Untitled Document
November 5, 2026 [GMT]
 
உடுவில் கால்நடை வைத்திய பணிமனையின் கால்நடை மருத்துவர் P.ஜெயதாட்ஷாயினி அதிகார துஷ்பிரயோகங்கள்! Top News
[Sunday 2020-06-07 10:00]

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறிய மக்கள் தங்களது வாழ்வாதரத்திற்காக ஆடு,மாடு,கோழி போன்ற விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்த்து வருகின்றார்கள். இந்நிலையில் இக் கால்நடைகளுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டிய உடுவில் கால்நடை வைத்திய பணிமனை உரியமுறையில் சேவையை வழங்காது அலட்சியமாக நடந்து கொள்கின்றது.


டொரண்டோ - ஸ்கார்பரோ நகரில் நடைபெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Wednesday 2020-05-20 09:00]

நிகழ்வானது குறுகியநேர ஏற்பாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகையுடன் சுகாதார விதி முறைகளுக்கு அமைய தமிழ் மக்கள் அதிகம் வாழும் மார்க்கம் ஸ்கார்பரோ பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாகிய Markham & Steels. சந்திப்பு பகுதியில் இடம்பெற்றது. நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாக 30 நிமிட நேரத்துக்குள் நடைபெற்று முடிந்தது.


உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்த உலகளாவிய முள்ளிவாய்க்கால் இணையவழி நினைவேந்தல் கூட்டம்! Top News Top News
[Wednesday 2020-05-20 08:00]

உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்த வகையில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 11வது ஆண்டு தமிழீழத் தேசிய துக்க நாள் கூட்டம் இணைவழியே உலகத்தமிழர் முள்ளிவாய்கால் நினைவேந்தல் கூட்டடமாக சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பல்வேறு கெடுபிடிகளுக்கு நடுவேற தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்க, உலகத்தமிழர்கள் உள்ளுணர்வோடு கூடியிருந்தனர்.


தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கவனயீர்ப்பு! Top News
[Wednesday 2020-05-20 08:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2020 திங்கட்கிழமை அன்று ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை முன்றலில் பி.பகல் 15.00 மணி தொடக்கம் 16.00 மணிவரை நடைபெற்றது. இந் நிகழ்வில் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படு கொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் மக்கள் மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.


மே-18: இன எழுச்சி நாள் - சீமான் எழுச்சியுரை! Top News Top News
[Wednesday 2020-05-20 08:00]

சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இனம் பட்ட துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். புலமும், களமும், தமிழகத் தாயகமும் வலிமையற்று அதிகாரமற்றிருக்கக் கையறு நிலையில் நிற்கிற தமிழர்கள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொண்டு, உள்ளத்தில் வன்மத்தை உரமேற்றிக் கொண்டு மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தி கொரோனாவுக்கு எதிராக போராடும் களப்பணியாளர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை! Top News
[Wednesday 2020-05-20 08:00]

துயர்தோய்ந்த அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நெஞ்சில் சுமந்தவாறு, மானிடநேயம் கொண்ட ஈழவிடுதலைப்பண்பை வெளிக்காட்டும் உலகிற்கு வெளிக்காட்டும் வகையில், மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கொரோனாவுக்கு எதிராக போராடும் பிரித்தானிய சுகாதாரகளப்பணியாளர்களுக்கு தனது தோழமையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வெளிப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இதுவரை 246 406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 34 796 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் Croydon university hospital, kinston hospital, northwick park hospital, liverpool heart and chest hospital,royal Bournemouth hospital ஆகிய NHS மருத்துவமனைகளுக்கு ஓரு தொகுதி உலர்உணவுகள், குடிநீர்வகைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செய்தியோடுவழங்கப்பட்டிருந்தன.


யேர்மனி டுசுல்டோர்வ் நகரில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Tuesday 2020-05-19 08:00]

18.5.2020 திங்கட்கிழமை யேர்மனி டுசுல்டோர்வ்; நகரத்தில் தமிழின அழிப்பு நாளின் உச்ச நாளாகிய மே18 இன் நினைவேந்தல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வு வழமைபோல் யேர்மனியின் மத்தியமாகாண பாராளுமண்றத்திற்கு முன்பாக நடைபெற்றது. கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் அதிகரித்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவ் வேளையில் அதற்கான யேர்மனிய சட்ட ஒழுங்குகளைப் பேணியபடி நூற்றுக்கும் அதிகமான மக்கள் உணர்வுபூர்வமாக இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தங்கள் உறவுகளுக்கு மலர்தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.


அனுமதி மறுக்கப்பட்போதும் வலி. கிழக்கு பிரதேச சபையில் ஈகைச்சுடறேற்றி அஞ்சலி! Top News
[Monday 2020-05-18 13:00]

பொலிஸ் அனுமதி மறுப்பு: புலனாய்வாளர்களின் இடையூறுகளின் மத்தியிலும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை 10.30 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச சபையில் கொரோனா வைரஸ் சுகாதார முன்னெச்சரிக்கையுடன் இடம்பெற தவிசாளரினால் ஏற்பாடாகியிருந்தது. எனினும் பிரதேச சபைக்கு வருகைதந்த பொலிஸார் நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை எனத்தெரிவித்து தடைவிதித்தனர்.


கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் களப்பணியாளர்களுக்கு கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை! Top News
[Saturday 2020-05-16 08:00]

கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதகுலத்திற்கு பெரும் உயிரச்சுறுத்தலாக மாறியுள்ள இவ்வேளையில், இதனை எதிர்கொண்டு மருத்துமனைகளில் போராடிவரும் சுகாதாரப்பணியாளர்களுக்கான தனது தோழமையினை தொடர்ந்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது. கனடாவின் தனது தொடர் நடவடிக்கையாக Scarborough Hospital Birchmount Campus மருத்துவமனைக்கு தனது தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் உணவுபொதிகளை வழங்கியுள்ளது.


முகக் கவசமில்லா எவரும் பொது போக்குவரத்தில் பயணஞ் செய்ய அனுமதிக்கக்கூடாது: ஹட்டன் பொலிஸார் உத்தரவு! Top News
[Wednesday 2020-05-13 08:00]

ஹட்டன் பகுதியில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள், முகக்கவசமில்லாத எவரையும் பொது போககுவரத்து சேவையில் அனுமதிக்கக் கூடாது. என ஹட்டன் பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் P.று.ளு.டீ. பலிபான இன்று (12) திகதி ஹட்டன் பொது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகள் மற்றும் நடத்துனகளை வலியுறுத்தினார். ஹட்டன் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலினை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொது போக்குவரத்து சேவையில் இந்நடவடிக்கைகள் முறையாக நடைபெறாமை காரணமாக இந்த நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டன.


வாசம் உதவும் கரங்கள் கறடி புகழ் எனும் கிராமத்தில் உதவி! Top News
[Wednesday 2020-05-13 08:00]

எமது மக்களுக்கான உதவிகளை வாசம் உதவும் கரங்கள் அமைப்பினராகிய நாம் எமது புலம்பெயர் சொந்தங்களின் முழுமையான உதவியுடன் வழங்கியவண்ணமே உள்ளோம். அதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு வலயிறவு பிரதேசத்திற்க்கு உட்ப்பட்ட கறடி புகழ் எனும் கிராமத்தில் வாழும் 42 குடும்ப்களுக்கும் மயிலம்பாவெளி பிரதேசத்தில் உள்ள 6 விதவை தாய்மாருக்குமாக 48 குடும்பங்களுக்கு வழங்கிவைத்தோம்.


கனடா யாழ் பெருமாள்கோவில் உறவினர் ஒன்றியத்தால் 110 குடும்பங்கள் பயனை பெற்றனர்! Top News
[Tuesday 2020-05-12 08:00]

கனடா யாழ் பெருமாள்கோவில் உறவினர்ஒன்றியத்தால் மூன்றாவது தடவையாகவழங்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள். இம்முறை யாழ் பெருமாள்கோவில்சுற்றுவட்டாரத்திலுள்ள வருமானம் குறைந்த 110 குடும்பங்கள் பயனை பெற்றனர்.ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் சுகாதார திணைக்களத்தின்அனுமதி பெற்று பயன்பெறுவோர்.


கைவிடப்பட்ட தோட்ட விடுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த இருவர் டயகம பொலிஸாரால் கைது Top News
[Monday 2020-05-11 17:00]

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம கிழக்கு தோட்டத்தில் கைவிடப்பட்ட தோட்ட விடுதியொன்றில் மிகவும் ரகசியமான முறையில் பாரிய அளவில் கள்ளச்சாராயம் ( கசிப்பு ) காய்ச்சி வந்த இருவரை டயகம பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். டயகம பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினையடுத்து பொலிஸார் நேற்று இரவு 10 மணியளவில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.அதன்போது கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 7680 மில்லிலீற்றர் கள்ளச்சாராயம் ( கசிப்பு ) 180000 மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பீப்பா,எரிவாயு சிலிண்டர் , எரிவாயு அடுப்பு , முட்டிகள்,யூரியா உரம் உட்பட பல பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.


மலையகப்பகுதியில் அரச மற்றும் தனியார் துறைகளின் பணிகள் வழமைக்கு திரும்பி வருகின்றன! Top News
[Monday 2020-05-11 17:00]

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அமுல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் கொழும்பு மற்றும் கம்பகஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இன்று (11) காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதனை தொடர்ந்து அரச மற்றும் தனியார் துறைகளின் பணிகள் வழமைக்கு திரும்பி வருகின்றன. மலையகப்பகுதியிலும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணிகள் வழமைக்கு திரும்பி வருவதனை காணக்கூடியதாக இருந்தன. பணிகளுக்கு செல்வோரின் நலன் கருதி இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களும் தனியார் பஸ்களும் சேவைகளை ஆரம்பித்திருந்தன.


ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 50 ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு சீமான் உதவி! Top News Top News
[Monday 2020-05-11 17:00]

ஊரடங்கால் வருவாயின்றி உணவின்றி தவிப்பதாக உதவிகேட்டு வந்த சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் 50 ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 10-05-2020 காலை அவரது இல்லத்தில் வழங்கினார்.


பேர்லினில் "வேரோடும் துயரம்"! Top News
[Sunday 2020-05-10 17:00]

முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை இன்றைய தினம் பேர்லின் வாழ் மக்கள் பார்வையிட்டனர்.


யாழ் மூதாட்டிக்கு புதிய வீட்டினை கட்டிக் கொடுத்த தென்னிலங் கைப் பெரும்பான்மை இன பெண்! Top News
[Wednesday 2020-05-06 07:00]

உரும்பிராய் மேற்குப் பகுதியில் முதியவர் ஒருவருக்கு புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட J/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண்மணி தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேச செயலகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.


கனடா - பைரவி நுண்கலைக்கூடத்தின் ஐயம் இட்டுண் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உதவி! Top News
[Friday 2020-05-01 22:00]

கனடா - பைரவி நுண்கலைக்கூடத்தின் ஐயம் இட்டுண் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேலையிழந்து வறுமையில் வாழும் 50 குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா பெறுமதியான உலருணவுப்பொருட்கள் கடந்த 20/04/2020 அன்று வழங்கிவைக்கப்பட்டது.


உழைப்போ உலகின் மூலதனம்!.. நம்பிக்கையோடு உழைத்து வெற்றிபெறுவோம்!..
[Friday 2020-05-01 22:00]

எஸ். கருணாஸ் எம்.எல்.ஏ., மே நாள் வாழ்த்து!

வியர்வையும் இரத்தமும் கசிந்துருகும் நாள் மேநாள் ஆகும். உழைப்பவர்களின் மேன்மையான இந்த மே தினத்தில் உழைப்பின் உயர்வை உணர்வோம்! இந்த மே நாள் வரலாறு என்பது உழைப்பாளிகள் உலகை எழுதிய பெரும் வரலாறு! தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை போராடி வென்ற நாள் உன்னத நாள் இந்த உழைப்பாளர் திருநாள்!


உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உறுதியேற்போம்! - சீமான்.
[Friday 2020-05-01 22:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தங்கள் ஒப்பற்ற உழைப்பால் உலகைச் சீரமைத்த உழைப்பாளர்களின் உன்னதத் திருநாள் மே தினமாகும். நமக்காக, நம் தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக, நம் பாதுகாப்புக்காக நாள்தோறும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரின் வாழ்க்கை காலாகாலத்துக்கும் கவலைக்கிடமாகவே இருக்கிறது. காடாகவும், மலையாகவும் கிடந்த உலகை வாழுமிடமாகவும், தெருவாகவும் வடிவமைத்தவர்கள் தொழிலாளர்களே. உலகின் வளர்ச்சியைத் தூக்கிச் சுமக்கும் முதுகெலும்புகளாக வாழும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கான வளர்ச்சி இன்றைக்குச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.


தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தொகையினைத் தள்ளுபடி செய்வதா? - சீமான் கண்டனம்!
[Friday 2020-05-01 22:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாட்டு மக்கள் யாவரும் செய்வதறியாது வீட்டில் முடங்கிக் கிடக்கையில், 45 கோடி அடித்தட்டு உழைக்கும் மக்கள் பசியோடும், பட்டினியோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முன்வராத மத்திய அரசு, தனிப்பெரு முதலாளிகள் பெற்ற கடன்தொகை 68,000 கோடி ரூபாயினைத் தள்ளுபடி செய்திருக்கும் செய்தி நாட்டு மக்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது.


கனடா தமிழ்ச் சங்கம் நடத்திய ஐந்து வெற்றிகரமான மெய்நிகர் நிகழ்ச்சிகள்! Top News Top News
[Friday 2020-05-01 21:00]

நாம் தற்சமயம் சந்தித்து வரும் கோரோணா வைரஸ் தோற்று காரணமாக, அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டும் அணைத்து நிறுவனங்களும் மூடியிருக்கும் சூழ்நிலையில் மக்கள் அனைவரும் ஒரு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றோம். இந்த சூழ்நிலையை மாற்றி ஒரு புத்துணர்வு தரும் வகையில் சோதனை நிகழ்வாக உலகின் முதல் முறையாக 5 மணி நேரத்திற்கும் மேலாக மார்ச் 28, 2020ம் தேதி சரியாக இரவு 7:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 12:30 மணி வரை நிகழ்வுகள் ஸ்கேய்ப் மற்றும் யூடுயூப் செயலிகளை பயன்படுத்தி பங்குபெற்ற கலைஞர்களும் சரி பார்வையாளர்களும் சரி அவர் அவர் வீட்டில் இருந்தே கலந்து கொண்டது மிகச்சிறப்பு.


கொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona - Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Monday 2020-04-27 17:00]

கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதகுலத்திற்கு பெரும் உயிரச்சுறுத்தலாக மாறியுள்ள இவ்வேளையில், இதனை எதிர்கொள்ளும் வகையில் உலகத் தமிழர்களுக்கான சிறப்புக்குழுவினை ( Corona - Tamils Task Force) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்து செயற்படத் தொடங்கியுள்ளது.


கனடா யாழ் பெருமாள்கோவில் உறவினர் ஒன்றியத்தால் தாயகத்தில் உதவி! Top News
[Thursday 2020-04-23 20:00]

கனடா யாழ் பெருமாள்கோவில் உறவினர்ஒன்றியத்தால் இரண்டாவதுதடவையாக வழங்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள். இம்முறை யாழ் சன்மார்க்கபாடசாலை மாணவர்களில் வருமானம் குறைந்த பெற்றோர்களுக்கும் மற்றும்சுற்றுவட்டாரத்திலுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் மொத்தமாக 140 குடும்பங்கள் இம்முறை பயனை பெற்றனர். நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் , இதற்கு முன்னின்று உழைத்த அனைவருக்கும் கனடாஒன்றியம் சார்பாக நன்றிகள்.


பல ஈழத்தமிழர்களின் குடும்ப மருத்துவரான மருத்துவர் K.SOUVANLASY அவர்கள் மரணம்! Top News
[Thursday 2020-04-23 08:00]

France ன் 93 ம் பிராந்தியத்தில் தமிழர் செறிந்து வாழும் நகரில் ஒன்றான SEVRAN ல் மருத்துவர் K.SOUVANLASY அவர்கள் ஆட்கொல்லி கிருமியின் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளமை கவலைக்குரியது..


மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நினைவுகூரப்பட்ட முதன்நிகழ்வாக அன்னை பூபதி! Top News
[Monday 2020-04-20 08:00]
தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது மூலோபாயங்களை அடைய, காலத்தின் நிலைமைகளுக்கு அமைய தனது தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்வது போல், தற்போதைய உலக நிலைமைகளுக்கு அமைய, நினைவேந்தல் நிகழ்வுகளையும், மக்கள் சந்திப்புக்களையும் மெய்நிகர் தகவல்தொழில்நுட்ப பரிமாணத்தில் மாற்றியுள்ளதன் முதன்நிகழ்வாக தமிழீழத் தாய்மார்களது தியாகத்தின் குறியீடாக இருக்கின்ற நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 32வது ஆண்டு தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நினைவுகூரப்பட்டது.

“அப்பா இனி வரமாட்டார்” 3 பெண் குழந்தைகளின் அழுகுரலால் நிரம்பியது பிரான்ஸ் மருத்துவமனை! Top News
[Saturday 2020-04-18 17:00]

"மருத்துவமனையில் அதிர்ச்சியான செய்தியை மருத்துவர்கள் கூறுகின்றார்கள், மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள், அப்பா இனி திரும்பி வரமாட்டார் " ஜந்துபேர் அடங்கிய குடும்பத்தில் குடும்பத்தலைவனுக்கு திடீரென காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது. அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அறைக்குள் ஒருகிழமையாக மருந்து எடுத்துக் கொண்டு தனிமையில் இருக்கிறார். அவருக்கு கதவைத்திறந்து சாப்பாடு மனைவியினால் மூன்று வேளையும் வழங்கப்படும். அப்பொழுது பிள்ளைகள் கதவின் இடைவெளிஊடாக ஏக்கத்துடன் அப்பாவைப் பாப்பார்கள். மேலும் அவருக்கு நிலமை மோசமடைய உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு எடுத்து நிலைமையை கூறினார்கள். உடனே அம்புலன்ஸ் அழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.


19 மாவட்டங்களுக்கு 10 மணித்தியாலம் ஊரடங்கு சட்டம் தளர்வு மலையக நகரங்களில் பெரும் மக்கள் வெள்ளம் சுகாதார அறிவுறுத்தல்கள் புறகணிப்பு! Top News
[Friday 2020-04-17 08:00]

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (16) காலை ஆறு மணியுடன் 19 மாவட்டங்களுக்கு 10 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்டதனை தொடர்ந்து, மலையக நகரங்களில் காலை வேளையில் பேரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம் படையெடுத்துள்ளனர். இவ்வாறு படையெடுத்துள்ள மக்கள் சில்லறை வர்த்தக நிலையங்கள், வங்கிகள், சத்தோச விற்பனை நிலையங்கள்,அடகு பிடிக்கும் இடங்கள்,கார்கீல்ஸ் புட்சிட்டி மரக்கறிகடைகள் என எல்ல இடங்களிலும் கூடியிருந்தனர். பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்திருந்த போதிலும் சமூக இடைவெளி பேணுவதனை அவதானிக்க முடியாதிருந்தன.


இலங்கையில் மூன்று குழந்தைகளை ஒரே நேரத்தில் பெற்ற தாய் உயிரிழந்தார்! Top News
[Wednesday 2020-04-15 08:00]

ஒரு தாய் நேற்றைய தினம் கம்பஹா கிரிந்திவெல வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து துன்பகரமாக இறந்துவிட்டார். பொதுவாக, மனித கருப்பை இரண்டு குழந்தைகளுக்கு மேல் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இந்த கவலை ஒரு காலத்தில் குழந்தை இல்லாதது என்று அறியப்படுகிறது. சில நேரங்களில் குழந்தைகளை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் ஹார்மோன் தூண்டுதல் முறைகள் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை பழுக்க வைக்கும். மூன்று விதைகளை ஒரே நேரத்தில் உரமிடுவதால் இது ஏற்படுகிறது. ஒரு கரு மூன்று குழந்தைகளாக வளர்வது மிகவும் அரிது. சில நேரங்களில் பிரிக்கப்பட்ட கருக்கள் உருவாகி ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரட்டையர்களை உருவாக்குகின்றன. வளர்ந்து வரும் இரட்டையர்கள் நஞ்சுக்கொடியின் மூலம் அவர்களின் ஊட்டச்சத்தைப் பெறுகிறார்கள். சில நேரங்களில் கரு சரியாக வளராது, மூன்று கருக்களும் சமமாக வளராது.


கனடியத் தமிழர் தேசிய அவையின் கோவிட்-19 அவசரகால வேலைத்திட்டம் பற்றிய அறிவித்தல்!
[Wednesday 2020-04-15 08:00]

போரினால் தொடர்ச்சியாக அழிவுகளுக்குட்பட்ட எம் தாயக மக்களில் பல குடும்பங்கள் இன்றுள்ள சூழ் நிலையில் மிக மோசமான உணவுத் தட்டுப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். கோவிட்-19 தொற்றுக் காரணமாக நாட்டில் தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதனால்; அன்றாடம் தொழில் செய்து வாழ்க்கை நடாத்துகின்ற எமது உறவுகளும் தங்களது தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டி உள்ளதனால் அன்றாட உணவிற்கே பெரிதும் துன்பப்படுகின்றனர். முக்கியமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், மலையகம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பின் தங்கிய கிராமப்புறங்களில் இத் தட்டுப்பாடு மிகவும் மோசமாக நிலவுகின்றது.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா