Untitled Document
November 22, 2024 [GMT]
 
மலையகம் புஸ்ஸல்லாவையில் பிள்ளையார் சதுர்த்தி! Top News
[Wednesday 2016-09-07 19:00]

அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான 27 வது ஆவணி விநாயகர் மஹா சதுர்த்தி விழாவில் விநாயகர் மஹா சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இன்று (07.09.2016) பகல் 12.00 மணிக்கு பிரமாண்டமான ஸ்ரீ மஹா கணபதி திருவுருவ சிலைக்கு விசேட பூஜை நிகழப்பெற்று, விநாயகர் திருவுருவ சிலை மங்கள வாத்தியங்கள் முழங்க, கரகம், காவடியடன் வெகு விமர்சையாக புசல்லாவ நகரினூடாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, இரட்டைப்பாதை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் அருகிலுள்ள ஆற்றில் இறக்கும் வைபவம் இடம்பெற்றது.


யாழ்ப்பாணத்தில் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்க போராட்டங்கள்! - கண்டுகொள்ளாமல் சென்றார் Top News
[Friday 2016-09-02 18:00]

ஐ.நா பொதுச்செயலர் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த நிலையில், காணாமற் போனோரின் உறவினர்கள், வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். யாழ்.செயலகத்திற்கு முன்பாகவும் யாழ். பொதுநூலகத்திற்கு முன்பாகவும் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன.


பீனிக்ஸ் பறவைகள் போல் மீண்டும் உயிர்பெறும் முல்லைத்தீவு. Top News
[Friday 2016-09-02 18:00]

முல்லைத்தீவு மாவடடம் - புதுக்குடியிருப்பு 10ம் வடடாரத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் 27-08-2016 சனிக்கிழமை 1. "பீனிக்ஸ் மாற்றுத் திறனாளிகள் சங்கம்", 2. "கணினிக் கல்வி மையம்", 3. "வன்னீஸ்வரம் இசைக்குழு" ஆகிய மூன்று அமைப்புகளின் அங்குரார்ப்பண நிகழ்வு , மறுவாழ்வு - கனடா அமைப்பினரின் ஏற்பாட்டில் வடமாகாண சபையின் கௌரவ அமைச்சர் டெனிஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ள சங்கத் தலைவர் இ.பிரபாகரன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


வேட்டி சட்டையுடன் கோவிலுக்கு வந்த பெண்! - நல்லூரில் பரபரப்பு Top News
[Thursday 2016-09-01 19:00]

நல்லூரில் இன்று இடம்பெற்ற தீர்த்த உற்சவத்திற்கு பெண் ஒருவர் ஆண்களைப்போல வேட்டி கட்டி வந்தமை பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. இவ்வாறு வேட்டி சட்டையுடன் நல்லூருக்கு வருகை தந்த பெண் யாழ் மாவட்ட பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை வெளிப்படுத்தவே அவர் அவ்வாறு வந்ததாக கூறப்படுகிறது.


நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்! Top News
[Thursday 2016-09-01 18:00]

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த உற்சவம், இன்று காலை இடம்பெற்றது. தீர்த்தோற்சவத்தை அடுத்து முருகப்பெருமான் , வள்ளி - தெய்வானை சமேதராக, பிள்ளையார் மற்றும் சண்டேஸ்வரர் சகிதம் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.


பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த நல்லைக் கந்தன்! Top News
[Wednesday 2016-08-31 18:00]

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் ஆறுமுருகப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக தேரில் வீற்று பக்தர்களுக்கு இன்று அருள்பாலித்தார். இன்று காலை வசந்த மண்டபத்தில் விசேட அபிசேக, ஆராதனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து ஆறுமுருப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக வெள்ளி தண்டிகையில் வீற்று உள்வீதி வலம் வந்து வெளிவீதியுடாக தேரில் ஏறி உலா வந்தார்.


காணாமல்போனவர்களைத் தேடித் தருமாறு கோரி வடக்கு, கிழக்கு எங்கும் உறவினர்கள் போராட்டம்! Top News
[Tuesday 2016-08-30 18:00]

காணாமல் போனவர்களின் சர்வதேச தினமான இன்று , போர்க்காலத்தில் காணால் போனவர்களின் உறவினர்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கிலும், கொழும்பிலும் போராட்டங்களை மேற்கொண்டனர். வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.


திருக்குறள் ஓதிச் சீரோடும் சிறப்போடும் நடந்த பிரசாத் - ஆர்த்தி தமிழ்முறைத் திருமணம்!
[Wednesday 2016-08-24 07:00]

அவையோரே, நீங்கள் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்காரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் தமிழர் வரலாற்றை ஆய்வு செய்து 'தமிழர் வரலாறு


கந்தர்மடம் வேதாந்த மடத்தில் இரத்ததானமுகாம், மரம்நடுகை, பண்ணிசை பாராயணம் மாணவர்களுக்கான பரிசு வழங்கல், குருபூசை நிகழ்வு! Top News
[Tuesday 2016-08-23 18:00]

அண்மையில் இடம்பெற்ற யாழ். கந்தர்மடம் ஸ்ரீ சிவகுருநாதகுருபீடம் வேதாந்த மடத்தின் ஏழாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் சோமாஸ்கந்தவேள் சுவாமிகளின் பத்தாவது குருபூசை தினத்தை முன்னிட்டு வேதாந்த மடத்தில் இடம்பெற்ற இரத்ததானமுகாம் மரம்நடுகை நிகழ்வு பண்ணிசை பாராயணம் மாணவர்களுக்கான பரிசு வழங்கல் மற்றும் குருபூசை நிகழ்வு ஆகியவற்றைப் படங்களில் காணலாம்.


கனடாவில் சிறப்பாக நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி: Top News
[Thursday 2016-08-18 19:00]

கனடா மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றங்களுடனும்,தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மற்றும் அக வணக்கத்துடனும் போட்டிகள்காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் பிரதம அதிதியாக Mr. M. Jeevaratnam அவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார். இவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான விளையாட்டு உதவி நிர்வாகஸ்தராக கடமையாற்றி ஓய்வுபெற்ற உயர் அதிகாரியாவார்.சிறப்பு விருந்தினராக Mr.S.Thevarajah (He was the bronze medalist at the World Championship in Vancouver in both long jump and triple jump) அவர்கள் கலந்து கொண்டார் அவரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் Mr . Thavendra Rajah அவர்களும், விளையாட்டு - சமூக நல அமைச்சர் Mr. Jeyakumar Iyaththurai அவர்களும் கௌரவித்தனர்..மார்க்கம் 7ஆம் வட்டார Councilor Mr. Logan Kanapathi அவர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார் .


பிரான்சில் இடம்பெற்ற நீதி விசாரணைவேண்டிய போராட்டம்! Top News
[Thursday 2016-08-18 17:00]

பிரான்சில் இடம்பெற்ற நீதி விசாரணைவேண்டிய போராட்டம்! சிறிலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட 107 போராளிகளின் மர்மச்சாவுகள் தொடர்பாக சர்வதேசத்தின் முன்னிலையில் நீதி விசாரணை வேண்டிய போராட்டம் இன்று 17.08.2016 புதன்கிழமை பிரான்சு பாராளுமன்றத்தின் முன்பாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குர்திஸ்டான் மக்களும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.


வடக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவஇ.இந்திரராசா அவர்களினால் கோழிகுஞ்சுகள் வழங்கி வைப்பு: Top News
[Monday 2016-08-15 18:00]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவஇ.இந்திரராசா அவர்களினால் வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு கோழிகுஞ்சுகள் வழங்கி வைப்பு - வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம்ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதிஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களின் நலன் கருதி சுயதொழில் முயற்சிக்காக கோழிக்குஞ்சு வழங்கிவைக்கும்நிகழ்வு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள அலுவலத்தில் 12.08.2016 அன்று கௌரவ இ.இந்திரராசா வடமாகாண சபை உறுப்பினரால்பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.


மக்கள் மயப்படும் உலகத் தமிழர் வரலாற்று மையம்! Top News
[Monday 2016-08-15 18:00]

பலரது அயராத உழைப்பாலும், மக்களின் மனமுவந்த பங்களிப்போடும் பாரிய எதிர்காலத் திட்டங்களைக் கொண்டு பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்றுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையம் மக்கள் மயப்பட்ட அமைப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த ஆண்டு (2015) ஏப்ரல் மாதம் பலரின் சிந்தனையில் மட்டும் உருவான உலகத் தமிழர் வரலாற்று மையம் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் கருத்துக்களை பகிர்ந்து அவர்களின் கருத்துக்களையும் பெற்று சுமார் 100 க்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடல்கள் மூலமும், மக்களின் பங்களிப்பின் மூலமும் ஒரு வருடத்தில் அதாவது இவ் ஆண்டு (2016) ஏப்ரல் மாதம் 108 ஏக்கர் நிலப்பரப்பில் இமாலய கனவுகளை சுமந்து உருவாகம் பெற்றது இவ் உலகத் தமிழர் வரலாற்று மையம்.


யாழில் திறக்கப்பட்ட அலுமினிய உற்பத்தி நிறுவனம்: - இராஜாங்க அமைச்சர் விஜயகலா பிரதம அதிதி Top News
[Monday 2016-08-15 18:00]

சப்னி அஹமட்-

வடக்கின் இளைஞர் மற்றும் தொழில் முனைவர்களுக்கு வேலை வாய்ப்புக்களுக்கு சந்தர்ப்பமளிக்கும் வகையில் அலுமினிய பொருள் உற்பத்தி நிறுவனமொன்று நேற்று (13) தெல்லிப்பளையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மதுரையை சேர்ந்த முதலீட்டாளரான திலகராஜா என்பவரால் இந்த நிறுவனம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது .. திறப்பு விழாவில், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துனைத்தூவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வாமாக இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.


விசேட தேவையுடையோருக்கான இருக்கை மலசல கூடங்கள் கையளிக்கும் நிகழ்வு Top News
[Wednesday 2016-08-10 11:00]

ஒளிரும் வாழ்வு புதுக்குடியிருப்பு மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் விசேட தேவை உடையோருக்கான இருக்கை மலசல கூடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது . முதற்கட்ட்மாக கோண்டாவில் நலன்புரி சங்கத்தின் ஊடக லண்டன் உறவுகள் வழங்கிய 927031. நிதி அன்பளிப்பில் கட்டி முடிக்கப்படட 6 மலசல கூடங்களை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு 09/08/2016 அன்று நிறுவனத்தின் தலைவர் ப.இராசகுமார் தலைமையில் இடம்பெற்றது . இதில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் . கோண்டாவில் நலன்புரி சங்க உறுப்பினர் சிவகாந்தன் , அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்! Top News
[Monday 2016-08-08 18:00]

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அந்தணர்களின் வேதமந்திர பாராயணம் ஒலிக்க அடியார்களின் அரோகரா கோஷம் முழங்க இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றம் இடம்பெற்றது.


நட்சத்திர விழா கலைஞர்களுடனும், ஏற்பாட்டாளர்களுடனுமான தமிழ் ஊடக சந்திப்பு: Top News
[Thursday 2016-08-04 18:00]

நட்சத்திர விழா ஆகஸ்ட் 6ம், 7ம் திகதிகளில் மார்க்கம் ஃபைர் க்ரௌண்ட்டில் (Markham Fair Grounds) இடம்பெற இருக்கும் நிகழ்வில் பங்குபற்றும் கனடிய மற்றும் தமிழக கலைஞர்களுடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை 6:30 மணியளவில் 305 மில்னர் அவனியுவில் உள்ள வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழகத்தில் இருந்து இங்கு வருகை தந்த பிரபல பின்னணிப்பாடகர்களான ஹரிஹரசுதன், மகாலிங்கம், வந்தனா, ரீட்டா, சௌமியா ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.


மத்திய மாகாண நிர்த்திய கலாலயத்தின் 21 ஆவது
[Tuesday 2016-08-02 19:00]

மத்திய மாகாணத்தை மையமாக கொண்டு இயங்கும் நிர்த்திய கலாலயத்தின் 21 ஆவது நிர்த்தியாஞசலி நாட்டிய விழா கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக உடபலாத்த பிரதேச சபை செயலாளர் இந்திக அநுராத பியதாச கம்பளை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆனந்த பிரேமசிறி கம்பளை பொலிஸ் அத்தியட்சர் சமந்த விஜயசேகர கம்பளை பொலிஸ் உதவி அத்தியட்சர் அநுருத்த ஹக்மன ஆகியோர் கலந்து கொண்டனர்.


நெதர்லாந்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டுக்கான தேசிய நாள், வன்பந்து சுற்றுப் போட்டி: Top News
[Tuesday 2016-07-19 16:00]

நெதர்லாந்தில் 2016ம் ஆண்டுக்கான தேசிய நாள், வன்பந்து துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டிகள் 16-07-2016 சனிக்கிழமை Gouda நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 8 கழகங்கள் பங்கு பற்றின, காலை 09.30மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகி வெகு விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றது. இறுதியில் 3ம் இடத்தினை கொலண்ட் போய்ஸ் டீ விளையாட்டுக் கழகமும்
2ம் இடத்தினை கொலண்ட் போய்;;ஸ் யு விளையாட்டுக்கழகமும்
1ம் இடத்தினை எல்லாளன் யு விளையாட்டுக்கழகமும் பெற்றுக் கொண்டன.


யேர்மனி, பேர்லின் நகரில் சிறப்பாக நடைபெற்ற மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி:
[Sunday 2016-07-17 21:00]

யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் நேற்றைய தினம் 5 வது தடவையாக தமிழீழ வெற்றிக்கிணத்துக்கான மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களும் முதலாம் இடத்துக்கான வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டு சுற்றுக்கிண்ணத்தை தட்டிச்சென்ற Lichterfelde தமிழர் விளையாட்டுக்கழகம் இம்முறை மூன்றாவது தடவையாக முதலாம் இடத்தை வகுத்து தமிழீழ வெற்றிக்கிணத்துக்கான சுற்றுக்கிண்ணத்தை தமதாக்கி கொள்ள கடுமையான முயற்சி எடுத்தும் , இம் முறை ஆரம்பத்தில் இருந்து மிகவும் சிறப்பாக துடுப்பாடிய தமிழர் விளையாட்டுக் கழகம் 2013 ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் முதலாம் இடத்தை தட்டிச் சென்று தமிழீழ வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டனர்.


யேர்மனியில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா: Top News
[Wednesday 2016-07-13 19:00]

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை 9.07.2016 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது . இவ் விளையாட்டு விழாவில் வெளிவாரியான மாணவர்களையும் உள்ளடக்கிய பேர்லின் தமிழாலயத்தின் இல்லங்களுக்கு இடையான மெய்வல்லுனர் போட்டி , தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் தமிழீழ வெற்றிக்கிண்ணத்துக்கான 13 வயது - 16 வயது , மேற்பிரிவு ஆகியவர்களுக்கான உதைப்பந்தாட்டம் , கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல் என பல்வேறு விளையாட்டுக்கள் சிறப்பாக நடைபெற்றது.


யாழ் மாணிப்பாய் இந்துக் கல்லூரி ஸ்தாபகர் தினமும் பரிசளிப்பு விழாவும்: Top News
[Thursday 2016-07-07 18:00]

யாழ்ப்பாணம் மாணிப்பாய் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் கல்லூரியின் அதிபர் எம்.இந்திரபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவர்களுடன் கௌரவ அதிதிகளாக சங்கிலிப்பாய் கோட்டக் கல்வி பணிப்பாளர் சிவானந்தராஜா வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் ஓய்வு நிலை மாவட்ட நீதிபதி வசந்தநேசன் உட்பட அயற் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.


கற்றலோனியாவில் இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபட்டுள்ள தமிழர் தரப்பு! Top News
[Wednesday 2016-07-06 19:00]

ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துக்கூறி, ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தையம் இறையாண்மையையும் மீட்கும் ஒரு முயற்சியாக தமிழர்களின் இராஜதந்திர அணியொன்று கற்றலோனியா நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், கற்றலோனியாவின் ஏனைய முக்கிய தரப்புகளுடனும் விசேட சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளது.


மட்டக்களப்பில் இரட்டையர்களின் ஒன்றுகூடல்! Top News
[Tuesday 2016-07-05 06:00]

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் நேற்று முன்தினம்ஒன்று கூடி இரட்டையர் தின நிகழ்வை கொண்டாடினர். நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற இந்நிகழ்வானது, கணபதிப்பிள்ளை கிராம அபிவிருத்தித் தலைவர் கு.ஜெயப்பிரியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சுமார் 18 ற்கு மேற்பட்ட இரட்டையர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். 3 வயது தொடக்கம் 30 வயது வரையான இரட்டையர்கள் இதில் கலந்துகொண்டனர்.


மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் பரிசளிப்பு! Top News
[Sunday 2016-07-03 18:00]

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் பரிசளிப்பு கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணனும், விஷேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், கல்வி அமைச்சின் பாடசாலை வேலைகள் பகுதிக்கான பனிப்பாளர், கலாநிதி யு.ஜி.வை. அபேசுந்தர, தமிழ் பிரிவு அபிவிருத்திக்கான பணிப்பாளர் எஸ்.முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


3வது தடவையாக இடம்பெற்ற டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் மெய்வல்லுனர் போட்டி! Top News
[Saturday 2016-07-02 19:00]

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016 தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் இனிதே ஆரம்பமாகி மாலை 9 மணியளவில் நிறைவாகியது. ஆண்கள் பெண்களுக்களுக்கான 25, 50, 100, 200m ஓட்டங்கள், தடை தாண்டல் அஞ்சல் ஓட்டம் பழம் பொறுக்குதல், தண்ணீர் நிரப்புதல் அணி நடை என்று எல்லா விளையாட்டுக்களும் இடம்பெற்றது.


ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய 11ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி. Top News
[Friday 2016-07-01 07:00]

ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய 11ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி கடந்த 25.06.2016அன்று சனிக்கிழமை காலை 10மணியளவில் ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள ROTONDE விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இந்த விளையாட்டுப்போட்டிக்கு கௌரவ விருந்தினர்களான ஸ்ரார்ஸ்பூர்க் மாநகர உதவி நகரபிதா, ஸ்ரார்ஸ்பூர்க் ஐரோப்பிய அபிவிருத்திக் குழு உப தலைவி , ஸ்ராஸ்பூர்க் சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான திரு. சாந்தன் அவர்களும் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியை மங்கள விளக்கேற்றி, ஒலிம்பிக் சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர்.


கனடியத் தமிழர் தேசிய அவையின் 'வேர்களுக்காக' நிதி சேர் நடை பயணம்: Top News
[Thursday 2016-06-30 18:00]

கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், சுயதொழில், லேலைவாய்ப்பு, சிறியோர்-முதியோர் காப்பகங்களுக்கான உதவி, இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடா வாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக செயலாற்றி வருகிறது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின் பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற முயற்சிக்கும் ஒரு பகுதி தமிழ் மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. மீள் குடியேற முயற்சிக்கும் நம் உறவுகள் தமக்கான வாழ்வாதாரத் தேவைகளுக்காக புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்கும் முகமாக கனடியத் தமிழர் தேசிய அவை நிதிசேர் நடை பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.


வலி.வடக்கில் மக்களை மீளக்குடியேற்றியதாக போலியான படம் காட்டுகிறது அரசு! - சுரேஸ் பிரேமச்சந்திரன் Top News
[Wednesday 2016-06-29 18:00]

வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றியுள்ளதாக அரசாங்கம் போலியான படத்தை சர்வதேசத்திற்கு காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு பகுதியில் ஒரு தொகுதி மக்களின் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்களை குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 5 ஏ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்ற 644 மாணவர்கள் கௌரவிப்பு! Top News
[Saturday 2016-06-25 19:00]

கல்வி இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் எல்.அய்.சீ காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையுடன் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 5 ஏ சித்திகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை 8.30 மணிமுதல் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது

Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா