Untitled Document
November 23, 2024 [GMT]
 
மாணிக்க கங்கையில் நீராடியவரின் வலது காலை துண்டாடிய முதலை..!
[Wednesday 2016-07-06 18:00]

நீராடிக்கொண்டிருந்த 47 வயதுடைய நபரின் காலை, முதலையொன்று கடித்து துண்டாடிய சம்பவமொன்று கடந்த திங்கட்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது. ஹங்குரங்கெத்த பகுதியைச் சேர்ந்த மேற்படி நபர், திங்கட்கிழமை இரவு 07 மணியளவில் மாணிக்க கங்கையில் நீராடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போதே முதலையொன்று, அவரது வலது காலை கவ்வி இழுத்துச்சென்றுள்ளது. அருகிலிருந்த ஏனையோர், முதலையின் பிடியிலிருந்து அவரை காப்பாற்றியுள்ளனர். எனினும், வலது காலில் முழங்காலுக்கு கீழான பகுதியை, முதலை கவ்விச்சென்றுவிட்டது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக திஸ்ஸமஹாரம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


அண்ணனின் சிதையில் குதித்து தங்கை மரணம்!
[Saturday 2016-07-02 19:00]

ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்தில் இறந்துபோன தமையனின் சிதையில் குதித்து தங்கை ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மாவட்டம் சதிராம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராம் மனத் (வயது 35). இவரது சகோதரி துர்க்கா (வயது 28). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.துர்க்கா கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அண்ணன் வேல்ராம் வீட்டில் வசித்து வந்துள்ளார்.அண்ணன் மீது துர்க்கா அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் வேல்ராம் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த துர்க்கா கதறித் துடித்தார்.


செல்பியால் வந்த வினை: - பதவியை இழந்த பெண் அதிகாரி!
[Friday 2016-07-01 18:00]

பாலியல் வல்லுறவுக்கும், குடும்ப வன்கொடுமைக்கும் உள்ளாகி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுடன், சிரித்தபடி புகைப்படங்கள் எடுத்துகொண்டதாக விமர்சிக்கப்பட்ட இந்திய பெண் அதிகாரி ஒருவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.தான் தவறு ஏதும் செய்யவில்லை. அந்த பெண்ணிடம் கேட்டுகொண்ட பிறகே புகைப்படங்கள் எடுத்துகொண்டதாக, பதவியை துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ராஜஸ்தான் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரான சோம்யா குர்ஜார் தெரிவித்திருக்கிறார். சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டபோது, அந்த புகைப்படங்கள் பற்றி அனைவருக்கும் தெரியவந்துள்ளது.


உயிரிழந்த மகளின் கருமுட்டைகளை சட்ட ரீதியாக பெற்ற 60 வயது பிரிட்டன் பெண்!
[Thursday 2016-06-30 21:00]

பிரிட்டன்உ - யிரிழந்த தன் சொந்த மகளின் உறைந்த கருமுட்டைகளை பயன்படுத்தி குழந்தையை பெற்றெடுப்பது தொடர்பான சட்ட போராட்டத்தில் 60 வயதான பிரிட்டன் பெண் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய மகள் தன்னுடைய 23 வயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் தன் கருமுட்டைகளை உறைய வைத்திருந்தார். ஐந்தாண்டுகளுக்கு பின் அவர் மரணம் அடைந்தார். உறையவைக்கப்பட்ட தனது கருமுட்டைகள் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயாக தனது தாய் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், எழுத்துப் பூர்வமாக அவர் தனது விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை.


மின்விசிறியில் தூக்கு மாட்டி நாடகமாடிய பிரதி அமைச்சர்! Top News
[Thursday 2016-06-30 19:00]

உள்துறை மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும பாடசாலை ஒன்றில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை நாடகமாடினார். களுத்துறை மாவட்டத்தின் மதுகம பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலேயே இவர் இன்று காலை தற்கொலை நாடகத்தில் ஈடுபட்டார்.


ராஜஸ்தானில் பெண்ணொருவரை ஆடையின்றி 2 நாட்கள் கட்டி வைத்து அடித்த கிராமத்தார்!
[Saturday 2016-06-25 17:00]

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கள்ளகாதலில் ஈடுபட்டவருக்கு கிராமத்தார் கொடூரமான முறையில் தண்டனை அளித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கசோதியா கிராமத்தில் லாலு ராம் என்பவர் திருமணமான பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து இருவரும் பாடேவர் கிராமத்திற்கு ஓடி வந்துள்ளனர். இதை அறிந்த கிராம மக்கள் அந்த பெண்ணையும், அவரது காதலரையும் ஊருக்கு நடுவே ஆடைகளை களைந்து பொது இடத்தில் இரண்டு நாட்களாக கட்டி வைத்து அடித்துள்ளனர். ரூ.80 ஆயிரம் கட்டிய பின்பே அவர்களை விடுவித்துள்ளனர்.


பாலைவனத்தில் தந்தையால் காரில் விடப்பட்ட 2 குழந்தைகள் பலி:
[Friday 2016-06-24 13:00]

இஸ்ரேல் பாலைவனத்தில் தந்தையால் காரில் விடப்பட்ட 2 குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து காரில் குழந்தைகளை அழைத்துச்செல்கிறவர்கள், அவர்களை மறவாமல் உடன் எடுத்துச்செல்லுமாறு அங்கு விழிப்புணர்வு பிரசார இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நெகேவ் பாலைவன பகுதியில் அல்காசோம் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்க்கிற ஒருவர், நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்றார். காரில் சென்ற அவர், தனது 18 மாத குழந்தையையும், 3 வயதான குழந்தையையும் உடன் அழைத்துச் சென்றார்.


தனது வயிற்றில் வளரும் பிள்ளைக்கு தந்தை வவுனியாவிலேயே உள்ளார்: - மலேசியப்பெண் பர பரப்பு பேட்டி
[Thursday 2016-06-23 21:00]

மலேசியாவைச்சேர்ந்த பெண்ணொருவர் தன்னை வவுனியாவை சேர்ந்த இளைஞரொருவர் மலேசியாவில் வைத்து ஏமாற்றியதாக தெரிவித்து ஊடகசந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.வவுனியா ஊர்மிளாக் கோட்டத்தில் அவர் தங்கியுள்ள வீடொன்றில் ஏற்பாடு செய்திருந்த இவ் ஊடக சந்திப்பில் வவுனியா பொலிஸார் அவ் இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.மேலும் அவர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,


6 அங்குல கத்தியை முழுங்கிய பெண்: -அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
[Thursday 2016-06-23 13:00]

ஹைதராபாத்தைச் சேர்ந்த 32 வயது பெண், கைப்பிடி இல்லாத 6 அங்குல கத்தியை முழுங்கிய நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.ஹைதராபாத் அருகே மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வப்னா என்ற பெண்மணி ஜூன் 11ம் தேதி கைப்பிடி இல்லாத கத்தி ஒன்றை முழுங்கிவிட்டார். இது குறித்து அறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், அந்த கத்தி வயிற்றுப் பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதனை வெளியேற்ற மருத்துவர்கள் செய்த சிகிச்சை எதுவும் பலனளிக்காததால், 6 நாட்களுக்குப் பிறகு ஜூன் 17ம் தேதி காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.


பேஸ்புக் காதலால் வந்த வினை! - ஆந்திர மாநில இளைஞனின் விபரீத முடிவு!
[Thursday 2016-06-23 07:00]

இந்தியா ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காதிப்பேட்டை பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருபவர் ரமேஷ் (33). இவர் பேஸ் புக்கில் செட்டிங் செய்வது வழக்கம். கடந்த சில மாதத்துக்கு முன்பு விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ் புக்கில் ரமேசுக்கு அறிமுகம் ஆனார். பின்னர் இருவரும் செல்போனில் பேச தொடங்கினார்கள். அந்த பெண்ணின் பேச்சில் ரமேஷ் மயங்கினார். இந்த நிலையில் ரமேசிடம் அந்த பெண் தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் பணம் கடனாக தருமாறு கூறினாள். உடனே ரமேஷ் முகத்தை கூட பார்க்காத அந்த பெண்ணின் வங்கி கணக்கில் கடந்த 6ஆம் திகதி முதல் பணம் போட்டு வந்தார். சுமார் ரூ.10 லட்சம் வரை கொடுத்தார்.


உலகின் முதல்
[Wednesday 2016-06-22 07:00]

தென்கிழக்கு ஆசியக் கண்டத்தில் இருக்கும் வியட்நாம் சோஷலிச ஆட்சி நடக்கும் நாடுகளுள் ஒன்று. அந்த நாட்டின் க்யோன் தி ப்யோங் தாவ் என்ற பெண்மணிதான் இப்போது உலகின் கவனத்தை வேறு மாதிரி ஈர்த்துள்ளார். அந்நாட்டின் முதல் கோடீஸ்வரி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் இவர். ஆம்,


பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில்மி ன்னல் தாக்கி 24 மணி நேரத்தில் 70 பேர் பலி:
[Wednesday 2016-06-22 07:00]

இந்தியா - பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் இடி மின்னலுக்கு ஒரே நாளில் 70 பேர் பலியாகியுள்ளனர். பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் இடி மின்னல் தாக்கியதில் 50 பேருக்கு மேற்பட்டவர்கள் பீகாரில் இறந்து போயுள்ளனர். இதில் 47 இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், அம்மாநில பேரிடர் மீட்புக்குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


நிலத்துக்கு அடியில் ஆடம்பர மாளிகை! - நாமல் ராஜபக்சவின் கூத்து அம்பலம்!
[Sunday 2016-06-19 07:00]

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிலத்துக்கு அடியில் ஆடம்பர மாளிகை ஒன்றை நிர்மாணித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலின் போது தகவல் வெளியிட்டிருந்தார். முற்றாக ராஜபக்ச குடும்பத்தினரின் தனிப்பட்ட தேவைக்காக கனமாக கொங்கிரீட்டினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலத்தடி மாளிகையை நிர்மாணிக்க செலவான தொகை இன்னும் மதிப்பிடப்படவில்லை.


செவ்வாய் கிரகத்தில் வேலைவாய்ப்பு..! - ஆட்கள் தேவை என்று நாசா விளம்பரம்
[Friday 2016-06-17 19:00]

செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை செய்ய ஆட்கள் தேவை என்று நாசா விளம்பரம் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை பார்ப்பதற்கு ஆட்களை தேடும் பணியின் தீவிரமாக களமிறங்கியுள்ளது நாசா. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பயணம் செய்ய, விவசாயம் செய்ய, சர்வேயர்கள், ஆசிரியர்கள் என பல வேலைகளுக்கு ஆட்கள் தேவை என நாசா வேலை வாய்ப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் செவ்வாய் கிரகத்தில்உ ள்ள பள்ளதாக்குகளை ஆய்வு செய்ய ஆட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


பேயை விரட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த குடும்பம்!
[Friday 2016-06-17 19:00]

ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் Hesse என்ற நகரில் அவர்கள் வசித்து வந்தபோது, அவர்களில் 41 வயதான பெண் ஒருவரின் நடவடிக்கை திடீரென வினோதமாக மாறியுள்ளது. தனியாக பேசுவது, சாலையில் செல்பவர்கள் மீது திடீரென பாய்ந்து தாக்குவது, காற்றில் கைகளை அசைத்தவாறு சிரிப்பது போன்ற நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணின் உடலுக்குள் பேய் நுழைந்துள்ளதாக பாதிரியார் ஒருவர் தெரிவித்ததால், அதனை உண்மை என எண்ணி பேயை முயற்சியில் குடும்பத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.


இரண்டு ஆண்டுகளாக கடலில் உலகைச் சுற்றும் மோனிக் என்ற கோழி!
[Tuesday 2016-06-14 06:00]

மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வருகிறது. பிரான்ஸைச் சேர்ந்த 24 வயது சாகச விரும்பி இளைஞரான கியூரக் சவுடீ என்பவர், தனது சிறிய படகில் உலகைச் சுற்றத் திட்டமிட்டார். இதற்காக அவர் துணையாகத் தேர்ந்தெடுத்தது மோனிக் என்ற கோழியை. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அந்த கோழியுடன் உலகை அவர் சுற்றி வருகிறார். உலகின் மிகவும் வெப்பமான கடல்பகுதிகள் முதல், சூரியனே பல மாதங்கள் உதிக்காத கடல் பகுதி வரை பல பகுதிகளைச் சுற்றி வந்துவிட்டனர்.


காதுக்குள் வலைபிண்ணி வாழ்ந்த சிலந்தி!
[Friday 2016-06-10 19:00]

பெண்ணின் காதுக்குள் வலைபிண்ணி வாழ்ந்த சிலந்தி - பெண்ணின் காதுக்குள் வலைபிண்ணி வாழ்ந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றினர். பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டோரியா பிரைஸ். அந்நாட்டு காவல்துறையில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த ஒரு வாரமாகக் காதில் பயங்கர வலி ஏற்பட்டது. இதயடுத்து மருத்துவமனைக்குச் சென்ற பிரைஸின் காதுகளைப் பரிசோதித்தபோது, அவரது காதில் சிலந்தி ஒன்று வலைபிண்ணி வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதயடுத்து, அந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றினர்.


குழந்தைகள் பாலியல் பலாத்காரம்: - குற்றவாளிக்கு 22 ஆயுள் தண்டனை
[Tuesday 2016-06-07 18:00]

மலேசிய குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியருக்கு 22 ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர் ஹக்லே ( வயது 30) என்பவர், மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள கான்வெண்ட் பள்ளியில் படிக்கும் ஏழை கிறிஸ்துவ குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். குழந்தைகள் மீதான பாலியல் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்து, அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.


ஜீன்ஸ் தடைக்கு எதிராக லுங்கி அணிந்து போராட்டம்!
[Tuesday 2016-06-07 18:00]

கேரள கல்லூரிகளில் ஜீன்ஸ் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக மாணவிகள் லுங்கியுடன் கல்லூரிக்கு வருவதுபோலவும் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற வலைதளங்களின் சமீபத்திய சென்சேஷன் குறித்து விசாரித்ததில், அந்த புகைப்படம் உண்மை இல்லை என்ற தகவல் நமக்குக் கிடைத்தது. இதற்கு ஆதாரமாக கடந்த 2015-ல் வெளிவந்த மகேஷ் பாபு படம் ஒன்றில் லுங்கி அணிந்து அவர் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும், இதைக்கொண்டாடும் வகையில் மகேஷ் பாபுவின் அமெரிக்க ரசிகைகள் லுங்கி அணிந்து கொண்டாடியதாக அப்போது வெளிவந்த புகைப்படம் காட்டப்படுகிறது.


பேஸ்புக் நிறுவனரது சமூக வலைதள கணக்குகள் முடக்கம்: ஹேக்கர் குழு கைவரிசை
[Sunday 2016-06-05 19:00]

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் Instagram, Twitter, LinkedIn and Pinterest போன்ற சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது. டுவிட்டரில் 40,000 பேர் பின்தொடர்ந்து வரும் Ourmine என்னும் ஹேக்கர் குழுவே இச்செயலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பெருமைப்படும் வகையில் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர், அதில் அவர்களை தொடர்பு கொள்ள ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே ஒரு எண்ணுக்காக 50 லட்சம் செலவு செய்த தொழிலதிபர்!
[Sunday 2016-06-05 17:00]

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவர் சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்பு கார் பதிவு பலகையை வாங்கியுள்ளார்.அது ஒரே ஒரு எண்ணை கொண்ட பதிவு பலகை. ஆம் வெறும் "1" என்ற எண். ஏலம் விட்டவர்கள் எதிர்ப்பார்த்ததை விட கிட்டத்தட்ட இருபது மடங்கு உயர்வான விலையாக அந்த விற்பனை விலை அமைந்ததுள்ளது.


மருங்காபுரி - தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து சாதித்த ஏழை மாணவர்:
[Friday 2016-06-03 16:00]

தமிழ் நாடு - மருங்காபுரி அருகே தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த அரசாங்க பாடசாலை மாணவர் பாண்டிச்செல்வம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். திருச்சி மாவட்ட அரசாங்க பாடசாலைகள் அளவில், மருங்காபுரி ஒன்றியம் கல்லக்கம்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப் பாடசாலை மாணவர் பாண்டிச்செல்வம் தமிழில் 97, ஆங்கிலத்தில் 92, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 என மொத்தம் 489 மதிப்பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். அப்போது, வறுமையால் ஏற்பட்ட பாதிப்புகளும், ஆசிரியர்களின் ஊக்கமுமே தன்னை இந்தளவுக்கு மதிப்பெண் பெற வைத்ததாக பாண்டிச்செல்வம் தெரிவித்ததுள்ளார்.


91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த இங்கிலாந்து ஆசிரியர்!
[Friday 2016-06-03 07:00]

மலேசியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியர் மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரிச்சர் ஹக்லே (30), என்பவர் கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்து, அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.


ஆந்திராவில்பா ம்பு கடித்த தாயிடம் தாய்பால் அருந்திய குழந்தை பலி!
[Friday 2016-06-03 07:00]

அம்மாவை பாம்பு கடித்த நிலையில், அவரிடம் பால் குடித்த குழந்தை பரிதாபமாக பலியானது. ஆந்திராவில், அனந்தபூர் மாவட்டம், கொஜ்ஜபல்லி கிராமத்தை சேர்ந்த சந்திரகலா, தனது மூன்று வயது மகன் வம்சியுடன் தங்களது கிராமத்தில் விவசாய வேலைக்கு மற்ற பெண்களுடன் சென்றார். வேலை முடிந்து வழக்கம் போல் அனைவரும் வீடு திரும்பய நிலையில், அவரும் வீடு திரும்பினார். வழியில் அவரை பாம்பு கடிக்கவே அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதை அறியாத குழந்தை அந்த தாயிடம் தாய்பால் அருந்தியது. சிறிது நேரத்தில் அந்த குழந்தையும் மயக்கம் அடைந்தது.


பாகிஸ்தானில் திருமணம் செய்ய கட்டாயபடுத்தி இளம் பெண் உயிருடன் எரித்து கொலை:
[Thursday 2016-06-02 23:00]

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகே உள்ள அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த பெண் மரியா அப்பாசி (வயது 19). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனுக்கு மரியாவை திருமணம் செய்து கொள்ள ஆசை, எனவே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு மரியாவிடம் சம்மதம் கேட்டுள்ளார். ஏற்கனவே விவாகரத்தான அவருக்கு மரியாவை விட இருமடங்கு வயது அதிகம். எனவே அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளார். இந்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரியவரவே அவர் மரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்துள்ளார்.


செல்ஃபி எடுத்த மாணவிக்கு நடந்த சோகம்: - தொடரும் மரணங்கள்.
[Thursday 2016-06-02 21:00]

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற போது கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றதில் தவறி விழுந்து பலியாகி உள்ள சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பிரினிதா மேத்தா என்ற 21 வயது மாணவி தனது தோழிகளுடன் கர்நாடக மாநிலம் கோகர்ணா கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளார்.


பாலியல் பொம்மையில் ஹிட்லரின் முகம்! - கலை நிபுணருக்கு எதிர்ப்பு!
[Wednesday 2016-06-01 18:00]

ஹிட்லரின் முகம் செதுக்கப்பட்ட பாலியல் பொம்மையை வடிவமைத்துள்ள கலை நிபுணருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விதவைகள், விவாகாரத்தானவர்கள், திருமணம் செய்துகொள்ளாமலேயே இருப்பவர்கள் பயன்படுத்துவதற்காக சந்தைகளில் பாலியல் பொம்மை விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜேர்மனியை சேர்ந்த கலை நிபுணர் ஒருவர், பாலியல் பொம்மைகளில் ஹிட்லர், லெனின் மற்றும் MaoTse-tung ஆகியோரின் தலைகளை செதுக்கி விற்பனை செய்வதற்காக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.


இணையத்தைக் கலக்கும் 'மாயத் தோற்றம்' Top News
[Tuesday 2016-05-31 18:00]

மாயத்


பிரேசிலில் கொடூரம்.. 16 வயது சிறுமி 30 பேரால் பலாத்காரம்: - ட்விட்டரில் பரவிய வீடியோ!
[Monday 2016-05-30 19:00]

பிரேசிலில் 16 வயது சிறுமியை 30 பேர் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள சேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை தனது காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது காதலர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அவருக்கு அளித்துள்ளார். குளிர்பானத்தை குடித்து மயங்கிய சிறுமி கண் விழித்தபோது வேறு ஒரு வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்டார். அவரை சுற்றி 30 ஆண்கள் இருந்தனர். அவர்கள் சிறுமியை ஈவு இரக்கமின்றி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.


கொரில்லா சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பெற்றோர் மீது வழக்கு! Top News
[Monday 2016-05-30 19:00]

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டில் உள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான். அப்போது, அங்குள்ள ஹரம்பே எனப்பெயரிடப்பட்ட கொரில்லா ஒன்று சிறுவனை தூக்கிச் சென்று சுமார் 10 நிமிடங்கள் போக்கு காட்டியுள்ளது. இதனை கண்ட பாதுகாவலர்கள் குழந்தையை காப்பாற்றும் பொருட்டு கொரில்லாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். கொரில்லா இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் தான் அது தன்னுடைய 17வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது. கொரில்லாவை மயக்க ஊசி போட்டு குழந்தையை காப்பாற்றுவதற்கு பதிலாக சுட்டு கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா