Untitled Document
July 20, 2024 [GMT]


தெலுங்கானா மாநிலத்தில் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி!
[Tuesday 2016-01-26 14:00]

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், 17 வயது மாணவி ஒருவர் தன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குண்டலா பகுதியில் வசிக்கும் ஜூனியர் கல்லூரி மாணவியான ரேகா, நேற்று இரவு தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்ததாகவும், வெட்டவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டதால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.


'இளைஞர்கள் சீமான், விஜய் கட்சிக்கு செல்கிறார்கள்'- கார்த்தி சிதம்பரம் பேச்சால் பரபரப்பு!
[Saturday 2024-07-20 07:00]

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் அவர்களின் கருத்துக்களை கேட்கவும் மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக நிர்வாகி அஞ்சலை கைது!
[Saturday 2024-07-20 07:00]

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


70 நாட்களுக்கு மேலாகியும் கிடைக்காத விடை: தொடர் விசாரணையில் சிபிசிஐடி!
[Saturday 2024-07-20 07:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் 04.05.2024 அன்று சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


வரியாக ரூ.2 லட்சம் கோடி கொடுத்தும் ஒரு பைசா கூட இந்திய அரசு தரவில்லை: டெல்லி அமைச்சர் ஆவேசம்!
[Friday 2024-07-19 18:00]

வரி வழியாக இந்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடியை டெல்லி மாநிலம் வழங்கிய நிலையில் ஒரு பைசா கூட தரவில்லை என்று அம்மாநில அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். வருமான வரி மற்றும் GST மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்திய அரசு வரி வசூல் செய்தபோதிலும் மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரி பகிர்வு மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு, கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.


முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கு முன் இப்படி யாராவது செய்திருந்தால்? விமர்சித்த நடிகை கஸ்தூரி!
[Friday 2024-07-19 18:00]

அம்மா உணவகங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த விதத்தை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த தமிழக அரசு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மு.க.ஸ்டாலின் இதற்கான உத்தரவினை பிறப்பித்ததுடன், அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.


பாரிஸ் ஒலிம்பிக் 2024: களம் காணும் தமிழக வீரர்கள் யார் யார் தெரியுமா?
[Friday 2024-07-19 18:00]

ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் ஆரம்பமாகவிருக்கிறது. உலகளாவிய நிகழ்வு ஜூலை 26 முதல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்சின் தலைநகரில் (பாரிஸ்) நடைபெறும். 2021 இல் இந்தியா மிகவும் வெற்றிகரமான டோக்கியோ 2020 ஒலிம்பிக்கைச் சந்தித்தது. சாதனையாக 7 பதக்கங்கள் வென்றவர்கள் இருந்தனர், நீரஜ் சோப்ரா ஆண்கள் ஈட்டி எறிதல் நிகழ்வில் தங்கப் பதக்கத்தை பெற்றார்.


அம்பானி வீட்டு திருமணம்: விருந்தினர் கையில் பேண்ட் கட்டியதற்கு காரணம் என்ன?
[Friday 2024-07-19 18:00]

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களின் கையில் கலர் கலராக பேண்ட் கட்டப்பட்டிருந்தது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது.


தொடரும் கனமழை: நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை!
[Friday 2024-07-19 06:00]

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தீவிரமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு: பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம்!
[Friday 2024-07-19 06:00]

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


'சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுக இணையும்' - ஓபிஎஸ் நம்பிக்கை!
[Friday 2024-07-19 06:00]

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் மீண்டும் சுற்றுப் பயணத்தை நேற்று சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கி பொதுமக்களிடம் திறந்த வெளி வாகனத்தில் பேசி இருந்தார்.


ஒருவருக்கு கூடுதலாக 3 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு- விமர்சனத்திற்கு உள்ளாகும் உத்தரவு!
[Thursday 2024-07-18 06:00]

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் விண்ணப்பம் பெறப்பட்டு கலந்தாய்வுகள் நடந்து வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காசிம்புதுப்பேட்டை மற்றும் ஆயிங்குடி வடக்கு ஆகிய இரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் உள்பட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணி மாறுதல் ஆணை பெற்று வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டதால் தற்போது அந்தப் பள்ளிகளுக்கு வேறு ஆசிரியர்கள் வராததால் தற்காலிகமாக மாற்றுப் பணியிலும் தற்காலிக ஆசிரியர்களையும் வைத்து பள்ளிகள் செயல்படுகிறது.


மயிலாப்பூரில் குழந்தை திருமணம்: பெற்றோருக்கு சம்மன்!
[Thursday 2024-07-18 06:00]

சென்னை மயிலாப்பூரில் பெற்றோர்கள் சிறார்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாப்பூரில் வசித்து வந்த 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் பெற்றோர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதாவுக்கு புகார் கிடைத்தது. புகாரின் அடிப்படையில் அங்கு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தை திருமணம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.


கைமாறிய பெரும் தொகை? - ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் இருவர் கைது!
[Thursday 2024-07-18 06:00]

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: 3 -வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் மரணம்!
[Wednesday 2024-07-17 18:00]

நண்பர்களுடன் பிராங்க் செய்து கொண்டிருந்தபோது பெண் ஒருவர் 3 -வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பை இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டடத்தில் பெண் ஒருவர் நண்பர்களுடன் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்.


"இரவெல்லாம் தூங்க முடியவில்லை" - சீமான் மீது புகார் கொடுத்த பெண் வழக்கறிஞர்!
[Wednesday 2024-07-17 18:00]

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நாமக்கல் எஸ்பியிடம் பெண் வழக்கறிஞர் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பாடியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "கள்ளச்சாராயத்தை விற்றவர்களை எல்லாம் கைது செய்யாமல் மேடையில் பாடியதற்காக கைது செய்கிறீர்கள்.


அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நீதிமன்ற காவல்!
[Wednesday 2024-07-17 18:00]

நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31 -ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், கரூர் மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.


அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்ளாத ஒரே தலைவர்!
[Wednesday 2024-07-17 18:00]

உலக பிரபலங்கள் முதல், நாட்டின் பிரதமர் வரை கலந்துகொண்ட ஆனந்த் அம்பானி திருமணத்தில், இந்திய நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் மட்டும் கலந்துகொள்ளவில்லை. இந்திய பிரதமர் மோடி முதல் எதிரணியில் இருக்கும் சில கட்சித் தலைவர்கள் வரை ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துகொண்டது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மட்டும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.


தெங்குமரஹாடாவில் வெள்ளப்பெருக்கு: நனவாகுமா தொங்கு பாலம் கனவு?
[Wednesday 2024-07-17 06:00]

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தெங்குமரஹாடா மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தை சென்றடைய மாயாற்றை கடக்க வேண்டும். மலை கிராமத்தில் வசிக்கும் வியாபாரிகள், பள்ளி மாணவ -மாணவிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சத்தியமங்கலம் வந்து செல்வது வழக்கம்.


'தமிழகம் உத்தரபிரதேசத்தை விட கீழே உள்ளது'- வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்!
[Wednesday 2024-07-17 06:00]

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் பலரும் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த நிர்வாகியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பேசுகையில், ''சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு என்பது திரும்பத் திரும்ப குறிப்பாக நடுத்தர ஏழை மக்கள் மீது மிகப்பெரிய சுமையை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.


விவசாயிகளே இல்லாமல் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்!
[Wednesday 2024-07-17 06:00]

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தலைநகரில் மட்டுமின்றி ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதாவது மாவட்ட தலைநகரில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் கோட்டங்களில் கோட்டாட்சியர் தலைமையிலும் நடத்தப்படுகிறது.


"இது தமிழ்நாடா? இல்லை உத்தரப்பிரதேசமா?" - கட்சி நிர்வாகி படுகொலையில் சீமான் ஆவேசம்!
[Tuesday 2024-07-16 18:00]

நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியனை படுகொலை செய்திட்ட கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழக மாவட்டமான மதுரை, சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் உள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.


ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கேரளாவில் தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் கைது!
[Tuesday 2024-07-16 18:00]

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், கரூர் மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.


5000 கோடி செலவில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமணத்தை முன் நின்று நடத்தியவர் யார் தெரியுமா?
[Tuesday 2024-07-16 18:00]

உலக பணக்காரர்களில் 11வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, தனது இளைய மகனின் திருமணத்தை ரூ. 5000 கோடி செலவில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் தான் தற்போது அனைவரது பேச்சாகவும் இருக்கிறது. அம்பானி இல்ல திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்? கோடிக் கணக்கில் செலவழித்து இந்த திருமணத்தை செய்து முடித்துள்ளார்கள்.


அம்பானி வீட்டுத் திருமணத்துக்கு எளிமையாக வந்த கோடீஸ்வரர் மனைவி!
[Tuesday 2024-07-16 18:00]

ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு வந்திருந்த உலகப் பிரபலங்கள் பலர், மிகவும் ஆடம்பரமாக வந்திருந்தார்கள். விலையுயர்ந்த உடையும் நகைகளுமாக வந்திருந்தவர்கள் மத்தியில், கழுத்தில் தாலி மட்டும் அணிந்து திருமணத்தில் பங்கேற்றுள்ளார் கோடீஸ்வரர் ஒருவரின் மனைவி.


தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு: வெளியான முழு விவரங்கள்!
[Tuesday 2024-07-16 06:00]

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜீரோ முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 4.60 காசுகள் இருந்த கட்டணம் ரூ.4.80 காசுகளாக உயர்ந்துள்ளது. 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.15 காசுகள் இருந்த கட்டணம் ரூ. 6.45 காசுகளாக உயர்ந்துள்ளது. 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.15 காசுகள் இருந்த கட்டணம் ரூ. 8.55 காசுகளாக உயர்ந்துள்ளது. 601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 9.20 காசுகளாக இருந்த கட்டணம், ரூ. 9.65 காசுகளாக உயர்ந்துள்ளது.


ரவுடிகள் வேட்டை: சரணடைந்த சாமி ரவி!
[Tuesday 2024-07-16 06:00]

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்றதோடு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த என்கவுன்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஜன்னல் வழியே வெளியான புகை: எரித்து கொல்லப்பட்ட மூவர் - காவல்துறை தீவிர விசாரணை!
[Tuesday 2024-07-16 06:00]

கடலூரில் ஒரே குடும்பத்தில் 3 பேரை கொலை செய்து உடல்கள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி, சுரேஷ்குமார் தம்பதியினர் சுரேஷ்குமார் நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி சர்க்கரை ஆலையில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 70 வயதான நிலையில் வயது மூப்பின் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.


ஆனந்த் அம்பானி திருமணத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள்!
[Monday 2024-07-15 19:00]

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் காணப்பட்ட விலை உயர்ந்த பொருட்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்டினை திருமணம் செய்துள்ளார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா