை - மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு பொருட்கள் அன்பளிப்பு..! Top News
[Tuesday 2016-04-12 20:00]

சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட


புலம்பெயர் மண்ணிலும் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக அயராது உழைக்கும் நேசோர் அமைப்பு! Top News
[Monday 2016-04-11 09:00]

தாயகத்தில் அன்றைய காலத்தில் அயராது ஈழத்தமிழர்களின் உரிமைக்காக உழைத்த வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESOHR )இன்றும் புலம்பெயர் மண்ணில் தனது பணியை முன்னெடுத்து வருகின்றது. பிரித்தானியாவில் நடைபெறும் "இலண்டன் தமிழர் சந்தையில்" வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESOHR) தகவல் மையத்தை அமைத்து அமைப்பின் எதிர்கால நலன் கருதி பல்வேறு தேடலில் ஈடுபட்டது.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ரொறொன்ரோவில் நடாத் திய
[Friday 2016-04-08 10:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த மூன்று வருடமாக எமது செயற்பாடுகளை பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத தில் ஒன்றுகூடலையும் அதைத் தொடர்ந்து எமதுசெயற்பாடுகளுடன் தொடர்புள்ள முக்கிய விடயம் பற றி கூட்டாய்வு விளக்கவுரைச் சந்திப்பையும்நடாத்தி வந்திருக்கிறது. நான்காவது முறையாக சென்ற ஏப பிரல் 2ம் 3திகதிகளில் முறையேscarborough convention centreல் ஒன்று கூடலும் அடுத்த நாள் 2035 kennedy road. ல் உள்ள delta hotel ல் கூட்டாய்வும் சிறப்பாக நடைபெற்றன.


பதுளை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 48 குடும்பங்களுக்கு வீடுகள் கொடுக்க திட்டம்: Top News
[Thursday 2016-04-07 17:00]

பதுளை மாவட்டத்தில் பசறை கோணகலை கீழ் பிரிவு தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 48 குடும்பங்களுக்கு 7 பேர்ச் காணியில் தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் ஆகியோரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


பிரான்சில் இடம்பெற்ற ஏவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழா! Top News
[Wednesday 2016-04-06 07:00]

பிரான்சு ஏவ்றி நகரத்தில் அமைந்துள்ள ஏவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழா கடந்த 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. அன்றையதினம் பிற்பகல் 2 மணியளவில் ஏவ்றி தமிழ்ச்சோலை நிர்வாகி திரு.சட்டநாதர் மனோகரன் அவர்கள் மங்கள விளக்கினை ஏற்றிவைக்க ஆரம்பமான இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை கடற்கரும்புலி லக்ஸ்மன் அவர்களின் மைத்துனி ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து அரங்கின் முன்பாக வைக்கப்பட்டிருந்த மங்கள விளக்குகளை ஏவ்றி தமிழ்ச்சோலை ஆசிரியைகள் அணியாக ஏற்றிவைத்தனர்.


அவுஸ்திரேலியாவில் உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தியின் ஆவணப்படம் நூல் வெளியீடு: Top News
[Friday 2016-04-01 10:00]

உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் பற்றி தெட்சணாமூர்த்தி அறக்கட்டளையின் ஆதரவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளி அம்ஷன்குமார் தயாரித்த ஆவணப்படமும் மற்றும் 'தெட்சணாமூர்த்தி: எட்டாவது உலக அதிசயம்' எனும் நூல் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ தூங்க்காபி சமூக மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.


சம்பூர் கைம்பெண்கள் வீடமைப்புத் திட்டம்: - வீடுகள் கையளிக்கப்பட்டது Top News
[Tuesday 2016-03-29 12:00]

திருகோணமலை மாவட்டத்தின்; மூதூர் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 24 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதி பொதுவாகச் சம்பூர் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. 'சம்பூர்' எனக் சுட்டப்படும் மேற்படி பகுதியில் 2006ஆம் ஆண்டில் 1853 குடும்பங்களைச் சேர்ந்த 7046 மக்கள் வாழ்ந்து வாழ்ந்து வந்தனர் 2006 சித்திரைத் திங்களில் மாவிலாற்றில் தொடங்கி நடைபெற்ற போரின் விளைவாக முன்கூறிய 1853 குடும்பங்களும் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.பல்வேறு இடப்பெயர்வுகளுக்குப் பின்பு இவர்கள் சம்பூருக்கு அண்மையில் உள்ள கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி ! கி.பி.அரவிந்தன் அவர்களது முதலாமாண்டு நினைவேந்தல் ! Top News
[Monday 2016-03-28 23:00]

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களது முதலாம் ஆண்டு நினைவேந்தல், முகம் கொள் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக அரசியற் விடுதலைப் போராளியாக திகழ்ந்த கி.பி.அரவிந்தன் அவர்கள் எழுத்து, ஊடகம், பண்பாடு, என பன்முகத்தளங்களில் ஆளுமைமிகுந்தவராக இயங்கியவர். தலைநகர் பரிசில் இவரது முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த சனியன்று இடம்பெற்றிருந்தது. நினைவு மலர், நினைவுரைகள், நினைவுத்திரையிடல், வில்லிசை, பாடல், கவிதை என பல்வகையிலும் கி.பி.அரவிந்தன் அவர்களது ஆளுமைகளை பற்கோணங்களில் வெளிக்காட்டும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது.


[Friday 2016-03-25 20:00]

பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி என்று சொல்லும் போதே இயேசுவின் மரணம் தான் நினைவிலும் வரும். ஆந்த நாளுக்கு முன்னோர்கள் நல்ல வெள்ளி புனித வெள்ளி எல்லா வெள்ளிகளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்தமாகவே பெயரிட்டுள்ளனர். அந்த பெயர்களின் அடிப்படையில் இன்றைய பெரிய வெள்ளி (25) அனுஷ்டிக்கப்படுகின்றது. இந் நாள் இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட நாளாகவே நினைவு கூறப்படுகின்றது. அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்லாவ புனித ஆசீவாதப்பர் தேவாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெரிய வெள்ளி திறந்த வெளி சிலுவை பாதை யாத்திரை இன்று நடைபெற்றது இதில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டார்கள்.


பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன் அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்ற ஒன்று கூடல்: Top News
[Friday 2016-03-25 20:00]

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன் அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்ற தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பிரித்தானிய தமிழர் பேரவையின் அரசியல் மட்ட ஒன்று கூடல் - பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒவ்வொரு வருடமும் ஒழங்கு செய்யப்பட்டு நடாத்தப்படும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்பு 23ம் திகதி பங்குனி மாதம் அன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன் (David Cameron) அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்றது.


புதுவசந்தம் நிகழ்வுக்கான கலைஞர்கள் ரொறன்ரோவை வந்தடைந்தனர். Top News
[Wednesday 2016-03-23 21:00]

ரொறன்ரோ ஸ்காபறோவிலுள்ள பெரிய சிவன் கோவில் மகா மண்டபத்தில் எதிர்வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ள மாபெரும் நகைச்சுவை சிரிப்புடன் கூடிய இசைத் திருவிழா நிகழ்வுக்கான கலைஞர்கள் இன்று ரொறன்ரோவை வந்தடைந்தனர். டொரோண்டோ விமான நிலையத்தில் வந்திறங்கிய கலைஞர்களை நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்கள் வரவேற்றனர் . சகல கலைனர்களும் இரவு எட்டுமணியளவில் ஊடக பிரதிநிதிகளுடன் ஓர் உத்தியோகபூர்வமான சந்திப்பினை ஏற்படுத்தியிருந்தனர்.


பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய இசைவேள்வி கர்நாடக சங்கீதப் போட்டி 2016: Top News
[Wednesday 2016-03-23 06:00]

பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 5 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டி 19.03.2016 சனிக்கிழமை பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்திலும் 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை 91270 vigneux sur seine பகுதிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வுகளில் மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை 12.07.2007 இல் மடுவில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வன்னியனின் சகோதரர்; மற்றும் மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் ஏற்றி வைத்தனர்.


சுவீடனில் நடைபெற்ற வட்டுக்கோட்டை 40 ஆவது ஆண்டு கருத்தரங்கு : Top News
[Tuesday 2016-03-22 18:00]

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாகிய இவ் ஆண்டை 'வட்டுக்கோட்டை தீர்மானம்' வலுவூட்டல் ஆண்டாக பிரகடனம் செய்து அதுகுறித்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.


சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..! Top News
[Monday 2016-03-21 23:00]

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே!

கடந்த வருடம் புங்குடுதீவின் வல்லன் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தினைத் தொடர்ந்து வல்லன், வீராமலை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மிகவும் தொலைவிலுள்ள புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பதற்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.


நுவரெலியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்பு குதிரைப் பந்தய போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது. Top News
[Sunday 2016-03-20 20:00]

நுவரெலியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்பு குதிரைப் பந்தய போட்டிகள் இன்று (20.03.2016) ஆரம்பிக்கப்பட்டது. நுவரெலியா குதிரைப் பந்தய திடல் நிர்வாகத்தை ரோயல் நிறுவனம் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து குதிரைப்பந்தய திடல் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு தற்பொழுது போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களில் போட்டிகளை நடாத்த புதிய நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சுரன்ஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.


கண்டி - புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்த்தான திருவிளக்கு பூஜையும் ஆச்சார்ய வரணமும்: Top News
[Friday 2016-03-18 19:00]

இந்து சமுத்திரத்தின் மத்தியில் மிளிரும் முத்தென திகழும் இலங்கை திருநாட்டின் மத்தியில் இயற்கை எழில் கொஞ்சும் கண்டி மாநகர் புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக பெரு விழாவில் முதல் நாள் (17) திருவிளக்கு பூஜையும் ஆச்சார்ய வரணம் ஆச்சார்ய அலங்காரம் சதுர்வேத கோஷம் விநாயகர் வழிபாடு வேதோக்த்த புண்ணியாக ஜபம் மிருத்சங்கிரகணம் அங்குராற்பணம் ஆவாகணம் மூர்த்தி கும்பஸ்தாபனம் கும்பஜ்தாபனம் யாகசாலா பிரவேசனம். ஸ்தோத்திர பாராயணம் விபூதி பிரசாதம் வழங்கல் நடைபெற்றது. இதன் போது பெரும் திறலான பெண்கள் கலந்துக் கொண்டார்கள்.


இலங்கை தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 15 வது தேசிய விளையாட்டு போட்டி: Top News
[Wednesday 2016-03-16 18:00]

இலங்கை தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 15 வது தேசிய விளையாட்டு போட்டி பண்டாரவலை ஊவா தேசிய கல்வியற் கல்லூரியில் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இதன் ஆரம்ப நிகழ்வினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உத்தியோகபூர்வமாக (15) ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து 15.16.17 ஆம் திகதி வரை நடைபெரும் இந்த விளையாட்டு போட்டி ஊவா தேசிய கல்லூரியின் தலைவி எம்.சி.விக்ரமசேகர தலைமையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. 17 ஆம் திகதி பரிசளிப்பு நடைபெறும்.


தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 42ஆம் நினைவு ஆண்டில் நடாத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி: Top News
[Tuesday 2016-03-15 17:00]

தமிழீழ விடுதலை போராட்டத்தின் முகல் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 42ஆம் ஆண்டின் நினைவுகளை சுமந்து சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் 13.03.2016 அன்று Dorfmatt Halle Rotkreuz என்னும் இடத்தில் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது. காலை 8.45 மணியளவில் தியாகி பொன் சிவமுமாரனின் நினைவுகளுடனும், சம்பிரதாய நிகழ்வுகளுடனும் தொடங்கிய போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 20 உதைபந்தாட்ட கரகங்கள் பங்கெடுத்து கொண்டன. மகிழ்வுடனும், சுறுசுறுப்புடனும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டதால் போட்டிகள் யாவும் விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றப்பட்டது.

Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா