Untitled Document
October 25, 2026 [GMT]
 
அழிந்து வரும் அரியவகை மலை ஆடு இந்தியாவில் கண்டுபிடிப்பு!
[Monday 2020-12-14 17:00]

இந்தியாவில் அரியவகை உயிரினங்கள் ஏராளமானவை காணப்படுகின்றன. இதில் பல வகை உயிரினங்கள் காக்கப்படாமல் அழிந்து வருகின்றன. அதனை காக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த வகையில், அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் சிற்றின விலங்கான மலை ஆடு என அழைக்கப்படும் இமாலய செரோவை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளிர் பாலைவனமான வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.


ஒரே நாளில் திருமணம் செய்துகொண்ட தாய் மற்றும் மகள்!
[Sunday 2020-12-13 17:00]

இந்தியாவில் தாய் மற்றும் மகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பிப்ராலி தொகுதியில் வியாழக்கிழமை முக்யமந்திரி சாமுஹிக் விவாக யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெற்ற வெகுஜன திருமண விழாவில், பெண் மற்றும் அவரது மகள் இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 63 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.


பிரித்தானிய பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக அடித்த அதிர்ஷ்டம்!
[Friday 2020-12-11 08:00]

பிரித்தானியாவில் தோட்டம் ஒன்றில் மெட்டல் டிடெக்ருடன் சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு சுமார் 2500 பவுண்ட் மதிப்புள்ள தங்கநாணயம் கிடைத்துள்ளது. பிரித்தானியாவின் Portsmouth-ல் இருக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க Amanda Johnston என்ற பெண் வீட்டின் பின்புற தோட்டத்தில், தன்னுடைய மகனான George’s metal பயன்படுத்தும், மெட்டல் டிடெக்டரை வைத்து சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.


புலியின் எலும்புக்கூட்டை 70,000 டொலருக்கு ஏலத்தில் வாங்கிய நபர்: அப்படி என்ன அதில் விசேஷம்!
[Wednesday 2020-12-09 17:00]

அமெரிக்காவில் சுமார் 40 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு புலியின் எலும்புக்கூடு 70,000 டொலருக்கு விற்கப்பட்டுள்ளது. சேபர்-பல் கொண்ட புலி என்று பிரபலமாக அழைக்கப்படும் கிட்டத்தட்ட 40 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு புலியின் எலும்புக்கூடு அமெரிக்க பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


இப்படியும் ஒரு உலக சாதனையா!..
[Wednesday 2020-12-09 16:00]

சவுதியில், 10 வினாடிகளில் 144 மாடிக் கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. மினா பிளாசா டவர் என்ற கட்டிடம், 144 மாடிகளைக் கொண்டது. இது 541.44 அடி உயரம் கொண்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் வெறும் 10 வினாடிகளுக்குள் கடந்த மாதம் இடிக்கப்பட்டது. இதற்கு 6000 கிலோ பிளாஸ்ட்டிக் வெடி பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 18,000 தனித்தனி டெட்டனேட்டுகளும் இதில் பயன்படுத்தியுள்ளனர்.


ரூ.200க்கு வாங்கப்பட்ட நிலத்தில் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2020-12-07 17:00]

மாதத்துக்கு ரூ.200 என்று பேசி குத்தகை எடுத்த நிலத்தை விவசாயம் செய்ய தோண்டிய போது அதில் வைரக் கல் கிடைத்ததால், விவசாயி தற்போது லட்சாதிபதியாகியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 45 வயதாகும் லகான் யாதவ், 10க்கு 10 அடி பரப்பு கொண்ட இடத்தை மாதத்துக்கு ரூ.200க்கு குத்தகைக்கு எடுத்தார். அதனை தோண்டியபோது, அதில் 14.94 காரட் வைரக் கல் இருந்தது தெரிய வந்தது. அதனை கடந்த சனிக்கிழமை ரூ.60 லட்சத்துக்கு ஏலம் விட்டுள்ளார்.


இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்டு 450 கி.மீ நடந்தே சென்ற கணவர்!
[Monday 2020-12-07 17:00]

இத்தாலி நாட்டில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர், அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கி.மீ நடந்தே சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.


இந்தியர் படைத்த விசித்திர சாதனை! Top News
[Saturday 2020-12-05 17:00]

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த 25 வயதான நகைக்கடை வியாபாரி, ஒரே மோதிரத்தில் அதிக எண்ணிக்கையிலான வைரங்களை பதித்து கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளார். "The Marigold-The Ring of Prosperity" என்று அழைக்கப்படும் மலர் வடிவ மோதிரம் 12,638 வைரங்களுடன் (38.08 காரட்) பொறிக்கப்பட்டுள்ளது. இது 165 கிராம் (5.8 அவுன்ஸ்) எடையைக் கொண்டுள்ளது.


தொடர்ந்து 32 வருடங்களாக ஒரு நபரை பழிவாங்க துடிக்கும் நல்ல பாம்பு!
[Friday 2020-12-04 16:00]

ஆந்திராவில் கடந்த 32 ஆண்டுகளில் 74 முறை நல்ல பாம்பு ஒன்று ஒருவரை கடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தையும், ஒரு பக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் கும்மரா குடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (45). இவர் 5-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது முதல் முறையாக நல்ல பாம்பு கடித்துள்ளது.


27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவிலிருந்து பிறந்த அதிசய குழந்தை!
[Friday 2020-12-04 08:00]

அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டினா மற்றும் பென் கிப்சன் தம்பதியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு தொடர்பில் உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டுள்ளனர்.


ரசம் மூலம் அமெரிக்க மக்களை கவர்ந்த தமிழர்!
[Thursday 2020-12-03 17:00]

அமெரிக்க மக்களை தனது சமையல் திறமையால் கவர்ந்து கொரோனா சமயத்தில் ரசம் மூலம் அவர்களை கட்டிபோட்டுள்ளார் தமிழர் ஒருவர். அமெரிக்காவில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போது, ஏதோ மருத்துவத்தில் அதிசயம் நடந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், நியூ யார்க், நியூ ஜெர்ஸி, பிரின்ஸ்டன் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியது தென்னிந்திய உணவான ரசம் தான் என்று சவால் விட்டுக் கொண்டிருந்தனர்.


விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய புத்திசாலி தெரு நாய்!
[Wednesday 2020-12-02 17:00]

கேரளாவில் நபர் ஒருவர் குளத்தில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது உதவிக்காக தெரு நாய் மக்களை அழைத்த நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் ஜான்(வயது 48), பணி முடித்துவிட்டு ஆழப்புழாவிலிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையில் கிடந்த உலோக கம்பி மீது வண்டியை ஏற்றியதால் நிலை தடுமாறினார்.


அமெரிக்காவில் மாயமான மர்ம தூண்: மற்றொரு நாட்டில் தோன்றிய அதிசயம்! Top News
[Tuesday 2020-12-01 17:00]

கடந்த புதனன்று, அமெரிக்காவிலுள்ள உத்தா பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அரசாங்கம் அதை ரகசியமாக வைக்க முயன்றபோதும், அது குறித்து அறிந்துகொண்ட மக்கள் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்மத்தூணை புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.


நடுவானில் தமிழன் படைத்த சாதனை: பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை!
[Tuesday 2020-12-01 16:00]

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 44). இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய போது வான்வெளி சாகசத்துக்காக தேர்வான 5 வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010 வரை அமெரிக்கா, ரஷ்யா, கனடா, நியூசிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த வான்வெளி சாகச போட்டிகளில் ராஜ்குமார் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.


ஒரேநாளில் கோடீஸ்வரரான தாய்லாந்து மீனவர்! Top News
[Tuesday 2020-12-01 08:00]

தாய்லாந்தில் பரம ஏழையான மீனவர் ஒருவர் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கில வாந்தியால் தற்போது ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அந்த மீனவருக்கு கிடைத்திருப்பது, உலகில் இதுவரை யாருக்கும் கிடைத்திராத மிக அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது. தாய்லாந்தின் தென் பகுதியில் வசிப்பவர் 60 வயதான மீனவர் Naris Suwannasang. இவருக்கே தற்போது சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது.


கனடா செல்ல புறப்பட்ட தாய் மற்றும் மகனுக்கு விதி செய்யும் சதி!
[Monday 2020-11-30 17:00]

வெடிவிபத்து போன்ற செய்திகளை கேட்கும்போது, பெரும்பாலும், ஒரு விபத்து நடந்தது, அதில் இத்தனை பேர் இறந்தார்கள் என்ற செய்தி வரும். அச்சச்சோ என நாம் கொஞ்ச நேரம் கவலைப்பட்டுவிட்டு, பிறகு நம் வேலையைப் பார்க்கப்போய்விடுவோம். ஆனால், அந்த விபத்தில் சிக்கியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் என்ன பாதிப்புக்குள்ளானார்கள் என்றெல்லாம் பெரும்பாலும் யாரும் உட்கார்ந்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கமாட்டோம்.


மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை: பழிக்கு பழி வாங்கிய சக யானை!
[Monday 2020-11-30 17:00]

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் மொகாஸ் பகுதியில் கடந்த வெள்ளி கிழமை யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. விசாரணையில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி ராம் என அழைக்கப்பட்ட யானை உயிரிழந்தது தெரிய வந்தது. இது நடந்து சில நாட்களுக்கு பின்னர் இன்று பீஜதண்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த 2 பேர் காட்டு யானையால் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளனர். இது பழிவாங்கும் செயல் என வன அதிகாரிகள் கூறுகின்றனர்.


கிராம மக்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்த நிவர் புயல்!
[Sunday 2020-11-29 08:00]

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நிவர் புயல் காரணமாக கரை ஒதுங்கிய தங்க மணிகளை பொதுமக்கள் அள்ளிச்சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கன மழை கடந்த சில தினங்களாக பெய்தது. இந்த கன மழை காரணமாக, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன.


எலிசபெத் மகாராணியை விட அதிக சொத்துக்களை கொண்ட பிரித்தானிய வாழ் இந்திய பெண்!
[Saturday 2020-11-28 18:00]

பிரித்தானிய மகாராணியாரின் சொத்து மதிப்பு 350 மில்லியன் பவுண்டுகள்... ஆனால், பிரித்தானியாவில் வாழும் ஒரு இந்திய பெண், பிரித்தானிய மகாராணியாரைவிட அதிக பணக்காரராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய 5 வயது சிறுமி!
[Saturday 2020-11-28 17:00]

இந்தியாவில் 5 வயது சிறுமி ஒருவர் வித்தியாசமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், அதை அறிந்த பலரும் வாழ்த்தி வருகின்றனர். மும்பை சிறப்பு படை பொலிஸ் பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் நினாட். இவருக்கு ஜான்வி மற்றும் உர்வி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் உர்விக்கு 5 வயதாகிறது. உர்விக்கு சமீபத்தில் தான் பிறந்தநாள் வந்தது. இந்த பிறந்த நாளை கொண்டாடுவதற்கு, உர்விக்கு வித்தியாசமான ஆசை ஏற்பட்டுள்ளது.


பிரேசில் நாட்டில் 54,000 -க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை!
[Saturday 2020-11-28 08:00]

குழந்தைக்கு விளையாட கொடுத்த போனில் 54 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த குழந்தை. முன்பெல்லாம் பெரியவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்பொழுது பிறந்த குழந்தை கூட கையில் போனை கொடுத்தால் அனைத்தும் அறிந்து கொள்ளும் போல அவ்வளவு தூரம் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் அதிக அளவில் காணப்படுகிறது.


பாகிஸ்தானில் பிச்சை எடுத்து வந்த திருநங்கை: ஆச்சர்யப்படும் வகையில் மாறிய வாழ்க்கை!
[Friday 2020-11-27 17:00]

பாகிஸ்தானில் பிச்சை எடுத்து வந்த இளம் திருநங்கை தற்போது பெரிய வழக்கறிஞர் ஆகியுள்ளதுடன் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி ஆவேன் என சபதமிட்டு உழைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிஷா ராவ் (28) என்ற திருநங்கைக்கு தற்போது 28 வயதாகிறது. இவருக்கு 18 வயதான போது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை உணர்ந்தார்.


இலங்கை வம்சாவளியை சேர்ந்த கனேடிய எழுத்தாளர் சந்தித்த வேடிக்கை அனுபவம்!
[Thursday 2020-11-26 16:00]

கனேடிய நகைச்சுவையாளரும் எழுத்தாளருமான ஒருவரின் புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. Halifaxஐச் சேர்ந்த அந்த எழுத்தாளரின் பெயர் Pardis Parker. Parkerஇன் தாய் ஒரு இலங்கை வம்சாவளியினர், தந்தை ஈரான் வம்சாவளியினர். தனது தந்தையின் கலாச்சாரத்துடன் இணைந்த ஒரு வேடிக்கையான நிகழ்வின் அடிப்படையில் Parkerஇன் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.


ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்! Top News
[Thursday 2020-11-26 04:00]

நைஜீரியாவில் தன்னுடைய ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் பிரிட்டி மைக் என்பவர் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நைஜீரியாவில் நகைச்சுவை நடிகரான Williams Uchemba-வுக்கும் நடிகையான Brunella Oscar-வுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியின் திருமணத்திற்கு நைஜீரிய திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.


தமிழகத்தில் கஷ்டப்பட்ட நபர் இன்று கனடாவில் கோடீஸ்வரர்!
[Saturday 2020-11-21 17:00]

தமிழகத்தில் சாலையில் படுத்து தூங்கி ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட நபர் இன்று கனடாவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள நிலையில் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். டொரோண்டாவை சேர்ந்தவர் ஷாஸ் சாம்சன் ( 50). கனடாவின் சிறந்த சமையல் நிபுணரானவர். கடந்தாண்டு ஒரு பெரிய ஹொட்டலை துவக்கிய இவர் கோடீஸ்வரர் ஆவார்.


மான்களை காக்க ஜப்பான் மக்கள் செய்த செயல்!
[Saturday 2020-11-21 17:00]

ஜப்பான் நாடு, மான்களுக்கு மிகவும் பிரபலமானது. அங்குள்ள மான்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஏனென்றால் மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதால், அவை மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மான் ஒன்றின் வயிற்றில் இருந்து 4 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.


உலக மீனவர் தினம்: கேக் வெட்டி கொண்டாடிய குமரி மீனவர்கள்!
[Saturday 2020-11-21 17:00]

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. கடல் அன்னைக்கு நன்றி தெரிவித்து மீனவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். ஆண்டு தோறும் நவம்பர் 21ம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களில் மீனவர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.


கனடாவில் அரங்கேறிய அபூர்வ நிகழ்வு! Top News
[Friday 2020-11-20 17:00]

கனடாவில் Ottawa பகுதியில் வானிலிருந்து விண்கல் (meteor)ஒன்று விழும் அபூர்வ காட்சி ஒன்று கமெராவில் சிக்கியுள்ளது. Western பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறை, அந்த வீடியோவில் காணப்படுவது விண்கல்தான் என்பதை உறுதி செய்துள்ளது.


சமையலறையை சுத்தம் செய்த கனேடிய பெண்மணிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2020-11-19 18:00]

கனடாவில் வீட்டை சுத்தம் செய்த போது பெண்ணுக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. டெல்டா நகரை சேர்ந்தவர் Carolyn Bauer. இவர் தனது வீட்டை சமீபத்தில் சுத்தம் செய்தார். அப்போது வீட்டு சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த ரேடியோவுக்கு பின்னால் அவர் வாங்கிய Lotto 6/49 டிக்கெட்கள் இருந்ததை கண்டார்.


ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தனது கடைக்கு 'கொரோனா' என பெயரிட்ட நபர்!
[Thursday 2020-11-19 17:00]

கேரளாவைச் சோர்ந்த ஜார்ஜ் என்ற நபர், "கரோனா" என்று தனது கடைக்கு பெயர் வைத்துள்ளதால், விற்பனை அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் "கரோனா" என்ற பெயரில் இன்டீரியர் அலங்கார பொருட்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார். இதில், பூந்தொட்டிகள், பானைகள், விளக்குகள் மற்றும் வீடுகளில் டெக்கரேசனுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.

 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா