Untitled Document
January 25, 2025 [GMT]
அர்ச்சுனா சந்தித்தவர்கள் உண்மையான மீனவர்கள் அல்ல!
[Sunday 2024-12-29 17:00]

இலங்கையிலிருந்து இந்திய தமிழகம் சென்றுள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகஹகீம் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தியா இலங்கை மீனவர்களில் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் பெயர் மாற்றம்!
[Friday 2025-01-24 19:00]

இந்திய நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கு "யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.


ஹொரணை மாணவி முதலிடம்!
[Friday 2025-01-24 19:00]

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.


பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடுத்தார் மஹிந்த!
[Friday 2025-01-24 19:00]

தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.


மாமியாரைச் சுட்டுக் கொன்றவர் வெட்டிக் கொலை!
[Friday 2025-01-24 19:00]

வவுனியா -சுந்தரபுரத்தில் நேற்று இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.


உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனு மீது விசாரணை!
[Friday 2025-01-24 19:00]

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (24) உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.


யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று சாதனை!
[Friday 2025-01-24 19:00]

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். பரமேஸ்வரன் பிரசோதன் என்ற மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.யாழ். தொன் பொஸ்கோ மாணவன் 185 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.


அனுமதியின்றி தென்னை மரம் வெட்டத் தடை!
[Friday 2025-01-24 19:00]

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர் பிரதேச செயலாளரிடமும் மற்றும் தங்களிடமும் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி சபை புதிய கொள்கையை அறிவித்துள்ளது.


ஐதேகவுடனான பேச்சுக்கள் வெற்றிகரமாக முன்னெடுப்பு!
[Friday 2025-01-24 19:00]

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.


மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த குடும்பஸ்தர் மரணம்!
[Friday 2025-01-24 19:00]

யாழ்ப்பாணத்தில் கடந்த 22 ஆம் திகதி வீதியை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.


மன்னார் காற்றாலை மின்திட்டம் ரத்துச் செய்யப்படவில்லை!
[Friday 2025-01-24 19:00]

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.


ஜெனிவாவில் இருந்து அமெரிக்கா விலகினால் பின்னடைவு ஏற்படும்!
[Friday 2025-01-24 05:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகும் பட்சத்தில், இலங்கை தொடர்பான செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பின்னடைவொன்று ஏற்படக்கூடும் என சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனன், இருப்பினும் இலங்கை விவகாரம் தொடர்பில் கனடா கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.


மன்னார் துப்பாக்கிச் சூட்டுக்கு பாதுகாப்புத் தரப்பின் அசமந்தமே காரணம்!
[Friday 2025-01-24 05:00]

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே இந்த நிலைமைக்கு காரணம். நானும் இலக்காக்கப்படலாம். பழிவாங்கு படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன் மூலம் தூய்மையான இலக்கை நோக்கிய இலட்சியத்தை அடைய முடியும் என ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


மருதானை பொலிஸ் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்!
[Friday 2025-01-24 05:00]

மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியா பெண் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. யான சிறீதரன் தெரிவித்தார்.எனினும் இது தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்தார்.


முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும்!
[Friday 2025-01-24 05:00]

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் என்பதொன்று இருக்குமானால் அரச இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் இவர்களுக்கும் வெட்கமில்லை, இவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை எனத்தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தை வீடு 3128 மில்லியன் ரூபாயட பெறுமதியானது. 46 இலட்சம் ரூபா மாத வாடகை கொண்டதெனவும் கூறினார்.


இனி அனுர அரசுக்கு ஆதரவு இல்லை!
[Friday 2025-01-24 05:00]

அரசாங்கத்திற்கு தான் வழங்கும் ஆதரவை முற்றாக விலக்கிக்கொள்வதாக தெரிவித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், இனி தான் உண்மையான எதிர்க்கட்சியினராக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.


கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் அவசியமான உறவு!
[Friday 2025-01-24 05:00]

கனடாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான சக்தி மற்றும் சுரங்கத் தொழிற்துறை உறவு வட அமெரிக்காவின் சக்திப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் மீள்திறம் ஆகியவற்றுக்கு இன்றியமையாதது.


ஒரே ஒரு எம்.பிக்கு வாகனம் வழங்கப்பட்டது!
[Friday 2025-01-24 05:00]

10 ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ஊடாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.


கிளிநொச்சியில் வெள்ளம்!
[Friday 2025-01-24 05:00]

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது.


சொகுசு வாகனங்களை பயன்படுத்தும் என்பிபி உறுப்பினர்கள்!
[Friday 2025-01-24 05:00]

சொகுசு வாகனங்கள் அனுமதிக்கப்படாதென்ற அரசாங்கத்தின் உறுதிமொழிகளுக்கு மத்தியில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சொகுசு வாகனங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


பயமுறுத்துவதற்காக மக்கள் ஆணை வழங்கவில்லை!
[Friday 2025-01-24 05:00]

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு அழைத்து செல்லும் அளவுக்கு தேவை இருக்கவில்லை. இது அரசியல் பழிவாங்களில் ஒரு பகுதியாகும். அச்சுறுத்தி ஆட்சி செய்வதற்காக மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை.அரசாங்கம் நியாயமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.அதிகாரத்தை கவனமாக கையாள வேண்டும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.


அரிசி ஆலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்!- ஜனாதிபதி அனுர எச்சரிக்கை.
[Thursday 2025-01-23 16:00]

அரசாங்கத்தின் பொறிமுறைகளை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியது எம்மை அவமதித்தமைக்குச் சமம்!
[Thursday 2025-01-23 16:00]

இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான 'யாழ்ப்பாணம்' என்ற பெயரை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய விடயத்தில் அகற்றியமை எம்மை அவமதித்தமைக்குச் சமமாகும். இது இந்தியாவுக்கும் எமக்கும் இடையேயான நல்லுறவில் ஆழமான குழியாக அமைந்துவிடக்கூடாது என நாம் திடமாக நம்புகின்றோம். 'யாழ்ப்பாணம' என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம் ஆகும். எனவே, இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம் என்று, யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் புதன்கிழமை பிற்பகல் நேரில் சென்று கையளித்த கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.


அனுர யாப்பாவுக்கும் மனைவிக்கும் பிணை!
[Thursday 2025-01-23 16:00]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி மற்றும் பலர் உட்பட நான்கு பேரை தலா 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஒன்ராறியோ அரசாங்கம் 200 டொலர் வரித்தள்ளுபடி வழங்குகிறது Top News
[Thursday 2025-01-23 16:00]

கார்பன் வரி மற்றும் அதிக வட்டி விகிதங்களின் தாக்கம் உட்பட, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுடன் போராடும் குடும்பங்களுக்கு ஆதரவாக ஒன்ராறியோ அரசாங்கம் $200 தள்ளுபடி காசோலைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. கனடா குழந்தை நலன் (CCB)க்கு தகுதியான குடும்பங்களில் 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதலாக $200 வழங்கப்படும்.


மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிர் மாய்த்த கிளிநொச்சி பெண்! உண்மைகள் வெளிவர வேண்டும்.
[Thursday 2025-01-23 16:00]

மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிர்மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


அர்ச்சுனா, கௌசல்யா உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் குறித்து விசாரணை!
[Thursday 2025-01-23 16:00]

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


ஜேவிபி அலுவலகத்தில் அமெரிக்க தூதுவர்!- டில்வின் சில்வாவுடன் சந்திப்பு.
[Thursday 2025-01-23 16:00]

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் க்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இடையில் நேற்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.


பாடசாலை மாணவிகள் மத்தியில் அதிகரிக்கும் உளவியல் பாதிப்பு!
[Thursday 2025-01-23 16:00]

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார்.


100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும்!
[Thursday 2025-01-23 16:00]

தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார்.


மாணவி துஷ்பிரயோகம்- ஆசிரியர் கைது!
[Thursday 2025-01-23 16:00]

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா