Untitled Document
November 22, 2024 [GMT]
 
கேரளா- சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: - அதிர்ச்சியடையவைக்கும் அறிக்கை
[Wednesday 2016-05-04 19:00]

இந்தியாவின் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் சட்டக்கல்லூரி மாணவி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து மாநில தலைமை செயலகம் முன்னதாக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவத்தை காவற்துறையினர் டெல்லி நிர்பயா சம்பவத்துடன் ஒப்பிட்டு உள்ளனர். கடந்த வியாழன் அன்று மாணவி 8:30 மணியளவில் சடலமாக காணப்பட்டார்.


ஏலியன்கள் எனப்படும் 218 வேற்றுகிரக இனங்கள் தொடர்ந்து பூமிக்கு வந்து செல்கின்றன!
[Monday 2016-05-02 12:00]

ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். நமது பிரபஞ்சத்தில் 218 வேற்றுகிரக இனங்கள் வாழ்கின்றன. இவைகள் தொடர்ந்து நமது பூமிக்கு வந்து செல்கின்றன என வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கை குறித்து ஆய்வு நடத்தி வரும் நான்சி மலகரியா தெரிவித்து உள்ளார். இவர் வேற்று கிரகவாசிகள் குறித்து பல் புத்தகங்களை எழுதி உள்ளார்.நான் சி அவரது கணவர் ஜாக்குடன் வசித்து வருகிறார். இருவருக்கும் வேர்று கிரகவாசிகளுடன் தொடர்பு உள்ளது என நம்பப்டுகிறது.


அமெரிக்காவில் கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை கொன்ற பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை!
[Saturday 2016-04-30 09:00]

அமெரிக்காவில் பிள்ளையில்லா ஏக்கத்தால் கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்ற பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கொலாராடோ மாநிலத்தில் உள்ள பவுல்டர் கவுண்ட்டியை சேர்ந்தவர் மிச்சேல் வில்கின்ஸ்(28). ஏழுமாத கர்ப்பிணியாக இருந்த இவர் தனது ஆசைமகள் பிறப்பதற்கு முன்னரே ஆவ்ரா என்ற பெயரும்சூட்டி, குழந்தையின் வரவுக்காக காத்திருந்தார். பேறுகால பெண்களுக்கு தேவையான உடைகளையும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் புதிய ஆடைகளையும் தருவதாக இணையதளம் மூலம் கிடைத்த தகவலை அறிந்த மிச்சேல், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த முகவரியை தேடி சென்றார். அங்கு அவரை டய்னல் லேன்(35) என்ற பெண் அன்புடன் வரவேற்றார். குளிர்பானம் கொடுத்து, உபசரித்து, தனிமையில் வாடும் தனது நிலையைப் பற்றி மணிக்கணக்கில் கதையளந்த டய்னல், தனது வீட்டில் இருந்த பழைய பொருட்களை போட்டுவைக்கும் பாதாள அறைக்கு மிச்சேலை அழைத்துச் சென்றார்.அங்கு கிடந்த மேஜை விளக்கால் மிச்சேலை கொலைவெறியுடன் தாக்கிய டய்னல், அவரது கழுத்தை நெறித்து மூர்ச்சை அடைய வைத்தார். பின்னர், நீளமான கத்தியை எடுத்து மிச்சேலின் அடிவயிற்றுப் பகுதியை வெட்டினார்.


மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 18 பேர்:
[Friday 2016-04-29 18:00]

இந்தியா - அரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ள கதர்பூர் ஊரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை மயக்கமருந்து கொடுத்து 18 பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து உள்ளனர். இது குறித்து அந்த பெண் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த பெண்ணின் பெற்றோர்கள் ஒரு நிகழ்ச்சிகாக வெளியே சென்றதால் அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அவர்கள் வீட்டு வேலியை தாண்டி வந்தனர். பின்னர் இளம் பெண்ணின் முகத்தில் மயக்கமருந்து கலந்த துணி காட்டி அவரை மயக்கமடைய செய்துள்ளனர்.


பிரிட்டனைச் சேர்ந்த றக்பி வீராங்கனை அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்!
[Wednesday 2016-04-27 19:00]

பிரிட்டனைச் சேர்ந்த றக்பி வீராங்கனையொருவர் அழகு ராணியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கோல் டொபின் எனும் இந்த யுவதி பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தின் டொனிரிபெய்ல் நகரைச் சேர்ந்தவர். 23 வயதான இவர் சௌத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறையில் பட்டம் பெற்றவர். அதேவேளை விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் ஆர்வம் கொண்டவர். வேல்ஸின் டெவ் வெல் றக்பி கால்பந்தாட்டக் கழகமானது தனது 127 வருட கால வரலாற்றில் முதல்தடவையாக மகளிர் றக்பி அணியொன்றையும் கடந்த வருடம் ஆரம்பித்தது. அவ்வணியின் சார்பில் போட்டிகளில் பங்குபற்றிய கோல் டொபின், முதலாவது ட்ரை புள்ளிகளைப் பெற்றதன் மூலம் ஊடகங்களில் பிரபலமானார்.


பதான்கோட் வெடிகுண்டுகளை கண்டுபிடித்த என்.எஸ்.ஜி.யின் மோப்ப நாய்க்கு விருது அளிக்க பரிந்துரை!
[Wednesday 2016-04-27 19:00]

பதான்கோட் தாக்குதலின்போது, வெடிக்கவிருந்த குண்டுகளை கண்டுபிடித்த மோப்ப நாயான ராக்கெட்டுக்கு அமைதிநேர வீரதீர சாகச (காலண்ட்ரி) விருது வழங் கப்பட உள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி இரவு பஞ்சாபின் பதான்கோட் விமானப் படை தளத்தில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இவர்களை எதிர் கொள்ள தேசிய பாதுகாப்பு படை யின் (என்.எஸ்.ஜி) தீவிரவாதத் தடுப்பு மற்றும் விமானக் கடத்தல் தடுப்பு பிரிவினர் களம் இறக்கப் பட்டனர். இதில் 7 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததுடன் 4 தீவிர வாதிகளும் கொல்லப்பட்டனர்.


தைவானில் கையில் குழந்தையுடன் உள்ள தாயின் படிமம் கண்டுபிடிப்பு: Top News
[Wednesday 2016-04-27 12:00]

தைவானில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 4800 ஆண்டுகளுக்கு முன் பழமையான கையில் குழந்தையுடன் உள்ள தாயின் படிமத்தை கண்டறிந்து உள்ளனர்.தைவானின் மத்திய பகுதியில் உள்ள தைச்சூங் பகுதியில் மனித படிவங்கள் 48 கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.அதில் குழந்தியை கையில் வைத்து இருக்கும் தாயின் படிமமும் ஒன்றாகும். இயற்கை அறிவியல் தைவான் தேசிய கண்காட்சியக மானிடவியல் துறை ஒரு பொறுப்பாளர் சூ வெய் லீ, கூறும் போது அதனை தோண்டி எடுத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தோம். அந்த தாயார் தனது கையில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போல் நிலையில் அந்த எலும்புகூடு படிமம் இருந்தது.என கூறினார்.


அமெரிக்காவில் 90-வது வயதில் தனது நண்பரை 2-வது திருமணம் செய்யும் அமெரிக்க செனட்டர்!
[Tuesday 2016-04-26 13:00]

அமெரிக்காவில் நியூ யார்க்கை சேர்ந்தவர் ஹாரிஸ்வுபோர்டு (90). ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் கடந்த 1991 முதல் 1995 -ம் ஆண்டுவரை அமெரிக்க பாராளுமன்றத்தில் பென் சில்வேனியா செனட்டராக இருந்தார். இவரது மனைவி கிளாரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரத்த புற்றுநோயால் இறந்துவிட்டார். இவர்களின் 48 ஆண்டு கால தாம்பத்திய வாழ்க்கைக்கு அடையாளமாக இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஹாரிஸ் வுப்போர்டு தனது 40 வயது ஆண் நண்பரை 2-வது திருமணம் செய்ய உள்ளார். அவரது பெயர் மாத்யூ சார்ல்டன். இவரை ஹாரிஸ் 20 வருடங்களாக காதலித்தார்.


வட
[Monday 2016-04-25 19:00]

வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்


கடும் புயலுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் சிக்கி 8 பேர் பலி!
[Monday 2016-04-25 08:00]

மியன்மாரில் ஆலங்கட்டி மழையில் சிக்கி குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் புயலுடன் கூடிய இந்த ஆலங்கட்டி மழை பொழிவில் கோல்ஃப் பந்து அளவுக்கு நீர்க்கட்டிகள் விழுந்துள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடு ஓடுவதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. இந்த புயல்காற்றில் 1700 பகோடாக்கள் (மியன்மாரின் பௌத்த வழிபாட்டுக் கோபுரங்கள்) சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. மற்றபல கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. மியன்மாரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவிய நீண்ட வெப்பக் காலநிலைக்குப் பின்னதாக இந்த புயல்காற்று வீசியுள்ளது.


650 பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த மேற்கிந்திய விழையாட்டு வீரர்!
[Saturday 2016-04-23 20:00]

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். உலகமெங்கிலும், இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாகவும், ஆண் விபச்சாரியை போல, தான், செயல்பட்டதாகவும் அந்த தகவலில் டினோ பெஸ்ட் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்சை போல எப்போதும் மொட்டை தலையுடன், காணப்படும் குழந்தை போன்ற முகத்துக்கு சொந்தக்காரரான டினோ பெஸ்ட் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூர முகம் இருந்தது சுய சரிதை புத்தகத்தால் அம்பலமாகியுள்ளது.


அமெரிக்க அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தில் கழிப்பறை ஒன்று நிறுவப்படவுள்ளது!
[Saturday 2016-04-23 13:00]

நியூயோர்க்கிலுள்ள கூகன்ஹய்ம் அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தில் கழிப்பறை ஒன்று நிறுவப்படவுள்ளது. இதனை இத்தாலியைச் சேர்ந்த மொரீஸியோ கேட்டலான் என்ற சிற்பக்கலைஞர் வடிவமைத்துள்ளார். இந்தக் கழிப்பறை சிற்பத்திற்கு


லண்டனில் மோடியை பார்த்து மோடியே வியந்தார்! Top News
[Saturday 2016-04-23 12:00]

லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட தனது மெழுகுச்சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டுள்ளார். லண்டன் செல்லும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக அங்குள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் விளங்குகிறது. இங்கு தான் உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகு சிலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வரிசையில் இந்திய பிரதமர் மோடியும் இடம்பெற்றுள்ளார்.


தலை துண்டிக்கப்பட்ட உடல் படத்தை ரவிசங்கருக்கு அனுப்பி வைத்துள்ளது ஐஎஸ்!
[Saturday 2016-04-23 08:00]

உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு அமைதிச் செய்தி அனுப்பிய ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு, பதிலுக்கு அந்த அமைப்பு தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்றின் படத்தை அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர். இவர் சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அமைதிச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், ஐஎஸ் அமைப்பு தீவிரவாதத்தைக் கைவிட்டு விட்டு அமைதிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.


நாள் ஒன்றுக்கு அண்ணளவாக 32 ஆயிரம் பேஸ்புக் பாவனையாளர்கள் மரணம்!
[Friday 2016-04-22 09:00]

தற்போது வரையில் உலகம் முழுவதும் பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.59 பில்லியன் ஆகும். மேலும் இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புகள் காணப்பட்டாலும், செயலிழக்க செய்யும் கணக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகின்றது. உலகம் முழுவதும் வாழும் மக்களின் மரணங்களில் காணப்படும் அதிகரிப்பே அதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.


சவூதியில் பட்டதாரியான மனைவிக்கு அலங்கரிக்கப்பட்ட செம்மறி ஆடு பரிசு கொடுத்த கணவர்!
[Thursday 2016-04-21 19:00]

சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி பல்கலைக்கழக பட்டதாரியானவுடன் அவருக்கு அலங்கரிக்கப்பட்ட செம்மறி ஆடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். தனது மனைவிக்கு வியப்பளிக்கும் வகையில் பரிசு வழங்க விரும்பிய அந் நபர், செம்மறி ஆடு ஒன்றை வாங்கி, அதை அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றுக்கு கொண்டு சென்று அலங்கரித்தாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இத் தம்பதியின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.


ரோபோ பணிப்பெண்கள் சகிதம் ஷொப்பிங் சென்
[Thursday 2016-04-21 13:00]

சீனாவைச் சேர்ந்த வர்த்


கோயில் பெருவிழாவில் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி!
[Thursday 2016-04-21 09:00]

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டர் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முக்கிய விழாவான, சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.இதில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டனர். பின்னர் திருநங்கைகள் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொண்டு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரை பய, பக்தியுடன் வழிபட்டனர். தாலி கட்டிய பிறகு புதுமணப்பெண்கள் போல் காட்சி அளித்த திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயில் அருகில் இரவு முழுவதும் விடிய, விடிய கும்மி அடித்து கூத்தாண்டவரை கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து பாடல்களாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.


அமெரிக்காவில் வசித்த மிகப் பெரிய சூதாட்டக்கார தொழிலதிபர்: - கடைசியில் காடுவளா்த்து விலங்கு வளர்த்தார்!
[Thursday 2016-04-21 09:00]

அமெரிக்காவில் வசித்த எம்.சி.டேவிஸ் மிகப் பெரிய தொழிலதிபராகவும் சூதாட்டக்காரராகவும் இருந்தார். பின்னர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார். இதன் தொடர்ச்சியாக அழிந்து வரும் காடுகளைப் பாதுகாக்கவும் புதிய காடுகளை உருவாக்கவும் திட்டமிட்டார். தனது சொத்தில் இருந்து 9 கோடி டாலர் செலவில், புளோரிடா மாகாணத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்கி, அங்கு பைன் மரங்களை வளர்த்தார். அடர்த்தியாக மரங்கள் வளர ஆரம்பித்ததும், அங்கு விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றைக் கொண்டுவந்து வளர்க்க ஆரம்பித்தார்.


கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்த தொழிலதிபர் கைது!
[Wednesday 2016-04-20 09:00]

திரைப்பட நடிகை கே.ஆர்.விஜயாவின் மூத்த மகள் ஹேமலதா மாடத்தில் (41). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் கணவரை விட்டு பிரிந்து கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது இரு மகன்களும் வெளிநாட்டில் படித்து வருகின்றனர். இதனிடையே, பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ஆர்.கதிர்வேல் (41) என்பவர் ஹேமலதாவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கதிர்வேலை திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.


உடலை விற்று கல்வி கற்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெண்கள்!
[Tuesday 2016-04-19 18:00]

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் கல்விக்காக சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை தங்களது உடலை விற்று பணம் தேடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள பள்ளிகளில் கட்டணமாக ஆண்டுக்கு 40 பவுண்ஸ்கள் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏழ்மை காரணமாகவும் அடிப்படை கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என்பதாலும் பெரும்பாலான இளம் வயது பெண்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தேவைக்கு அதிகமான பணப்புழக்கம் இருப்பதால் சில பெண்கள் முழுநேர விபச்சாரத்தில் ஈடுபடும் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


மரதன் ஓடியவர் சுருண்டு விழுந்து மரணம்!
[Tuesday 2016-04-19 18:00]

சூரியவெவ பிரதேசத்தில் புதுவருடக் கொண்டாட்டத்தையொட்டி, இன்று காலை இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 38 வயதுடைய நபரொருவர் திடீரெனச் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டே அவர் மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது. சூரியவெவ மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து இந்த மரதன் ஓட்டத்தை ஒழுங்கு செய்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: - உத்தரபிரதேசத்தில் வினோத சம்பவம்
[Monday 2016-04-18 13:00]

மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் முடிந்தது. இந்த வினோத சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கான்பூரை சேர்ந்தவர் நேகா (25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்யத் தொடங்கினர். அப்போது மணப்பெண் சார்பில், மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மணமகன் வீட்டிலும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருமணம் நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை உடனடியாக நிறுத்தினார் நேகா.


இங்கிலாந்து ராணியின் காதல் கடிதமும் ஏலம் விடப்படுகிறது!
[Friday 2016-04-15 19:00]

இங்கிலாந்து ராணி எலிசபெத். இவரது கணவர் இளவரசர் பிலிப் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது


41 வயது பேஸ்புக் தோழியை காதலித்து மணந்த 21 வயது இழைஞன்!
[Thursday 2016-04-14 11:00]

41 வயது பேஸ்புக் தோழியை காதலித்து திருமணம் செய்துள்ள 21 வயது இந்தியர். குஜராத மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஹிதேஷ் சாவ்டா (வயது 23) இவரும் அமெரிக்காவை சேர்ந்த எமிலி, என்ற 41 வயது பெண் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகிவந்துள்ளனர். ஹிதேஷ் சாவ்டா-வுக்கு ஆங்கிலம் தெரியாத நிலையில், அவர் கூகுள் மூலம் மொழி பெயர்த்து சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், ஹிதேஷ் சாவ்டா ஹிந்தியில் அனுப்பும் தகவலை எமிலி, கூகுள் மூலம் மொழி பெயர்த்து பேசி வந்துள்ளார். நண்பர்களாக பழகி வந்த இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் வீடியோ கான்பிரஷிங்கின் மூலம் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். பின்னர், ஹிதேஷை நேரில் சந்திக்க விரும்பிய எமிலி இந்தியாவிற்கு வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் காதல் விவகாரம் ஹிதேஷ் சாவ்டா வீட்டிற்கு தெரியவந்துள்ளது.


சீனாவில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த மாணவி ரெயில் மோதி பலி!
[Wednesday 2016-04-13 14:00]

சீனாவில் போஷான் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். எனவே இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் போஷான் பாலிடெக்னிக்கில் படிக்கும் 19 வயது மாணவி அங்குள்ள ரெயில் நிலையம் சென்று இருந்தார். இயற்கை அழகில் மயங்கிய அவர் தண்டவாளத்தில் நின்றபடி


உலகிலேயே மிக நீளமான மலைப்பாம்பு மலேசியாவில் பிடிபட்டது! Top News
[Tuesday 2016-04-12 23:00]

உலகிலேயே மிக நீளமானதும் , பருமனானதுமான மலைப்பாம்பு மலேசியாவில் பிடிப்பட்டுள்ளது. மலேசியாவின் பின்னாங் நகரில் தான் இந்த ராட்சத மலைப்பாம்பு பிடிப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது மரத்தின் அடியில் மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்ட தொழிலாளர்கள் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி இந்த பிரம்மாண்ட மலைப்பாம்பை பிடித்துள்ளனர்.


யோகா, தியானம் பற்றி ஆராய்ச்சி செய்ய 600 அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பித்தனர்!
[Tuesday 2016-04-12 20:00]

யோகா மற்றும் தியானம் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசு 'சத்யம்' எனும் புதிய திட்டத்தை அறிவித்திருந்தது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதிலும் 600-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து இந்த ஆராய்ச்சிக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதில் தகுதியின் அடிப்படையில் 20-25 விண்ணப்பங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கென பிரத்யேகமாக நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


நைஜீரியா - சுவிஸ் தூதரக அதிகாரி ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதனால் வழக்கு!
[Tuesday 2016-04-12 20:00]

நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதரக அதிகாரி ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதால் அவர் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த EricMayoraz என்பவர் கடந்தாண்டு நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதராக தெரிவு செய்யப்பட்டு அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டார். ஓரினச்சேர்க்கையாளரான(Gay) இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த Carlos என்பவருடன் நைஜீரியா நாட்டிற்கு சென்றுள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்கள் தான் என நைஜீரியா நாட்டு அதிகாரிகள் எண்ணியுள்ளனர்.


எறும்பு கூட்டம் சாப்பிட்ட குழந்தையின் தாயாருக்கு 30 வருடம் சிறை: - மெக்சிகோவில் தீர்ப்பு
[Tuesday 2016-04-12 20:00]

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் மரியனா லிசத் (20)கடந்த ஆண்டு,ல்லூனா எஸ்டிபேனியா என்ற பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், குழந்தையை சரியாக பராமரிக்காமல் மரியனா அலட்சியமாக இருந்து உள்ளார். இதனால் பசியால் வாடிய அக்குழந்தையின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டில் ஏப்ரல் முதல் மே மாதங்களில் அக்குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், போதிய உணவு கூட கிடைக்காமல் ஒரே இடத்தில் குற்றுயிராய் கிடந்த அக்குழந்தையினை எறும்புகூட்டங்கள் சாப்பிட்டு உள்ளன. இதனால் குழந்தியின் உடல் பாகங்கள் பல பாதி சேதமடைந்துள்ளன.

Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா