Untitled Document
November 5, 2026 [GMT]
 
வவுனியா வடக்கில் வறுமைக்கோட்டுகுட்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு! Top News
[Monday 2020-04-13 17:00]

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தின தொழில் மூலம் வருமானம் பெறும் சுமார் 2000 மேற்பட்ட குடும்பம்பங்களுக்கு புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் ஊடாக 1000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திடம் கையளிக்கபட்டு கடந்த வாரத்தில் இருந்து வழங்கிவைக்கப்பட்டு வருகிறது.


ஒன்ராறியோ கொவிட்-19 பற்றிய தகவல்! Top News
[Monday 2020-04-13 08:00]

ஒன்ராறியோ அரசாங்கம் வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து 14,000 க்கும் மேற்பட்ட கைச்சுத்திகரிப்பு திரவம், நோய்க்காப்பு உடைகள், நோய்க்காப்பு முகக்கவசங்கள், தொற்றுநோய் பரிசோதனைக் கருவிகள் மற்றும் மூச்சியக்கி இயந்திரங்கள் (ventilators) போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான சமர்ப்பணங்களைப் பெற்றுள்ளது. 7,500 க்கும் மேற்பட்ட அவசரகால வழங்கல்களுக்கான சமர்ப்பணங்களின் மூலம், கொவிட்-19 நோய்த்தொற்றை முறியடிப்பதற்குத் தேவையான ஏறக்குறைய 90 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பின்வரும் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன:-


சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தமிழ் பெண்ணின் ஓவியம்! Top News
[Sunday 2020-04-12 16:00]

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் இருக்குமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் மக்கள் அனைவரும் தமது இல்லங்களில் இருந்து பல்வேறுபட்ட தமது கலைப் படைப்புக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் பயிற்றுவிப்பாளர்களாக இரு ஈழத்தமிழர்கள்!
[Sunday 2020-04-12 16:00]

சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர், இளையவர் மற்றும் வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுக்கள் சம்பந்தமான பயிற்றுவிப்பாளர்களாக சென்செய் காஜா தாசன், செம்பாய் தனு தங்கவேலு ஆகியோரைத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


வடமராட்சி கிழக்கில் 150 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்! Top News
[Sunday 2020-04-12 09:00]

புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியில் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேவில் வெற்றிலைகேணி ஆழியவளை உடுத்துறை வத்திராயன் மருதங்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் கடந்த 07.04.2020 அன்று வழங்கப்பட்டது. நாளாந்த கூலி வேலை செய்யும் குடும்பங்கள் மற்றும் சீவல் தொழில் செய்யும் குடும்பங்கள் மற்றும் மீன்பிடி தொழில் இன்மையால் பாதிக்கப்பட்டு மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.


ஆல் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள 26 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டன! Top News
[Saturday 2020-04-11 18:00]

ஆல் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள 26 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டன இவ் உதவிக்கு அனுசரணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

COVID-19 Relief Efforts by HomeLife Future Reality Inc Agents in Canada in Nedungeni area.


70 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல் - வட்டக்கச்சி! Top News
[Tuesday 2020-04-07 21:00]

சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் கொறோனோ தடுப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள வட்டக்கச்சிப் பகுதியைச் சேரந்த 70 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொருட்டகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியில் மேற்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.


ஸ்காபரோ முதியோர் தொடர்மாடிக் குடியிருப்பில் வசிக்கும் முதியோர்களுக்கான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஸ்காபரோ வணிகர்கள் வழங்கினர்! Top News
[Tuesday 2020-04-07 21:00]

ஏப்ரல் 6ஆம் திகதி, திங்களன்று, ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள், திரு. மனோ சுப்பிரமணியம் (TDOT Auto Collision) மற்றும் திரு. நவநீதன் கந்தசாமி (Allied Community Legal Services) ஆகியோருடன் இணைந்து 'ஸ்பிரெட் கைன்ட்னஸ்' எனும் முதியோர்களுக்கு உதவிக் கரம் கொடுக்கும் முயற்சியினூடாக ஸ்காபரோவிலுள்ள தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் 180 முதியோர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்கினர். 'ஸ்பிரெட் கைன்ட்னஸ்' என்ற முயற்சி முதியோர்களுக்கு உதவிக் கரம் கொடுக்கும் வகையில் மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் விதத்தில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொண்டுள்ள முதியோர் இல்லத்தில் வாழும் முதியோர்கள் அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விஜய் தணிகாசலம் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்ததையிட்டு இவர் இம்முயற்சியினை ஆரம்பித்து வைத்தார்.


இணுவைக்கந்தன் இளைஞர்களின் முயற்சியில் அடுத்த கட்ட உதவி! Top News
[Tuesday 2020-04-07 08:00]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் இணுவைக்கந்தன் இளைஞர்களின் முயற்சியில் அடுத்த கட்டமாக இன்றைய தினமும் (06.04.2020) ரூ 63,000/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மேலும் 20 குடும்பங்களுக்கு குறைந்தது 10 நாட்களுக்கு பயன்படக்கூடிய வகையில் வழங்கி வைக்கப்பட்டது. இன்றைய இவ் உலர் உணவுப் பொருட்களுக்கு உதவிகள் வழங்கிய கொடையுள்ளங்களாக பிரான்சில் வசிக்கும் சசிக்குமார் சுஜிதா ரூபா 40,000/=, சிவப்பிரமம் ரூபா 2000/= , ஒரு அன்பர் ரூபா 1000/=, சிவகுமார் சிவரூபன் ரூபா 5000/=, பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் கென்னடி வீதி கல்வியங்காட்டில் வசிப்பவர் ரூபா 10,000/=, சங்கீர்த்தனன் செட்டிவளவு ரூபா 5000/= ஆகியோர் அன்பளிப்புக்களை வழங்கியிருந்தனர்.


5G தொழில்நுட்பம் கொரோனா வைரசை உருவாக்கும் என்ற போலி சதி பல செல் கோபுரங்கள் எரிக்கப்பட்டன. அது எங்கே நடந்தது?
[Tuesday 2020-04-07 08:00]

5 ஜி தொழில்நுட்பத்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் இணைக்கும் என்ற ஆன்லைன் சதி கோட்பாடுகளின் பரவலுக்கு மத்தியில் பல செல் கோபுரங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன மற்றும் பொறியாளர்கள் துன்புறுத்தப்பட்டனர். வோடபோனின் நான்கு மொபைல் போன் டவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் தாக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட தளங்கள் 5G க்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆங்கில நகரமான பர்மிங்காமில் ஒரு மாஸ்ட் எரிக்கப்பட்டதைக் காட்டும் வீடியோ காட்சிகள் கடந்த வாரம் ஆன்லைனில் பரப்பப்பட்டன.


வவுனியாவில் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் அனைவர்க்கும் உதவி! Top News
[Tuesday 2020-04-07 08:00]

இன்று, வவுனியா மாவட்டத்தில் சிங்கள இனத்தைச் சேர்ந்த தரங்க என்று அழைக்கப்படும் மொத்த வணிக வியாபார நிலையத்தின் ஊடாக பலவிதமான காய்கறிகள் இலவசமாக பைகளில் இட்டு இன மத வேற்றுமை அற்று நகரப் பகுதியில் வந்த அனைவருக்கும் வழங்கி வைத்தார்கள்.............!! அந்த வணிக வியாபார முதலாளி தரங்க அவர்கள் பலமுறை அவரினுடைய வணிகத்தில் ஏழைகளுக்கு பொருட்கள் கொள்முதல் செய்ததன் ஊடாக நல்ல நட்புறவை உருவாக்கி நண்பராக இருக்கின்றேன்.....!!


கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமாதாநகர் 75 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்! Top News
[Monday 2020-04-06 09:00]

03.04.2020 திகதி சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரணைமாதாநகர் கிராமத்தில் வசிக்கும் பொருளாதார வறுமை மிக்க 75 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியில் மேற்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.


இணுவைக்கந்தனின் இளைஞர்களின் முயற்சியில் உதவிகள்! Top News
[Sunday 2020-04-05 20:00]

இணுவைக்கந்தனின் இளைஞர்களின் முயற்சியில் கொரோனா நோய் பரவலால் அன்றாட உழைப்பில்லாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக அன்பர்கள் நண்பர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் உணவுத் தேவையை போக்கும் முகமாக நிவாரணப் பொருள் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு கட்டமாக 20 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள் வழங்குவதற்கு சுவிஸர்லாந்தில் வசிக்கும் இணுவில் மஞ்சத்தடியை சேர்ந்த குணரட்ணம் ஐயாவின் மகளான இராஜமனோகரி அவர்களால் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்காக ரூபா 60,000 அன்பளிப்பு செய்யப்பட்டது.


மன்னார் மாவட்டம் 250 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்ப்ட்டது! Top News
[Sunday 2020-04-05 20:00]

03.04.2020 திகதியன்று மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, ஆகிர இரண்டு பிரிவுகளில் உள்ள எட்டு கிராமங்களில் வசிக்கும் பொருளாதார வறுமை மிக்க குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது. கிராமத்தில் பொருளாதார வறுமை மிக்க குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியில் மன்னார் மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.


சைவ முன்னேற்றச் சங்கம் பிரித்தானியாவின் அனுசரணையில் உதவிகள்! Top News
[Thursday 2020-04-02 08:00]

சைவ முன்னேற்றச் சங்கம் பிரித்தானியாவின் அனுசரணையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஶ்ரீ கோரக்க மாணிக்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபை இணைந்து ஶ்ரீ கோரக்கோவில், உதயபுரம் மற்றும் J புளோக் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 160 குடும்பங்களுக்கும் உலர் உணவு நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு அனைத்து விதத்திலும் உதவிய எமது உறவுகளுக்கு எனது பணிவன்பான நன்றிகள்.


நம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்! – சீமான்.
[Wednesday 2020-04-01 17:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள கொரோன விழிப்புணர்வு காணொளியில் கூறியிருப்பதாவது, பேரன்பிற்கினிய என் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! உலகெங்கிலும் கொரோனோ என்கிற இந்த நோய்த்தொற்றி நுண்ணுயிரியால் பேரச்சம் பரவியிருக்கிறது. உலகமே ஒடுங்கி, உறைந்து கிடக்கிறது. இந்தச் சூழலில் நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இதை எதிர்கொள்ள வேண்டியதேவை உருவாகியுள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்துவதுபோல் நம்முடைய கைகளை அடிக்கடி கழுவி தூய்மைப்படுத்திக் கொண்டு, வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைக் கொடுப்பதை தவிர்த்தல் என நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவை உள்ளது.


உலகிலே நடந்த முதல் மெய்நிகர் குடும்ப ஒன்றுகூடல்! (Virtual Family Get-together) Top News
[Monday 2020-03-30 13:00]

இன்று கொரோனா வைரஸ் காரணமாக கனடா டொரண்டோவில் 15வது நாள் நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்து வருகிறோம்... இங்கு பொதுவாக வாரம் சுமார் 25க்கும் மேற்பட்ட கேளிக்கை மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் நடப்பது உண்டு... இப்போது சமூக நலனுக்காக இம்மாதிரி நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துள்ளோம்.... ஆனால் மக்கள் சகா வீட்டிலேயே அடைந்திருக்கும் இந்த நேரம் அவர்களுக்கு ஓர் மன அழுத்தம் எற்பட்டிருக்கலாம் என்று அய்யப்பட்ட நான் ஏன் வீட்டில் இருந்தே அப்படி ஒர் நிகழ்ச்சி ஒன்றை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தி அவர்களின் மனதை ஓர் பீதி நிலையில் இருந்து மாற்றி உற்சாக மற்றும் தைரிய நிலைக்கு கொண்டு வர முடிவெடுத்தேன்....


ஊரடங்கு சட்டம் நீக்கம்: பெரும் எண்ணிக்கையானோர் மலையக நகரங்களுக்கு வருகை,சில்லறை மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசை! Top News
[Monday 2020-03-30 13:00]

1990 நோயாளிகாவு வண்டி மோதி இரு முச்சக்கரவண்டிகள் சேதம். கொழும்பு ,கம்பகஹ,புததளம்,கண்டி மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று (30) திகதி காலை ஆறு மணிக்கு தளர்த்தப்பட்டன. இதனை தொடர்ந்து மலையக நகரங்களை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கூடியிருந்தன. இதனால் சில்லறை கடைகள்,சதோச விற்பனை நிலையம்,மருந்தகங்கள்,மரக்கறி கடைகள்,எண்ணெய் நிரப்பு நிலையங்கள் ஆகியவற்றி பெரும் எண்ணிக்கையிலானோர் கூடி இருந்ததுடன் நீண்ட வரிசையும் காணப்பட்டன. சுகாதார அறிவுறுத்தல்களை பேணு அடிக்கடி பொலிஸார் வலியுறுத்தியதுடன்.


முகாம்களில் உள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும்! - சீமான் அறிக்கை. Top News
[Sunday 2020-03-29 17:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழச்சொந்தங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 110 அகதிகள் முகாம்களில் சுமார் 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 68,600க்கும் மேற்பட்டவர்களும், முகாம்களுக்கு வெளியே சுமார் 35,000 க்கு மேற்பட்டவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இவைத் தவிர சிறப்பு முகாம் என்கிற தடுப்பு முகாம்களிலும் ஈழத்தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


சத்தமில்லாது தொடரும் சிவசக்தி ஆனந்தனின் நிவாரணப்பணிகள்!.. Top News
[Sunday 2020-03-29 17:00]

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பட்ட பகுதிகளில் சத்தம் இல்லாமல் தனது நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.


புலம்பெயர் தேசங்களில் கொரோனா நோய்க்கு பலியான தமிழர்கள்! Top News
[Sunday 2020-03-29 08:00]

முடிந்தளவு எம்மையும் பாதுகாத்து எமது அயலவர்க்களையும் பாதுகாத்து விழிப்பாக அவதானமாக இருக்கவேண்டிய நெருக்கடி கால கட்டாயத்தில் இருக்கின்றோம். சொந்தபந்தங்களையும் வாழ்ந்த மண்ணையும் விட்டு வெளிநாட்டிற்கு வந்து இப்படியொரு சாவுக்குள் அகப்படவேண்டிய சூழலுக்குள் நாம் இருக்கின்றோம். பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தவர்களான குணரட்ணம் கீர்த்திபன், சாந்தன், பொன்னன் குலசிங்கம் , வேலுப்பிள்ளை சிவசுப்ரமணியம் (சிவா) ஆகிய எம்மவர்களே கொரோனா வைரசினால் பலியாகியுள்ளனர். இவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக. #covid-19


அருணலு மக்கள் முன்னணியால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன! Top News
[Saturday 2020-03-28 21:00]

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாகவும் வரட்சி காரணமாகவும் மலையகப்பகுதியில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட பல வறிய குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சில குடும்பங்கள் தங்களுடைய அன்றாட உணவினை கூட பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு மிகவும் எவ்வித நிவாரணமும் இன்றி மிகவும் வறிய நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்டங்களில் வாழுகின்ற பல குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை அருணலு மக்கள் முன்னணி இன்று (28) திகதி முதல் ஆரம்பித்துள்ளது.


கொரோனா-வைரஸ் ரூபாய் 7 கோடி வழங்கிய செல்வந்தர் தம்மிக்க பெரேரா! Top News
[Friday 2020-03-27 09:00]

இலங்கையில் உள்ள மிகப் பெரிய பணக்காரரான தம்மிக்க_பெரேரா ஆதார வைத்தியசாலைக்கு [ IDH ] இலங்கைப் பணத்தில் ரூபாய் 7 கோடியை தொற்று நோயை குணப்படுத்துவதற்காக நவீன மருத்து வசதிகள் கொண்ட கருவிகளை இலவசமாக வெளிநாட்டில் இருந்து பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகளை வழங்கியுள்ளார்........!! கொரோனா_வைரஸ் தொற்று காரணமாக சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஐ.சி.யுவில் பராமரிக்க ஆறு விசேடமான படுக்கைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது......!


நிவாரணப் பணிகளில் முன்மாதிரியாக திகழும் கிடாச்சூரி கிராமம்! Top News
[Friday 2020-03-27 09:00]

அத்தியாவசிய தேவைகளையுடைய மக்களுக்கான நிவாரணப் பணிகளாக உலர் உணவுப் பொருட்களை வழங்குவதில் கிடாச்சூரி கிராமம் ஏனைய கிராமங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது. கொறோனா வைரசின் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தனிமைப்படுத்தல் திட்டத்தினை மேற்கொள்வதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது.இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அன்றாடம் தினசரி வருமானங்களுக்காக வேலைக்கு சென்று வரும் மக்கள் வருமானம் இல்லாது பெரிதும் கஷ்டப்படுகின்றனர்.


கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்க சுத்தம் செய்யப்படும் வவுனியா நகர்! Top News
[Monday 2020-03-23 21:00]

வவுனியா நகரசபை தலைவரின் உத்தரவுக்கமைய வவுனியா நகரம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்தும், வடக்கு மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, வடக்குக்கான போக்குவரத்து வீதிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.


தமிழ் இளையோர் அமைப்பால் சிறப்பாக நடத்தப்பட்ட ஈழத்தின் விதைகள் - இளந்தளிர் 2020! Top News
[Tuesday 2020-03-17 18:00]

இளந்தளிர் நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் முதலாக நடைபெற்று பின்னர் 2006இ 2007ம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு எமது தேசியப் போராட்டம் பின்னடைவை சந்தித்த பின்னர் தமிழ் இளைளோர் அமைப்பு, இலங்கை அரசாங்கத்தினால் நிறைய சவால்களை சந்தித்த போதும் அனைத்திற்கும் முகம்கொடுத்து சவால்களை சமாளித்து, 2011இ 2015ம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது. இவ் ஆண்டு சிறப்பு 15வது ஆண்டாக இளந்தளிர் இடம்பெற்றது. தலைவரின் சிந்தனையை மனதில் கொண்டு ‘ஈழத்தின் விதைகள்’ எனும் பொருளைவைத்து நடாத்தப்பட்டது. ‘‘இலட்சிய விதை வளர்த்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.’’ என்ற தலைவரின் கூற்றை மெய்யாக்கும் வகையில் தமிழ் இளையோர்கள் இளந்தளிர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


பொய்யா விளக்கு காட்சிகள் Toronto மற்றும் London நகரங்களில் பிற்போடப்பட்டுள்ளன! Top News
[Friday 2020-03-13 07:00]

ஆதரவாளர்களின் வேண்டுகோளின்படி Toronto மற்றும் London நகரங்களில் March, April மாதங்களில் நிச்சயிக்கப்பட்ட காட்சிகள் பிற்போடப்பட்டுள்ளன. May மாதம், 02ம், 17ம், 30 ம் திகதிகளில் முன்னர் அறிவித்தது போல் காட்சிகள் காண்பிக்கப்பட உள்ளன. Due to requests from our supporters, shows scheduled at Toronto and London in the months of March and April are postponed to a later date. The shows scheduled for May 02nd, 17th, and 30th will go ahead without any changes. These changes are due to the current situation in the city and around the world.


கயிறு திரைப்பட வெளியீடு எஸ் ஆர் குணா அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பு - மார்ச் 08 2020! Top News
[Tuesday 2020-03-10 18:00]

மார்ச் 13ம் 14 ம் 15ம் திகதிகளில் டொரோண்டோ திரை அரங்குகளில் Dynevor Express Kumar Alagaratnam அவர்களின் பெரும் ஆதரவுடன் கயிறு திரைப்படம் வெளியீடு செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் ஐ கணேஷ் இயக்கத்தில் ஈழத்து நாயகன் எஸ் ஆர் குணாவின் நடிபில் உருவாக்கம் பெற்றுள்ளது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் இணை தயாரிப்பாளராக ஈழத்து நாயகன் குணா செயல்பட்டுள்ளார். காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக் செய்துள்ளனர்.


ரொறன்ரோ நகரில் Woodside திரையரங்கில் பொய்யாவிளக்கு காட்சிகள்! Top News Top News
[Friday 2020-03-06 08:00]

போர்க்கால உண்மைச்சம்பவங்கள் சார்ந்த திரைப்படங்கள் சர்வதேச திரைதுறையில் அதிகம். யூதர்கள் தமக்கு நேர்ந்த இனப்படுகொலையை இன்றும் திரையில் சர்வதேச தரத்தில் கொடுக்கிறார்கள். பொய்யாவிளக்கு தமிழரின் அதே திசை நோக்கிய ஒரு படி. சிறிலங்காவின் ஈழ தமிழரின் மீதான போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை வரலாற்றை திரைக்கு உரியதாக நேர்த்தியான திரைக்கதை மூலம் முதலில் இருந்து இறுதிவரை பார்வையாளரை சிறு சத்தமே இல்லாமல் இருக்கையில் இருத்தும் திறன் கொண்ட படைப்பு இது என்று அண்மையில் இந்த படத்தை London நகரில் சிறப்பு காட்சியாக பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர். ஈழ தமிழரின் ஒரு மறக்க முடியாத காலத்தினை எதிர்கால சந்ததிக்காக வைத்தியர் வரதராஜா மீண்டும் பழையன மீட்டு திரையில் வாழ்ந்துள்ளார். அதை மிக அழுத்தமாக இயக்குனர் தனேஷ் கொடுத்துள்ளார்.


மெட்ரோ மாலை - மலேசியா திரைப்படம் |"பொய்யா விளக்கு" ஈழத்திரைப்படம் திரையிடல்! Top News
[Tuesday 2020-03-03 20:00]

11வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவின் இந்த மாதத்திற்கான திரையிடல்! மகளிர் தினத்தை முன்னிட்டு மலேசியா வாழ் தமிழ் பெண்களின் குடும்பக்கதை பேசும் "மெட்ரோ மாலை", அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஈழத்தின் கதை பேசும் திரைப்படம். "பொய்யா விளக்கு" திரையிடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08.03.2020 இடம்பெறவுள்ளது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட அனைத்து வளாக மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், பெற்றோர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். உங்கள் அனைவரின் ஆதரவின் ஊடாகவே எமக்கான திரைத்துறையைக் வளர்த்து எடுக்க முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கை! வாருங்கள் ஆதரவு தாருங்கள் !

Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா