Untitled Document
November 15, 2024 [GMT]
கூட்டமைப்புக்கு துணை நிற்கும் பேரவையால் பயனில்லை! - ஆனந்தசங்கரி
[Monday 2016-01-04 20:00]

அரசியல் ரீதியான கட்சியாக தமிழ் மக்கள் பேரவை செயற்படாது எனக் கூறப்பட்டுள்ள நிலையில், பேரவையின் இலக்கு என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். 'தமிழ் மக்களின் இனப்பிரச்சினை சம்பந்தமாக மிக அவதானமாகவும் புரிந்துணர்வோடும் செயற்பட வேண்டிய காலம் இதுவென நினைக்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் பெரும் சாதனைகளை புரியலாமென கருதி நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினோம்.


வவுனியா யுவதியின் 15 பவுண் நகைகளை அபகரித்த பேஸ்புக் காதலன்!
[Monday 2016-01-04 19:00]

பேஸ்புக் காதலனை நம்பி தனது 15 பவுண் நகைகளை 28 வயதான வவுனியா யுவதியொருவர் இழந்த சம்பவம் நேற்று யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நண்பராகியுள்ளார். தான் கனடாவில் இருப்பதாகக்கூறி அந்தப் பெண்ணுடன் கதைத்து பெண்ணைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.


போர்க்குற்ற விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் அவசரமாக அமைக்கப்படாது! - மைத்திரிபால சிறிசேன
[Monday 2016-01-04 07:00]

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரமான நடவடிக்கைகளில் ஈடுபடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். த ஹிந்துவுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்திய வெளிவிவகார செயலாளர் கொழும்பு வருகிறார்!
[Monday 2016-01-04 07:00]

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் எதிர்வரும் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார். இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆராயும் நோக்கிலும் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடும் வகையிலுமே இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு பயணம்! - வடக்கிற்கும் செல்கிறார்
[Monday 2016-01-04 07:00]

இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரித்தானியாவின் பொதுநலவாயத்துக்கான வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹிகோ ஸ்வயர் வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆளும் மற்றும் எதிர்கட்சியை சந்திக்க உள்ளதுடன் வடக்கிற்கும் விஜயம் செய்ய உள்ளார்.


காணிகள் விடுவிப்புக் குறித்த பலாலியில் ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம்! - வரும் 15ஆம் திகதி நடக்கிறது
[Monday 2016-01-04 07:00]

இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பது குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தலைமையில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும் பங்கேற்கவுள்ளனர்.


இன்னமும் கடற்படையின் பிடியில் சம்பூர் பாடசாலைகள்! - காற்றில் பறக்கும் ஜனாதிபதியின் வாக்குறுதி
[Monday 2016-01-04 07:00]

சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்தும் கடற்படை வசமுள்ள அரசாங்க பாடசாலைகள் இதுவரை விடுவிக்கப்படாமை குறித்து கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பூர் பிரதேசத்தில் 818 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.


சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலேயே நிரந்தர அமைதி ஏற்படும்! - ஜனாதிபதி
[Monday 2016-01-04 07:00]

சிங்கள பௌத்தர்களுக்குள்ள ஒரே நாடு இலங்கைதான் என்று குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் நிரந்தர அமைதியும் சுதந்திரமும் நிலைப்பதற்குச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.நேற்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி புதிய அரசாங்கத்தின் வெற்றிகரமான ஒரு வருட நிறைவு தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்ததுடன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கினார்.


கல்லடி கடலில் மூழ்கி இளைஞர் பலி! - மாலைப்பொழுதைக் கழிக்க வந்தபோது பரிதாபம்
[Monday 2016-01-04 07:00]

மட்டக்களப்பு கல்லடி கடற்கரைக்கு நேற்று மாலை குடும்பத்தாருடன் பொழுதினைக் கழிப்பதற்காக வருகைதந்த பனிச்சையடியை சேர்ந்த 25 வயதுடைய யூலியன் வின்சன் எல்மர் என்ற இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞர் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் பிரதேச வாசிகளினால் மீட்கப்பட்ட நிலையில் பொலிசாரும் பொதுமக்களும் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இந்தியாவிடம் ரயில் எஞ்சின்,பெட்டிகளை வாங்குவதில் சிக்கல்!
[Monday 2016-01-04 07:00]

ரயில் சேவையை முன்னேற்றுவதற்காக புதிய 12 ரயில் என்ஜின்களையும் 09 பவர் செட்டுகளுடன் கூடிய ரயில்களையும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதில் பல சிக்கல்கள் உருவாகி இருப்பதாக போக்குவரத்து அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இறக்குமதிகள் தொடர்பாக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் இவற்றை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்வது தொடர்பாக ரயில்வே தொழிற் சங்கங்கள் மட்டுமன்றி அமைச்சர்கள் பலரின் எதிர்ப்பும் தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர்களால் ஒன்ராறியோ பெருமிதமடைந்துள்ளது. மரபுரிமை மாதத்தை வெகுசிறப்பாகக் கொண்டாடுவோம்:
[Monday 2016-01-04 07:00]

தொடர்ந்தும் அதனைப் பெருமையுடன் கொண்டாடுவோம் எனவும் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பற்றிக் பிறவுன் தனது மரபுரிமை நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழர்களிற்கும் தனக்குமான பிணைப்பு மிகவும் இறுக்கமானது என்றும், அநேக தமிழர் நிகழ்வுகளில் கலந்து கொண்டவனாகத் தான் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ள திரு. பற்றிக் பிறவுன், தமிழர்களுடனான உறவாடல் மிகவும் ஆழமானது எனத் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 28ம் திகதி வியாளக்கிழமை மாலை 8 மணிக்கு ஒன்றாரியோ சட்டமன்ற வளாகத்தில் இடம்பெறும். ஒன்றாரியோ மாகாண கண்சவேட்டிவ் கட்சியின் அவைத்தலைவர் திரு. பற்றிக் பிறவுன் மற்றும் பல சட்ட மன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். தமிழர்களின் மரபுரிமை மாதத்தை ஒன்ராறியோ சட்டமன்றத்தில் பிரேரணையாகக் கொண்டு வந்து அங்கீகரிக்க வைத்தது முன்னேற்றவாத கண்சவெட்டிவ் கட்சியே என்றும் தெரிவித்தார்.


விசேட விமானத்தில் கொழும்பு வந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளயர்!
[Monday 2016-01-04 07:00]

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளயர் நேற்று மாலை விசேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கை வந்தடைந்தார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொருளாதார அமர்வில் பங்கேற்பதற்காகவே அவர் வருகை தந்துள்ளார். குறித்த அமர்வுகள் எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதேவேளை டோனி பிளோயர் சில மாதங்களுக்கு முன்னர் தமது குடும்பத்துடன் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர்கள் இணைவு! - ஒப்புக்கொள்கிறார் பாதுகாப்புச் செயலர்
[Monday 2016-01-04 07:00]

இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளமை தமக்கு தெரியவந்துள்ளது என பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார்.


தெற்கில் பரவும் சிங்கத்தின் இரத்தம் பிரசாரம்! - இனக்கலவரத்துக்கு தூபம்? Top News
[Sunday 2016-01-03 20:00]

சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள் என்ற இனவாதத்தை பரப்பும் வகையில், நாடு முழுவதும் சிங்கத்தின் இரத்தம் (சிங்க லே) ஸ்ரிக்கர்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பேரினவாத சக்திகள் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கள இனப்பற்றுள்ள வர்த்தக நிலையங்கள், மற்றும் வாகனங்களில் இந்த ஸ்ரிக்கர்களை ஒட்டுவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக ஊடகங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.


செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு மாரடைப்பு! - கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை
[Sunday 2016-01-03 20:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, இன்று அதிகாலை ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.


இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக திலங்க சுமதிபால தெரிவு! Top News
[Sunday 2016-01-03 20:00]

இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திலங்க சுமதிபால 88 வாக்குகளையும், நிஷாந்த ரணதுங்க 56 வாக்குகளையும் பெற்றனர். இதன்படி, 32 மேலதிக வாக்குகளினால் திலங்க சுமதிபால இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


உயிரியல் பிரிவில் கல்குடாவில் சாதனை படைத்தார் மாணவி ராஜிதா! Top News Top News
[Sunday 2016-01-03 19:00]

இனிவருகின்ற காலங்களில் எமது பிரதேசத்து மாணவர்கள் விஞ்ஞான, கணிதப் பிரிவுகளை தெரிவு செய்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி எமது பிரதேசத்துக்கு பெருமை தேடித் தரவேண்டும் எனக் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள, நாகேந்திரம் ராஜிதா தெரிவித்துள்ளார். வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேற்றின் படி, கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/ககு/பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் பரீட்சை பெறுபேற்றில் பாரியளவான முன்னேற்றத்தை அவதானிக்க முடிகின்றது.


மாற்று அரசியல் கட்சி உருவாகலாம், அரசியலில் எதுவும் நடக்கலாம்! - என்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்
[Sunday 2016-01-03 19:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் செல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மாற்று அரசியல் கட்சி உருவாக முடியும், அரசியலில் எதுவும் நடக்கலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


நாளை காலை நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் முக்கிய உரை!
[Sunday 2016-01-03 19:00]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை காலை 9.30 மணியளவில் அலரி மாளிகையில் விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தினால் வெளியிப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர் திருநாள் 2016 பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: Top News
[Sunday 2016-01-03 19:00]

புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா 23.01.2016 அன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் Shree Kutch leva patel community, West end Road, Northolt Ub5 6re என்ற முகவரியில் நடை பெற உள்ளது. இவ் நிகழ்வில் தமிழ் வார்தகர்களாகிய நீங்கள் உங்களுடைய வியாபாரங்களை விளம்பரப்படுத்தவும், வியாபாரம் செய்வதற்கும் இடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்.


வடமாகாண விவசாய அமைச்சு 99.66 வீத நிதி ஒதுக்கீட்டையும் செலவிட்டது!
[Sunday 2016-01-03 19:00]

வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டின் பாதீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் 99.66 வீதம் செலவழிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாணவி கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் நான்காவது இடம்! Top News
[Sunday 2016-01-03 19:00]

இன்று வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில் தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவி கௌரிகாந்தன் நிஷாங்கனி பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது கல்வி மேலும் சிறக்க செய்தி இணையதளம் தனது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறது.


யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 10 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரிப்பு!
[Sunday 2016-01-03 19:00]

கடந்த 2014ம் ஆண்டை விட, 2015ம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை, 10 ஆயிரத்து 402 இனால் அதிகரித்துள்ளது. அத்துடன் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை ஆயிரத்து 705 இனால் மாத்திரம் அதிகரித்துள்ளது என தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மட்டக்களப்பில் சுவர் இடிந்து வீழ்ந்து கூலித்தொழிலாளி பலி! Top News
[Sunday 2016-01-03 19:00]

ஏறாவூர்ப் பிரதேசத்தில் பழைய வீடொன்றை உடைத்துக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து வீழ்ந்து கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர்- ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய எஸ்.சேகர் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.


ஆயுள் முடியும் ஆணைக்குழு ஆறுமாத அவகாசம் கேட்கிறது!
[Sunday 2016-01-03 19:00]

காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பரணகம ஆணைக்குழு ஜனாதிபதியை சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் மக்ஸ்வெல் பரணகம கூறியுள்ளார். ஆணைக்குழுவின் ஆயுட் காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.


மைத்திரியுடன் இணைந்து செயற்பட சமல் ராஜபக்ச முடிவு!
[Sunday 2016-01-03 19:00]

மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் பிரிந்து தனியாகிய தரப்பு இல்லை என சுட்டிக்காட்டிய சமல் ராஜபக்ச, மக்களின் கருத்து மதிப்பளித்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்! Top News
[Sunday 2016-01-03 19:00]

க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்ட மட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ள மாணவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.


க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின! - தேசியமட்ட சாதனைகளை தவறவிட்ட தமிழ் மாணவர்கள்.
[Sunday 2016-01-03 09:00]

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/home.jsf இல் பார்க்கமுடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.


லசந்த படுகொலை - 18 பேரிடம் விசாரணை!
[Sunday 2016-01-03 09:00]

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள்பூர்த்தியடைகின்ற நிலையில் இதுவரையில் அவரின் கொலை தொடர்பில் 18 பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த அரசாங்கத்தில் குறித்த விசாரணைகளில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. எனினும் புதிய அரசாங்கம் இந்த விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்து வருகிறது.


பேரவையில் இணைவது குறித்து விரைவில் விக்னேஸ்வரனுடன் பேசவுள்ளாராம் கருணா!
[Sunday 2016-01-03 09:00]

தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதால், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்தி அதில் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா