Untitled Document
October 24, 2026 [GMT]
 
பெண்களுக்கு பல விதத்தில் உதவும் வெந்தயம்!
[Thursday 2020-04-30 17:00]

பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க கூடும். மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைந்திடும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதே வேளையில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.


பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்!
[Wednesday 2020-04-29 17:00]

பூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் என்று இதன் மருத்துவ தன்மை ஏராளம். ஒரு பூண்டு பல்லை உணவில் சேர்த்து வந்தாலே சாதாரண சளியில் இருந்து கொலஸ்ட்ரால் வரை சரி செய்யலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதன் வாசனை வேண்டும் என்றால் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இதன் பயனை அறிந்த பிறகு யாரும் இதை வேண்டாம் என்று ஒதுக்க மாட்டார்கள். இதை நம் உணவில் சேர்த்து வருவதால் நமது நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. வரலாற்று ரீதியாக பூண்டுகள் நோய்களைத் தடுக்கவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், காயங்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்று பூண்டில் உள்ள ஏராளமான நன்மைகள் குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் வாங்க தெரிஞ்சுக்கலாம்.


இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிட கூடாதாம்!..
[Tuesday 2020-04-28 18:00]

அவ்வபோது வேண்டியதை மட்டும் சமைத்து சாப்பிடும் காலத்தை கடந்துவிட்டோம். சமைக்கும் உணவு பதார்த்தங்கள் நாள்கணக்கில், வாரக்கணக்கில் கெட்டுபோகாமல் காப்பாற்ற எல்லோரு வீட்டிலும் அத்தியாவசிய பொருளான ஃப்ரிட்ஜ் இருக்கிறது. அவ்வபோது அதை பதமாக சூடு செய்ய அதற்கு தோதாக மைக்ரோவேவ் அவன் இருக்கிறது. இதனால் இரண்டு வேளை என்ன மூன்று வேளை சமையலை ஒரே நேரத்தில் முடித்துவிடுபவர்கள் அதிகரித்துவிட்டார்கள். காலையில் சமைத்துவிட்டால் பிறகு சூடுபடுத்தி சாப்பிட்டுகொள்ளவேண்டியதுதான் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இதையும் தெரிந்துகொள்ள வேண்டும். சத்து தரும் பொருள்களாக இருந்தாலும் அதை மீண்டும் சூடுபடுத்தும் போது அவை சத்தை இழந்து நஞ்சாகவே மாறுகிறது. அப்படி சூடுபடுத்த கூடாத உணவு பொருள்கள் என்னென்ன? தெரிந்துகொள்வோம்.


எல்லா சமையலிலும் கடுகை பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம்!..
[Monday 2020-04-27 18:00]

கடுகு இந்திய பாரம்பரிய சமையலில், குறிப்பாக தென்னிந்திய சமையலில் மிக முக்கியத்தை இடத்தைப் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அது ஏன் மற்ற மசாலாப் பொருள்களுக்கு இல்லாத முக்கியத்துவம் ஏன் கடுகுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. அப்படி என்னென்ன பண்புகள், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இல்லையா?. தென்னிந்திய சமையலில் கடுகை அப்படியே முழுதாகப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.


உடல்நலத்தை பாதுகாக்கும் உணவு பழக்கம்!
[Sunday 2020-04-26 18:00]

மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவு பழக்க வழக்கமே அவர்களது உடல்நலத்தை தீர்மானிக்கின்றன. இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பவர்கள் மூலம் உடல்நலத்தை பாதுகாக்க முடியும். உணவு உடலுக்கு வலிமையைத் தருவது, வளர்ச்சியளிப்பது. உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுதமாகும். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது உலகறிந்த உண்மை. எனவே தான் பசியின் கொடுமையைப் பசிப்பிணி என்னும் பாவி என்றது மணிமேகலைக் காப்பியம். இப்பிணிக்கு மருந்து உணவே. ஆதலால் தான் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனப் புறநானூறும் மணிமேகலையும் கூறுகின்றன.


விபரீதமாக உருவெடுத்து நிற்கும் ‘டிக்-டாக்’ செயலி!
[Saturday 2020-04-25 17:00]

இளம் தலைமுறையை முழுமையாக வளைத்துப் போட்டிருக்கிறது ‘டிக்-டாக்’ செயலி. சமூக ஊடகங்களை திறந்தாலே, வரிசை கட்டி நிற்கின்றன, வீடியோக்கள். ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் விதவிதமாக வீடியோக்களை பதிவு செய்கிறார்கள். தொடக்கத்தில் கொண்டாட்டமாகவும், பொழுதுபோக்காகவும் இருந்த ‘டிக்-டாக்’, இப்போது விபரீதமாக உருவெடுத்து நிற்பதுதான் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. பயனுள்ள தகவல்களையும், மற்றவர்களுடன் சொல்லி சிரித்து, மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயங்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால், பலர் பொது வெளியில் பகிரக்கூடாத பல விஷயங்களை வெளியிடுகிறார்கள். காரணம், மற்றவர்களின் பார்வை தன் மீது இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான்.


உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்?.. இதை படியுங்கள்!..
[Friday 2020-04-24 17:00]

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தான் மருத்துவர்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் மட்டும் போதுமா. கண்டிப்பாக கிடையாது நாம் உண்ணும் உணவை சரியாக சாப்பிடுவதும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இன்றைய அவசர உலகத்தில் யாருக்கும் அமைதியாக நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரம் இல்லை. கைக்கு கிடைத்ததை வாய்க்கு போட்டு விட்டு ஓடிக் கொண்டு இருக்கிறோம்.


உடல்நிலை சரியில்லாத போது காபி அருந்துவது நல்லதா?..
[Thursday 2020-04-23 18:00]

பொதுவாகவே பலருக்கு காலையில் எழுந்ததும் ஒரு கப் காஃபி குடித்தால்தான் அன்றையே வேலையே ஓடும்.இன்னும் சிலர் பல் கூட விளக்காமல் பெட் காஃபி குடித்த பின்பு எழுபவர்களும் உண்டு. அலுவலகத்தில் வெளியில் அல்லது ஏதாவது நண்பர்கள் உறவினர்கள் சந்திப்பு, விருந்தோம்பல் இப்படி எதுவென்றாலும் என்றாலும் காஃபியே பிரதான இடம் பெறுகிறது. அதில் உடல்நிலை சரியில்லாத சமயங்களில் காபி குடிப்பது நல்லதா என்பது பற்றி தான் இதில் பார்க்கப் போகிறோம்.


கண் சுருக்கத்தை போக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்!
[Wednesday 2020-04-22 17:00]

கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நாமோ இந்த பகுதிக்கு அதிகமான கவனத்தை செலுத்துவது இல்லை. இதனால் கருவளையங்கள், வீங்கிய கண்கள், கண் சுருக்கம்மற்றும் சோர்வான கண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கண் சுருக்கங்கள் நீங்க ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது.


தினமும் ஊறுகாய் சாப்பிடுவது ஆரோக்கியமானதா..?
[Tuesday 2020-04-21 17:00]

ஊறுகாய் என்பது இந்திய உணவு வகைகளின் அழியாத பகுதியாகும். இந்திய ரொட்டிகள் மற்றும் அரிசி உணவுகளுக்கான இந்த காரமான துணையை ஒரு பார்வை பார்த்தால் போதும், நாவில் எச்சில் ஊறும். அதை தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரி என எந்த உணவுடனும் சாப்பிடலாம். சிலருக்கு துணையே தேவையில்லை, காரமான சுவைக்காக வெறுமென ஊறுகாயை மட்டுமே சாப்பிடுவார்கள். மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி வரை, இந்தியர்களான நாம் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்கிறோம். ஒவ்வொரு உணவிற்கும் மசாலா மற்றும் கிக்கான சுவை தேவைப்படுவதால், பலரும் ஊறுகாயை காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு சாப்பிடும் பழக்கத்தில் உள்ளனர். ஆனால், தினமும் ஊறுகாய் சாப்பிடுவது ஆரோக்கியமானதா..?


தண்ணீரை எப்போது குடித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்!..
[Monday 2020-04-20 17:00]

மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமானது தண்ணீர். ஆனால் அது இப்போதெல்லாம் போதுமான அளவுக்கு மக்களுக்கு கிடைப்பதில்லை. போதிய மழையின்மை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது. தண்ணீரின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தி சொல்லக்கூடிய அளவுக்கு காலம் மாறிவிட்டது. தண்ணீர் அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பல உண்டு. தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.


முகக்கவசத்தை அணியும்போது செய்யக்கூடாத தவறுகள்!..
[Sunday 2020-04-19 17:00]

கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு இந்த வைரஸ் பரவ கூடும்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது.இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது. இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பும் ஏற்படுகிறது.


கோவிட்-19: முகக்கவசத்தை பயன்படுத்துவது எப்படி?..
[Saturday 2020-04-18 18:00]

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை முடக்கி போட்டு உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடந்து வருகிறது. இந்த போரில் வைரசிடம் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் கேடயமாக சமூக இடைவெளி, தனித்து இருத்தல், முககவசம் அணிதல் உள்ளிட்டவற்றை அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முககவசம் அணியாமல் வெளியில் சென்றால் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


சரும பிரச்சினைகளை அடியோடு அழிக்கும் தேங்காய் எண்ணெய்!
[Friday 2020-04-17 17:00]

தேங்காய் எண்ணெய்யை, கூந்தலுக்கும், சருமத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். சிலர் அதை சமையலுக்கும் உபயோகிக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்யில் இன்னும் என்ன சிறப்புகள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.. சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகரிக்கும்போது, சரும புற்றுநோய், தோல் சுருக்கங்கள், கருமை புள்ளிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களை 20 சத வீதம் வரை தடுக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு இருக்கிறது.


அழகை மேம்படுத்த உதவும் கற்றாழை!
[Thursday 2020-04-16 17:00]

கற்றாழை ஒரு குளிர்ச்சி தன்மையுடைய பொருள் என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த கற்றாழை ஜெல், பல மருத்துவ பயன்களை கொண்டது. பல ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமைகின்றது. சரி இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலை அழகாக்க, சில அழகு குறிப்புகள் இந்த பகுதியில் நாம் படித்து கொள்வோம் வாங்க. வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.


​சத்துக்கள் நிறைந்த சணல் விதைகள்!
[Wednesday 2020-04-15 17:00]

சணல் விதைகள் சாடிவா என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இது மரிஜீவானா என்ற இனத்தைச் சேர்ந்தது. ஆனால் இதன் வகை மட்டும் வேறுபட்டு காணப்படுகிறது. இந்த சணல் விதைகளிலும் மரிஜீவானாலில் உள்ளது போன்று டெட்ராஹைட்ரோகன்னாபினோல் என்ற மருந்து பொருள் காணப்படுகிறது. மற்றபடி இதில் காணப்படும் மருந்து தன்மைகள் முற்றிலும் வேறுட்டு காணப்படுகிறது. சணல் விதைகளில் கிட்டத்தட்ட 8 அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் என்று மனித உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. மேலும் இதில் கொழுப்புகள், புரோட்டீன்கள் மற்றும் வேறுபட்ட தாதுக்கள் உள்ளன.


உடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி!
[Tuesday 2020-04-14 18:00]

தேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - அரை கப், தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


முகப்பருவை நிரந்தரமாக அழிக்கும் வாழைப்பழம்!
[Monday 2020-04-13 17:00]

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் சரும பிரச்சனைகளை சந்திக்கின்றன. குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் அனைத்தும் சரும அழகையே பாதிக்கின்றன. இவை அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வாழைப்பழம் ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. ஒரு பவுலில் பாதியளவு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு 1/4 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இவற்றை பயன்படுத்துவதற்கு முன். முகத்தை 5 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும்.


உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள்! Top News
[Monday 2020-04-13 08:00]

இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். 1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி? இரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் "மதுரை". மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்? அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.


வீட்டில் தயாரிக்கும் முக கவசங்களை அணியும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
[Sunday 2020-04-12 17:00]

கோவிட்-19 மனிதத் தொடர்புகளின் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு மிக எளிதாகவும் வேகமாகவும் பரவுகிறது. இந்த கோவிட்-19 நோய்க்குக் காரணமாக இருப்பது சார்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த SARS-COV2 என்னும் வைரஸ் தான். இது காற்றில் மூன்று மணி நேரம் வரையிலும் பிளாஸ்டிக், எவர் சில்வர் மற்றும் மற்ற இடங்களில் மூன்று நாட்கள் வரையிலும் உயிர் வாழக் கூடும். இதில் நாம் முகத்துக்கு மாஸ்க் அணிவது என்பது நம்முடைய மூச்சுக் குழாயின் வழியே வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்பே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.


உடல் நல பிரச்சினைகளுக்கு சமையல் அறை கூட மருத்துவமனைதான்!..
[Saturday 2020-04-11 17:00]

வீட்டிற்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா பீதியால் பலரும் பயத்துடன் காணப்படுகிறார்கள். சாதாரண வாந்தியும், வயிற்று வலியும் கூட அவர்களை கவலைகொள்ள வைத்துவிடுகிறது. அப்படிப்பட்ட கவலை எதுவும் தேவையில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவமனை செல்லவும் அவசியமில்லை. உங்களுக்கு ஏற்படும் பெரும்பாலான சாதாரண உடல் நல பிரச்சினைகளுக்கு, உங்கள் சமையல் அறையிலேயே மருந்து இருக்கிறது. உங்கள் சமையல் அறை கூட மருத்துவமனைதான் என்பதை நினைவில் வையுங்கள். பல்வலி பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் வரும். வலி வந்ததும் சிறிதளவு கடுகை மெல்லுங்கள். வலி கட்டுப்படும். கடுக்காய் தோட்டை சுட்டு கரியாக்கி அதில் சிறிதளவு படிகாரம், மிளகுதூள் கலந்து பல் தேய்த்து வந்தால், அது பல்வலிக்கு நிரந்தர தீர்வாக அமையும். கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து, வலியிருக்கும் பல் மீது வைத்தாலும் வலி விலகும்.


சுவாச மண்டலத்தில் ஏற்படும் கிருமித்தொற்றுகளை அழிக்கும் கபசுர குடிநீர்!
[Friday 2020-04-10 17:00]

கபசுரக் குடிநீர் மூலப்பொருளாக சித்த வைத்திய நூல்களிலும் இந்திய அரசு வெளியிட்டுள்ள சித்த மருந்துகளின் தொகுப்பு முதல் பாகத்திலும் கபசுர சூரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘‘கபம் என்ற சொல் சளியையும், சுரம் என்ற சொல் காய்ச்சலையும் குறிக்கும். சிறு குழந்தை தொடங்கி, வயதானவர் வரை என அனைவரையும் எதுவும் செய்யவிடாமல், முடக்கிவிடும் தன்மை கொண்ட கபசுரத்தைக் குணப்படுத்த உதவும் மருந்து என்பதன் பொருள்தான் இந்த கபசுரக் குடிநீர். இந்திய அரசு வெளியிட்டுள்ள சித்த மருந்துகள் முதல் தொகுப்பு முதல் பகுதியில் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றிருப்பது கபசுரக் குடிநீர் தான். முதலில் ஆடாதோடை குடிநீர் உள்ளது இரண்டாவது இடத்தில் கபசுரக் குடிநீர் இடம்பெற்றுள்ளது.


மனித உடலுக்கு தேவையான முழுமையான புரதம் பிஸ்தாவிலேயே கிடைத்துவிடுமாம்..!
[Thursday 2020-04-09 17:00]

புரதம் மிகு உணவு: அமெரிக்க பிஸ்தாக்கள் ஒரு 'முழுமையான புரதம்' என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறையாகும். அவை சைவ உணவு உண்பவர்களிடையே பிரபலமாகியுள்ள குயினோவா, சுண்டல் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற குறைந்த எண்ணிக்கையிலான தாவர புரதங்களின் வரிசையில் சேர்கின்றன. உயர் புரத உணவு: பருப்புகள் என்று பெயரிடும் போதெல்லாம், பிஸ்தா, பாதாம் மற்றும் முந்திரி ஆகியவை பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்த கொட்டைகள் பல சமையல் பயன்பாடுகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. மத்திய ஆசியப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட பிஸ்தாவைப் பற்றி நாம் குறிப்பாகப் பேசினால், பிஸ்டா குல்பி, பிஸ்தா பாதம் பால், பிஸ்தா இனிப்புகள் மற்றும் பலவகை உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நட் மிகவும் சத்தானது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம், நல்ல ஆற்றல், குறைந்த கலோரி மற்றும் பல நன்மைகள் உள்ளது.


கொரோனா வைரஸ் யாரை அதிகம் பாதிக்கும்!
[Wednesday 2020-04-08 18:00]

கொரோனாவின் தாக்கத்தால் மக்கள் அச்சத்தைக் கொண்டிருக்கிறார்கள். தற்போது உலகமெங்கும் மக்கள் உச்சரிக்கும் ஒரே சொல் கொரோனா என்பது தான். கொரோனா தொற்றின் பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்றின் தாக்குதலிருந்து தப்பிக்கவே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு இடங்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த கொரோனாவைக் கண்டு மக்கள் பயப்படுகின்றனர். எய்ட்ஸ், புற்றுநோயைக் கண்டு அஞ்சாத உலக சுகாதார நிறுவனம் ஏன் இதற்கு இவ்வளவு பெரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழக் கூடியது. காரணம் இது ஒரு தொற்று நோய் என்பதே. அதுவும் இது தொற்றக் கூடிய காலக் கட்டமும் சீக்கிரம் என்பதால் தான் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்.


நலமாக வாழ நாம் சாப்பிட வேண்டிய கனிகள்!
[Tuesday 2020-04-07 17:00]

இயற்கையால் மனிதருக்கு வழங்கப்பட்ட வரமே கனிகள். தாவரங்கள் மூலிகையாய் செயல்பட்டு வந்த பிணியை விரட்டும். ஆனால் தாவரங்கள் வழங்கும் கனியோ, பிணிகள் வராமலேயே விரட்டும் தன்மை உடையன. நலமாக வாழ நாம் சாப்பிட வேண்டிய சில கனிகளைப் பார்ப்போமா...


பொடுகு தொல்லையிலிருந்து விடுதலை தரும் எலுமிச்சை!
[Monday 2020-04-06 17:00]

தலைமுடி அழகை குறைப்பதில் பெரும் பங்கு பொடுகுக்கு உண்டு. அழகாக அலங்கரித்த தலையில் அங்கங்கே காணப்படும் வெள்ளை திட்டுகளாக பொடுகு தோன்றும்போது பார்க்க நன்றாக இருக்காது. கூடவே அரிப்பும் சேர்த்து தலை முடி அழகை கெடுத்து விடும். எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலதன்மை தலைமுடியின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. 1-2 ஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்து தலையில் தடவி ஊற விடவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும். தினமும் இதை செய்து வருவதால் பொடுகு மறைந்து தலை முடியும் பளபளப்பாக இருக்கும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு அல்லது சந்தன எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, அந்த கலவையை தலைக்கு தடவலாம். பூண்டு மற்றும் சந்தன எண்ணெய்யில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை அதிகமாக உள்ளதால் பொடுகு உடனே மறைகிறது. ஒரு பங்கு எலுமிச்சை சாறுடன் 2 பங்கு பூண்டு அல்லது சந்தனஎண்ணெய்யை சேர்த்து சிறிதளவு தேன் சேர்த்து பயன்படுத்தலாம்.


கொரோனா நம்மை நெருங்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!
[Sunday 2020-04-05 20:00]

தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் உணவு பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் நாம் அன்றாடம் எடுத்துகொள்ள வேண்டிய உணவு பொருள்களையும் சத்தானதாகத்தான் எடுத்துகொள்கிறோம். ஆனால் உரிய முறையில் திட்டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் ஆயுள் முழுமைக்கும் நோய் நொடியின்றி நலமாக வாழலாம். ஆம், ஆரோக்கியமான உணவுகள் என்று பல உணவுகள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கீரைகள், புரதம் நிறைந்த இறைச்சிகள். உலர் பருப்புகள், பால் பொருள்கள், கொட்டைகள் என சத்திலும் சத்து மிக்க உணவுகள் பலவும் உண்டு. அப்படி தினமும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப்பொருள்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.


கொரோனா வைரஸ் உணவுகள் மூலம் பரவுமா?..
[Saturday 2020-04-04 18:00]

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த கொரோனா வைரஸ் தான். சீனாவில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளுக்குப் பரவி மக்களை வாட்டி வருகிறது. இதனால் அதைப் பற்றிய பொய் வதந்திகளும் வலைதளங்களில் பரவி வருகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கே விளக்கமாகக் காண்போம். நாம் உண்ணும் உணவிலும் கூட இந்த தொற்று பரவுமா ஏனெனில் கொரோனா வைரஸ் கோர தாண்டவத்தால் இந்திய மக்களிடையே பல வதந்திகள் உலாவருகிறது.


உடலை பாதிக்கும் உணவுப்பழக்கம்!
[Friday 2020-04-03 17:00]

உங்கள் பிள்ளைகளின் உணவுப் பழக்கத்தை வைத்தே அவர்களது மனம் தெளிவாக இருக்கிறதா? என்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். உங்கள் வீட்டின் சமையல் அறை அருகில், ‘டைனிங் ஹால்’ வைத்திருப்பீர்கள். அதுதான் உங்கள் பிள்ளைகளின் மனநிலையை அறியும் ‘மனோதத்துவ அறை’ என்பதை புரிந்துகொள்ளுங்கள். தாய்மார்களாகிய நீங்கள் சமைத்துக்கொடுக்கும் உணவை உங்கள் பிள்ளைகள் டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடும் அளவை வைத்து அவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது? குழம்பிய நிலையில் இருக்கிறார்களா? தெளிவான நிலையில் இருக்கிறார்களா? என்பதை உங்களால் கண்டறிந்துவிட முடியும். குழம்பிய நிலையில் இருந்தால் அதற்கான காரணத்தையும் கண்டுபிடித்துவிட முடியும். வீட்டில் இருக்கும் டைனிங் ஹால் மட்டும் அல்ல, அவர்கள் மாணவிகள் என்றால் கல்வி நிலையத்தில் உள்ள கேன்டீன்களில், வேலைபார்ப்பவர்கள் என்றால் அங்குள்ள உணவகங்களில் அவர்கள் சாப்பிடும் முறையை வைத்தும், அவர்களது மனநிலையை தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.


மருத்துவர்கள் நம்மிடம் மறைக்கும் முக்கிய தகவல்கள்!..
[Thursday 2020-04-02 18:00]

மருத்துவர்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று நினைக்கின்ற மருத்துவ விதிமுறைகள்ஆலிவர் டெய்லர் 72 கருத்துகள்மருத்துவர்கள் எதை எழுதுகிறார்களோ அதைத் தெரிந்துகொள்வதைத் தடுக்க மோசமான கையெழுத்தை மட்டும் பயன்படுத்துவதில்லை. அவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்வதைத் தடுப்பதற்கும் அவர்கள் வித்தியாசமான ஸ்லாங்கையும் (வார்த்தைகளையும்) பயன்படுத்துகிறார்கள். டாப் 10 குறியீடுகள் நீங்கள் அறிந்திராத மருத்துவ சொற்கள் சில நேரங்களில் நகைச்சுவையானவை மற்றும் சில பெருங்களிப்புடைய மருத்துவ சூழ்நிலைகளை விளக்கப் பயன்படுகின்றன. நோயாளிகளின் மிகவும் ஆபத்தான அல்லது மோசமான அறிக்கைகளை மறைக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். இறக்கும் நோயாளிகளின் நிலையை விவரிக்க, சர்ச்சைக்குரிய மருத்துவ நடைமுறைகளை அவர்களது உறவினர்களிடமிருந்து மறைமுகமாக சொல்வதற்கு அல்லது அன்புக்குரியவர்களின் பயத்தைப் போக்க தனித்துவமான ஸ்லாங் (வார்த்தை) வகை உள்ளது.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா