Untitled Document
November 22, 2024 [GMT]
 
சாலை விபத்தில் உயிரிழந்த மாணவி 3 பேரின் உயிரை காப்பாற்றினார்!
[Sunday 2016-05-29 15:00]

மும்பையில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவி ஒருவர் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வில் கூட்டு சராசரி தர புள்ளி (சி.ஜி.பி.ஏ.) 8.6 பெற்று பெற்றோருக்கு ஆறுதல் அளித்துள்ளார். மும்பையில் கெஜல் பாண்டே (வயது 16) என்ற மாணவி கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அவர்களை முந்தி செல்ல முயன்ற கார் இடித்து விபத்து ஏற்படுத்தியதில் கெஜல் பாண்டே மூளை பாதிப்பு அடைந்துள்ளார். அதன்பின் அவர் மூளை சாவு அடைந்து விட்டார் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார்.


இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு !Top News
[Saturday 2016-05-28 20:00]

இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இஸ்ரேலின் நசரெத்(Nazareth) நகரில் பள்ளத்தாக்கு ஒன்றின் அருகே உள்ள மணலில் பாறைகள் சில இருந்துள்ளன.இங்கு ஆய்வு நடத்த வந்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அவ்விடத்தை தோண்டியுள்ளனர்.அப்போது அங்கு ஒரு தேவாலயம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


கடலுக்கடியில் 2,000 ஆழத்தில் பொதிந்து கிடக்கும் உப்பு சுரங்கம்!
[Friday 2016-05-27 20:00]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள கிளவலெண்ட் நகரில் இருந்து கிழக்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஃபைர்போர்ட்துறைமுகத்தில் கிட்டத்தட்ட 2,000 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது மோர்டன் உப்புச் சுரங்கம். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இந்தச்சுரங்கம் பாறை உப்புக்காக அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அகழ்ந்தெடுக்கப்படும் உப்புக்கள் பொதுவாக வீதிகளிலுள்ள பனி மற்றும் பனிக்கட்டிகளை உருக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தச்சுரங்கத்திற்கு வேலையாளார்கள் தவிர மற்றவர்கள் யாரும் அனும்திக்கப்படுவதில்லை.


இந்தோனேசியாவில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆண்மை துண்டித்து தண்டனை!
[Thursday 2016-05-26 19:00]

மேற்கு இந்தோனேசியாவில் கடந்த மாதம், சிறுமி ஒருவர் 14 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என இந்தோனேஷிய அதிபர் ஜோகோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம், குழந்தைகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


துபாய்க்கு வேலைக்கு செல்லும் இளம் பெண்கள் பெரும் பணக்காரர்களிடம் விற்பனை: - அதிர்ச்சி தகவல்
[Wednesday 2016-05-25 19:00]

ஆந்திராவில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளம்பெண்களை அங்குள்ள இடைத்தரகர்கள் நிரந்தரமாக அவர்களை பெரும்பணக்காரர்களிடம் விற்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு விற்கப்பட்ட பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர அரசு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.வீட்டு உதவியாளர் பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து துபாய் நாட்டிற்கு ஏஜென்ட்கள் மூலம் அனுப்பப்படுகின்றனர். இந்த பெண்களை இடைத்தரகர்கள், கடைப் பொருளைப் போல பெரும் பணக்காரர்களுக்கு பெரிய தொகைக்கு விற்று விடுகின்றனர். 


நிலவில் தெரியும் மர்ம கோபுரங்கள்! - வேற்று கிரவாசிகளின் ஆக்கிரமிப்பா? Top News
[Wednesday 2016-05-25 07:00]

நிலவின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மர்ம கோபுரங்கள் அமைந்துள்ளது போன்ற காட்சிகள் வெளியானதை அடுத்து வேற்று கிரவாசிகளின் ஆக்கிரமிப்பா என சர்ச்சை எழுந்துள்ளது. வேற்று கிரவாசிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் குழு ஒன்று நிலவின் விளிம்பு பகுதியை ஆராய்ந்து வந்துள்ளது. அப்போது அங்கு 200 அடி உயரம் கொண்ட 5 கோபுரங்கள் இருப்பதை கண்டறிந்து உள்ளனர். இதுகுறித்து பேசிய அந்த குழுவினர், இதுவரை எவரும் நிலவில் இதுபோன்ற கோபுரங்கள் அமைத்து பயன்படுத்தி வருவதை நீங்கள் நம்பவில்லை என்றால், உங்களுக்கு போதிய தகவல்களை எவரும் இதுவரை அளிக்கவில்லை என்றே கருதப்படும் என்றனர்.


ஜப்பானிய பாப் பாடகியை கத்தியால் குத்திய ரசிகர்: - பரிசை திருப்பியனுப்பியதால் வந்த வினை
[Sunday 2016-05-22 19:00]

ஜப்பானிய பாப் பாடகி ஒருவரை அவரது ரசிகரே பலமுறை கத்தியால் குத்திய நிலையில் படுகாயம் அடைந்துள்ளார். டோக்கியோ நகரில் நடைபெறவிருந்த சிறிய இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது, மாயு டோமிட்டா தனது ரசிகரால், கழுத்து மற்றும் மார்பு பகுதியில் சுமார் 24 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த நபரைக் கைது செய்தனர். மேலும், அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். அந்த நபரின் பெயர் டோமோஹீரா இவாசாக்கி என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தற்கொலை செய்வதற்காக சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்த நபர்: - சிலி நாட்டில் பரபரப்பு
[Sunday 2016-05-22 08:00]

தற்கொலை செய்வதற்காக சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்த நபர் சிலி நாட்டில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலியின் தலைநகரான Santiago -இல் அமைந்துள்ள Chilean National விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்களின் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்நிலையில், பூங்காவில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிங்கத்தினை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பார்க்கா வண்ணம், 20 வயதுடைய FrancoLuis Ferrada Roman என்ற நபர் தனது ஆடைகளை களைந்துவிட்டு, சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்துள்ளார்.


படித்தவர்கள் அதிக அளவில் விவாகரத்து: - உச்ச நீதிமன்றம் அறிக்கையில் தெரிவிப்பு!
[Saturday 2016-05-21 18:00]

உச்ச நீதிமன்றம் விடுமுறைக் கால அமர்வில் ஒரு விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சாப்ரி மற்றும் அசோக் பூஷண் விசாரணையில் கூறியதாவது - ஏன் இப்படி படித்தவர்கள், சிறிய காரணங்களுக்காக விவாகரத்து கோருகின்றனர். சண்டை போடாமல் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடாதா என்றனர். இதைத்தொடர்ந்து, இவர்களது இரு தரப்பினரும் ஒன்றாக பேசி சமரசம் செய்து வைக்க வேண்டும் என்றும், உங்களை தம்பதியினராகப் பார்ப்பதையே நீதிமன்றம் விரும்புகிறது என்றும் நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.


எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையரானார் ஜயந்தி!
[Saturday 2016-05-21 17:00]

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையை எனும் சாதனையை ஜயந்தி கரு உத்தும்பல நிகழ்த்தியுள்ளார். எவரெஸ்ட் சிகிரத்தை நோக்கிய பயணத்தில் ஜயந்தி, ஜொஹான் பீரஸ் 8848 மீற்றர் (29,029 அடி) உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஜயந்தி கரு உத்தும்பொல இன்று சனிக்கிழமை அடைந்துள்ளார்.


உலகில் மிக அதிக வாழ்நாள் கொண்டவர்கள் சுவிஸ் ஆண்கள்!!
[Saturday 2016-05-21 09:00]

உலகில் மிக அதிக வாழ்நாள் கொண்டவர்கள் சுவிஸ் ஆண்கள் என்று உலக பொது சுகாதார புள்ளியியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் சுவிஸ் பெண்களின் ஆயுட்காலம் உலகின் எஞ்சிய நாடுகளைவிட குறைந்துள்ளதாகவும், இது இரண்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஆயுட்காலம் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் முதலிடத்தில் இருந்த ஐஸ்லாந்து நாட்டவரை பின்னுக்கு தள்ளி சுவிஸ் முதலிடத்தில் வந்துள்ளது.


மெக்ஸிகோவில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடும் பெண்கள்!
[Friday 2016-05-20 19:00]

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும் மோசமான நாடுகளின் பட்டியலில் முதல் இருபது இடங்களுக்குள் மெக்ஸிகோவும் அடங்குகின்றது.அங்கு ஒவ்வொரு நாளிலும் சராசரியாக வன்முறையால் ஆறு பெண்கள் இறக்கிறார்கள். ஆனால், இந்த வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் தற்போது அதிகரித்துள்ளன.


வட அயர்லாந்தின் புதிய அழகு ராணி: - தற்கொலைகளை தடுப்பதற்காக பாடுபடுகிறாராம்!
[Thursday 2016-05-19 19:00]

வட அயர்லாந்தின் புதிய அழகு ராணியாகத் தெரிவு செய்யப் பட்டுள்ள எம்மா கார்ஸ்வெல், தற்கொலைகளை தடுப்பதற்காக பணியாற்றும் அமைப்பொன்றில் தொண்டராக பணியாற்றுகிறார். 21 வயதான எம்மா கார்ஸ்வெல், மிஸ் வட அயர்லாந்து 2016 அழகு ராணியாக அண்மையில் தெரிவு செய்யப்பட்டார். இவர் அல்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் உளவியல்துறையில் பட்டப்படிப்பை பயிலும் மாணவியாவார். அழகு ராணிப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் புதிய நண்பர்கள் கிடைப் பார்கள், புதிய அனுபவங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.


செல்போனை சோதனையிட்ட கணவனை கத்தியால் அறுத்த மனைவி!
[Tuesday 2016-05-17 21:00]

தனது செல்போனை சோதனை செய்ததற்காக கணவனின் விரல்களை மனைவி அறுத்த சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. பெங்களூருவில் வாழும் தம்பதி சந்திரபிராஷ் சிங், சுனிதா சிங். இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகுகிறது. கடந்த 3 வருடங்களாக பெங்களூருவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதி இருவரும் போலீஸ் ஒருவருக்கொருவர் மாறி புகார் அளித்துள்ளனர். அதில், சந்திரபிரகாஷ் அளித்துள்ள புகாரில் மனைவியிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியுள்ளார். மேலும் தனது மனைவி மிகக் பெரிய அளவில் செல்போனுக்கு அடிமை ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த போதும் உயிருடன் பிறந்தது குழந்தை!
[Tuesday 2016-05-17 21:00]

கார் விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த பிறகும் அவருக்கு பிரசவம் பார்த்து டாக்டர்கள் குழந்தையை உயிருடன் காப்பாற்றினர். கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிரசவம்: உயிருடன் பிறந்தது குழந்தை - அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப் கிரர்டேயு நகரில் சாரா இல்லர் மற்றும் அவரது கணவர் மேட் ரைடர் ஆகியோர் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியான சாராவை அழைத்துக் கொண்டு ரைடர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு செல்லும் வகையில் வீட்டில் இருந்து சுமார் 60 மைல் தூரத்தில் அவர்களது கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.


கனடாவில் பள்ளிக்கூட மாணவிகளிற்குத் தொல்லை! - புகைப்படக் கலைஞர் கைது!
[Tuesday 2016-05-17 08:00]

கனடாவில் தொழில்ரீதியாக புகைப்படமெடுக்குக்கும் புகைப்படக் கலைஞர்களில் சிலரின் செயலால் பலரும் பாதிக்கப்படும் நிகழ்வு இடம்பெற்றுவருகின்றது. அண்மையில் ரொறன்ரோவின் மிகப் பிரபல்யமான புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான 39 வயதுடைய மார்க் கொலண்ட் என்பவர் இவ்வாறானதொரு குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான விசாரணைகள் தொடர்கின்றன. புகைப்படமெடுக்கவென 18 வயதுடைய யுவதியின் வீட்டிற்கு சென்ற மேற்படி புகைப்படைக் கலைஞர் தனக்குத் பாலியல் தொல்லைக்கொடுத்ததாகச் செய்த புகாரையடுத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.


மின்சார வேலியை தொட்ட இரண்டு இளைஞர்கள் பலி!
[Monday 2016-05-16 22:00]

எம்பிலிப்பிட்டிய- காவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழைத் தோட்டத்தின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை தொட முனைந்த போதே மின்சார தாக்குதலுக்கு இலக்காகி இவர்கள் உயிரிழந்துள்ளதகா எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 மற்றும் 25 வயதான இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பேஸ்புக்கில் தரவேற்றம்
[Monday 2016-05-16 19:00]

சேருநுவர பிரதேசத்தில் நீண்டகாலமாக பெண்ணொருவரை காதலித்து பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அதன் ஒளி நாடாவை பேஸ்புக்கில் (சமூக வலைத்தளத்தில்) தரவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை நேற்று மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை இளைஞர் பாடசாலைக் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளார். குறித்த பெண்ணை பல தடவைகள் பல இடங்களுக்கும் சென்று பாலியல் உறவு கொண்டுள்ளதுடன் அதை இரகசியமாக கைத்தொலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பாகிஸ்தானில் காதல் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!
[Saturday 2016-05-14 19:00]

காதல் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்த பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் அஜ்மல் ஜோயியா. பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் ஜோயியா, லோத்ரான் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் அவருடன் பயணித்த அவரது நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.


மனைவிக்காக 40 நாளில் கிணறு தோண்டிய ‌கணவர்!
[Friday 2016-05-13 18:00]

மஹாராஷ்ட்ராவில் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படாத மனைவிக்காக, 40 நாளில் புதிய கிணற்றை அவரது கணவர் தோண்டி வெற்றி கண்டுள்ளார். வாசிம் பகுதியில் தலித் பெண் கிணற்றில் தண்ணீர் எடுக்க அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அனுமதி மறுத்ததாகவும், எனவே மனைவிக்காக கிணறு தோண்டப் போவதாக கூறியபோது பலரும் தன்னிடம் கேலியும் கிண்டலுமாகச் சிரித்ததாகவும் பாபுராவ் தஜ்னே என்ற அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். தன்னை பரிகாசம் செய்தவர்கள் இப்போது தனது கிணற்றில் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.


பிரான்ஸ் நாட்டில் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் நாக்கை இரண்டாக கடித்துத் துப்பிய இளம்பெண்!
[Friday 2016-05-13 08:00]

பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் நாக்கை இரண்டாக கடித்து துப்பிவிட்டு தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிரான்ஸில் உள்ள Toulouse நகருக்கு அருகில் Purpan என்ற பகுதியில் 19 வயதான இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

நேற்றைய தினம் வெளியே சென்றுருந்த அந்த இளம்பெண் மாலை நேரத்தில் தனது வீட்டிற்கு நடைப்பயணமாக சென்றுள்ளார். அப்போது, 24 வயதான இளைஞன் ஒருவர் அந்த இளம்பெண்ணிற்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.


அல்பட் என்ஸ்டைனின் சாதனையை முறியடித்த இலங்கை வம்சாவளி சிறுமி நிஷி உக்லேயால் !
[Thursday 2016-05-12 19:00]

நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட் என்ஸ்டைனின் சாதனை இலங்கை வம்சாவளி சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மென்சா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நுண்ணறிவுத் தேர்வில் 10 வயது சிறுமியான நிஷி உக்கலே கலந்துகொண்டு சாதனையை முறியடித்துள்ளார். குறித்த இச்சிறுமி தனது முதலாவது தேர்வில் 162 புள்ளிகளையும் இரண்டாவது தேர்வில் 142 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளார். இவரின் அறிவுத்திறமையைக்கண்டு வியந்த அவ் அமைப்பினர் இச்சிறுமியை அவர்களின் அமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளனர். இச்சிறுமி அல்பட் அய்ன்ஸ்டைனை விட 2 புள்ளிகள் அதிகமாக பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


79வயது மற்றும் 72 வயது தம்பதியினருக்கு ஆண் குழந்தை..!
[Thursday 2016-05-12 19:00]

79வயது மற்றும் 72 வயது தம்பதியினருக்கு முதலாவது குழந்தை பிறந்துள்ளது.இந்த வயதில் இவர்கள் தங்கள் குழந்தைக்கு அணைஆடை மாற்ற தயாராகின்றனர். இந்தியாவை சேர்ந்த மொஹின்டர் சிங் கில் இவரது மனைவி டல்ஜின்டர் கவுர் ஆகிய இருவருமே இந்த அதிஷ்டசாலிகளாவர். இருவரும் இரண்டு வருடங்கள் ஹிசார் மருத்துவ மனையில்[IVFஎனப்படும் கருத்தரித்தல் ஆய்வுகூட சிகிச்சை சோதனை முறை மூலம் தங்கள் 70வயதில் முதல் தடவையாக பெற்றோர் ஆகின்றனர்.


ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!
[Wednesday 2016-05-11 22:00]

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்தவர் கிம் டக்கி (26) இவருடைய கணவர் வவுகன் இருவருக்கும் ஏற்கனவே பள்ளிக்கு செல்லும் வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். எனினும், ஒரு ஆண் குழந்தை வேண்டும் என இருவரும் விரும்பியுள்ளனர். பெற்றோரின் ஆசைப்படி, கடந்த வருடம் கிம்டக்கி கர்ப்பம் தரித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர் இந்நிலையில்,வழக்கத்திற்கு மாறாக கிம்மின் வயிறுமிகவும் பெரிதாக வளர்ச்சி அடைந்துள்ளது. அப்போது,மருத்துவமனையில் சோதனை செய்தபோது, அவரது வயிற்றில் 5 சிசுக்கள் வளர்ந்து வருவதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.


இலங்கையில் தினமும் 658 கரு கலைப்பு சம்பவங்கள்!
[Monday 2016-05-09 20:00]

இலங்கையில் தினமும் 658 கரு கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் கே. கருணாதிலக்க அவர்களே இதனை தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குதல் வேண்டுமா என்ற தலைப்பில்இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஆண்டு தோறும் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 170 சட்ட விரோத கரு கலைப்பு சம்பவங்கள் நாட்டில் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


வெலிகமை பிரேதேசத்தில் மனைவியை தீ வைத்தவர் மாயம்
[Monday 2016-05-09 16:00]

பெண் ஒருவருக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வெலிகமை, ரலகமை பிரேதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த பெண்ணின் கணவர் நேற்று இரவு இவ்வாறு தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தீ காயங்களுக்குள்ளான 33 வயதான குறித்த பெண்ணை வெலிகமை, வலாத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது. தீவைத்த நபர் தற்போது தப்பி சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


வில்பத்து சரணாலயத்தில் மின்னல் தாக்கி 4 யானைகள் பலி!
[Sunday 2016-05-08 19:00]

மின்னல் தாக்கி நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் தினைக்களம் கூறுகின்றது. உயிரிழந்த யானைகள் மீதான பிரேத சோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள வில்பத்து சரணாலயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு தாய் யானையும் மூன்று குட்டிகளும் இவ்வாறு உயிரிழந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஓரிரு நாட்களுக்கு முன்னதாக நடந்திருக்கலாம் வன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வில்பத்து வன பிரதேசத்தின் எல்லையில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் கிராமவாசி ஒருவர் இது பற்றி தகவல் கொடுத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த பகுதிக்கு சென்றிருந்த மிருக வைத்திய அதிகாரி டாக்டர் சந்தன ஜயசிங்க பிரேத பரிசோதனையை நடத்தியுள்ளார்.


தனது வாழ்நாளில் பெண்களையே காணாத மனிதர்!
[Friday 2016-05-06 08:00]

கிரீஸ் நாட்டில் வாழ்ந்த துறவி ஒருவர் தனது வாழ்நாளில், பெண்களையே காணாமல் வாழ்ந்து, இறந்துள்ளார். கிரீசின் மவுண்ட் ஏதோஸ் மலையில் உள்ள துறவிகள் மடத்தில் வாழ்ந்து மறைந்த மைக்கேல் டோலாட்ஸ் என்ற துறவி தான் அவர். கடந்த 1856 -ஆம் ஆண்டில் மைக்கேல் பிறந்து சில மணிநேரத்திலேயே அவரது தயார் இறந்துவிட்டார். அனாதையாகக் கைவிடப்பட்ட மைக்கேலை மவுண்ட் ஏதோஸில் உள்ள துறவிகள் மடத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். அதுமுதல், தனது இறப்பு வரை கிட்டத்தட்ட 82 ஆண்டுகள் துறவி மடத்தினுள்ளேயே வாழ்ந்து மறைந்த மைக்கேல், அந்த மடத்தின் கேட்டுகளைத் தாண்டி வெளி உலகத்தைப் பார்த்ததே இல்லை என்று கூறப்படுகிறது. அவர், தனது 82 ஆவது வயதில் கடந்த 1938-ல் இறந்தார்.


அரிய வகை பிறப்பு குறைப்பாட்டால் 31 விரல்களுடன் பிறந்த குழந்தை!
[Thursday 2016-05-05 18:00]

ஹாங்காங்கில் அரிய வகை பிறப்பு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று கைகளில் 15 விரல்களுடனும், கால்களில் 16 விரல்களுடனும் பிறந்துள்ளது. ஹாங்காங்கின் ஹனன் மாகாணத்தில் தம்பதி ஒருவருக்கு பிறந்த குழந்தை தனது கைகளில் 15 விரல்களுடனும், கால்களில் 16 வில்களுடனும் பிறந்துள்ளது. பாலிடசிட்லிஸம் என்னும் அரிய வகை பிறப்பு குறைப்பாட்டு நோயால் பாதிக்கப்பட்ட இக்குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக பெற்றோர்கள் நிதி திரட்டி வருகின்றனர். குழந்தையின் தாயிலிருந்தே குழந்தைக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி பலியான மலையேற்ற வீரர்களின் சடலங்கள் 16 வருடங்களின் பின் கண்டுபிடிப்பு:
[Wednesday 2016-05-04 19:00]

திபெத்தில் மலை

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா