Untitled Document
November 7, 2026 [GMT]
 
நிலத்திலும் புலத்திலும் கஞ்சி பரிமாறுவோம்! Top News
[Monday 2022-05-16 08:00]

நிலத்திலும் புலத்திலும் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொனிப்பொருளில் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளில் யேர்மன் தலைநகரம் பேர்லினில் உள்ள தமிழாலயத்தில் புலம்பெயர் மண்ணில் பிறந்த ஈழத்து 3. ம் தலமுறைச் சிறார்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு இன்றைய தினத்தில் (14.05.2022) இடம்பெற்றது. இவ் நிகழ்வில் மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என அனைவரும் உணர்வுடன் கலந்துகொண்டனர்.


யேர்மனி முன்ஸ்ரர் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி! Top News
[Sunday 2022-05-15 06:00]

யேர்மனியில் மே4 ஆம் திகதியிலிருந்து மே17 திகதி வரை 14 நகரங்களில், சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பினை , வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 11.05.2022 அன்று முன்ஸ்ரர் (Münster) வாழ் மக்களால் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.


யேர்மனி சோஸ்ற் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி! Top News
[Sunday 2022-05-15 06:00]

யேர்மனியில் மே 4 ஆம் திகதியிலிருந்து மே17 திகதி வரை 14 நகரங்களில், சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பினை , வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 13.05.2022 சோஸ்ற் (Soest) நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.


ஆர்மேனியர்களுக்கு ஹரிஸ்ஸா, யூதர்களுக்கு மற்சூ, ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Thursday 2022-05-12 20:00]

தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி, முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவேந்தல் வாரத்தினை தொடங்குவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த விடுதலைப் பண்பாட்டை அடுத்த தலைமுறையின் கைகளுக்கு கடத்துவோம் என தெரிவித்துள்ளது. மே 12ம் நாள் வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக உலகத் தமிழர்களால் தொடங்குகின்றது.


முதல்வரானபின் ஹோர்வத் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை 40 சதவீதம் குறைப்பார்! Top News
[Thursday 2022-05-12 20:00]

கியூபெக், மனிடோபா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் சஸ்காட்செவனை போல ஒன்டாரியோவும் பொது வாகன காப்பீட்டை ஆய்வு செய்யவுள்ளது. ஸ்கார்பரோ – NDP தலைவர் ஆண்ட்ரியா ஹோர்வத் வாகனக் காப்புறுதித் துறையை சரிசெய்வதன் மூலம் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை 40% குறைத்து, ஒவ்வொருஆண்டும் ஓட்டுநர்கள் சராசரியாக $660- ஐ சேமிக்கச் செய்வார். ஸ்கார்பரோ போன்ற சில சமூகங்களில் சராசரிசேமிப்பு கிட்டத்தட்ட $2,000-ஆக இருக்கும்.


யேர்மனி பிறைங்போட் நகரத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி! Top News
[Monday 2022-05-09 08:00]

யேர்மனி பிறைங்போட் நகரத்தில் தமிழின அழிப்புக் கண்காட்சி 7.5.2022 சனிக்கிழமை நகரமத்தியில் இடம்அபற்றது. இக்கண்காட்சியை பல்லின மக்கள் பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை, வேற்றின மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மே 4ஆம் திகதியிலிருந்து மே 17 ஆம் திகதிவரை இக்கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக பதினாறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது.


யேர்மனி சார்புறுக்கன் நகரமத்தியில் தமிழின அழிப்பு நினைவுகூரப்பட்டது! Top News
[Saturday 2022-05-07 21:00]

சிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நேற்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின் மத்தியில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களின் நிலமையை ஓவியமாகத் தீட்டி சார்புறுக்கன் நகரமத்தியில் கண்காட்சி நடாத்தப்பட்டது.


தமிழ்க் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம் அவர்களுக்கு மதிப்பளிப்பு! Top News
[Thursday 2022-05-05 08:00]

தமிழ்க் கல்விக்கழகம் யேர்மனியின் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம் அவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியக் கிளை அவரின் 30 வருடகால கல்விப்பணியினைப் பாராட்டி மதிப்பளித்தது. 30.4.2022 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் நடைபெற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் 32 ஆவது அகவை நிறைவு விழாவின் போது இந்த மதிப்பளிப்பினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் சிறப்பாக நடாத்தியிருந்தனர்.


32ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருட்காட்! Top News
[Thursday 2022-05-05 08:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு வெஸ்லிங், குன்ஸ்ரெற்ரர்,ஆன்ஸ்பேர்க், கொற்றிங்கன் என நான்கு அரங்குகளில் 32ஆவது அகவை நிறைவு விழா சிறப்புடன் நடைபெற்று, நிறைவாக ஸ்ருட்காட் அரங்கில் தாயகனின் சிந்தனையைப் பதியமிட்டவாறு சிறப்போடு நிறைவுற்றுள்ளது. வேற்றுமொழிச் சூழலிற் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி மொழி, கலை, பண்பாடு, விளையாட்டு என ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டு தமிழ்க் கல்விக் கழகம் செயற்பட்டு வருகிறது. அதன் பயனாகப் பெரு மற்றும் சிறு நகரங்களென வாழும் பெருமளவிலான தமிழ்க் குழந்தைகள் தமிழ்மொழி அறிந்தவர்களாக இருப்பதற்குத் தமிழ்க் கல்விக் கழகத்தினது தன்னலமற்ற சிந்தனையும் செயற்பாடும் கரணியமானபோதும், இப்பெரு முயற்சியோடு இணைந்து பயணிக்கும் ஆசான்களையும் திறன்களை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற மாணவர்களையும் தமிழாலயங்களின் பெற்றோரையும் அழைத்து ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு நடாத்திவருகின்றது.


யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்: யேர்மனி பேர்லின் மற்றும் சார்புறுக்கன்! Top News
[Thursday 2022-05-05 08:00]

போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான 01-05-2022 அன்று , சுதந்திரம் வேண்டிப் போராடும் தமிழீழ மக்களும் பல்லின மக்களுடன் இணைந்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் தமிழ் மக்களும் இணைந்து தாயகத்தில் எமது உறவுகள் முகம் கொடுக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பை பதாதைகளின் ஊடாக வெளிப்படுத்தியதோடு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இனவழிப்புக்கு நீதி கோரி யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.


மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாள் - 2022! Top News
[Tuesday 2022-04-26 21:00]

பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் ஒருமாதகாலமாக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து ஈகைச்சாவை தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 34-வது ஆண்டு நினைவு நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுநாளும் கடந்த 24-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருந்தது.


Inauguration of ‘UNBOX’ – the Innovation and Technology Museum at Karunya! Top News
[Tuesday 2022-04-26 21:00]

Karunya Institute of Technology and Sciences, Coimbatore has filed around 100 patents. Several of those have been granted. Most of these products are in the thrust areas of research of KITS, having societal importance, namely water, food, healthcare and sustainable energy. The need for exhibiting the prototypes of these products for the public has been recognized. The UNBOX is intended to inspire, motivate and introduce more students and faculty members to invention and innovation leading to incubation and start-ups to fulfil the goals of ‘Atmanirbhar Bharat’.


கனடாவில் இடம்பெற்ற வாகன பேரணி! Top News
[Sunday 2022-04-17 16:00]

நேற்றய தினம் (16-04-2022) கனடாவில் இடம்பெற்ற வாகன பேரணியில் "தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது" என்ற வேண்டுகோளை கனடா மற்றும் சர்வதேச சமூகத்திடம் முன்வைத்தனர். இன்று ஏப்ரல் 16, 2022 சனிக்கிழமை மதியம் 12 மணிக்குத் துவங்கிய கார் பேரணியை கனடியத் தமிழர்கள் ஒழுங்குபடுத்தி இருந்தனர்.


தமிழ்க் கல்விக் கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022: யேர்மனி மத்தியமாநிலம்! Top News
[Wednesday 2022-04-13 07:00]

தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு தொடங்கியுள்ளது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் 09.04.2022 சனிக்கிழமை மத்திய மாநிலத்தின் வெஸ்லிங் (Wesseling) நகரிலே நிறைவுற்றுள்ளது.


போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக! சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை! Top News
[Wednesday 2022-04-06 08:00]

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்களின் போராட்டங்களில் 'போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக' என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது. தமிழின அழிப்புக்கு பொறுப்புக்கூற சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலுவாக கூறிவருவதோடு, 2015ம் ஆண்டு 1.8 மில்லியனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இதற்கான கோரிக்கையில் ஒப்பமிட்டிருந்தனர். ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் உட்பட பல சர்வதேச வளஅறிஞர்களும் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.


உம்ரா பயணிகளுக்காக ஜித்தாவில் நடந்த இரத்ததான முகாம்! Top News
[Tuesday 2022-03-22 17:00]

வெளிநாட்டிலிருந்து உம்ரா செய்ய வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கபட்டதால் உலக நாடுகளிலிருந்து ரமலானில் உம்ரா செய்வதற்காக முஸ்லிம்கள் மக்கா நகருக்கு வர இருக்கின்றனர். அவர்களில் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக ஜித்தாவில் (19-03-2022) அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது.


ஸ்காபரோவில் முதல் மருத்துவக் கல்லூரி அறிமுகம்! Top News Top News
[Thursday 2022-03-17 22:00]

முதன்முதலாக ஸ்காபரோவில் மருத்துவப் படிப்புக்கான துறையை அறிவிப்பதில் நான் பெருமைகொள்கிறேன். ஒன்ராறியோ அரசாங்கம், ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாக மருத்துவப் பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பிரிவு புதிதாக 30 இளங்கலைப் படிப்புக்கான இடங்களையும் 45 முதுகலைப் படிப்புக்கான இடங்களையும் கொண்டு அமையவுள்ளதென அறிவித்துள்ளது.


"விழித்தெழு தமிழா" - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்திய அரசியல் கருத்தரங்கம்! Top News Top News
[Monday 2022-03-14 09:00]

நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் "விழித்தெழு தமிழா" அரசியல் கருத்தரங்கமானது, 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிமுதல் மாலை 06 மணி வரை முழுநாள் நிகழ்வாக சென்னை, மதனந்தபுரம், முகலிவாக்கம் முதன்மைசாலையில் அமைந்துள்ள, ஸ்ரீ எஸ்.ஏ.கே.ஜெய் மாருதி மகாலில் நடைபெற்றது.


விவேகானந்த சமுதாய அறக்கட்டளைர் மாணவிகளுடன் நிறைவேற்று பணிப்பாள கலந்துரையாடல்! Top News
[Friday 2022-03-11 08:00]

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்டு வருகின்ற அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் கல்வி பயிலும் மாணவிகளுடன் நிறைவேற்று பணிப்பாளரின் கலந்துரையாடலும் கடந்த வருடத்திற்கான கணக்காய்வும், கணக்காய்வாளர் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. எனது நிலையத்தில் தங்கியிருக்கும் 30 மாணவிகளில் இந்த வருடம் முதலாவதாக கா.பொ.த சாதாரண தரத்தில் 11 மாணவிகள் தோற்றுகின்றனர்.


செல்வி ராகப்பிரியா ரமேஸ்குமாருக்கு திரு செல்லத்துரை உதயகுமார் அவர்களால் கெளரவிக்கப்பட்டு ஊக்கத்தொகையாக இரண்டு லட்சம் (200,000 SLR) ரூபாய்கள் வழங்கப்பட்டது! Top News
[Friday 2022-03-11 08:00]

கனடா - யாழ் பெருமாள் கோவில் உறவினர்கள் ஒன்றியத்தின் நோக்கங்களில்ஒன்றான இலங்கை வாழ் நம் உறவுகளின் கல்வியை ஊக்குவிக்கும் திட்டத்தின் அடிப்படையில், திறமை சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் ஊக்கத்தொகைவழங்கப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே.


18ம் நாளாக (05/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம்! Top News
[Sunday 2022-03-06 17:00]

சுவிசு பயேர்ன் , மாநகரசபை முன்றலில் இருந்து எழுச்சி கரமாக மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்தொடர்ந்தது. சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலகசுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு என கடும் மலை ஏற்றத்தின் மத்தியிலும் நெடுந்தூரம்பயணித்து லெளசாண் மாநகரத்தினை வந்தடைந்தது.


17ம் நாளாக (04/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி அறவழிப்போராட்டம் தொடர்கிறது! Top News
[Sunday 2022-03-06 08:00]

சிறிலங்கா பேரினவாத அரசானது தமிழர்களை இரசாயன, கொத்துக்குண்டுகளாலும், பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்தவர்களை படுகொலை செய்தும், வயது பால் வேறுபாடுகளின்றி திட்டமிட்டமுறையில் உணவு ,மருந்துகள் மறுத்த நிலையிலும் இனப்படுகொலை செய்து அதற்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் பல கபட நாடகங்களையாடி வருகின்றனர்.


தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி சுவிசு நாட்டில் தொடர்ந்து பயணிக்கும் அறவழிப்போராட்டம்! Top News
[Friday 2022-03-04 16:00]

மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டமானது கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்து நெதர்லாந்து , பெல்சியம், லுக்சாம்பூர்க் , யேர்மனி, பிரான்சு நாடுகள் ஊடாக சுவிசு நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது. நேற்று 03/03/2022, 16ம் நாளாக பாசல் மாநகரத்தில் இருந்து சொலொத்தூர்ன் மாநகரத்தினை வந்தடைந்தது.


தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது! Top News
[Thursday 2022-03-03 16:00]

நேற்று (02/03/2022) பிரான்சு நாட்டில் தொடர்ந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் முலூசு, சான்லூயி மாநகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டது. நடைபெற்ற சந்திப்புக்களில் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே நிரந்தர தீர்வு எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு பிரான்சு வெளிநாட்டு அமைச்சிடம் தாம் அழுத்தம் தெரிவிப்பதாக உறுதி தரப்பட்டு அதற்கான முன்னெடுப்புக்களும் செய்யப்பட்டவை குறிப்பிடத்தக்கது.


தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 15ம் நாளாக (01/03/2022) தொடரும் அறவழிப்போராட்டம்! Top News
[Wednesday 2022-03-02 22:00]

நேற்று (01/03/2022) Benfeld, France மாநகரசபையின் முன்றலில் இருந்து தொடர்ந்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டம் Selestat , Issenheim மாநகரசபைகளில் சந்தித்து மனுக்கொடுத்து தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே நிரந்தர தீர்வு என வலியுறுத்தப்பட்டது. மேடுகளில் தொலை தூரம் கடந்து வந்து சந்திப்பிற்கு திட்டமிட்ட நேரத்தில் சமூகமளிக்கமுடியாத நிலைஏற்பட்ட போதும் மாநகர சபை முதல்வர், உதவி முதவல்வர்கள் மேலும் உறுப்பினர்கள் காத்திருந்து மனித நேய செயற்பாட்டாளர்களை இன்முகத்தோடு வரவேற்று கலந்துரையாடினர்.


மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் 26.02.2022-யேர்மனி! Top News
[Tuesday 2022-03-01 06:00]

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாகதீபம் தீலிபன் அவர்களது வரிகள் தமிழீழமக்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும் விடுதலை மந்திரம். கடந்த 26.02. 2022 யேர்மனி நாட்டில் தமிழர்கள் செறிந்து வாழும் ஐம்பத்துமூன்று நகரங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மனிதச்சங்கிலியாக இணைந்து தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமையினை வலியுறுத்தி நின்றமை எமது தேசத்தின் தெய்வங்களான மாவீரர்களது கனவுகளை நனவாக்கும் என்ற நம்பிக்கையினை மீளவும் உறுதிப்படுத்தியது.


11ம் நாளாக தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம் மனிதச்சங்கிலி போராட்டத்தில் இணைந்தது! Top News
[Tuesday 2022-03-01 06:00]

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் வெள்ளிக்கிழமை (26/02/2022) யேர்மனி நாட்டில் லாண்டோ மாநகரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டது. சிறிலங்காப் பேரினவாத அரசினால் தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே நிரந்தர தீர்வு என முக்கிய அரசியல் மையங்களில் முழங்கிய மனித நேய செயற்பாட்டாளர்களை யேர்மனிய நாட்டு கிளைப்பொறுப்பாளர் வரவேற்றார். மேலும் வாழிட மொழியிலும் தமிழிலுமாக உரைகள் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 10ம் நாளாக (25/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்! Top News
[Monday 2022-02-28 08:00]

வெள்ளிக்கிழமை (25/02/2022) காலை 6 மணிக்கு Luxembourg - Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சார்புருக்கன் மாநகரசபையில் உதவி முதல்வரினை சந்தித்து சிறிலங்கா பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனவும் அதற்காக மாநகரசபைகள் யேர்மனிய நாட்டின் வெளிநாட்டமைச்சிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்கப்பட்டது.


தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8 ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்! Top News
[Thursday 2022-02-24 20:00]

கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. நேற்று (23/02/2022) கொட்டும் மழையிலும் கடுமையான மேடுகளிலும் இயற்கை சீற்றத்தின் காரணத்தினால் பலவீதிகளில் பயணிக்க முடியாத சூழல் நிலவிய போதும் பெரும் சவால்களுக்கு மத்தியில் மனித நேய ஈருருளிப்பயணம்பயணித்துக்கொண்டு இருக்கின்றது. பெல்சியத்தின் தலைநகரம் Brussel மாநகரத்தின் ஊடாக Wavre , Namur , Bastogne மாநகரங்களினைக் கடந்து Luxembourg நாட்டினை நோக்கி விரைகின்றது.


தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி-2022 யேர்மனி! Top News
[Monday 2022-02-21 08:00]

யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று நோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழிப் பற்று உள்ளது. முதற் சுற்றில் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஏழு வயதுப்பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற மாணவர்கள் மாநிலத் தெரிவுப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா