Untitled Document
November 7, 2026 [GMT]
 
சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்! Top News
[Monday 2022-02-21 08:00]

பிரித்தானியாவில் 16/02/2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து இன்று (20/02/2022) பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது. கடந்து வரும் பாதைகளில் பிரித்தானிய அனைத்து அரசியற்கட்சிகளுக்கும் பிரதமர் இல்லத்திலும் , நெதர்லாந்து வெளி நாட்டமைச்சு, அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் மற்றும் மாநகரசபைகள் போன்ற முக்கிய அரசியல் மையங்களில் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தியும் தமிழீழமே நிரந்த தீர்வு என முன்னிறுத்தி தமிழர்களின் வேணவாக்கள் உறுதியாக பதிவு செய்யப்பட்டது.


தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2022 – யேர்மனி, வூப்பெற்றால்! Top News
[Tuesday 2022-02-08 08:00]

தமிழினத்தின் தொன்மை மிகு கலைகளின் திறன்களை யேர்மனியிலே பதியமிட்டு வரும் தமிழ்க் கல்விக் கழகம், இந்த ஆண்டுக்கான கலைத்திறன் போட்டியைக் கடந்த சில ஆண்டுகள் போன்று சிறப்பாக நடாத்தத் திட்டமிட்டிருந்தோம். வழமைபோன்று ஒரு அரங்கில் எல்லாவகையான போட்டிகளையும் ஒரே நாளில் நடாத்துவதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்த வேளையில், கொரோனா பெருந்தொற்றின் வேகம் அதிகரித்த கரணியத்தினால் பெருந்தொகையானவர்களை ஒரு மண்டபத்துக்குள் அழைப்பதும் அதனால் ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கிலும் போட்டிகள் இரண்டாகப் பிரித்து நடாத்தப்பட்டன.


ஸ்ரீ லங்கா தூதரகத்திற்கு முன்பாக லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! Top News
[Saturday 2022-02-05 08:00]

இலங்கையின் சுதந்திரதின நிகழ்வை எதிர்த்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தியும் லண்டன் ஶ்ரீ லங்கா உயர் ஆணையகம் முன்பாக பல நூற்றுக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம் மக்களும் காலாதி காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்ற போதும் எமது மக்களின் போராட்டங்களை யாருமே கண்டு கொள்ளாத நிலையிலே விரக்தியின் விளிம்பில் நின்று இலங்கையின் சுதந்திரத்தினை எதிர்த்து எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.


சிங்களப் பேரினவாதாத்தின் 74வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்! Top News
[Saturday 2022-02-05 08:00]

இந் நாளை முன்னிட்டு பேர்லின் தலைநகரில் ஓவியர் புகழேந்தி ஐயா அவர்களின் தமிழின அழிப்பை , ஈழத்தமிழர்களின் வலியை பேசம் ஓவியங்களின் தொகுப்பு கண்காட்சியாக Brandenburger Tor வின் வரலாற்றுச் சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. பல்லின மக்கள் மிகவும் ஆர்வமாக ஓவியங்களை பார்வையிட்டு இளையோர்களுடன் உரையாடினர், யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.


முதலாவது ரொறொன்ரோ - யாழ் தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு! Top News
[Wednesday 2022-02-02 08:00]

கனடா நாட்டில் ஜனவரி மாத காலத்தில் மத்திய, மாகாண அரசுகள் மற்றும் மாநகர சபைகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வுகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கனடியத் தமிழர் பேரவையின் முயற்சியால் ரொறொன்ரோ மாநகர சபைக்கும், யாழ் மாநகர சபைக்கும் இடையே உறவுப் பாலத்தை அமைக்கும் வகையில் புரிந்துணர்வு நட்பு ஒப்பந்தம் ஒன்று 2019 ஆண்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.


தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரத்துக்கான நிதி ஒதுக்கீடு! Top News
[Wednesday 2022-02-02 08:00]

ஜனவரி 31, 2022 அன்று கல்வி அமைச்சர் திரு. செச்சே அவர்கள் தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான நிதி ஒதுக்கீடாக ஒன்ராறியோ மாநில கல்வி அமைச்சிலிருந்து ஏறத்தாழ 50,000 டொலர்களை கனடா தமிழ்க் கல்லூரிக்கு ஒதுக்கியுள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2021-2022 கல்வியாண்டுக்கான தமிழின அழிப்பு நினைவுகூரல் நிதியமாக இந்நிதி கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்களால் வழங்கப்பட்டது.


முதற் தடவையாக கனடியத் தமிழர் பேரவையின், உணவு வங்கிக்கான தமிழ் மரபுரிமைத் திங்கள் காலப் பங்களிப்பு! Top News
[Wednesday 2022-02-02 08:00]

தொடரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக, மக்களுக்குச் சேவை செய்வதில் உணவு வங்கிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சங்கடங்களை உணர்ந்து கனடியத் தமிழர் பேரவை (CTC), 2022 ஆம் ஆண்டில் தனது முதற் தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.


அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022, யேர்மனி! Top News
[Sunday 2022-01-30 18:00]

கொரோனா என்னும் தொற்றுநோய் தொடர்ந்தும் அல்லலுற வைத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை மிகவும் கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் யேர்மனிய சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கேற்பச் சிறந்த பொறிமுறைகளைக் கடைப்பிடித்து 29.01.2022 சனிக்கிழமை நிறைவேற்றியுள்ளது.


முதற் தடவையாக கனடியத் தமிழர் பேரவையின், உணவு வங்கிக்கான தமிழ் மரபுரிமைத் திங்கள் காலப் பங்களிப்பு! Top News
[Saturday 2022-01-29 21:00]

தொடரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக, மக்களுக்குச் சேவை செய்வதில் உணவு வங்கிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சங்கடங்களை உணர்ந்து கனடியத் தமிழர் பேரவை (CTC), 2022 ஆம் ஆண்டில் தனது முதற் தமிழ் மரபுரிமைத் திங்கள் உணவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.


Neethan Shan, NDP candidate for Scarb​orough Centre launches 2022 campaign! Top News
[Friday 2022-01-28 08:00]

SCARBOROUGH — During this year’s Tamil Heritage Month, the Ontario NDP candidate for Scarborough Centre Neethan Shan officially launched his campaign for the upcoming 2022 election Wednesday evening. A longstanding community leader, educator and activist, Shan was joined at the launch by Ontario NDP Leader Andrea Horwath, Brampton East NDP MPP Gurratan Singh, Scarborough Southwest NDP MPP Doly Begum and special guest federal NDP Leader Jagmeet Singh.


Thai Pongal & Tamil Heritage Month Introduction in Britain Pioneered by the BTF gaining momentum! Top News
[Wednesday 2022-01-26 08:00]

Identifying the elegance of the Tamil heritage, the British Tamils Forum (BTF) began its steps to enhance the knowledge to the Tamil diaspora and to make aware to the world at large of the sophistication of the deep-rooted Tamil heritage. Thus, the BTF launched its pioneer move with the Thai Pongal celebration in association with London Borrow of Harrow in 2011.


யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா! Top News
[Sunday 2022-01-16 18:00]

யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக “முத்தமிழ் விழா 2022” நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. இந் நிகழ்வானது இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.


யாழ் பெருமாள் நெல்மணி உதவும் கரங்களின் கல்விசார் வேலைத்திட்டங்கள்! Top News
[Saturday 2022-01-15 08:00]

தாயகத்தில் தமிழ் பகுதிகளில் வாழும் மாணவர்களின் பரீட்சைப்பெறுபேறுகளை உயர்த்தும் யாழ் பெருமாள் நெல்மணி உதவும்கரங்களின் திட்டத்தின் தொடர்ச்சியாக வவுனியாவில் வ/இந்துக்கல்லூரி, வ/திருஞானசம்பந்தர் வித்தியாலயம், வ/சித்தி விநாயகர் வித்தியாலயம், வ/விபுலானந்தா கல்லூரி, வ/ஶ்ரீ நாகராஜா வித்தியாலயம், வ/பெரிய கோமரசங்குளம் வித்தியாலயம், வ/பூந்தோட்டம் மகா வித்தியாலயம், வ/ சுந்தரபுரம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் கல்விப்பொதுத்தராதரமாணவர்களுக்கு கடந்தகால மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய (கோர்வைகள்) புத்தகங்கள் வழங்கப்பட்டன.


கொடுமைக்கு எதிராக கொதிக்கும் பொங்கல் இது! – தாயகத்தில் பொங்கலுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு! Top News
[Saturday 2022-01-15 08:00]

பல ஆண்டுகளாக போரினால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு பொங்கல் எள்ளளவும் இனிப்பான பொங்கல் அல்ல என்பது தெரிந்ததே. தமிழீழத்தில் போர் முடிவுக்கு வந்தாலும் எமது உறவுகள் சிங்களக் கொடுங்கோல் ஆட்சியில் போரின் வடுக்களுடன் உண்ணப் போதிய உணவின்றி உடுக்கத் துணியின்றி இருக்க இடமின்றி நோய்க்கு மருந்தின்றி பல்லாயிரக்கணக்கானவர்கள் அல்லல்படுகிறார்கள். மக்களை மீள் குடியேற்றம் செய்து விட்டோம் என்று சிங்கள அரசு சொன்னாலும் அவர்களில் பெரும்பானோர் தமது சொந்த கிராமத்தில் முழுமையாக இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பவில்லை.


"பொங்குவோம் பொங்க வைப்போம்" - குடத்தனை வடக்கு! Top News
[Friday 2022-01-14 08:00]

அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கம் குடத்தனை வடக்கு வளாகத்தில் "பொங்குவோம் பொங்க வைப்போம்" என்ற கருதிட்டத்திற்கு அமைய ஆறாம் கட்டமாக அகரம் உதவும் கரங்கள் அமைப்பின் வளாகத்தினை அன்மித்து வாழுகின்ற கிராமங்களில் உள்ள நாளாந்த அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படும் குடும்பங்களின் நிலையினை அறிந்து பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்கு அகரம் புலம்பெயர் நல்லுள்ளங்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பல குடும்பங்களுக்கு பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்குரிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.


தமிழர் மரபுத் திங்கள் அறிவிப்பும் - தை பொங்கல் விழாவும்! Top News
[Friday 2022-01-14 08:00]

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய மொழியான தமிழ் மொழி அதன் பன்முகத் தன்மையுடன் மேலோங்கி வளர்ந்து நிற்கின்றது. இந்த தமிழ் மரபின் நேர்த்தியை அடையாளம் கண்டு, பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தமிழ் மக்களை மேம்படுத்தவும், ஆழமாக வேரூன்றிய இந்த தமிழ் மரபின் நுட்பத்தை உலகிற்கு உணர்த்தவும் தொலைநோக்குடன் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது. தமிழர்கள் ஆண்டு முழுவதும் பல தினங்களை கொண்டாடினாலும், தைப் பொங்கல் உள்ளடங்கிய மரபுசார்ந்த அறுவடை காலத்தை " தமிழ் மரபுத் திங்களாக" கருதுகிறது.


கனடா - யாழ் பெருமாள் நெல்மணி உதவும்கரங்களின் திட்டத்தின் முதல் பகுதியாக வவுனியாவில் கல்வி சார் உதவிகள்! Top News
[Thursday 2022-01-13 08:00]

தமிழ் பகுதிகளில் வாழும் மாணவர்களின் பரீட்சைப்பெறுபேறுகளை உயர்த்தும் யாழ் பெருமாள் நெல்மணி உதவும்கரங்களின் திட்டத்தின் முதல்பகுதியாக வவுனியாவில் இன்று 38 கல்விப்பொதுத்தராதர மாணவர்களுக்கு கடந்தகால மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய (கோர்வைகள்)புத்தகங்கள் வழங்கப்பட்டன.


சுவிஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திர முகப்பு விளம்பரத்தில் இடம்பிடித்த ஈழத்து தமிழ் பெண்! Top News
[Tuesday 2022-01-11 08:00]

தாயகத்தில் யாழ்-புங்குடுதீவை பூர்விகமாகவும் சுவிஸ் நாட்டை வாழ்விடமாக கொண்ட திரு. திருமதி.கேதீஸ்வரன் வளர்மதி தம்பதிகளின் புதல்வி சயந்தவி சுவிற்சர்லாந்தில் பிறந்து தாய் தந்தையாரின் அரவணைப்பில் பிற கல்வியை கற்று தாய்க்கல்வியையும் கற்று தனது தமிழ் கலாச்சார இசைத்துறை விழுமியத்தையும் பின்பற்றி வருகின்றார்.


வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற பண்டிதை செல்வி.யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவளவிழாவும் நூல் வெளியீடும்! Top News
[Monday 2022-01-10 22:00]

பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவள விழாவும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும் குருமன்காடு காளி கோவில் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.


வவுனியாவில் அன்னை தெரசா பராமரிப்பு கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு! Top News
[Tuesday 2021-12-14 08:00]

வவுனியா தம்பனைச்சோலை புளியடி வீதியில் அன்னை திரேசா பராமரிப்பு கைத்தொழில் நிலையம் (12.12.2021) அன்று திறந்து வைக்கப்பட்டது விசேட தேவைக்குட்பட்டவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தங்களுடைய வாழ்வை வளமாக்கும் நோக்குடன் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது.


தேசமாய் சிந்திப்போம் நாட்டை உருவாக்குவோம்! சிறப்புடன் கூடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News Top News
[Wednesday 2021-12-08 16:00]

தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat - State in the Making ) என்ற தொனிப்பொருளில் கூடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையானது, 'தேசமாய் சிந்திப்போம், நாட்டை உருவாக்குவோம்' என்ற உறுதியோடு நிறைவுகண்டது. இரு நாள் அமர்வாக இணையவழி (டிசெம்பர்4,5) இடம்பெற்றிருந்த இவ்வமர்வில் சர்வதேச அரசியல் பிரமுகர்கள், வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்து தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு வலுச்சேர்த்திருந்தனர்.


நில அபகரிப்பின் தாக்கத்தை பேசிய 'நிலம்' குறும்படம் இந்தியாவில் விருதினை வென்றது! Top News Top News
[Tuesday 2021-12-07 08:00]

ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்' குறும்படம் சிறந்த்துக்கான விருத்தினை வென்றுள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி ஃபிலிம் கிளப் மற்றும் பி.சி டி.வி- நெட்வொர்க் அமைப்புகள் நடாத்துகின்ற ஊட்டி குறும்பட விழாவிலேயே 2021ம் ஆண்டின் சிறந்த குறும்படத்துக்கான விருத்தினை வென்றுள்ளது.


27.11.2021 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு! Top News
[Tuesday 2021-11-30 20:00]

மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய, அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிரதான ஈகைச்சடரினை லெப். கேணல் அரவிந்தன் அவர்களின் சகோதரி திருமதி .உசா நடராஜா அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் விளக்குகளை ஏற்றினர். அதே நேரம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாவீரர் திரு உருவப்படங்களுக்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வருகை தந்திருந்த திரு. அகிலன் சந்திரராசா அவர்கள் விளக்குகளை ஏற்றினர். துயிலுமில்லப் பாடலைத் தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டதுடன் மலர்வணக்கமும் நடைபெற்றது.


தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 - யேர்மனி ஸ்ருட்காட்! Top News
[Monday 2021-11-29 21:00]

யேர்மனியில் அதிவேகத்துடன் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா விசக்கிருமியின் தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி அதன் சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டபங்கள் சிலமணித்தியாலத்திற்கு முன் மறுக்கப்பட்ட நிலையிலும் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டு மாவீரரின் துணைகொன்டு இந் நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு யேர்மனி வாழ் தமிழீழமக்கள் மாபெரும் புரிந்துணர்வுடன் ஒத்துளைத்து தேசிய மாவீரர் நாளினை சிறப்புற நடாத்துவதற்கு துணைநின்றனர்.


கான்பராவில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - அவுஸ்திரேலியா! Top News
[Monday 2021-11-29 21:00]

மாவீரர் நாள் நிகழ்வு கான்பராவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாவீரர் நாள் தொடர்பான உரைகள், இளையோர்களின் கவிதை மற்றும் நடன நிகழ்வு ஆகியன சிறப்பாக நடைபெற்றுள்ளன.


பேர்த்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் - அவுஸ்திரேலியா! Top News
[Monday 2021-11-29 21:00]

சாவினை வென்ற தமிழின வரலாற்று சிற்பிகளான தமிழீழ மாவீரர் நாளை போற்றும் புனிதநாள் நிகழ்வு பேர்த் மாநகரில் இவ்வாண்டு சிறப்பாக நடைபெற்றது. கனிங்ரன் சிவிக் மைதானத்தில் 27/11/2021 சனிக்கிழமை மாலை 6.05 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.


பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - அவுஸ்திரேலியா! Top News
[Monday 2021-11-29 20:00]

தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பொதுச்சுடரினை லெப்ரினன்ற் பொற்தேவன் அவர்களின் சகோதரன் திரு. டெனிஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் கொடி ஏற்றப்பட்டு, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை திரு. லெபோன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை மாவீரர்களோடு சேர்ந்து பயணித்த திரு. ரவி அவர்கள் அவர்கள் ஏற்றிவைத்தார்.


தஸ்மனியாவில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - அவுஸ்திரேலியா! Top News
[Monday 2021-11-29 20:00]

மாவீரர் நாள் நிகழ்வு தஸ்மனியாவில் இவ்வாண்டு சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாவீரர் நாள் தொடர்பான உரைகள் மற்றும் கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றுள்ளன.


மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - அவுஸ்திரேலியா! Top News
[Monday 2021-11-29 20:00]

தாயகவிடுதலைப்போராட்டத்தில் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட மாவீரர்களை ஒருசேர நினைவுகூருகின்ற தமிழீழ மாவீரர்நாள் இவ்வாண்டும் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாலை 5.00 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு இளைய செயற்பாட்டாளர் செல்வி. மது பாலசண்முகம் தலைமையில் நடைபெற்றது. பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளர் திரு.கருணாநிதி தயாநிதி அவர்கள் ஏற்றிவைத்தார்.


சிட்னியில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - அவுஸ்திரேலியா! Top News
[Monday 2021-11-29 20:00]

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிைரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு சிட்னியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சனிக்கிழமை 27-11-2021 அன்று மாலை 3 மணி வரை தொடர்மழையாக இருந்தபோதும் மழைக்குள் நின்று தயார்படுத்தலை செய்த ஏற்பாட்டாளர்களின் தொடர் ஒத்துழைப்புடன் மாலை 6.05 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா